வியாழன், செப்டம்பர் 30, 2010

கண் பைட் காஞ்சனாவுக்கு என் பதில்

அப்படி இப்படின்னு பதினைந்து வருஷம் ஓடிடிச்சி கல்யாணம் ஆகி(செப்டம்பர் 1995) . GFK அவர்கள் நான் சுப்ரபாதம், etc etc பாடுவதை பற்றி குறிப்பிட்டதால் இதை எழுத வேண்டிய கட்டாயம்... பதினைந்து வருஷம் குப்பை கொட்டிய(குப்பை வாருகின்ற) ரகசியம்(என்னத்த ரகசியம் எல்லா வீட்டுல நடக்கிறதுதான்) நான் சொல்லப்போறேன்....இதை நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம், தலைப்பு " சிறந்த கணவனாக இருப்பது எப்படி" என்று கூட வைத்துக்கொள்ளலாம்...
No lateral movement of Head only dorsal-ventral or up-down.
No looking at the eyes of wife...Only look at her toes (பொய் சொல்றது தெரிஞ்சிடும் இல்லையா).
வீட்டில் எப்போதும் காது கேளா ஊமை யாக இருக்க வேண்டும்..(Be Dumb and Deaf at Home).
Whenever possible praise her as if she is crowned Miss Universe and Miss World(பொம்பளைங்கள ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்...இது வடிகட்டிய பொய்ன்னு நல்லா தெரிந்தாலுமே முகத்தில் ஒரு மின்னலாக ஒரு புன்னகை வரும் பாருங்க.....நான் என் பெண்டாட்டி கிட்ட நீ சுஷ்மித 50 ஐஸ்வர்யா 50 இன்னு அவ்வப்போது சொல்லி வைப்பேன்..மனசுக்குள் அவுங்க ஐம்பது வயதில் எப்படி இருப்பாங்களோ அப்படி நீ இப்ப இருக்கே என்று நினைத்து கொள்வேன்....போட்டு குடுத்துடாதீங்கப்பா....)
எங்கம்மாக்கு அப்புறம் உன்னோட சமையல்தான் சூப்பர்...பைவ் ஸ்டார் ஓட்டல் இல் கூட இந்த மாதிரி சாப்பாடு கிடைக்காது(நாம அந்த மாதிரி ஓட்டலுக்கு போனதே இல்லை என்பது அவங்களுக்கு தெரிஞ்சாலும் கூட தெரிஞ்ச மாதிரி காட்டிக்க மாட்டாங்க)....
அவுங்க செலக்ட் செய்யும் உடைகள் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் "வாவ்" என்று கூறி வைக்க வேண்டும்(மனதுக்குள் "வுவ்வே" என்று கூறி கொள்ள வேண்டியதுதான்).
ஜோடியாக வெளியே செல்லும்போது அழகான பொண்ணுங்க நம்ம கிராஸ் செய்யும்போது தலை ஆட்டோமாடிக் ஆக திரும்புவதை மனைவி பார்த்து விட்டால்...அந்த டிரஸ் உனக்கு சூப்பர் ஆ இருக்குமில்ல அதான் பார்த்தேன் என சமாளிக்க தெரியனும்......அதுக்கு ஏன் அப்படி முறைச்சு பார்க்கணும் என்று கேள்வி வந்தால்...இல்ல விலை இன்னா இருக்குமின்னு ஸ்டிக்கர் எதாச்சும் இருக்கான்னு பார்த்தேன் என்று மேலும் சமயோசிதமாக சமாளிக்க தெரியனும் நண்பர்களே...
சுப்ரபாதம் மட்டுமில்ல தேவாரம் திருவாசகம் இப்படி என்னென்ன அஸ்திரங்கள் இருக்கோ அதை எல்லாம் பயன் படுத்தி வாழ்க்கையை இனிமையாய் ஓட்ட கத்துக்குங்க அன்பர்களே...
கரையான்.

எல்லை கோவிந்தன்..!

