வியாழன், ஜனவரி 29, 2009

சில நேரங்களில் பல நாட்டு கால்நடை மருத்துவர்களுடன் பணிசெய்யும் வாய்ப்பு கிடைப்பதுண்டு, எனக்கு இங்கு சூடான் மற்றும் எகிப்து நாட்டு மருத்துவர்களுடன் பழகும் மற்றும் அவர்களின் treatment களை பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டதுண்டு. ஒரு முறை ஒரு எகிப்து நாட்டு கால்நடை மருத்துவர் என்னை ஒரு ஆட்டுக்கு pregnancy diagnosis செய்ய என்னை அழைத்தார், ultra-sound scanner மூல மாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நான் அவரிடம் எனக்கு ஆடுகளில் அவ்வளவாக அனுபவம் போதாது என் கூறினேன், அவரோ நீ கவலைப்படாமல் scan செய்து சொல் அது தவறாக இருந்தாலும் ஒன்றும் பிரச்னை இல்லை என்று கூறினார். நானும் சென்று ஸ்கேன் செய்து நான்கு ஆடுகளுக்கு சரியாக வே சொன்னேன், ஒரு ஆட்டுக்கு என்னால் சரியாக diagnose செய்ய முடிய வில்லை. பின்னர் அவனிடம், நீ எப்படி diagnose செய்வாய் என கேட்டேன், அவன் சொன்ன பதிலில் ஆடிப்போய் விட்டேன். ரொம்ப casual ஆக "டாக்டர், பெரும்பாலும் அந்த ஆடு மேய்ப்பவர் சரியாக சொல்லி விடுவார், ஆடு சினையா இல்லையா என்பதை, இல்லை என்றால் ஒரு prostoglandin injection கொடுப்பேன் அபார்ஷன் ஆனால் ஆடு சினை, ஆக வில்லை என்றால் சினை இல்லை"

கரையான்.

புதன், ஜனவரி 28, 2009

ஆல் இந்தியா டூர் என்றவுடன்,ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது . ஒரு முறை நாம் எல்லோரும் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். டெல்லியில் இருந்து ஒரு hill station (வழக்கம் போல பேரு மருந்து விட்டது) maybe Mussorie ,. ராத்திரி வேலை.
ஒரே குலுரும் பணியுமாக இருந்தது. டிரைவர் க்கு தூக்கம் வர கூடாது என்று நம் மக்கள் அவப்போது அவர் கூட முன்னால் உட்கார்ந்து கொள்வர்.திடீர் என்று டிரைவர் பஸ்ஐ நிறுத்தினார். இர்ருட்டில் வழி அவருக்கு தெரிய வில்லை என்று கூறி நார்.நம்ம மக்கள் பாவம் கிழே இருங்கி எங்கே தான் இர்ருக்கோம் என்று கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தாள் , யெல்லா signpost மீதும் posters ஒட்டி இருந்தது.
நாடு ராத்திரியில் ஒரு ஒரு layer போச்டேர்யை கிழித்து , அந்த இடம் பேரை கண்டு பிடித்தார்.
அதை நினைத்து இப்போதும் சிரிப்பேன்.
GFK

செவ்வாய், ஜனவரி 27, 2009

தாஜ் மகால் மே 1991

நாம் யாவரும் ஆல் இந்தியா டூர் சென்ற போது மே பத்தாம் தேதி தாஜ் மகாலிற்கு சென்றோம். அன்றைக்கு as usual அந்த ஏரியா vil உள்ள சில restaurant இல் சாபிட்டோம். நமது வகுப்பில் 70 பேர் இருந்ததால் எல்லாரும் ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு restaurant குல் சென்று cook waiter எல்லோருக்கும் அதிகக் வேலை/business கொடுத்தோம். எனினும் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பின்பு bus இற்குள் ஏறி உட்கார்ந்தோம். Appodhu நமது மாணவர்கள் சிலர் தங்கள் பாக்கெட்டில் இருந்து forks, spoons, napkins, எல்லவற்றையும் எடுக்க ஆராம்பித்தனர். நமது மக்கள் joke இற்காக அங்கங்கே பொருட்களை சுருட்டுவார்கள்.

ஞாயிறு, ஜனவரி 25, 2009

சோ ரா சு and defanathan

Pharmacology & OBGYN கிளினிக்ஸ் வகுப்பில் நமது மக்கள் ஒரு சுவாரசியமான கதை ஒன்று சொல்லினர்.
நமது OBGYN வாத்தியார் ஒருவர்ருக்கு p என்ற ஆங்கில வார்த்தை சொல்ல இயலாது. ஆதலால் GFK யை deefa என்று கூபிடுவார். நம்முடைய கிளினிக்ஸ் departmentil srs க்கு (சோ ர என்று நம் மாணவர் KOOPIDUVAARGAL) ஆங்கில வார்த்தை F சொல்ல இயலாது. ஆதலால் phosphorus க்கு பதிலாக பாஸ்பரஸ் என்று கூறுவர்.
நம் நண்பர்கள் அந்த இருவருடிய english letter pronounciation க்கு ஒரு explanation/கதை kattinar. அது என்னவெனில் ஒரு கோடீஸ்வரன் இருந்தாராம், அவருடைய சொத்து ஆங்கில எழுத்துக்கள். அவர்க்கு இரண்டு குமாரர் உண்டாம்,. இருவர்க்கும் சொத்தின் காரணத்தால் சண்டை வந்ததாம். ஆதலால் அந்த தகப்பன் ஒரு மகனுக்கு ஆங்கில எழுத்து p கொடுத்தார், மற்றொரு மகன்னுகு F ஐ கொடுத்தாராம். அதலால் ஒரு மகனுக்கு F ucharrikka முடியாதாம், அவன் தம்பிக்கு p உச்சரிக்க முடியாதாம்.
கதை என்னவோ சரி, இந்த இரண்டு வாத்தியார்களும் p அல்லது F உச்சரிக்க முடியாத வார்த்தைகளால் வகுப்பு நடக்கும் போது நமது வகுப்பு மக்கள் yellarukkum அதிக என்டேர்டைன்மேன்ட்.

Gujili
மஹாதேவன் பிள்ளை என்றதும் யெல்லா மாணவிகளின் அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றனர் . ஏதோ தினமும் லேடீஸ் ரூம் சென்று விட்டு அவர் அவர் கிளாஸ் kku போகலாம் என்றால், இவர் பக்கத்து அறையில் அமர்திருபார். நானும் குஜிலி யும் மட மட வென்று தப்பித்து நயுவலாம் என்று யோசித்தால் விளகென்னை ஊற்றி கொண்டு காத்திருப்பார். எங்களை பாத்தவுடன் கூப்பிட்டு , ஆங்கிலத்தில் , Boys are like tigers girls are like deer சில சமயம் Boys are like vultures you have to be very careful yendru lecture கொட்க்க ஆரம்பித்து வார். இது யெல்லா மாணவிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு அனுபவித்த ஒரு கொடுமை. ஒரு முறை அவர் ஏன் தந்தையை பிடித்து இதே lecture கொடுத்து ,என் அப்பா யார் அந்த ஆளு என்று கேட்க , அப்பா இப்பொழுது புரிகிறதா எங்கள் கொடுமை யான தலை எழுது தினமும் எங்களுக்கு இது compulsory தண்டனை என்று கூரிநேன் . அவர் சிரித்துவிட்டார் .
GFK

சனி, ஜனவரி 24, 2009

பாய் தம்பதியினர்


To:Karayan,Peer,Gujili and GFK

Friends are forever
Friends are forever,held dear to my heart.
No matter the distance,We'll never be apart.
Together We've faced it all,through thick&thin.
We always stuck together& We know how hard it has been.
We've told each other- things,We've never shared before.
Always together,We've opened up new doors.
We've taken on the world,never losing our sight.
We crawled through the tunnel ,until We finally saw light.
And I know I will miss you everyday ,that goes by.
The only question I ask,is the question 'Why?'.
Because friends are forever held dear to my heart.
No matter the distance,We'll never be apart.
பிரியமுடன்,
பாய்.
extension வகுப்பு எடுத்த டாக்டர் மஹாதேவன் பிள்ளை பாடம் எடுக்கும்போது நாயூரன் ஏதாவது குறும்பு செய்து அவரை பல வகைகளிலும் வெறுப்பு ஏற்றிக்கொண்டே இருப்பான், பெரும்பாலும் அட்டெண்டன்ஸ் எடுக்கும்போது வேண்டுமென்றே மற்றவர்கள் எழுந்து நிற்கும்போது அவன் குரல் கொடுப்பான், ஒரு முறை லில்லி அருள் குமரி என அவர் அழைத்தார், உடனே நாயூரன் கட்டைக்குரலில் சத்தமாக எஸ் சார் என கூறவும் லில்லி அருள் குமாரி எழுந்து நிற்கவும் சரியாக இருந்தது. வகுப்பில் அனைவரும் சிரித்து விட்டார்கள், மஹாதேவன், மகா கோப தேவன் ஆகி விட்டார், நேராக நாயூரன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து அவன் கையை முதுகுப்புறமாக மடக்கி அவன் முதுகில் நாலு குத்து விட்ட பின்னர்தான் அவருக்கு கோபமும் படபடப்பும் அடங்கியது.
கரையான்.

