ஞாயிறு, அக்டோபர் 27, 2013

"EXECUTIVE MASTER HEALTH CHECK-UP"

மருத்துவ துறை அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி (பல ஆண்டு பெரும் இழுதடிப்பிக்கு பின் ) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் (1998 -ல் நடந்த சம்பவம்) வழங்கப்பட்டுள்ளது சாதாரண மக்கள் நீதி மன்றத்தை அணுக ஊக்கப்படுத்துவதாக இல்லை.
நான் சவுதியில் அனுபவித்ததை ஏற்கனவே சொல்லி /எழுதி இருக்கிறேன், சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தையும் எழுதுகிறேன்.
சவுதி திரும்பும் முன்னராக ஒரு complete health check-up செய்து கொள்ளலாம் என்று ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன்.  மொத்தமாக நான்காயிரத்து ஐந்த்நூறு கட்டினால் எல்லா பரிசோதனைகளும்(பிரேத பரிசோதனை தவிர) செய்து பிரச்னைகள் இருந்தால் அந்த துறை நிபுணர்களின் அறிவுரையும் வழங்கப்படும் என்று கூறினார்கள் அதற்கு "EXECUTIVE MASTER HEALTH CHECK-UP" என்று அழகாக  பெயரும் வைத்துள்ளார்கள்.  ரொக்கமாக இல்லாமல் டெபிட் கார்டு உபயோகித்தால் ஒன்னரை சதவீதம் சர்வீஸ் டாக்ஸ் என்றார்கள், அங்கே இருந்த இரண்டு ATM கருவிகளும் வேலை செய்ய வில்லை, ஆகவே வேறு வழியில்லை கார்ட் உபயோகித்துதான் ஆக வேண்டும். பணம் கட்டிய பின்னர் ஒவ்வொரு டெஸ்ட் ஆக  செய்தார்கள், ECG நார்மலாக இல்லை, எனவே tread mill அல்லது Echo Cardiograph செய்ய வேண்டும் என்றார்கள், tread mill ecg நான் பணம் கட்டிய திட்டத்திலேயே அடக்கம் என்பதால் புதிதாக பணம் கட்ட வேண்டியதில்லை என்று நினைத்தேன், ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர், tread mill க்கு பதிலாக  echo செய்து கொண்டால் நல்லது மிக நுணுக்கமாக தெரிந்து விடும் என்றார், echo வுக்கு மேலும் 1700 ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள், அதை கட்டி echo எடுத்ததில் normal  என்று கூறி விட்டார்கள், இருந்தாலும் specialist இடம் ஒரு ஒபினியன் வாங்கி  விடுங்கள் என்றார்கள், அதற்கு தனியாக 300 ரூபாய் கட்டி அவரை போய் பார்க்க சொன்னார்கள்,அவர் என்னுடைய ecg யையும் echo இரண்டையும் பார்த்து விட்டு, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது எதற்கும் ஒரு treadmill ecg செய்து விடுங்களேன் என்றார், நொந்து விட்டேன்...திரும்பவும் treadmill செய்ய 1500 கொடுத்து treadmill ecg செய்து முடித்தபோது அந்த துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பணி நேரம் முடித்து சென்று விட்டார்கள். அங்கிருந்த மாணவி ஒருவர் எல்லாம் நன்றாகவே இருக்கிறது ஒன்றும் பிரச்னை இல்லை என்றார், எதற்கும் சந்தேகத்திற்கு கொஞ்சம் அனுபவசாலியாக தெரிந்த ஒரு ஆபீஸ் அசிஸ்டன்ட் போல இருந்தவரிடமும் என்னுடைய report ஐ காட்டினார்(வெள்ளை சட்டை வெள்ளை பான்ட் அணிந்து பெரிதாக குங்கும போட்டு வைத்திருந்தார்...கண்டிப்பாக டாக்டர் கிடையாது, அனுபவ வைத்தியர் போல தெரிந்தார்.) அவரும் ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி என்னை அனுப்பினார்(எல்லோரும் பணி முடிந்து வீடு செல்லும் அவசரத்தில் இருந்தனர்)...இப்படித்தான் பெரும்பாலான diagnosis செய்யப்படுகிறதோ என்று நினைத்து கொண்டேன் .....

