வெள்ளி, டிசம்பர் 03, 2010

Rain Rain Come Again

மப்படித்த மாலை நேரம்
விழி வழியே தோற்ற மயக்கம்
இரை தேடும் பறவைக் கூட்டம்
இரைச்சலுடன் கூடு திரும்பும்
மிதமான வாடைக் காற்று
மேனியதைத் தழுவிச் செல்லும்
நிறம் மாறும் வெள்ளை மேகம்
கணப் போதில் நீராய்  மாறும்
குடை விரித்து நடக்கும் மாந்தர்
கூச்சலிடும் சிறுவர்  கூட்டம்  
மழை உடுப்பில் புதைந்து போவார்  
வாகனத்தில் பயணம் செய்வோர்
நடை பாதைக் கடைகள் எல்லாம் 
சில நொடியியில் மறைந்து போகும்.
மழை  பொழியும் மண் குளிரும்.
மறு நாளும் மழை தொடர்ந்தால்
மாவட்ட நிர்வாகம் 
பள்ளிக்கு விடுமுறையை 
அறிவித்தால் நல்லதென்று 
ஹோம் வொர்க்கைச் செய்யாமல்
தொலைக் காட்சி செய்தி பார்க்கும்
நகரத்து சிறுவர் போல்
நம் கவலை சிறிதா என்ன ?
மாடியிலே காயவைத்த
துணியெல்லாம்
நனையும் என்று
சபிக்கின்ற மனசுக்கு
தெரிவதில்லை ஒரு போதும்
வானம் பார்த்த பூமியிலே
மழைதானே ஜீவன் என்று.
மரம் நடுவோம் மழை பெறுவோம்.
 
சொக்ஸ்  
 
     

5 கருத்துகள்:

  1. if the first line is left out, the kavithai is "ilakkiya tharam" vaainthathu....chockaa dont write kavithai to attract a person like me... it is a very nice and should have been published in a magazine like vikatan....vaazhthukkal...
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Ilove this poem,there is something deeply moving about rain that touches our Indian soul.Indian kids born in the US always ask me why so many songs are written about rain and why rain is considered romantic by us.Here they think of rain as a bad thing which spoils a sunny day.So it is all in the eye of the beholder.Kudos Chocks keep going you have inspired me to write kavithai again.
    GFK

    பதிலளிநீக்கு
  3. Karaiyaan..unnaik kalaaippatharkaga yezhutha thodangiya varigal..Viduthiyin veliye therintha mazhik kaatchikal konjan moodai matri vittathu.But mappaum mantharamumaai vaanam irukkirathenru solluvathillaiya..athanaal varigalai edit seiyaa villai.
    GFK..you are right.Rain is allways beautiful.
    It changes our mood also immediately.Simply watching rain will bring down our stress and emotions.Yenna we shuold have atleast a shelter to enjoy.But it's miserable those who are lying in plat forms.
    Chocks

    பதிலளிநீக்கு
  4. Superb.Keep going.Try to have copyright and sell to publishers.The amount can be utilised for 'Education Fund'
    BHAI.

    பதிலளிநீக்கு
  5. Chockans,
    I love this poem. I love the rain too and even though it is cold rain here, the few times in the summer when it is hot and rains I love to run in it. This summer when I was at home, it rained for 2 days just for a 30 minute period and I took a chair upstairs sat in our motta maadi and just got soaking wet; It was awesome!
    Thanks for the lovely reminder of how special rain is to us..
    Gujili

    பதிலளிநீக்கு