காட்டுபாக்கம் anubavangal

extension class இல் irrukum போது oru முறை காட்டுப்பாகதிற்கு சென்றோம். அப்பொழுது எல்ல இடங்களிற்கும் tour செய்ய oru vaathiyaar nammudan vandhaar. Veyil kadumayaga irundhadhal yellorum verthu viruviruthu kondirindhom. Tour kodukkum vaathiyar adhigamaaga cuticura/ponds powder pottirundhadhaal avar mugam verkkum bodhu powder karaidhu vellai liquid aaga vadiya arambithadhu. It sounds quite gross, however namadhu makkal silar paatu paada arambithanar -
" Paal vadiyum mugam ninaithu ninaithu yen ullam paravasamaagudhe" Yendru sattru sathhamaaga paada arambithanar. Avar mudhal kandu kozhammal irupadhu polirundhaar, pinnar sattai pannamar irundhaar; aanal nam makkalzhl vidaamal paadi kondirundhanar.... Adhalaal yepozhudhaavadhu ingu verthu kottinaal andha paatu gnayabagam yeppozhudhum varum
Gujili
அன்பு நண்பர்களே


இதுதான் நான் பணி புரியும் இடம்

கருமமே கண்னாயினார்





excising a mammmary tumour in a cat


while im spaying a cat my nurse emma maintains GA.

வெள்ளி, ஜனவரி 23, 2009

நண்பர்களே:
இங்கே குளிரு மற்றும் flu என்னக்கு வந்ததால் மௌனத்திற்கு காரணம். குளிர் காலத்தில் இது ஒரு பெரிய தொல்லை. இந்த வருஷம் கொங்சம் ஜாஸ்தியாகவே இருக்கிறது. ஆல் இந்தியா டூர் நினைவுகள் நிறைய இர்ருகின்றனர். ஆனால் அந்த மூன்று நாட்கள் எப்பொழுதுமே நம் நினைவில் ஏன்றும் நிற்கும் . லிடியா வின் காம்ப்ளான்,லில்லியின் முந்திரிபரிப்பு மற்றும் எல்லோரும் பொய் கொண்டு வந்த biscuits என சாப்பாட்டை பகிர்த்து கொண்டது ஞாபகத்து வருது. அப்பொழுது பாகவதர் இன் பிறந்தத நாள் (22). அவர் வழக்கம் போல் நான் இன்று இறந்தால் ஏன் கனவெல்லாம் மண்ணாகி போய்டுமே என்று கூறினார். லங்குடு மாமா ஜன்னலை மெதுவாக திறந்து, டேய் ,கோடை பிடுசிட்டு போறாங்க என்று கூறினார். அவர் கூர விரும்பியது கோடி பிடித்து கொண்டு போகிறார்! அவர் தமிழ்யை கொன்ன இன்னொரு சமபாவம் அவளவு தான்! CD batch அவர்கள் அந்த நாட்களில் என்ன செய்தார் என்று யாரவது பகிர்ந்து கொள்ளலாமே (பீர்?)
தொடரும் ... GFK

வியாழன், ஜனவரி 22, 2009

மௌனம் thodarchi

அன்பு நண்பர்களே,
எல்லோரும் ஒரே நேரத்தில் ஏன் இப்படி மௌனம் ஆகிவிட்டோம் என்று யோசித்து கொண்டிருந்தேன்; கரையான் சொன்னவாறு எல்லோரும் ஒரே நேரத்தில் பிஸி ஆகிவிட்டோம் போல...
சனிக்கிழமை அன்று எங்கள் ஊரில் பயங்கரமான குளிர், temperature = -9 F; coldest day since the past 15 yrs! காலை எழும்பின பொது சென்ட்ரல் heating சிஸ்டம் வேலை செய்யவில்லை, ஆதலால் தண்ணீர் was frozen! Thaneerum இல்லாமல் irrukum போது நமது ஆல் இந்தியா ட்ரிப் ஞாயபகம்கள் வந்து விட்டது. குறிப்பாக மே 21 தேதி; ராஜீவ் காந்தியை கொலை செய்தா நாள். AB batch மக்கள் எல்லோரும் trainil சாப்பாடு, தண்ணி இல்லாமல் 3 நாள் அனுபவித்தோம்; நமது மக்கள் calcuttavil வாங்கின tin gulab jamunai saapitttanar. இரண்டாவது நாள் அந்த ரயில்வே colonyil உள்ள மக்கள் நாம் 70 மாணவர்க்கும் உப்மா செஞ்சி கொடுத்தனர். நமது பாகவதர் அப்பொழுது சாதமும் பருப்பு பொடியும் எங்கே என்று கேட்டு கொண்டிருந்தார்.
Anyway, எங்களது வீட்டில் சனிக்கிழமை சாயங்காலம் furnace repair man வந்து சரி பண்ண piragu heat & தண்ணீர் வந்தது. தண்ணீர் இல்லாமல் 12 மணிநேரம் அனுபவித்து all இந்தியா tour ஞாயபக்தை மனதிற்கு கொண்டு வந்தது.
Gujili
ஒட்டகம்ன்னு பாய் சொன்னதும் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது. ஒட்டகத்தை சிகிச்சை அளிப்பதை விட அதை வளர்ப்போரை சமாளிப்பது என்பது மிகக்கடினமான ஒன்று, உலகின் மற்ற பகுதிகளைப்பற்றி எனக்கு தெரியாது, ஆனால் இங்கு நான் பட்ட அனுபவத்தில் இதை சொல்கிறேன். ஒரு முறை நான் முன்னர் பணியில் இருந்த கிளினிக்கிற்கு ஒரு ஒட்டக உரிமையாளர் வந்தார், அவருடைய ஒட்டகத்துக்கு mammary tumour இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் கூறினார், நான் குதிரைகளுக்கு மட்டும்தான் சிகிச்சை அளிக்க முடியும், ஒட்டகத்தில் எல்லாம் எனக்கு அனுபவம் இல்லை என்று கூறி நழுவி விட்டேன், ஆனால் எங்களின் மேல் அதிகாரியான Dr.John Samuel Gladson( நம்முடைய சீனியரான மச்சி கணேசன் தான் இவர்) நாம் அனைத்து மிருகங்களுக்கும்தான் வைத்தியர்கள், அதனால் நீ இதை செய்தே ஆக வேண்டும் என என்னிடம் கூறினார். வேறு வழியே இல்லாமல் நான் அவருடைய உத்தரவை செயல் படுத்த ஒப்புக்கொண்டேன். நான், கிர்மானி(நம்முடைய ஜூனியர்) மற்றும் இன்னொரு டாக்டர் (இதில் சமயோசிதமாக Dr.Gladson ஒதுங்கிக்கொண்டார் ). கிர்மானி ஒரு சூடான் நாட்டை சேர்ந்த டாக்டரிடம் anaesthesia பற்றி கேட்டுக்கொண்டான். அடுத்த நாள் அந்த சவுதிகாரன் எங்களை அழைத்து செல்ல வந்தான், நகரத்திலிருந்து கிட்டத்தட்ட நூறு கிலோ மீட்டர் சென்றவுடன் எங்கள் kaarai விட்டு , அவனுடைய four-wheel drive வண்டியில் கிட்ட தட்ட முப்பது கிலோ மீட்டர் பாலை வனத்திற்குள் பயணம் செய்த பின்னர் அவனுடைய இடத்தை அடைந்தோம், அந்த இடத்தில் முப்பது ஒட்டகங்கள், ஒரு டென்ட் கொட்டகை, தண்ணீர் tank இவ்வளவுதான் நான் இது வரை உலகில் பார்த்த பொருள்கள், மற்றவை எல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை செவ்வாய் கிரகம் போல் காட்சி அளித்தது, இந்த சூழ்நிலையை பார்த்த மற்றொரு டாக்டருக்கு அப்போதே வயிற்றை கலக்க ஒரு முறை ரெண்டுக்கு போய் வந்தார். பின்னர் ஒரு vazhiyaaka sigichchaiyai thuvankinom, mandaiyai pilakkum veyilaiththaan நாம் paarthirukkirom anaal mandaiyilirunthu muthuku thandu vazhiyaaka வாழ் வரை pilakkum வெயில் appothuthaan நான் anupaviththen, sariyaaka fasting seiyaathathaal, anaesthesia sariyaaka வேலை seiyya வில்லை, அறை மணி neraththileye நினைவு திரும்ப aarambiththu vittathu, இந்த pirachchnai pothaathenru puzhuthi puyal(dust storm) வேறு எங்களின் ventha punnil vel paaichcha aarampiththathu . ஒரு quarter வெட்டி edukkave பெரும் poraattam aaki vittathu, meethiyai edukkave mudiyaatha nilaikku thallappattom, adiththa puyalil mukam muzhuvathum மண், கண் thirakk mudiyavilla, dehydration l vaai, mookku, கண் எல்லாம் kaainthu vittathu. அந்த onaridam itharku மேல் seithaal ottakam seththu விடும் என்று கூறி atharku மேல் அறுவை செய்ய mudiyaathu என்று கூறி விட்டோம், avvalavuthaan avanukku கோபம் vanthu vittathu, அவன் iruppil இருந்த thuppaakkiyai kaatti அறுவை செய்ய வில்லை enraal neenkal மூவரும் உயிருடன் செல்ல mudiyaathu என்று koorinaan. நான் கொஞ்சம் thairiyam வர vazhaiththukkondu அவனிடம், மேலும் அறுவை seithaal raththappokku ஏற்பட்டு ottakam seththu விடும் என koorinen, ஆனால் அவன் oppukkolla maatten என adam pidikka aarampiththu vittaan. பின்னர் அவன் இன்னும் ஒரு மணி நேரம் neenkal அனைவரும் ingeye utkaara வேண்டும், ஒட்டகத்துக்கு onrum ஆக வில்லை enraal neenkal pokalaam, ஒட்டகத்துக்கு yethaavathu ஆனால் unkal moovaraiyum ingeye சுட்டு konru பாலை vanaththil வீசி senru viduven என mika koduramaaka koorinaan. naanka அனைவரும் avanin pinai kaithikal போல் ஒரு மணி நேரம் ankeye utkaarnthu irunthom, பின்னர் அவன் எங்களை enkal kaar irukkum இடத்தில் விட்டு விட்டு naalai unkalaippatri pukaar kodukka pokiren eru miratti விட்டு senraan, naankal thappiththom pizhaiththom என்று enkal இடம் senru அடைந்தோம். இது என் vaazhvil mikavum marakka mudiyaatha சம்பவம். இந்த sambavaththiruku பின் என்னுடன் vantha இரு டாக்டர்kalum ஒரு vaaram juram கண்டு paduththu vittaarkal.