கரையான்.

வெள்ளி, அக்டோபர் 25, 2013

நண்பர் குமரவேல் .....PASUMAI VIKATAN.



எந்த விளைபொருளாக இருந்தாலும், அதை அப்படியே சந்தைப்படுத்தாமல் மதிப்புக் கூட்டி விற்றால்தான் அதிக லாபம் பார்க்க முடியும்' என்கிற விழிப்பு உணர்வு, விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் காலமிது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களிலும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும், அதற்கான கருவிகள் பற்றிய விவரங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். 'பசுமை விகடன்’ கருவிகள் சிறப்பிதழுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலைய மனையியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர். விமலாராணியிடம் மதிப்புக்கூட்டும் கருவிகள் பற்றி கேட்டோம். அவர் தந்த தகவல்கள் இங்கே...
பனீர் அழுத்தும் கருவி
பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்து விட்டால், பால் திரியும். அதை, காடா துணியில் வடிகட்டி, அத்துணியுடனே இக்கருவியில் சதுர வடிவில் இருக்கும் ஃபிரேமில் வைத்துத் திருகினால், தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கெட்டியான பனீர் கிடைக்கும். இதைத் தண்ணீரில் கழுவி 'பேக்' செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். வட்ட வடிவ பனீர் தயாரிக்கும் கருவியும் இருக்கிறது. ஆனால், சதுர வடிவத்துக்குத்தான் வணிகரீதியாக விற்பனை வாய்ப்புகள் உள்ளன. இக்கருவியில் அதிகபட்சமாக 5 லிட்டர் பாலைப் பிழிய முடியும். 1 லிட்டர் பாலிலிருந்து 200 கிராம் வரை பனீர் கிடைக்கும். இக்கருவி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், துரு பிடிக்காது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
சேமியா பிழியும் கருவி
சேமியா தயாரிப்பதற்கான பொருட்களைக் கலந்து பிசைந்து, இக்கருவியில் வைத்து சுற்றினால், சேமியா வெளிவரும். இதை உலர்த்தி பேக் செய்யலாம். இக்கருவியில் சேமியாவின் தடிமனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. தவிர, நீளமாகப் பிழியும் வசதியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
பிஸ்கெட் தயாரிக்கும் அடுமனை இயந்திரம் (பேக்கரி)
தேவையான மூலப்பொருட்களைக் கலந்து பிசைந்து, தேவைப்படும் வடிவ அச்சில் நிரப்பி... மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் உள்ள 'ட்ரே’யில் வைத்து இயக்கினால், அரை மணிநேரத்தில் பிஸ்கெட் தயார். உள்ளே சூடேறிக் கொண்டிருக்கும் பொருளின் நிறம் மாறுவதைப்  பார்க்கும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேக்குகளையும் தயாரிக்க முடியும். இது 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.  