எல்லை காந்தி தெரியுமோ இல்லையோ எல்லை கோவிந்தனை உங்களுக்கு தெரிந்திருக்கும் ( ஏன்னா நம்ம கூட படித்த எல்லோரும் அப்பவே டாக்டர்ஸ் இவர் மட்டும்தான் பாவம் LI). நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள் விடுதியில் நியூ ப்லொக்கில் சேவியர் / வடிவேல் ரூம் வாசலில் அவர்களுடன் இவர் பேசிகொண்டிருக்க நானும் அங்கே சென்றேன் (என் போதாத நேரம் ) அப்போ இவர் குலுங்கி குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தார் (அவர் சிரிக்கும் போது AIR பஸ் மாதிரி உடம்பை SHAKE பண்ணிகொண்டு அதே நேரத்தில் கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களால் மீசையை மேலிருந்து கீழாக தடவிக்கொண்டுதான் சிரிப்பார்) நான் நம் நண்பர்களைப பார்த்து புரியாமல் நின்றேன். நம்மாளு என்னை பார்த்து "ஒண்ணுமில்ல செந்தில் ஆண்டவன் புண்ணியத்தில் இங்கிலீஷ் மட்டும் நமக்கு நல்லா வரும்னு சொல்லி முடிக்கல நீ வந்துடட்ட" அப்டின்னார். நானும் புரியாமல் மண்டையை ஆட்டிட்டு நகர்ந்து விட்டேன்.
சிறிது நேரம் கழித்து வடிவேல் ரூம் பக்கமாப் போனேன் (மேட்டர் என்னன்னு தெரியலேன்ன மண்டை வெடிச்சுரும்ல ) வடிவேலும் அவரும் அறை தோழர்கள்னு நினைக்கிறேன் ஞாபகமில்லை , ஆனா நம்மாளு அப்போ அங்கே இல்ல. வடிவேல்கிட்ட என்னடா ஏதோ பேசிக்கிடிருந்தீங்க புரியல்லன்னேன்.
அது பெரிய கதைன்னு ஆரம்பிச்சான், எல்லோரும் நம்ம gpa (!!!!!!!!) பத்தி பேசிகிட்டிருந்தோம். first yearla இங்கிலீஷ் classla ஒரு நாள் சிவமோகன் சார் சத்யனை எதோ ஒரு கடினமான கேள்வி கேட்டார் அவனும் கரெக்டா சொல்லிட்டான் உடனே அவர் you will go places london,washington australia neptune uranus pluto அப்டின்னு புகழ்ந்து உனக்கு A gradennu சொல்லி வருகை பதிவேட்ல மார்க் பண்ணி வச்சுகிட்டார். அப்றோமா நம்மாளுகிட்ட ஒரு EASYANA கேள்வி கேட்டார் நம்மாளு சொதப்பி முழிக்க வாத்தியாருக்கு கோபம் வந்து கண்ணா பின்னான்னு திட்டி I will GIVE U F ன்னு மார்க் பண்ணி வச்சார். trimester முடிஞ்சு ரிசல்ட் வந்தது LKG டு காலேஜ் இங்கிலீஷ் mediuthilla படிச்ச சத்யனுக்கு 'F' நம்மாளுக்கு 'A' .................!!!!!!!!!
அதுல்ல இருந்து நம்மாளு rowssu பண்ண அரம்பிசிட்டர்ந்னு சொல்லி முடிச்சான் வடிவேல்
எப்டி இருக்கு? 'பாவம் சத்யன்!' யாருக்கு எதுக்கு மார்க் பண்ணி வச்சோம்னு அந்த வாத்தியாருக்கு தெரியல மாட்டினது சத்யன்
foot note from M.செந்தில்
சத்யன் I think is with IVPM
தில்லை கோவிந்தன் is now working as VAS AROUND ULUNDURPET

புதிய வரவுகளுக்கு வேண்டுகோள்

நண்ப- நண்பிகளே ,
ஒவ்வொரு பழைய போச்டிங்களுக்கும் ,கமெண்ட் அடித்தால் ,சுவாரசியமாக இருக்கும்.
பாய்.

வருக ! வருக!

செந்தில் அவர்களே ,
வருக ! வருக!
மனமார வரவேற்கும்,
பாய் .