புதன், ஜனவரி 21, 2009

ஏன் இந்த நீண்ட நெடிய மௌனம். எல்லோருமே அவரவர் பணிகளில் பிசியாகி விட்டோமா, ஒருவருக்கு கூடவா நேரம் கிடைக்கவில்லை மற்றவருக்கு சில மணித்துளிகள் ஒதுக்க நேரமில்லையா? மனமில்லையா?. கடந்த ஒரு வாரமாக சில தவிர்க்க முடியாயா காரணங்களால் என்னால் போஸ்ட் செய்ய முடியவில்லை. ஒட்டகத்தில் dystocia குதிரைக்குட்டியில் diarrhoea மற்றும் colic என கொஞ்சமும் அசராமல் பணிகள் ஏற்பட்டதால் அசதி, இன்று முதல் தொடருவோம்.....
கரையான்.

சனி, ஜனவரி 17, 2009

Dear Friends,

Please go back to older posts and reply to the relevant posts.

Bhai.

நம் Classmate சந்திரன் பற்றி பாய் எழுதிய வுடன் என்னக்கு ஒரு சம்பவம் நினைவிக்கு வந்தது. இது Anatomy லேப். Groups இல் பிரிக்க பட்டோம்.ஒருத்தர் dissection guide பட்டிக்க வேண்டும். மற்றவர்கள் different organs பார்க்கவேண்டும்.இறுதியில் திரும்பவும் revise பண்ண வேண்டும். நான் எல்லோருடன் revise பண்ண ஆரம்பித்தேன். Calf Kidney பற்றி இது என்ன என்று சந்திரனை கேட்டேன் . Scrotum என்று மிக தெளிவாக கூறினார்.அன்றில் இர்ருந்து final year முடிக்கும் வரை சந்திரனும் நானும் அந்த சம்பாவதை நினைத்து சிரிப்போம். என்ன சந்திரன், Kidney யின் பெயர் என்ன என்று கேட்டால் போதும் சந்திரன் சிரிக்க ஆரம்பித்து விடுவான் .இப்போது எங்கே இருக்கிறார் தெரியாது.....
GFK

நம் குடும்பம்
கரையான்





கரி அறிவியல் காட்சிகள்

1. லேப் தேர்வு .வாத்தியார் 'கரி சன்'. 5 SPECIMEN கண்டுபிடுத்து ,5 ல் 1 கட்டுரை எழுதவேண்டும். Specimen முடித்து விட்டு ஹாலில் eலுதிக் கொண்டிருக்கும் பொது, அன்துவிற்கு பின்னால் உள்ள ஒரு மாணவி[பெயர் வேண்டாம்] ,அன்துவிடம் 3 வது ச்பெசிமேன் என்ன? என்று கேட்டால் .வழக்கம் போல் அந்து புன்னகை பூத்து விட்டு ,பேண்டின் பின் போக்கெடுக்குள் கையை விட்டு 3 வது exercise இக்கான பிட்டை எடுக்க ஆரம்பித்தான். நான் சய்டில் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். உடன் அந்த மாணவியின் முகத்தை பார்க்க வேண்டுமே ! வாழ்கையிலேயே பிட் அடிக்காதவல். அப்படியே தனது chair ஐ பின்னுக்கு இழுத்துவிட்டால். இதை நான் பல முறை நினைத்து சிரித்துள்ளேன். வழக்கமாக அந்து பிரக்டிகல் தேர்விற்கு பேண்டின் வலது பொக்கெட்டில் ,இடது ,பின் ,வலது ஸொக்ஸில்,இடது என முறையே 1,2,3,4,5 ஆகிய exercise பிட்டுகளை வைத்திருப்பான்.பழக்க தோசத்தில் அன்று 3 வது பிட்டை உருவ ஆரம்பித்துவிட்டான்.
2. வா: அதே ;மாணவன் -CLASSMATE சந்திரன் .இன்னொரு லேப் தேர்வு.
வா: சந்திரன் - இந்த scale எங்கே வாங்கினாய்?
சந்த்: திண்டுக்கல்லில் உள்ள எனது மாமா கொடுத்தது.
வா: SCALE ஐ எடுத்துக்கொண்டு ,தேர்வு முடிந்ததும் ரூமுக்கு வா என்றார்.
குறிப்பு: 1.இந்த நேரத்தில் அவரவர் scale களையெல்லாம் சன்னல் வெளியே எறிந்துவிட்டார்கள்.நிறைய பேர் பிட்டுகளை முளிங்கிவிட்டர்கள். மறு நாள் பக்கத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு செம கொண்டாட்டம்-ஏராளமான புதுபுது scales எலவசம்.
[mun sambawam -அது ஒரு heart. ஷீப் அல்லது பிக் -என குழப்பம்.அது ஷீப் என நான் table இல் எழுதி எதை அவள் பார்கவில்லை. நான் ஷீப் heart நிறைய சப்பிட்டிருப்பதல் கரெக்டாக கண்டுபிதுவிட்டேன்.]
ரூமில் வா: ஏன்டா திண்டுக்கல்லா ,நீ எப்படி இனி திண்டுக்கல் போறேண்ணே பார்கிறேன்? SCALE வலியா பிட் அடிக்கிறயா? நான் என்னே இளிச்சவாயனா?
சந்து: சார் தெரியாம செய்துட்டேன். மன்னியுங்கள்.
வா: அவன் உண்மையிலேயே அப்பாவி என்பதால் ,சரி போயி தொலை என்றார்.
சந்து: விடைபெறும் பொது,அப்பாவித்தனமாக ,சாரிடம் SCLAE ஐ கேட்டிருக்கிறான்.
வா: மவனே வாழ்கையிலே இனி உன் கையில் SCALE ஐ பார்த்தால் ,இங்கிர்ந்து நீ ஐந்தாம் வருடம் நினைக்காதே
குறிப்பு: 'D' கொடுத்து அனுப்பிவிட்டார்.
பாய் .

வியாழன், ஜனவரி 15, 2009

நான் கல்லூரிக்கு தினமும் வந்து செல்லும் பேருந்தில் சில சமயங்களில் நம்முடிய batchmate பிரேமலதாவும் அரும்பாக்கத்திலிருந்து பயணம் செய்வார், பார்த்தால் புன்னகை செய்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்குள் நட்பு உண்டு. அப்போது எனக்கு ஆமிர் கான் போல six pack உடம்பு இல்லை என்றாலும் ஒரு police constable போல இருப்பேன்,(S.P or D.S.P போல இருப்பேன்னு சொல்ல ஆசைதான் அனால் பாய் உடனே கண்டனக்கடிதம் அனுப்பிவிடுவான் )ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்யும்போது அவர் என்னருகில் வந்து சில வார்த்தைகள் பேசினார், மேலும் என்னிடம்" குமரன் அங்கே பின்னால் நிற்கும் சிவப்பு சட்டைக்காரன் தினமும் என்னையே follow செய்கிறான், எனக்கு பயமாக இருக்குது" என்றார். என் மனதுக்குள்"இதென்னடா வம்பு, வயித்துல புளிய கரைக்குற மாதிரி பிரச்சனையா இருக்கே" என எண்ண ஓட்டங்கள் ஓடினாலும் கொஞ்சம் மனதை தைரியப்படுத்திக்கொண்டு யார் அவன் என்று கேட்டேன், அவன் யாருன்னே தெரியாது ஆனால் தினமும் என்னை follow செய்கிறான் என்று கூறினார். நான் அவனைபார்க்கும் போது வேறுபக்கம் திரும்பிக்கொண்டான், அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய Ripon building நிறுத்தம் நெருங்கியதால் , நான் பிரேமலதாவுக்கு முன்னாள் கொஞ்சம் விரைவாக சென்றேன், நான் வருவதைப்பார்த்து (என்னுடைய சதுர வட்டை hair cut ஐ பார்த்து என்னை போலீஸ் என நினைத்திருக்கலாம்) ஓடும் பஸ்சிலிருந்து சிக்னலில் குதித்து ஓடி மறைந்து விட்டான். எனக்கு அப்போதுதான் உயிரே வந்தது, இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம் போய் வேறு ஆட்களை கூட்டி வருவானோ என்று ஆனாலும் என்னுடைய பயத்தை காட்டிக்கொள்ளாமல் ரிப்பன் கட்டிட நிறுத்தத்தில் இறங்கினேன், பிரேமா லதா ரொம்ப மகிழ்ச்சி அடைந்து "ரொம்ப நன்றி குமரன் இனிமே அவன் வர மாட்டான்னு நினைக்கிறேன்" நான் மனதிற்குள் "நானும் சில நாட்களுக்கு இந்த ரூட்டில் நிச்சயமாக வரமாட்டேன்" என நினைத்துக்கொண்டு விடை பெற்றேன்.