மூடி போடும் இயந்திரம்
ரோஸ் மில்க், பாதாம் பால், குளிர்பானங்கள்... போன்ற திரவ வடிவப் பொருட்களை பாட்டில்களில் அடைத்து, அவற்றுக்கு தகர மூடி போட இக்கருவி பயன்படுகிறது. நாம் வைக்கும் பாட்டிலின் அளவுக்கு ஏற்ப மூடியின் அளவை மாற்றியமைக்கும் வசதியும் உண்டு. இதன் விலை 2 ஆயிரத்து 200 ரூபாய். ஊறுகாய் பாட்டில்களைக் காற்றுப் புகாதபடி அடைத்து மூடி போடுவதற்கான பிரத்யேகக் கருவியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 600 ரூபாய்.
பேக்கிங் கருவி (Sealing Machine)
மஞ்சள், மிளகாய், தனியா, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை அரைத்து கிடைக்கும் பொடியை பேக் செய்யும் கருவி இது. இதன் மூலம் மிக எளிதாக பேக் செய்ய முடியும். இது 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
வெற்றிட பேக்கிங் போடும் கருவி (Vacuum Packing Machine)
காற்றுடன் சேர்த்தோ அல்லது காற்றை நீக்கியோ பேக் செய்ய, இக்கருவி பயன்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் அதிகபட்சம் 5 கிலோ வரை அளவுள்ள பொருட்களை பேக் செய்ய முடியும். இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல்.
தேங்காய் துருவும் கருவி    தேங்காய் துருவல் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பர்பி உள்ளிட்ட பொருட்களுக்காக தேங்காயை துருவுவதற்கு, இக்கருவி பயன்படுகிறது. இதை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, தேங்காய் மூடியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் கைப்பிடியை வேகமாக சுழற்றினால், துருவல்கள் கீழே கொட்டும். இதன் விலை 300 ரூபாய்.
மொத்தக் கருவிகள் மற்றும் அதற்கான விளக்கங்களை விமலாராணி சொல்லி முடிக்க...
''தொழில்முனைவோராக விரும்புபவர்கள், இதுபோன்ற மதிப்புக் கூட்டி விற்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தொழி லில் இறங்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கும் பெண்களும் இதில் ஈடுபடலாம். இதற்கான பயிற்சிகளை எங்கள் மையத்தில் இலவசமாகவே தந்து வருகிறோம். அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்... வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலு!
தொடர்புக்கு, 
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.,
தொலைபேசி: 044-27452371,
செல்போன்: 99942-83960.
நண்பர் குமாரவேல் அவர்களை பாராட்டி சென்னை நட்சத்திரங்கள் அனைவரும் அவருடைய செல் பேசிக்கு ஓயாது missed call கொடுக்கவும்....