புதன், செப்டம்பர் 29, 2010




மேலும் மேலும் அதிக நண்பர்கள் வலைக்குள் வந்து விழுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... கெட் டு கெதர்-ல் இந்த வலைப்பதிவுகளை சிறு புத்தகமாக அனைவருக்கும் வழங்க சிறு ஆசை இருந்தது, ஆனால், சில நண்பர்களின் வாழ்க்கை துணைகள் எப்படி எடுத்துகொள்வார்களோ என்ற எண்ணத்தில் அந்த திட்டம் கை விடப்பட்டது. சில நண்பர்கள் எட்டிவிடும் தூரத்தில் இருந்தும் வராமல் போனது வருத்தமளிப்பதாக உள்ளது. சென்னையில் இருந்த வகுப்புதோழியர் வந்திருக்கலாம். மேலும் சிதம்பரத்தில் இருந்த விஜயலட்சுமி அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நடப்பதே தெரியாமல் போனது, தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். நாமக்கல்லில் இருந்து பல நண்பர்களும் வர வில்லை, வருவதற்கு ஏன் தயக்கம் என புரிய வில்லை. கல்லூரிகாலத்தில் இருக்கும் நட்பு, பணியில் சேர்ந்தபிறகு இருப்பதில்லை, பணியிடத்தில் ஏற்படும் போட்டிகள், பொறாமைகள் மற்றும் பதவி உயர்வுகள் இந்த விரிசலை விரிவு படுத்தி விடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. உள்ளத்தில் உள்ளதை மேலும் தொடர்ந்து எழுதுவேன்.....

கரையான்.

நண்பர்களே vanakkam

நம் நண்பர்கள் அனைவருக்கும் மு.செந்தில் குமார் உடைய அன்பான வணக்கங்கள்!
உங்களின் இனிய வலை தளம் கண்டு வியப்பும் உவகையும் அடைந்து வாழ்விலும் வயதிலும் பின்னோக்கி நகர்ந்து மார்கண்டேயனாய் ஆகினேன் ( ஆமாம் மொநிகண்டன் எங்கிருக்கிறான்?)
சமீபத்தில் எ டு க்ஸ் ( அஹ்மத் டு சேவியர் ) மீண்டினைந்த சந்தோஷத்தை கொடுத்த அனைவருக்கும் நன்றி.
பின்னிரவு வரை விழித்திருந்து வலையின் அநைத்து பக்கங்களையும் அசை போட்டு ரசித்து தூங்காமல் நினைவுகளோடு விழித்திருந்த பெருமை கரையான், பாய், பீர் ,தீபா குஜிலி மற்றும் பிற நண்பர்களை சாரும் (ஆபீஸ்ல தூங்கினது தனி கதை) .
மேலும் நம் நண்பாகள் அனைவரையம் இந்த வலைக்குள் இழுக்க அணிலாய் முயற்சிப்பேன்.
மேலும் இனி சிடி பேட்ச் குறித்த ஹச்யங்கள் நிறையவே இடம்பெறும் என்பதுக்கு நானாச்சு.
செல்வராஜ், சிவகுமார் மற்றும் குமாரவேல்.



திருமதி மனோகரன், உமா, செந்தில், மனோகரன், சிவகுமார் மற்றும் திருமதி சிவகுமார்.


திர்மதி பாய், திருமதி சிவகுமார் மற்றும் திருமதி குமரன்.



உட்கார்ந்திருப்பவர்கள்: வீணா குமாரவேல், காயத்ரி குமரன், திருமதி சிவகுமார், திருமதி குமாரவேல், அக்ஷயா குமரன்.
கரையான்.




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

பாய், சேவியர், SKB, வில்வசெகரன், சங்கர், சிவகுமார்.






சரஸ்வதி & திருவாளர் சரஸ்வதி.






































நர்மதா, திருமதி மாதேஸ்வரன், உமா, செந்தில், சிவகுமார், திருமதி சிவகுமார்.




















திங்கள், செப்டம்பர் 27, 2010

கெட் டோகேதேர் 2010

அனைத்தும் இடமிரிந்து வலம்

PAANDI,SAAKKAAN,PALANI,CUTS,SUNDARAM.





BAAI MAGAN,PINNAAL GOVIND




Nam kulanthaigal

Baayin waarisugal




ennidam ulla padangal awwalawudhaan.
Anbudan,
Bhai.
















தண்ணி அடித்து விட்டு நண்பர்கள் அடித்த கூத்தை மட்டுமே பேசி இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம். பல நல்ல விஷயங்களும் நடந்தது. நம் வகுப்பு தோழியரும், நண்பர்களின் மனைவியரும் மிக விரைவில் நட்பாகி கூடி உட்கார்ந்து கதை அடித்தது கண் கொள்ளா காட்சி.