புதன், ஜனவரி 14, 2009

GFK யின் குடும்பம்





நடுவில் இர்ருக்கும் குடும்ப படம் 2004 இல் எடுத்து. நீள் மதன் கோயல் இப்போது 5th grade இல் பட்டிக்கிறான். He does well in school.He sings well. He plays Basketball and swims. குஜிலி அவனுடய godmother.. கமெண்ட்ஸ் ப்ளீஸ்.
GFK

குதிரைக்காரனின் ஒட்டக அனுபவம்

ஒட்டகம் கொஞ்சம் பாக்க பயமுறுத்துவதாக இருந்தாலும் குதிரையை விட docile என்றுதான் சொல்லணும், ஏனென்றால், கண்ணிமைக்கும் நேரத்தில் குதிரைகளிடம் பல முறை உதை வாங்கிய அனுபவம் உண்டு, ஆனால் இது வரை ஓட்டகங்களிடம் கடியோ அடியோ வாங்கியதில்லை. மிகப்பெரிய பிரச்சினையாக நான் கருதுவது Brucellosis , சவுதியில் கிட்ட தட்ட முப்பது சதவீத ஒட்டகங்கள் Brucella infected என ஒரு study தெரிவிக்கிறது, ஆகவே மிகுந்த precautions உடனே சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இங்கு பெரும்பாலான சவுதிகள் ஒட்டக பால் காய்ச்சாமல் குடிக்கும் பழக்கம் உடையவர்கள், அப்படி குடிப்பதால் athil aphrodisiac effect iruppathaaka karuthukiraarkal, கொஞ்சம் பழைமையான ஆட்கள் (nomads or bedouin) பெண் ஒட்டகத்தின் siruneer kudiththaal hepatitis and kidney stones ஆகிய பிரச்னைகளுக்கு அருமையான சிகிச்சை என்று கூறுகிறார்கள். இதன் விளைவால் இங்கு malta fever அல்லது brucellosis in human சர்வ சாதாரணம். நான் பணிபுரியும் பண்ணையில் அறுநூறு ஒட்டகங்கள் உள்ளன.

பாயின் வாரிசுகள்


மகன்: முஹம்மத்-6 ஆம் வகுப்பு ;மகள்: சமீஹா - 3 ஆம் வகுப்பு
இருவரும் முதல் ரேங்க் ;இருவருக்கும் இரண்டாம் மொழி பிரெஞ்சு .
உங்கள் அத்தனை பேருக்கும் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள் .
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
கரையான் மற்றும் குடும்பத்தினர்.

செவ்வாய், ஜனவரி 13, 2009

காட்டுபாக்கம் field trip

ஒரு முறை Agronomy கிளாஸ் field trip இல் காட்டுபாக்கம் சென்றோம்.அப்போது ஒரு classmate என் கையின் மீது நான் கவனம் செலுத்தாம இர்ருக்கும் பொது ஏதோ ஒரு முலிகை யெலையை சும்மா அசால்டா போகிற போக்கில தடவிவிட்டார் . அது ஒரேயடியா அர்ரிக்க கையெல்லாம் வீங்க, நான் அழ அவர் வந்து சாரி சொன்னது என்னக்கு மறக்க முடியாதது. அந்த classmate யார் என்று ஞாபகம் இருக்கிறதா....
GFK

yellow

நாம் மூன்றாம் ஆண்டு Genetics கிளாஸ் எடுக்கும் podhu அந்த department இல் ஒரு professor மஞ்சள் நிறத்தை எல்லோ என்று அதிக அழுத்தத்துடன் உச்சரிப்பார். என்னகு subject ஞாயபகம் இல்லை ஆனால் drosophila இறக்கை நிறத்தை பற்றி கற்று கொடுக்கும் போது "the color of the wing is yelllooww " என்று திரும்ப திரும்ப சொல்வார். பெயர் யாருக்காவது ஞாயபகம் உள்ளதா? கோபிண்டராஜ் என்று நினைக்கிறேன். ஒரு முறை அவர் ஆபீசிற்கு நானும் லிடியா வும் சந்தேகம் ஒன்றை கேட்கபோகும் போது ஒரு பெரிய கருப்பு குடை ஒன்றை விரித்து ஆபீசிற்குள் உட்கார்ந்திருந்தார். அது மற்றும் போதாமல் வாழை பழம் ஒன்றை உரித்து அதன் தோலை சாப்பிட ஆரம்பித்தார். இந்த மாதிரி ஒரு பைத்திய கோலத்தை நான் பார்த்ததில்லை, ஆகையால் நானும் லிடியாவும் சந்தேகம் ஒன்றும் கேட்காமல் பேசாமல் சிரித்து கொண்டே போய்விட்டோம். அவர் கண்டு கொள்ளவே இல்லை.
Gujili
துரைப்பலம் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய பெயர் அல்ல. நம்முடைய சீனியர் ஆக இருந்து, நம்முடைய வகுப்புதோழராகி,பின்னர் நமக்கு ஜுனியராகி,அதற்கும் பின் மிக ஜுனியரானவர். ஒரு முறை நயூராநிடமும் என்னிடமும் வந்து "மக்கா சிசிலியா மேடம் வார்டுல எனக்கு செமினார் எடுக்க சொல்லி assignment கொடுத்து இருக்காங்க, நான் என்னோட lecture முடிச்சவுடன் நான் உங்களுக்கு சொல்ற கேள்விகள என்கிட்டே சந்தேகம் கேக்குற மாதிரி கேக்கணும் நானும் நல்லா உங்களோட சந்தேகத்தை தீர்த்து வக்கிறமாதிரி அதுக்கு சரியா பதில் சொல்லிடுவேன்" என்று கூறினார். (seminar என்ன பொருத்தம் பாருங்க semi சங்க உறுப்பினர்களான எங்களுக்கு), நாங்களும் அவருடைய இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டோம். வார்டில் அவர் தன்னுடைய உரையை முடித்தவுடன் சந்தேகங்கள் கேட்க வேண்டிய நேரம், நயூராந்தான் முதலில் கேட்கவேண்டும் என்பது ஏற்பாடு, ஆனால் நான் அவசரப்பட்டு முந்திக்கொண்டு விட்டேன், உடனே துரைப்பலம், என்ன மக்கா கண்ணன்தானே முதலில் கேக்கணும், நீ கேக்குறே என என்னிடம் அவசரப்பட்டு கேட்டு விட எங்களுடைய திட்டம் அனைவருக்கு தெரிந்து சிரித்து விட்டார்கள்.

அன்புள்ள cricbuff நீங்கள் யார் என்பதை தெரிய படுத்தவும், நீங்கள் publish செய்த post மற்றவர் சிரிக்கும் வகையில் நகை சுவையாக, காயப்படுத்தாமல் இருந்தால் நன்று. நீங்கள் எழுதிய post கொஞ்சம் எல்லை மீறுவதாக தோன்றியதால் delete செய்யப்பட்டுள்ளது.

கரையான்.

திங்கள், ஜனவரி 12, 2009


மத்த வழியில சம்பாதிச்சத குதிரையில விடுவாங்கன்னா, இவரு குதிரையில சம்பாதிச்சத கோழியில விட்டவரு, விட்டதுமில்லாம உங்க ஊருக்காரனுங்க என்ன ஓட்டாண்டி ஆகிட்டானுங்கடின்னு டயலாக்கு வேறு. ஆடு தன் தலையில மஞ்சத்தன்னிய தெளிச்சிகிட்டு , தலைய குடுத்தா வெட்டாம தலைபின்னி,போட்டிட்டு பூவா வச்சி விடுவாங்க, கோழியில போட்ட காசு கொத்து பரோட்டாவ போயிடுச்சி. பிசினஸ் எல்லாம் உனக்கு வராதுன்னு பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கணும், அதெல்லாம் விட்டுட்டு "நாங்கெல்லாம் யாரு அம்பானி, டாட்டா,பிர்லா ரேஞ்சுக்கு வர வேண்டிய ஆளுங்கன்னு பந்தா விட்டா இதுதான் கதி" போட்ட காசு அம்போன்னு டாட்டா சொல்லி பறந்துடுச்சு.

படிக்குற காலத்துல மத்தவுங்க செய்யற தப்பு என்னா,யார எப்படி நக்கல் அடிக்கலாம்னு பாக்காம ஒழுங்க படிச்சிருந்தா, அரைக்காசானாலும் அரசாங்க காச பாதிருக்கலாமிள்ள(இதல கூத்து என்னென்னா இவரு நக்கல் லிஸ்டுல இருக்கற பெரும்பாலானவுங்க நல்ல அரசாங்க வேலையில இருக்காங்க).