கரையான்.

Dr.Ganesh


நம்ம கணேஷ் விகடன் புத்தகத்தில்.....

கரையான்.

புதன், அக்டோபர் 23, 2013

கல்லூரி மாணவர் to கல்லூரி மாணவியின் தந்தை

குஜிலி சொன்னது மாதிரி காலம் மிக வேகமாக பறந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக எல்லா தந்தைகளைப்போன்று தான் கல்லூரி சேர்க்கும்போது எனக்கும் என்ன ஒரே ஒரு வித்தியாசம் பொருளாதார நெருக்கடி இல்லை. காயத்ரி முதலிலேயே தொழில் நுட்ப படிப்புகளுக்கு போக மாட்டேன் என்று கூறி விட்டதால் MBBS , BE சேர்க்க வேண்டுமென்ற நெருக்கடி எனக்கில்லை. எட்டாவது படிக்கும்போதே B.Com ., தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து விட்டதால் பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்றுதான் சொல்வேன். குழந்தைகளை தேவை இல்லாத அழுத்தத்திற்கு உட்படுத்த விரும்ப வில்லை ஆகவே அவர்கள் முடிவிற்கு விட்டு விட்டேன்.
குஜிளியின் கேள்விக்கு வருகிறேன் காயத்ரி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியை விரும்புகிறாளா  என்பது, இந்த கல்லூரியில் சேரும் முன்னர் schram academy என்ற பள்ளியில் படித்தாள் , அது பொருளாதார நிலையில் மேல் தட்டு வர்க்கத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளி, அந்த பள்ளியில் சேர்க்க எனக்கு மனம் இல்லை என்றாலும் என் சகோதரரின் வற்புறுத்தல் காரணமாக அங்கே சேர்க்க வேண்டியதாகி விட்டது. காயத்ரி உடன் படித்த அனைவரும் வசதி படைத்தவர்கள், அவள் வகுப்பு தோழர்/தோழியருக்கு பிறந்தநாள் என்றால் அவர்கள் கொண்டாடுவதே KFC , தலைப்பாகட்டி பிரியாணி , நில்கிரிஸ் , mcrennet கேக் என்றுதான், மிக சாதாரணமாக என் மனைவியிடம் " அம்மா ஒரு ஆயிரம் ரூபாய் கொடு friends க்கு பார்ட்டி கொடுக்கணும்" என மாதம் ஒரு முறையாவது என் மனைவியின் ரத்த அழுத்தத்தை ஏகிற வைப்பாள். அல்லது பார்ட்டி என்றால் skywalk என்ற ஒரு multiplex mall -இல்தான் வைத்து கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் வீட்டில் என் மனைவிக்கும் மகளுக்கும் பெரும் போராட்டம்தான். நான் விடுமுறையில் வீட்டில் இருந்தால் நான்தான் காரிலோ பைக்கிலோ பள்ளியில் விட வேண்டும், இப்படி இருந்த காயத்ரி இப்போது அப்படியே தலை கீழ்....
சென்ற முறை விடுமுறையில் இருந்தபோது காரிலே கல்லூரியில் விட்டு  வருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என்று கூறினாள் எனக்கு ஆச்சரியம் ஏன் என்று கேட்டேன், "என்னுடன் படிப்பவர்களில் 95 சதவீதம் பேர் நடுத்தர குடும்பங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியவர்கள் அதிகம், கல்லூரி வருவதற்கே கஷ்டபடுவர்கள் இருக்கிறார்கள், நான் வசதியானவளாக இருந்தால் என்னுடனும் பழகுவதற்கே யோசிப்பார்கள்(சிலர் அதை அவளிடமே சொல்லியும் இருக்கிறார்கள்)என்றாள் . உடன் படிக்கும் தோழிகள் மூன்று பேருக்கு ஒரே நாளில் பிறந்த நாள், அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து எல்லோரும் பணம் சேர்த்து ,கேக் வாங்கி வரும் பொறுப்பை காயத்ரியிடம் கொடுத்திருக்கிறார்கள், நாங்கள் இருவரும் கேக் வாங்க Mc'Rennet  அழைத்து சென்றேன், நான் 1200 ரூபாய் கேக் -ஐ செலக்ட் செய்தேன், அவளோ 500 ரூபாய்க்குள் தான் வாங்குவேன் என்று கூறினாள் , வகுப்பில் 50 பேராவது இருப்பீர்கள் அது பத்தாது என்றேன், ஒவ்வொருவரும் பத்து இருபதுன்னுதான்பா போட முடியும் ஒரு சிலரால் அதுவும் கொடுக்க முடியாது., அந்த budget உள்தான் வாங்க முடியும் என்றாள். சில நாட்களில் காண்டீனில் என்ன காயத்ரி சாப்பிட்டாய் என்று நான் கேட்பதுண்டு, "இருபது ரூபாய்க்கு முறுக்கு வாங்கி friends எட்டுபேர் ஷேர் பண்ணி சாப்பிட்டோம்பா" என்பாள் . எப்படி இருந்த காயத்ரி இப்படி ஆயிட்டே. என்று எல்லோரும் நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
So Gujili,whether Gayathri likes it or not I like Anna Adarsh College.......

கரையான்.