நர்மதா என் மனைவியிடம் "எல்லா கழிசடைகளும் நாங்கள் நடனம் ஆடும்போது கூரை மேல் ஏறி வேடிக்கை பாப்பானுங்க என்று கூறி விட்டு, என் மனைவி தவறாக நினைத்துகொள்வாலோ என நினைத்து குமரன் அப்படி எல்லாம் கிடையாது அவன் இருக்கு இடமே தெரியாது" என சமாளித்ததை இன்னமும் என் மனைவி கூறி சிரிக்கிறாள். லிடியா,உமா மகேஸ்வரி,நர்மதா திருமதி குமாரவேல், திருமதி குமரன் , திருமதி பாய் என மிக பெரிய பட்டாளம் வட்ட மேசை போட்டு கதை அளந்தது கண் கொள்ளா காட்சி.

மோகன்குமாரின் குழந்தையை காண வில்லை என திடீர் பரபரப்பு ஏற்படுத்தி எல்லோரையும் கலங்க வைத்து விட்டார் அவனின் மனைவி. எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வரும்போது குழந்தை பஸ் இலேயே தூங்கி விட யாரும் கவனிக்காமல் பேருந்தை அனுப்பி விட்டார்கள், பின்னர் பேருந்து ஓட்டுனரிடம் கூறி அழைத்து வந்தோம். குழந்தையை காண வில்லைஎன்றவுடன் நீச்சல் குளத்தில் நம் நண்பர்கள் தேடிக்கொண்டிருக்க மோகன்குமார் பின்னர் அவன் மகள் நீச்சலில் சாம்பியன் என கூறியதை கேட்டு அசடு வழிந்தார்கள்.


கரையான்.






ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

இனியும் தாமதிக்கவேண்டாம்

கெட்டோகதேர் 2010 படங்களை பார்த்திருப்பீர்கள்.எத்தனையோ பேர் போட்டோ எடுத்தார்கள்.யாரும் இன்னும் போஸ்ட் செய்யவில்லை.கரையான் தான் அவர்களை போஸ்ட் பண்ணியுல்லான்.நான் விரைவில் .மற்றவர்கள் என்ன ஆச்சு?
அன்புடன்,
பாய்.

வியாழன், செப்டம்பர் 23, 2010

கெட் டோகேதேர் 2010

எத்தனையோ பேர் தண்ணி அடித்தார்கள்,டீசண்டாக நடந்துகொண்டார்கள்.இருப்பினும்,கெட் டோகேதேர் தண்ணி அடிக்கும் இடம் இல்லை.பிள்ளைகளை வைத்துக்கொண்டு அடிப்பது சரியல்ல. வேறு இடமா இல்லை.நாளை அக்குழந்தைகள் குடிகாரர்களாக ஆகமாட்டார்களா?
அவர்கள் முன்பு கெட்டவார்த்தைகள் பேசலாமா?சிந்தியுங்கள்.
நமது கல்லூரி மற்றும் ஆல் இந்தியா டூர் குறித்து ஒரு நினைவூட்டல் பேசி ,பழைய காலங்களை பகிரலாம் என் நினைத்திருந்தேன்.எல்லோரும் தண்ணி அடிப்பதிலேயே குறி.மேலும்,வரும் கெட் டோகேதேர்களில் ,தண்ணி அடிக்காமல் ,வெளியே எங்கும் செல்லாமல் ,கொச்சார் பாம் போல் ,உள்ளேயே இருந்து ,வேலா வேலைக்கு சாப்பிட்டு விட்டு ,பேசி தமாஷ் பண்ணி ,கல்லூரி காலங்களை பேசி மகிழவேண்டும்.செய்வோமா?
அன்புடன்,
பாய்.
குறிப்பு:படித்து படித்து சொல்லியும்,நமது ப்லொக்கில் புதிய வரவு ஏதும் இல்லை.வருத்தம்.கெட் டோகேதேருக்கு வராத GFK & GUJILI போஸ்டிங் செய்வது மகிழ்ச்சி.இந்தியாவில் உள்ளவர்களே ,நாங்கள் ஒன்றும் வேலையில்லாமல் ,போஸ்டிங் செய்வதில்லை.பல வேலைகளுக்கிடையில் ,இதற்கென்று நேரம் ஒதுக்கிகிறோம்.