T.V. ல நமீதா படம் மட்டுமில்ல, அவளோட பெயர போட்டா கூட இவரோட ஐம்புலனும் T.V. ல ஐக்கியமாயிடும். அவ்வளவு பக்தி நமீதா மேல.

நாங்கெல்லாம் கல்லூரியில படிக்கறச்சன்னு எதெற்கெடுத்தாலும் இவரு உடுற ரவுசு......... ஐயா சாமி இதுக்காகவே இன்னொரு get-to-gether வையுங்க எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.........

இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, கோவத்துல இல்ல, அவர் மேல உள்ள காதலுல சொல்றேன்.................

திருமதி.கரையான்.
dairy science class ல் டாக்டர் நரசிம்மன் மிக தீவிரமாக dairy microbilogy வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்தார், நானும் நாயூரானும் தீவிரமாக வகுப்பில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தோம் (சும்மா....... நாங்களாவது கவனம் செலுததுவதாவது,) எங்களுக்கு இடதுபுற முன் வரிசையில் கணேஷ், அஞ்செலா உட்கார்ந்திருந்தார்கள், அவர்கள் இருவரும் எதோ அவர்களுக்குள் பேசி விளையாடிக்கொண்டு இருந்தார்கள், இதைப்பார்த்த நாயூறான், திடீரென்று எழுந்து நின்று மிக சத்தமாக"சார் என்ன சார் இவுங்க பாட்டுக்கு விளையாடிகிட்டு இருக்காங்க நீங்க ஒன்னும் கேக்க மாட்டேங்கிறீங்க" என மிக வேகமாக கேட்டான், அவருக்கு ஒன்றும் புரிய வில்லை, அவர் அவனிடம் "what what what" என திரும்ப திரும்ப கேட்டார், எங்களை சுற்றி இருந்த அனைவருக்கும் அவன் கேட்டது புரிந்ததால் நாங்கள் அனைவரும் சிரித்து விட்டோம், அவன் மிக சாதரணமாக அவரிடம் " how this bacteria is work" என அவனுடைய வழக்கமான ஆங்கிலத்தில் கேட்டான், அவரும் மிக சீரியசாக அவனுக்கு விளக்கி விட்டு எங்களையெல்லாம் பார்த்து மிக கோபமாக திட்ட ஆரம்பித்து விட்டார் "அவன் என்ன அருமையான கேள்வி கேட்டுள்ளான், நீங்களெல்லாம் சிரிக்கிறீர்களே stupids, idiots "

சனி, ஜனவரி 10, 2009

திஸ் yaa

அன்பு நண்பர்களே,
நமது மீட் சயின்ஸ் departmentil ஒரு வாத்தியார் உண்டு, அவர் ஒவ்வொரு வார்த்தைக்கு பிறகு ஆ this yea this yea என்று சொல்வர், யாருக்காவது ஞாயபகம் உள்ளதா? இருந்தால் கமெண்ட் செயயவும் namadhu வகுப்பில் பாகவதரும் வேறு சில மக்களும் அவர் எத்தனை முறை this yea சொன்னார் என்பதை எண்ணினர், நூறுக்கும் மேல் தாண்டினது என்று நினைகிறேன்.
Gujili

BLOG

மதிப்பிற்குரிய நண்பர்களே,
திங்கள் முதல் எனக்கு கல்லூரி ஆரம்பிக்கிறது, ஆதலால் அடிக்கடி ப்லோக் சைய்வது கடினம். எனினும் சமயம் கிடைக்கும் போது நான் கண்டிப்பாக நமது கால்நடை கல்லூரியின் அனுபவங்களை எழுதுவேன். இப்போது கிளாஸ் ப்றேபரடின் சைய்யபோகிறேன்.
எல்லோர்க்கும் வாழ்த்துக்கள்
Gujili






பீர்



ஹலோ பிரிஎண்ட்ஸ் மன்னிக்கவும்



ஏதோ தவருதலஹ பந்தா விட்டுவிட்டேன் மன்னிக்கவும்



என்ன இருந்தாலும் தமிழ் போல வருமா ?



ஹலோ

GFK நான் லுடோநிளுருந்து 40 நிமிட தூரத்தில் இருக்கிறேன் ,அடுத்த முறை uk வந்தால் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வருதை தர கேtடுக்கொல்திறேன்


ஹலோ குஜிலி நீ உனைப்பத்தி ஒன்றும் எழுதவில்லையே


நெக்ஸ்ட் டைம் மோர் டீடைல்ஸ் எழுதவும்






ஒரு முறை microbiology lab ல பயிற்சி வகுப்பு, gram's stain செய்வது பற்றிய வகுப்பு அது. (இந்த சம்பவத்தில் வாத்தியார் பெயர் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பெயர்களை நாம் வெளிப்படுத்தப்போவது இல்லை), நம்ம நண்பர் ரொம்ப தீவிரமாக, கவனம் செலுத்தி stain செய்தார், ஆனால் என்ன கொடுமை, அவரே எதிர் பாராமல் மிக சிறப்பாக stain ஆகி இருந்தது, அவருக்கே ஆச்சர்யம். அவராலேயே அதை நம்ப முடியவில்லை. ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக சோதித்தார், நம் நண்பர் செய்ததை பார்த்து விட்டு, "நீ எல்லாம் எதுக்குதான் படிக்க வந்தாயோ, ஒண்ணுமே வித்தியாசமே தெரியலே, gram +ve or gram -ve எதுவுமே தெரியலே என்று திட்டி விட்டு நகர்ந்தார், அடுத்த வரிசையிலிருந்த நம்முடைய தோழி(மாணவி)செய்த ஸ்டைன் என்ன ஆனதோ தெரியலே , smear காய்ந்து மொத்தமும் நீலக்கலரில் காட்சி அளித்தது, எனவே ஆசிரியரிடம் எப்படியும் வாங்கிகட்டிக்க போறோம் என முடிவு செய்து, ஆசிரியர் ஏற்கனவே சோதித்து சரியில்லை என்று சொல்லி சென்ற நம் நண்பரின் slide ஐ வாங்கி அவருடைய microscope வைத்து விட்டார், ஆசிரியர் வந்து அதை சோதித்து விட்டு அவரை வானளாவ புகழ்ந்து தள்ளினார், நம் நண்பரை வேறு அழைத்து, "இதைப்பார், எவ்வளவு அழகாக stain செய்திருக்கிறாங்க, நீயும் இருக்கிறியே" தோழியின் கை பட்டதாலா அல்லது என்ன காரணத்தால் அந்த slide அழகாக மாறியது, கண்டு பிடித்து சரியாக ஜொல்லுவொருக்கு ஆயிரம் பொற்காசு.

பாய்

பீர் மலையாளத்தில் எழுதிவிட்டான் .எனவே இன்று மலையாள வாத்தியார் சம்பவம்.அவர் யார் என்று நீங்கள் பதில் தரவும். நல்லா எழுதியும் முதலில் 'B' தந்தார் .சென்றேன் அவரிடம் கடும் கோபத்துடன் .
வா: எந்தா அஹ்மத்? எந்தா பரிபாடி? நாட்டிலே எந்து விசேசம்? என்தானு காரியம்?
பாய்: நிங்கலு 'A' கொடுத்தா அது விசேசம் தன்னே . இல்லெங்கில் சவுட்டும் .
வா: எண்டே குருவாயுரப்பா ! ஒன்னு குழப்பில்லா . அடுத்த கொர்சில் 'A' தரும் .
பாய்: 'A' தான் கிடைத்தது.

அதற்குப்பிறகு நல்ல உறவு. எத்தனை 'attestations' என்றாலும் ,சளைக்காமல் போட்டு தருவார்.

பாய்

ஆனந்தராஜை பற்றி தவறாக எழுதாதீர்கள் .'நன்றி மறப்பது நன்றன்று '. கல்லூரியை விட்டு நாம் 92 இல் நாம் வெளிவந்தது விட்டோம். 93 இல் சென்னை ஹோச்டேளுக்கு சென்ற பொது அவனது ரூமில் தங்கினேன் .விடை பிரியும் பொது 'அஹ்மத் -நீ வரும்போதெல்லாம் என் ரூமில் தங்கு என்று கோரிக்கை. அவனது அன்புக்கட்டளைக்கு இணங்க 97 வரை அவன் ரூமில் தங்கியுள்ளேன்.
'லிப்ஸ்டிக் வாயனை' மறக்கவே முடியாது.மேலும் செலைடுக்கும் அவனுக்கும் ஒத்தே வராது.அனாடமி சந்திரகாசன் எவ்வலவோ சொல்லிக்கொடுத்தும் பயனில்லை.ஒரு தடவை எவன் நச்சரிப்பில் சந்த்ரகாசனுக்கு செம கோபம் -'டேய்-எத்தனை தடவை .................! ஒரு தடவை சொன்னா புரியாதா!என்று எழுத முடியாத வார்த்தைதளால் திட்டினார்.அவன் கூலாக 'புரியல்லை' என்றான். ஓடிப்போஇவிட்டார் வாத்தியார்.

பாயின் உள்ளத்தில் இருந்து


பாய்

Dear Classies,
These days I am busy with routine vaccination programmes which we carry out yearly regularly in these winter months.So,I will be posting and replying only on Saturdays.Neverthless I have lot of incidents to write and will post one by one.

