புதன், பிப்ரவரி 22, 2012

நண்பர் msk அவர்களின் பதிவுக்கு பதில்...

"காதலர் தினத்தன்று தாலியோடு சுற்றித்திரியும் கலாச்சாரக்காவலர்கள் கண்கள் இவற்றையெல்லாம் பார்க்காதா?"
இந்த கலாச்சார காவலர்கள் விஜய் டிவி அல்லது ஊடகங்களுக்கு எதிராக  குரல் எழுப்பினால் ஜன நாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக குரல் கொடுக்கும் கூட்டத்தில் ஒருவராக இந்த கவிஞரும் இருப்பார்.  ஊடகங்களுக்கு எதிராக இவர் ஏன் குரல் எழுப்பி போராட வில்லை, இது எப்படி இருக்கிறதென்றால் விபத்து நேர்ந்த இடத்தில் காயமுற்றவரை மிக கரிசனமாக கவனிப்பதாக காட்டிக்கொள்பவர் "யாராவது போலீஸ்-க்கு போன் பண்ணுங்கப்பா" என்று குரல் கொடுப்பார், அவரே போலீஸ்- க்கோ ஆம்புலன்ஸ்- க்கோ போன் செய்ய மாட்டார், ஏனென்றால் பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டுமே என்ற கவலையில் அதே நேரத்தில் அவரை தான்  நல்லவன் என்றும் காட்டிக்கொள்ளவேண்டும் , அது போலதான் இந்த கவிஞரும், தொலைக்காட்சி நிலையத்திற்குள் அல்லது பத்திரிக்கை அலுவலகத்திற்கு ள்ளோஅதிரடியாக நுழைந்து போராட வேண்டியதுதானே... மேலும் அந்த நிகழ்ச்சியில் சிறுவன் அமலா அக்கா என்றே அழைத்தான்...அந்த நடிகையும் எந்த விரசமும் இல்லாமல் அவனுக்கு முத்தம் அளித்தார். நான் குடும்பத்துடன்தான் உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தேன், இதில் விரசமாக எனக்கு தெரிய வில்லை.  டி வியும் மற்ற பிற ஊடகங்களும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக புலம்புகின்ற எத்தனைபேர் தங்கள் வீட்டில் இருக்கும் இந்த தொலைகாட்சியின் தொடர்பை துண்டிக்கிறார்கள்?  அவர்கள் பாடும் பாடல்களில் பெரும்பாலான வரிகளை இசை முழுங்கி விடுவதால் அதில் உள்ள வரிகள் பெரியவர்களுக்கே புரிவதில்லை...அந்த குழந்தைகள் உற்சாகமாக துள்ளி குதித்து பாடுவதையும் குறும்புகளையும் ரசிக்கவே தோன்றுகிறது.....நான் கவிஞாக இல்லாததாலோ என்னவோ குற்றம் குறை  கண்டு பிடிக்க தெரிய வில்லை என்று நினைக்கிறேன்....

கரையான். 

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

எங்கே போகிறோம் நாம் ?