செவ்வாய், அக்டோபர் 22, 2013

chennai


மூணாப்பும்  பதிமூணாப்பும் 

கீர்த்தி குமரவேல் & காயத்ரி குமரன் 

செவ்வாய், அக்டோபர் 08, 2013

பெரியவர்

என்னுடைய முந்தைய பதிவில் ஒரு பெரியவரின் படத்தை போட்டிருந்தேன் , அவர் பற்றி ஒருவரும் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது. குஜிலி கூட கமெண்ட் எழுத வில்லை...
பரவாயில்லை. சில நாட்களுக்கு முன் தீபா, போலி  சுவாமிஜிகளை பற்றி வருந்தி அவருடைய நியாயமான கோபத்தை முகநூளில் பதிந்திருந்தார் .
இந்த சுவாமிகளை உருவாக்குபவர்கள் யார், இப்போது பாதிக்கப்பட்டவர்களை போன்ற  சாமானி மக்கள்தான். கடவுளுக்கும் நமக்கும் இடையில் ஏன் ஒரு தூதர்/இடைதரகர். மக்கள் ஏன் இவர்களிடம் சென்று விழுகிறார்கள் ....கண்டிப்பாக சுயலாபதிற்குதான், ஏதோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர்களிடம் சென்று விழுந்து தேவையற்ற ஒன்று கிடைக்கும்போது கொதித்து எழுகிறார்கள். ஒரு ஆண்மகன் (கிழவனாக இருந்தாலும்) உன் மகளை இரவு பூஜைக்கு விட்டு செல், அவளுக்கு தோஷம் கழிக்க வேண்டும் என்று சொன்னால் அதை நம்பி விட்டு விட்டு வந்த தந்தை தாய் சம அளவு தவறு செய்தவர்கள் ஆகிறார்கள். நான் இந்த பாபுஜிகளுக்கு வக்காலத்து வாங்க வில்லை. இவர்களைப்போன்ற தவறு செய்பவர்கள் கொடுக்கப்படும் தண்டனை, இன்னொரு முறை அந்த தவறை செய்ய அவர்கள் இருக்க கூடாது, உயிருடன் இருந்தாலும் அந்த தவறை மறு முறை செய்ய இயலாமல் செய்து விட வேண்டும் என்ற கருத்து உடையவன். ஆசாரம் பாபு இதற்கு முன்னரே பல வழக்குகளில்(கொலை குற்றம் உட்பட) சிக்கி விடுதலை ஆகி உள்ளார், இப்படி கிரிமினல் ரெகார்ட் உள்ளவரை எப்படி மக்கள் நம்பி  செல்கிறார்கள்.(நாம் உடனே அரசியல் வாதிகளை குறை சொல்வோம். இவரிடம் சென்று ஆசி பெற எந்த அரசியல் வாதியும் கூற வில்லை...அப்படியே கூறினாலும் செல்லும் மக்களுக்கு புத்தி எங்கே போனது) பாதிக்கப்பட பெண்ணின்  தந்தை இப்போது வருத்த படுகிறார்.
அவருடைய வயது அவர்மேல் தம் நம்பிக்கையை அதிகரித்தது என்று கூறலாம், ஆண்களில் தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கததால் நல்லவர்களாக இருப்பவர்கள் பலர்  இதில் எல்லா வயதினரும் அடக்கம் . அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த முட்டாள் தந்தையை எப்படி தண்டிப்பது. 

கரையான்.

வெள்ளி, அக்டோபர் 04, 2013

HOME

திருநெல்வேலி விருந்தோம்பல்  கோவையில் ......

விடுமுறையில் தாயகம் சென்ற வேளையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக பாலக்காடு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் ஏறுவதற்கு கொஞ்சம் முன்னர்தான் கோவையில்  நண்பர் சொக்கனை அழைத்தேன், மாமனாரை மருத்துவ மனை அழைத்து செல்ல முன் பதிவு செய்திருப்பதாகவும் அந்த நேரத்தில் வர இயலாது என்றும் கூறினார், பரவாயில்லை நான் சென்று விடுகிறேன் என்று கூறி என் தொலைபேசியை அனைத்து விட்டேன். கோவையில் சென்றடைந்ததும் தொலைபேசியை ஆன் செய்தவுடன் சொக்கனிடமிருந்து அலைபேசி செய்தி " விமான நிலையம் வெளியில் காத்திருக்கிறேன் " என்று. நீ வருவதால் அப்பாஇண்ட்மெண்ட் ஐ மாலைக்கு மாற்றி விட்டேன், என்று கூறி என்னை அழைத்து சென்று மதிய உணவருந்தி ரயில் நிலையம் வரை வந்து வழி அனுப்பி சென்றார்.
(இந்த பெரியவர் நான் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தபோது என்னை வந்து விரைவில் குணமடைய வாழ்த்தி சென்றார். முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும் நவீன் தொழில் நுட்பத்தை சிறப்பாக உபயோகிக்கிறார்கள்)
பதினைந்து நாள் சிகிச்சை முடிந்து திரும்பும் போதும் சொக்கன் கோவை ரயில் நிலையம் வந்து சந்தித்தான்(நெல்லை விருந்தோம்பலின் உச்சகட்டம்...நன்றி சொக்கா... ), பின்னர் ஈரோடில் நண்பர் எஸ்.கே.பி., பகவதி, தங்கவேலு அனைவரும் மிக சிறப்பாக கவனித்தார்கள்.