வியாழன், ஜனவரி 08, 2009

பா கே பா

கரையான் :
நம்மோட மத்திகிரி பா கே பா இன்னும் உன்னிடம் இருகிறதா...இருந்தால் சில பக்கங்கள் அதில் இருந்து பகிர்ந்து கொள்ளலாமே. ரொம்ப சுவாரசிமாய் இர்ருக்கும்.
அது ஒரு evergreen classic.

கன் பாயிட் காஞ்சனா

கோழி சயின்ஸ் லேப் அனுபவங்கள்

நாம் கோழி சயின்ஸ் லேபில் ஒரு முறை முட்டையின் qualities ஆராயிந்து கொண்டிர்ருந்தோம். லேப் பெஞ்சில் ஒரு sadhuramana கண்ணாடி தட்டை வைத்து பின்னர் முட்டயை மிக கவனத்தோடு மஞ்சைய் கரு கலங்காமல் உடைத்து albumin/yolk dimensions அளக்க வேண்டும். A batch இல் உள்ள யவாரும் கோழி வாத்தியார் சொன்ன மாறி அளந்தோம். ஆனால் நமது வகுப்பில் உள்ள famous V.P முட்டையை முதல் உடைத்து லேப் பெஞ்சில் போட்டு பின்ன்னர் கண்ணாடி தட்டை முட்டை மேல் போட்டார், ஆகையால் முட்டை கருவும், வெள்ளையும் அங்கங்கு சிதறி ஒரே நாசமாகிவிட்டது. கோழி ஆசிரியர் கண்ணா பின்ன என்று திட்டினார்; அந்த ஆசிரியர் பேர் எனக்கு ஞாயபகம் இல்லை. அவர் கோழி மாறி தான் இருப்பார் பார்ப்பதற்கு; அதாவது கோழி எப்படி தலையை ஒரு மாதிரி சாய்த்து பார்க்குமோ அது போலே அவரும் தனது கழுத்தை சாய்த்து கண்ணை கொட்ட கொட்ட என்று விழித்து பார்பார்.

Gujili

நம்ம nutrition right விஸ்வநாதன யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, அவர் வகுப்புல அட்டெண்டன்ஸ் எடுப்பது முதல் பாடத்தை முடிப்பது வரை அனைத்தும் ரசிக்க கூடியதாக இருக்கும். ஒரு முறை அவர் அட்டன்டன்ஸ் எடுத்துக்கொண்டு இருந்தபோது எலி கத்துவது போல் சத்தம் வந்தது, எங்கிருந்து வருகிறது என்பதை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை, பின்னர் அவர் வழக்கமான பாணியில் பாடம் எடுக்க தொடங்கினார்,"lipids right are concentrated right source of right energy that can right readily be right utilized right by the animal........." என நமக்கு புரியாத பாணியில் நடத்திக்கொண்டிருந்தார், திரும்பவும் அந்த சத்தம் ஒலித்தது, அவரால் lecture ல் கவனம் செலுத்த முடியவில்லை, அந்த சத்தம் மின் விசிறியிலிருந்து வருவதை ஒரு வழியாக கண்டு பிடித்தார், பின்னர் அந்த விசிறியையே முகவாயில் கை வைத்துக்கொண்டு முறைக்க ஆரம்பித்தார், ஒற்றைக்காலில் நின்று,தலையை சொரிந்து,மீசையை தடவி,இரண்டு கையையும் மேஜையில் ஊன்றி என பல வழிகளிலும் பத்து நிமிடங்களாக யோசித்துக்கொண்டே இருந்தார், பின்னர் ஒரு வழியாக "off the switch" என்று சத்தமாக கூறினார்(மின் விசிறியை கண்டு பிடித்தவன் கூட இவ்வளவு சந்தோசம் அடைந்திருக்க மாட்டான் அவர் குரலில் சந்தோசம் ஒலித்தது). அந்த மின் விசிறியை நிறுத்த சொல்லுவதற்கு ஆங்கிலத்தில் எப்படி சொல்லுவது என்பதைத்தான் அவ்வளவு நேரம் யோசித்தார்.

கல்லூரியில் முதல் நாள் அனுபவம்

சென்னை கால்நடை கல்லூர்யில் எனக்கு admission கிடைத்ததில் ஒரே மகிழ்ச்சி... ஆனால் எனக்கு அன்று seat கிடைக்காமலே போயிர்க்கலாம்.
முதல் நாள் சென்னைகால்நடை கல்லூரியின் கிளாஸ் இல் எல்லோரும் அமர்திரிந்தோம். Parasitology department பேராசிரியர் அப்போது ஒரு சோடா புட்டிஅணிந்த ஒரு அம்மணி (பெயர் மருந்துவிட்டது ). அவர் எல்லோர் பெயரையும் மெதுவாக உற்று பார்த்து அயைத்து கொண்டிருந்தார்.
திடீர் என்று, டீ பக்கிரி ஸ்வமி என்று சத்தமாக குரலிட்டார். மூன்று முறை கூப்பிட்ட பின்னும் யாரும் வரவில்லை. இந்த சீட்டு காலி என்று தன் அச்சிச்டன்ட்க்கு கூறினார். திடீர் என்று எனக்கு ஒரு ஞானோதயம்... அது ஏன் பேர் தான் என்று. தீபா கிருஷ்ணசுவாமி எங்க்ரின்ற பெயரை அவர் டீ பக்கிரி ஸ்வாமி என்று அழைத்து இன்று வரை மறக்க முடியாதது.

புதன், ஜனவரி 07, 2009

parasitology lab ன்னு பீர்பாய் எழுதுனவுடன் ஒரு சம்பவம் ஞாபகம் வருது, ஒரு முறை ரத்தத்துல இருக்குற parasites கள identify பண்ணுவதற்கு stain பண்ண வேண்டிய பயிற்சி வகுப்பு, என் அருகில் பல்லு ஜெயராமனும் நாயூரன் கண்ணனும் இருந்தார்கள், நாங்கள் மூவரும் எங்களுக்கு கொடுக்கப்பட்ட slides களை ரொம்ப பக்தி சிரத்தையோடு stain செய்தோம், எனக்கும் கண்ணனுக்கும் எங்கள் slide கள் மிக அருமையாக stain ஆகி இருந்தது, ஆனால் ஜெயராமனுடையது ஒன்றுமே ஆக வில்லை, அதைப்பார்த்து மிக கடுப்பாகி விட்டான். எல்லோருக்கும் தெரியுமே அவன் கோபம் வந்தால் அவன் வாயிலிருந்து என்னென்ன வார்த்தைகள் வருமென்று, உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளால் parasitology department மொத்தமும் திட்டி தீர்த்தான், அவனுக்கு பழைய கெட்டுப்போன stain கொடுத்து விட்டார்களா வாத்தியார்கள் என கொட்டி தீர்த்தான், நான் அவனிடம் மெதுவாக விசாரித்தேன், என்ன நடந்தது என்று, பின்னர் அவனிடம்"ஜெயராமா நீ slide ஓட அடிப்பக்கத்தை stain செய்தால் ஒன்றும் வராது, smear செய்த side ல stain பண்ணனும், இங்க இருக்கிற வாத்தியார்களை திட்டி பிரயோஜனம் இல்லை" என்று எடுத்து கூறினேன்.
கரையான்.





பீர் இங்கிலாந்திலிருந்து
ഇവിടെ ഇപ്പോള്‍ നല്ല തണുപ്പാണ്
ഇന്നെല രാത്രിയില്‍ -9*c ആയിരുന്നു
നാന്‍ ചില ഫോട്ടോസ് attach ചെയ്ടിട്ടുണ്ട്
please comment on them
peer

when i was doing my mvsc anantha raj came and aske3d for some help to pass his parasitology practical exam conducted by dr. L.John,I helped him with most of the nematodesand how to identify them etc.

madam gave only 5 slides to let him pass the exam to get rid of him from the dept.
on the exam day he had a look in the microscope and he was very happy that he would pass this time for sure.
madam came to him and asked him to identify the specimen,he said that hemondus contorus instead of hemongus contortus with enthusiasm,actually it was wrong answer
madam slapped on forehead and said "onthalai",it was so funny to witness that
i dont know where he is? and what he is doing?
please let me know about him
சமீபத்தில் நான் ஒபாமாவையும் மக்கைநையும் neuter சைய்யும் வாய்ப்பு கிடைத்தது.... என்ன ரொம்ப தான் பந்தா விடுகிறாள் என்று நினைக்க வேண்டாம்.

நான்
ஒரு வேட் க்லிநிகில் பனி புரிகிறேன். அங்கே இரண்டு பூனைகள் வந்தனர் . ஒன்றின் பேரு ஒபாமா மட்ரோன்றின் பெயர் மக்கைன் !!! அன்று எங்கள் க்லிநிகில் ஒரே பரபப்பு தான்.