புதன், செப்டம்பர் 22, 2010

கெட் டோகேதேர்

  1. வெள்ளி இரவு கரையான் குடும்பத்தினர் தப்பிவிட்டனர்.ஆம்,செமியும்,சாக்கானும் தண்ணி போட்டு விட்டு படுத்திய பாடு இருக்கிறதே ,ஐயோ வார்த்தைகளால் வார்நிக்கமுடியது.ஏன்டா வந்தோம் என்று ஆகிவிட்டது.செமி கோல்டன் ஜுபிலி லுங்கி கட்டியிருந்தான்.கோமணத்தை விட கேவலம்.ஒரே ஆட்டம்.கண்டவர் கையை பிடித்தான்.தனபாலன் மனைவியிடம் ,'நீ யாரோட மகள் என்று கேட்டான்'.சாக்கான் கதையை கரையான் எழுதியிருந்தான்.விழுந்து விழுந்து தூக்கிவிட்டோம்.இருவரும் ஓவர் கேட்ட வார்த்தைகள்.நல்ல வேலை ,அந்த பாசைஎல்லாம் என் குடும்பத்திற்கு தெரியாது.சுப்ஜெக்ட் பெசுவதுதாக நினைத்துக்கொண்டனர்.அன்று நாங்கள் புனித ரம்ஜான் விரதத்தோடு அங்கு வந்து பாச்டிங்கை முடித்தோம்.என் குடும்பத்தினர் ரூமிற்கு ஓடிவிட்டனர்.
  2. சனி: டிப்பினை முடித்துவிட்டு பஸ்ஸில் அனைவரும் ஆரோவில்லி வழியாக பீச் சென்றோம்.மதியம் எம்.செந்தில் வீட்டில் உணவு.பின்பு ஐலன்ட் தில் போடிங் ,இரவு பாம் ஹௌசில் சாப்பாடு.சாக்கான் மீண்டும் அளவுக்குமீறிய போதை.செமி அமைதி.சாக்கனுக்கு பயந்து அனைவரும் ரூமிற்கு ஓட்டம்.
  3. நாயிறு:டிபீனுக்கு பிறகு,குழந்தைகள் போட்டி,லேடீஸ் போட்டி முடிந்து பரிசுகள் வழங்கப்பட்டன.பாட்டியாகஈருக்கும் டாக்டர் .சரஸ்வதிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.டாக்டர்களுக்கு ஹீரோ பெண் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.வைரம் & எச்கேபி உரை நிகழ்த்தினார்கள்.மரணமடைந்த டாக்டர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அடுத்த கூட்டம் எங்கு,எப்போது வைக்கலாம் என ஆலோசனை கேட்கப்பட்டது.௨௧0௬ இல் கோல்டன் ஜுபிலி ,சென்னையில் வெகு சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.எக்காரணம் கொண்டும் தனியாகவும்,தன்னிக்காகவும் வரவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.கடினமாக உழைத்து ,டைரக்டர் வீட்டு திருமணத்தையும் உதறித்தள்ளிவிட்டு ,கெட்டோகேதரை ஏற்பாடு செய்த எம்.செந்திலுக்கு மனமார நன்றி தெரிவிக்கப்பட்டது.கிளைமாக்ஸ் ஆகா ,செந்தில் கண்ணீர் மல்க ஏற்புரை வழங்கினான்.

மதிய உணவு அருந்திவிட்டு ,எல்லாவற்றையும் மறந்துவிட்டு ,ஒருவரைஒருவர் ஆரத்தழுவி .நெஞ்சுருக ,கனத்த இதயத்துடன் ,பிரிந்தோம்.

இந்த நேரத்தில் ,நான் ஏற்கனவே இந்த ப்லொக்கில் எழுதியே நட்பு குறித்த கவிதையை அனைவரும் படிக்குமாறு வேண்டுகிறேன்.

அன்புடன்,

பாய்.

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

கெட் டோகேதேர் - 1.2010

பாயின் சலாம்.

நானும் பீ.சிவா ,அவரவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து ஒரே காரில் பாண்டி ,வெள்ளி மாலை சென்றோம்.போகும் வழியில் எல்லாம் எம்.செந்தில் மற்றும் வைரம் செல் மூலமாக , பண்ணை வீட்டு இருப்பிடத்தை நல்ல முறையில் தெரிவித்ததால் , சிரமமின்றி போய் சேர்ந்தோம். மக்களின் பொருளாதாரம் கருதியோ என்னவோ ,ஒரு ரூமில் இரு குடும்பத்தினர் தங்கினோம். இரவில் மின் தடை.பின்பு ஒவ்வொருவராக வந்து சேரவும் ,ஒருவரைஒருவர் ஆரத்தழுவி வரவேற்றோம். இரவு உறங்க வெகு நேரமானது.