மேலும் எழுதுவேன்....

கரையான்.

வியாழன், அக்டோபர் 03, 2013

AFTER A LONG TIME...

நம் வலைப்பதிவில் பதிந்து பல நாட்கள் ஆகி விட்டது.  முக நூலில் தோழர்/தோழியரின் பதிவுகளை பார்த்து வந்தாலும் சில பல காரணங்களால்(சோம்பேறி தனமும் ஒரு காரணம் ) பதிவுகள் செய்ய இயலாமல் ஆகி விட்டது. திரும்பவும் நம் பிளாகிற்கு வருவதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ( IDC முடிந்து கல்லூரி திரும்புவது போன்ற ஒரு குதுகலம்)....

முருங்கை .....என்னடா இவன் சம்பந்தமே இல்லாமல் முருங்கை பற்றி எழுதுகிறானே என நினைக்க வேண்டாம்....
கடந்த வாரத்தில் என் முதலாளி (ஷேக்) என்னை அழைத்து ஒரு புத்தகத்தை கொடுத்தார், அது முழுவதுமாக அரபியில் எழுதி இருந்தது, அவரிடம் இது என்ன என்று கேட்டேன், அவர் முருங்கீ பற்றி தெரியுமா என்றார், அப்போதுதான் அந்த புத்தகத்தின் அட்டையில் முருங்கை கீரை படம் இருந்த தை பார்த்தேன். அவரிடம் இதன் பெயர் முருங்கை என்றேன். அவர் அந்த புத்தகம் (கிட்டத்தட்ட எழுபது பக்கங்கள் ) முருங்கையின் உபயோகம், அதில் உள்ள சத்துக்கள் என விரிவாக எழுதி உள்ளது. அதில் கால்சியம், புரதம்,இரும்பு இவை எல்லாம் பால் மற்றும் இறைச்சி யை விட பல மடங்கு அதிகம் இருக்கிறது தெரியுமா என்றார், எனக்கு அது பற்றி தெரியாது என்றேன்,  ஆனால் இது ஒரு சாதரணமான உணவு தென் இந்தியாவில் பெரும்பாலான  மக்கள் இதனை சாப்பிடுவார்கள் என்றேன். அவர் அதன் பெருமைகளை விவரித்தார் , கடைசியாக அதன் அப்ரோடிசியாக் குணம் பற்றியும் எடுத்து கூறினார்(அதைதான் ஏற்கனவே பாக்கிய ராஜ் முந்தானை முடிச்சு படத்தில் கூறி விட்டாரே), கடைசியாக அவர் இந்த மரங்களை இந்தியாவிலிருந்து உடனே கொண்டு வர ஏற்பாடு செய்ய கூறினார், குறைந்தது நூறு மரங்களாவது வேண்டும் என்றும்  கூறினார். நான் அவரிடம் இந்த மரங்கள் என்னிடமே உள்ளது என்றேன், எங்கே என்றார் என் வீடு மற்றும் குதிரைகள் உள்ள பகுதியில் என்றேன், என்னுடைய பன்னையிலா என்றார் ஆம், நான் இந்தியாவிலிருந்து வரும்போது கொண்டு வந்து வளர்த்து வருகிறேன் என்றேன். அவர் என்னுடைய வீட்டில் குறைந்தது இருபது மரங்கள் வைக்க ஏற்பாடு செய்யுங்கள் , மேலும் பண்ணையில் நூறு மரங்களாவது வேண்டும் என்றார். பிறகுதான் கூறினார், முருங்கை இலைகள் பவுடராக்க பட்டு மாத்திரைகலாக விற்கப்படுகிறது என்றும், முருங்கை இலைகள் தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக் கூறினார்.
இப்போது தினமும் நான் வளர்த்து வரும் முருங்கை மரத்தின் இலைகளை  சூப் செய்து குடித்து வருகிறார்.

நம் நாட்டு பழங்கால வைத்தியங்கள் நாம் ஒதுக்கி தள்ளினாலும் எங்கோ ஒரு மூலையில் அதன் மகத்துவத்தை உணரத்தான் செய்கிறார்கள்.....

கரையான்.