கால்நடை கல்லூரி நினைவுகள் தொடரும் .......
கன் பைட் காஞ்சனா
நாயுரான் கையெழுத்து எல்லோருக்கும் அறிமுகமான ஒண்ணுதான், anatomy exam ல அவன் எழுதுன பதில்களை டாக்டர் சேஷாத்ரி அவருடைய பூதக்கண்ணாடி வழியாக anterior,posterior,lateral,medial,dorso-ventral,dorso-medial, கிழக்கு,மேற்கு,தெற்கு,வடக்கு என எத்தனை திசைகள்,வழிகள் உண்டோ அவ்வளவு திசைகள் மற்றும் வழிகளிலும் படிக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தார், பின்னர் அவனையே அழைத்து நீ பதில்களை படித்துக்காட்டு, சரியான பதில்கள் எழுதி இருந்தால் நான் தகுந்தவாறு மதிப்பெண் அளிக்கிறேன் என கூறினார். நாயுரானும் அவனால் முடிந்த வரை முயற்சி செய்தான், அந்த கொடுமையை அவனாலும் படிக்க முடிய வில்லை, கடைசியில் அசடு வழிய நின்றான், கடைசியில் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து அவனுக்கு "C" grade கொடுத்து அனுப்பினார், அவனுக்கு "F" கொடுத்தால் திரும்பவும் வந்து அதே போல் எழுதி தலைவலி கொடுப்பானே என்று பயந்து அவனை ஒழிந்தால் போதும் என்று பாஸ் செய்து வைத்தார். நான் அவனிடம் உனக்குத்தான் பதில் தெரியுமே படித்துக்காட்ட வேண்டியதுதானே என்று கேட்டேன்,"எலே நானே ஊருலருந்து பஸ்ல வந்த கதைய இங்க்லீசுல எழுதுனேன், அந்த மானக்கேட படிச்சுக்காட்ட சொல்றியா" என என்னை முறைத்தான்.
கரையான்.

செவ்வாய், ஜனவரி 06, 2009

தேவகி

மீண்டும் முதல் ஆண்டு நினைவுகள் .......Biology கிளாஸ் இல் எ படச் மாணவர்கள் Lab சென்றோம். அங்கே எலிகலை dissect செய்வதற்கு தயார் ஆக வைத்திருந்தார்கள். எல்லோர்ரும் சென்றோம். உட்கார்ந்து கொண்டோம். எலி கலை ஆணிகளால் dissection போர்டில் அடிக்க ஆரும்பிதோம். தேவகி அவர்கள் அரைக்குள் வந்தார். சத்தமாக தமிழில் எல்லோரும் நிருதிங்க! என்று சொன்னார். இரு முறை சொன்னப்பின் சத்தம் குறைந்தது ஆனால் ஒருவர் மற்றும் பக்தி ஷரத்தை ஆகா ஆணி யை சத்த மாக அடித்துகொண்டிருந்தார். அது நம்ம தலைமை மலை காரர் அதிகாரி அவர்கள் தான் . இன்று வரை அது என்னை சிரிக்க வைக்கும்.
தொடரும் ......
கன் பாயிட் காஞ்சனா
நம்ம extension subject ல பிட் அடிக்காம பாஸ் செஞ்சவுங்கள விரல் விட்டு எண்ணிடலாம், பரீட்ச்சை நேரத்தில் அந்துவனும் பு.பாபுவும் தெள்ள தெளிவாக பிட் எழுதி எத்தன பேருக்கு வேணும் என்பதை விசாரித்து xerox போட்டு வைத்து விடுவார்கள். அடுத்த நாள் பரீட்சைக்கு முன்னர் அனைவருக்கும் அதை விநியோகித்து விடுவார்கள். அப்படி ஒரு பரிட்சையில் எல்லோரும் அருமையாக பிட் அடித்து A and B கிரேடு வாங்கி விட்டார்கள், ஆனால் v.p. அன்பழகனை மட்டும் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டு பிடித்து விட்டார், எப்படி என்றால், பிட் தயார் செய்து எழுதும்போது அந்துவன் பிட்டில் இடம் பற்றாததால், ஒரு பதிலின் பாதியை இன்னொரு பதிலின் இரண்டாவது பாதியாகவும், இரண்டாவது பதிலின் இரண்டாவது பாதியை முதல் பதிலின் இரண்டாவது பாதியாகவும் எழுதி இருந்தான், இதை எங்களுக்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்ததால் நாங்கள் எல்லாம் சரியாக எழுதிவிட்டோம், இது அன்பழகனுக்கு தெரியாது, அவன் அந்த பிட்டில் இருந்ததை அப்படியே காப்பி அடித்து எழுதி மாட்டிக்கொண்டான்.

லூஸ் மோகன் ஆங்கில

இன்று நான் முதல் ஆண்டு ஆங்கில வாத்தியார் லூஸ் மோகன்
பற்றி எழுத விரும்பிகிறேன். அவர் கிளாஸ் குள் வருவார். Attendance எடுத்து விட்டு யாரையாவது கேள்வி கேட்பார். சரியான பதில் கொடுக்காவிட்டால் இல்லை கொடுத்தாலும் அவர் ஆரம்பிப்பார் "he who knows not knows not and he who knows......." மிச்சும் யாருக்கு ஞாபகம் இர்ருக்கு. அதற்குள் நம் மக்கள் சிரித்து அவரை இன்னும் கொடுமை படுத்துவோம். தினம் தினம் இந்த சயிங் சொல்லி நம் எல்லோரையும் நொந்த வைத்தார்...

இந்தியாவில் பாய்-2008

VGP
KANYAKUMARI
GNP
THIRUPPARAPPU
BANGALORE

திங்கள், ஜனவரி 05, 2009

ஹாய்

This is wonderful that we are able to share our memories. A big hello to all of our class mates from Canton,Ohio.Mani Konaar and I have been married for 16 years now.We have a so Neal who is 10 years old will turn 11 in
March this year. He is in 5th Grade. Andha naal Gnabagam vandhadhey.... Let me start with the number of times our batch saw Mouna Raagam at the MVC audtorium. I am sure we hold the world record for seeing the same movie with more and more enthusiasm each time. I remember the Kaakaavalippu dance we used to do in the Hosur Hostel.I will post more memories each day.
So Long,
Gun Fight Kanchana

தீப

daddy's class exams

daddy's வகுப்பில் ஒரு முறை எல்லோரும் சீரியஸ் ஆக பரீட்சை எழுடிகொண்டிருந்தோம்; சிலர் சந்தோஷமாக கிரிக்கெட் கேம் குறித்து எழுதினார், சிலர் ஆப்ரிக்கா வில் பஞ்சத்தை பற்றி எழுதினர், ஒன்றிரண்டு பேர் நஜமகவே கெட்ட கேள்விக்கு பதில் எழுதினர். அவ்வாறு எழுதிகொண்டிருந்தபோது daddy podium முன்னால் நின்று proctor செய்யாமல் physiology class (gallery)படி ஏறி supervise பண்ண நடந்தார். அப்பொழுது இரண்டாம் வரிசையில் நமது famous நாயூரன் தன்னுடய physiology நோட்ஸ் இல் இருந்து தயிரியமாக பரீட்சை பேப்பரில் மிக்க பயபக்தியுடன் எழுடிகொண்டிருந்தர். அப்பொழுது daddy நாயூரனிடம் - "நீ என்ன செய்கிறாய்? இவ்வளவு தைரியமாய் நீ உன் நோட்ஸ் இல் இருந்து காபி அடிக்கலாமா?" என்று சொல்லி நோட்ஸ் எல்லாவற்றையும் பிடுங்கினார். உடனே நாயூரன் " சார் நான் படிக்க டைம் இல்ல தயவுசெஞ்சி ஏன் நோட்ஸ் எல்லாம் என்னிடம் கொடுங்க, என்று மிக்க பாவம் போல கேட்டான்; பின்னர் daddy அவனை வகுப்பை விட்டு போ என்று சொன்னாரா என்று என்னக்கு ஞாயபகம் இல்லை. நமது வகுப்பினர் சிலர் கையில் சிட் நோட் இல் இருந்து காப்பி அடிப்பது சகஜம், ஆனால் யாரும் தைரியமாக தங்கள் நோட்ஸ் இல் இருந்து காப்பி அடித்ததை daddy பார்க்கவில்லை என்றார். மற்ற எல்லோருக்கும் நல்ல்ல சிரிப்பு தான் நாயூரனின் சேஷ்டைகளை கண்டு..
Gujili
வெளிநாடு வாழ் இந்திய(பெண் தேடும்) மாப்பிளையின் காதல் கவிதை
" நான் ஒரு NRI
நீ காட்டு என்னிடம் அக்கறை
நான் உனக்கு தருவேன் GREEN CARD
நீ எனக்கு காட்டாதே RED CARD
நாளை நான் கட்டுவேன் மஞ்சக்கயிறு
நாலு வருஷம் கழிச்சு அது உனக்கு (எமனோட) பாசக்கயிறு
என் இதயத்தில் நீ ஒரு வைரசு
பின்னாளில் நான் கொடுப்பேன் டைவர்சு
நயாகராவுக்கு போவோம் ஹனிமூனு
அதுவே நீ பாக்குற சனி மூனு"