ஆசிரியரை ஒரு மாணவர் கொலை செய்ததும் அதை பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் மாய்ந்து மாய்ந்து எழுதின..அது குறித்து பல விவாதமேடைகள் அமைத்து பல் துறையைச் சார்ந்த ஆய்வாளர்கள்,அறிஞர்கள்,கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டன.அந்த மாணவன் செய்தது சரியல்லஎன்பதே என் நிலைப்பாடும்.குழந்தைகளை விளையாடவோ யாருடனும் பரஸ்பரம் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ விடாமல் ,வாழ்க்கை என்பது எது என்பதையும்,இதில் வெற்றி தோல்வி சாதாரணம் என்பதை புரிய வைக்காமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் பெற்றோர்கள் முதல் குற்றவாளிகள்.ம்திப்பெண்களை வைத்து புத்திசாலித்தனத்தை தீர்மானிக்கும் நம் கல்வித் திட்டம் மன்னிக்கவே முடியாத குற்றவாளி(அஃறிணை)அரசாங்கத்தையும் சேர்த்து தான்.
அந்த மாணவன் அவன் அடைத்து வைக்கப்பட்டுள்ள விடுதியில் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும்,அதுவும் தன் தாய்,தகப்பனைக் கண்டவுடன் கதறியதாகவும்,பிஸ்கெட்,சாக்லேட் போன்றவைகளை வாங்கிக்கொடுத்து பெற்றோர்கள் சமாதானப்படுத்தியதாகவும் வெளியான செய்திகள் நம் ஈரக்குலையை புரட்டுகிறது..14 வயது என்பதும் குழந்தை நிலையே...விடலைப்பருவம் என்று கூட சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன்..ஒரு குழந்தையை குற்றவாளியாக்கும் இந்தச்சமூக சூழல் சத்தமில்லாமல் இன்னொரு மாபெரும் குற்றத்திற்கான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது...
ஆம்,..இன்று ஏகதேசம் எல்லா சேனல்களும் என்றே சொல்லலாம்..சூப்பர் சிங்கர் என்கிற இசைநிகழ்ச்சிகள் ,யார் சூப்பர் டான்ஸர் (அரைகுறை ஆடைகளுடன்) என்கிற நடன நிகழ்ச்சிகள் நடத்துகின்றன..இதில் மழலை மாறாத குழந்தைகள் பலர் பங்கேற்கின்றனர்.சில சுற்றுகளில் காதல் பாடல்கள் பாடச் சொல்கிறார்கள்..அர்த்தமே புரியாமல் அவர்களும் பாடுகின்றனர்.அதில் பல மிகக் கொச்சையான இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்களும்,முதலிரவுப்பாடல்களும் அடங்கும்.முக்கல்,முனகல் என்று பாடும் அவர்களைப் பார்த்து ஜட்ஜஸ்(?) சொல்கிறார்கள்.உன் குரலில் இன்னும் கொஞ்சம் பீலிங்ஸ் இருந்திருக்கணும்..அது மிஸ்ஸிங்.என்கிறார்கள்.அல்லது வாவ்..! உன் குரல்ல என்னமா பீலிங்ஸ் கொண்டு வந்தேடா குட்டி என்கிறார்கள்.பெற்றோர்களும் இதை ஊக்குவிக்கிறார்கள்..(கூடவே பாட்டுக்கு நடனம் ஆடியபடி) பச்சைக் குழந்தைகளை ”பச்சை பச்சையாய்”பாடவிட்டு ,ஆடவிட்டு,ரசித்துக் கொண்டிருக்கிறோம் கொஞ்சமும் கூச்சப்படாமல்...(பல பாடல்கள் வக்கிரமான வரிகளைக் கொண்டிருக்கின்றன.)
நம்முடைய நாட்டில் பெரியவர்கள் குழந்தைகளைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து தங்கள் அன்பைத் தெரிவிப்பது என்பது இயல்பு..அதைக்கூட இந்த நிகழ்ச்சிகள் அடித்து நொறுக்கி விடுகின்றன.சமீபத்தில் விஜய் டிவி யின் பாடல் நிகழ்ச்சியொன்றில் நடிகை அமலாபால் கலந்து கொண்டிருக்கிறார்..நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கமெண்ட் அடிக்க அவரை மெதுவாய் தழுவிப்பிரிகிறார் அமலாபால்.அடுத்து ஒரு 6வதுஅல்லது7வது படிக்கும் சிறுவன் ஒருவன் பாடுகிறான்..அவன் அமலா தொகுப்பாளரை தழுவியதும் தன் மனது வேதனைப்பட்டதாகச் சொல்கிறான்.உடனே அமலா அவனையும் தழுவுகிறார்..உடனே,அந்தப்பையன் ஒரு செய்கை செய்தான் பாருங்கள் அது தான் முக்கியம்.அவன் மெலிதாய்க் கிறங்கிச் சரிவது போல் ஒரு அபிநயம்..உடனே ஒட்டுமொத்த அரங்கமும் படு ஆர்ப்பாட்டம் செய்தது..
வெட்கித் தலைகுனிய வேண்டிய விசயம் இது..குழந்தைகளுக்குள் பாலியல் வக்கிரத்தை மூட்டுவது சரியா?ஆண்,பெண் தொடு உணர்ச்சியை இப்படி சிதைக்க வேண்டுமா?அதுவும் குழந்தைகளுக்குள்?காதலர் தினத்தன்று தாலியோடு சுற்றித்திரியும் கலாச்சாரக்காவலர்கள் கண்கள் இவற்றையெல்லாம் பார்க்காதா? அவிந்து போய்விடுமா?பலமும்,பணமும் வாய்ந்த மீடியாக்களை எதிர்த்து நிற்க வக்கில்லாமல் சாதிமதம் தகர்க்கும் சமுதாய நன்மை பயக்கும் காதலை,காதலர் தினத்தை மட்டும் எதிர்ப்பது தான் இவர்கள் கலாச்சாரத்தை(!)க் காவல் காக்கும் இலட்சணமா?


நன்றி 
கவிஞர் நறுமுகை 
கோவை 


msk  

நம் நண்பர்கள் யார் யார் புதிதாக அரசு கால்நடை உதவி மருத்துவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளவும்.....

கரையான்.

சனி, பிப்ரவரி 18, 2012

சூப்பர் சௌந்தரராஜன்


நம் நண்பர் விருது வாங்குகிறார்.நல்வாழ்த்துக்கள்  !
கல்லூரி  சென்ற இடத்தில்,அவனது ரூமிற்கு அழைத்து ,நன்கு அளவளாவி கொண்டிருந்தான்.
படிக்கும் போது எப்படி இருந்தான்,இப்போ நட்பில் சிறந்து விளங்குகிறான்.
வாழ்க வளமுடன்.

பாய்.

திங்கள், பிப்ரவரி 13, 2012

தமிழர் வரலாறு -Tamils History





முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.


இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்


courtesy facebook
This post is dedicated to Bhai