ஞாயிறு, ஜனவரி 04, 2009

Bhai

முதல் physiologu கோர்ஸ் .வாத்தியார் டாடி .நன்கு படித்து எழுதியும் 'D' தந்தார் .அடுத்த கொர்சில் முதல் & கடைசி பக்கங்களை தவிர நடுவில் சமீபத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பற்றி 10 பக்கங்களுக்கு புகுந்து விளையாடி இருந்தேன் . 'B' தந்தார் .மூன்றவது கொர்சில் இந்தியா- ஆஸ்திரேலியா மேட்ச்.வாவ் ! மீண்டும் 'ப' .இருதியில் தெரிந்தது 'பெண்' வேடம் போட்டிருந்தால் எழுதாமலே 'A' வாங்கிஎருக்கலாம் என்று.
நாம் கல்லூரியில் படிக்கையில் பல methods of castration படித்துள்ளோம், ஆனால் பொள்ளாச்சியில் பயிற்சி மருத்துவர்களாக இருந்தபோது நாய்களுக்கு "காக்காய் throw method of castration" என்ற புதிய முறையை கற்றுக்கொண்டோம். அதில் நாய் கொண்டு வரும் owner வந்தவுடன் ஒரு பனாமா பிளேடு மற்றும் நூல்கண்டு ஒன்று வாங்கி வருமாறு அறிவுருத்தப்படுவார் , நாயுடைய வாய் மற்றும் பின் கால்கள் கட்டப்படும். பின்னர் எந்த வித மயக்க மருந்துகளும் இல்லாமல் தோல் வெட்டப்பட்டு, கொண்டு வந்த நூல் மூலம், ரத்த நாளங்கள் ligate செய்யப்படும், பின்னர் testicles இரண்டும் வெட்டி எடுத்து காக்கைக்கு போடப்படும். வெட்டுக்காயம் nebasulf பவுடர் மூலம் dress செய்யப்படும்.( மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள் படிக்காமல் இருந்தால் நன்று.... மருத்துவமனை பணியாளர்கள் கூறுவது என்னவென்றால், மயக்க மருந்துகள் supply செய்யப்படுவதில்லை, அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என்றால் பொது மக்கள் மேலதிகாரிகளிடம் புகார் செய்து மெமோ வாங்கி கொடுத்து விடுவார்கள்). இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், hospital attender ஆறுச்சாமி புதிய பனாமா பிளேடை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்குள் சென்று வெளியில் வரும்போது பிளேடு மாற்றம் செய்யப்பட்டிருக்கும்(அவருடைய பழைய பிளேடு வெளியே வந்து புது பிளேடு பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும்,பனாமா பிளேடு தான் வேண்டும் என்பதில் மிக பிடிவாதமாக rules follow செய்வார்கள் ), ஒரு முறை ஒரு testicle எடுக்கப்பட்ட நிலையில் ஒரு நாய் அறுத்துக்கொண்டு தப்பி விட்டது, அதற்கு பிறகு அந்த நாய் எங்கு போனது என்றே owner ஆல் கண்டுபிடிக்க முடிய வில்லை.

சனி, ஜனவரி 03, 2009

"கரையானின் காதல் கடிதங்கள்-1"

இமயமலை இடிந்தாலும்

பரங்கிமலை பறந்தாலும்

வங்கக்கடல் வற்றினாலும்

கூவம் குடிநீரானாலும்

நீ என்னை மறந்தாலும்

நான் உன்னை மறவேன்.........

வெள்ளி, ஜனவரி 02, 2009

ஒரு காலத்துல(நாம் படிக்கு காலத்தில்) pfizer ராதாகிருஷ்ணன் ன்னு ஒருத்தர் இருப்பார், அவருடைய பெயரோடு கம்பெனி பெயர் ஒட்டிக்கொண்டு இருக்கும், ஆனால் இப்போ சங்கரோட pfizer அப்படின்னு சொல்ற அளவுக்கு எடுத்து வந்துட்டாரு நம்ப நண்பர். இவரு "மன்னார்குடி மாப்பிள்ளைஸ் சங்கம்" உறுப்பினர்(மாற்ற உறுப்பினர் வேறு யாரும் இல்லை த கிரேட் கரையான்). அரசு வேலையுலதான் ஓய்வு அடையும் வரை ஒரே வேலையுல இருப்பாங்க, ஆனால் இவர் தனியார் வேலையுல ஒரே கம்பென்யுல கூட பல வருடம் இருந்து சாதனை புரிஞ்சுட்டாறு. இவர் ஒரு கராத்தே கிளி( கராத்தே புலி கேள்வி பட்டு இருக்கோம்,அது என்ன கிளி enru நீங்கள் ketpathu kaathil vizhukirathu, புலி சண்டை போடும், கிளி வெறும் saththam மட்டும் போடும்).

pharmacology lab days

நான்காவது ஆண்டில் pharmacology லேபில் செய்த ஒரு எக்ஸ்பெர்மேன்ட் ஞாயபகத்திற்கு வருகிறது. அந்த வாத்தியார் பேர் என்னகு ஞாயபகம் இல்லை, ஆனால் A batchil நமது நண்பர்கள் பண்ண சேட்டை ஞயாபகம் உள்ளது. எலிகளில் மருந்துகளின் LD50 என்னவென்று sodhipadharkaga எக்ஸ்பெரிமென்ட் செய்தோம்; ஆதலால் சில எலிகள் செத்துவிட்டன. நமது மக்கள் சில செத்த எலிகளை வாத்தியாரின் பையில் போட்டுவிட்டார்கள். அவர் கண்டுபிடித்துவிட்டு எல்லோரயும் திட்டினார், ஆனால் நமது மக்கள் சிரித்து கொண்டு அவரை சீரியஸ் ஆக எடுக்கவில்லை. இந்த வாத்தியார் லைட் yellow கலர் pant போட்டு ஆரஞ்சு stripe underwear போடுவ்வார், அதை நோட்டீஸ் பண்ணாமல் பாடத்தில் கவனம் வைப்பது கஷ்டம், கிளாஸ் எடுக்கும் போது எல்லோரும் பார்த்து சிரிப்பது சகஜம். அவர் பேர் யாருக்காவது ஞாயபகம் வந்தால் கமெண்ட் SEYYAVUM.


Gujili

வியாழன், ஜனவரி 01, 2009

internship time ல பொள்ளாச்சியில் கருப்ஸ் மற்றும் குமரேசனுக்கு "மாப்பிள்ளை market value" ரொம்ப நல்லாவே இருந்தது, ரெண்டு பேரும் கவுண்டர்கள் என்பதால். எனக்கு அப்படி எதுவும் இருந்ததில்லை(மற்ற நேரத்திலும் கூடத்தான்) , வெளியில் கேஸ் பார்க்க செல்லும்போது கவுண்டர் வீடு என்றால் கவனிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அவர்கள் இருவருக்கும். அப்படி ஒரு இடத்தில் கருப்ஸ் கேஸ் பாக்க சென்ற இடத்தில், கருப்ப்ஸ் பற்றி அவர்கள் விசாரிக்க, ரொம்ப நெருங்கி வந்து விட்டார்கள். முதல் நாள் டிபன் காப்பி என்றிருந்த கவனிப்பு மூன்றாம் நாள் மத்திய உணவு வரை வளந்துவிட்டது. கருப்ப்ஸ் இன் நடை உடை பாவனை மற்றும் ஸ்டைல் அவர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. கருப்ப்ஸ் எங்கள் இருவரிடமும் ரொம்பவே பந்தா விட ஆரம்பித்து விட்டான்," என்னமா கவனிக்குராங்கடா, சப்பாத்தி வேணுமா,குருமா வேணுமா, கோழி ஆடெல்லாம் சாப்புடுவீங்களா ன்னு பயங்கர கவனிப்புதான் போ"என என்னுடைய வயித்தெரிச்சலை ரொம்பவே அதிகரித்தான். எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறிய காட்சி ஓடிக்கொண்டே இருந்தது"மஞ்சள் தண்ணி தெளித்து மாலையிட்டு பலிக்கு தயார் படுத்தப்படும் ஆட்டு கிடா" ஒன்று மனக்கண்ணில் அடிக்கடி வந்து சென்றது. மூன்று நாள் முடிந்தது, நான்காவது நாள் கருப்ப்ஸ் follow-up treatment க்கு செல்ல வில்லை,என்னைப்போக சொன்னான், நான் "என்ன கருப்ப்ஸ் அவுங்க வீட்டுல இருந்த கோழி,கிடா எல்லாம் காலி ஆயிடுச்சா என்ன போக சொல்றே" என்று சந்தேகமாக விசாரித்தேன். "நல்ல வேலைடா பாழும் கிணத்துல தள்ளப்பார்தானுங்க, தப்பிச்சுட்டேன்" என sambanthame இல்லாமல் எதோ கூறினான். நான் அவனுடன் சென்ற attender இடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன்," சார் அந்த வீட்டுப்பொண்ணு சார விட எல்லாமே கொஞ்சம் குறைவுதான், அவர விட அழகுல, தோல் வெளுப்புல, உயரத்துல etc etc என அடுக்கிக்கொண்டே சென்றான், வயசுலயும் உருவத்துலயும் மட்டும்தான் அவரைவிட ரொம்ப அதிகம்,நேத்துதான் சாருக்கு அந்த பொண்ண காட்டுனாங்க ", எனக்கு ஒரு சின்ன ஆவல் நாமும் அந்த பெண் எப்படித்தான் இருக்கிறாள் என பார்த்து விடுவது என்று(ஓடுற பாம்ப மிதிக்கிற வயசு இல்லையா). பார்த்தேன் "stunningly beautiful" என்பதற்கு அர்த்தம் அன்றுதான் எனக்கு தெரிந்தது.