தொடரும்,

பாய்.

திங்கள், செப்டம்பர் 20, 2010

இங்கே குளுர அரம்பிவிட்டது. திரும்பி பார்பர்துக்குள் பணி பைய்யா ஆரம்பித்து. அத்துடன் வீடு ஞாபகமும் ரொம்ப வரும்.ஆனால் என்ன செய்ய. எங்கே நமக்கு பெயப்பு இருக்கிறதோ அங்கே தான் நம்ம வீடும் நாடும்....
என் மகன் இப்பொழுது ஏழாம் வகுப்பில் இருக்கிறான். அம்மா என்றால் ஒரே embarrassment. நான் பள்ளிகூடத்துக்கு வந்தால் அவன் பத்தடி முன்னே நடப்பான். பெண் classmates பார்த்துவிட்டால் அவர் coolness போகிவிடும். நான் என் பங்குக்கு டேய் ரொம்ப பந்தா விட்டே என்னுடய 9 yards சாரியில் பள்ளிகூடய்யக்க்க்கு வருவேன் என்று அவனை blackmail செய்து கொண்டிரிக்குறேன்.
எவளவு நால் தாங்கும் என்று பார்க்கலாம்.
GFK

வெள்ளி, செப்டம்பர் 17, 2010





ஹலோ நண்பர்களே:
மறுபடியும் பிளாக் செய்வதில் சந்தோசம். கரியன் அவர்களே போட்டோ பகிரிந்து கொண்டதுக்கு நன்றி. எங்கள் வீட்டில் எல்லாம் நலம் . இந்த படம் என் மகன் நீல மாப்பிள்ளை தோழனாக....
GFK









gun fight kanchana அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நம் வகுப்பு தோழிகள் சிலரின் சமீபத்திய புகைப்படங்கள்



கரையான்.

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

Super pictures

கரையான் அவர்களே,
படங்களை ப்ளோகில் போஸ்ட் பன்னதிற்கு மிக்க நன்றி. நமது மக்கள் எல்லோரும் சீரும் செழிப்புமாக இருக்கிறார்கள். அடுத்த முறை நன்பர்கள் கூடம் வைக்கும் போது தண்ணியை மெனுவிலிருந்து எடுத்துவிட வேண்டும்.
மட்ட்றபடி எல்லாரும் சந்தோஷமாக கூடவதை பார்த்து எனக்கு மிக்க மகிழ்ச்சி
குஜிலி...
Mrs.Vairavasamy, Mrs.Ibrahim, Mrs.Kumaran, Mrs.Sivakumar.


Susan ,Vijayashree, Varadharajan, Vairavasamy
Selvaraj, Kumaravel and Jayababu

Sivakumar, Ravichandran


kannan, parthiban, ibrahim, palani, jayaram, senthilkumar.

palani, jayaram, senthil, sundaram, josephraj, ravichandran.

Govindarajan, A.Kannan, Shankar, Xavier, Parthiban, Palani

Selvaraj, Ibrahim, Sureshkumar, SKB, Alexander,Mohankumar.



சுரேஷ்குமார்(suresh), SKB, கணேச பாண்டியன்(ganesapandian), ஆறுமுக ராஜு(arumuga raju), அலெக்சாண்டர்.(alexander)









SKB, பாபு, இப்ராகிம், ரவிச்சந்திரன்.














திங்கள், செப்டம்பர் 13, 2010

இந்த get to gether ஐ மிக குறுகிய காலத்தில் திட்டமிட்டு, சிறப்பாக நடத்தியதற்காக நண்பர் செந்தில் மற்றும் வைரவசாமி யை மனதார பாராட்டுகிறேன். நண்பர்களின் வயது கூடினாலும் அவர்களின் மூளையும் இதயமும் வயதாகாமல் இருப்பதற்கு உதாரணமாக நாயூரானும் ஆறுமுக ராஜும் நடந்துகொண்டது சில சமயங்களில் சங்கடமாக இருந்தாலும், நட்புக்காக பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஓவராக தண்ணி அடித்து மட்டை ஆகி விட்டு, செருப்பை எங்கோ தொலைத்த நண்பர் ஆறுமுக ராசு அடுத்த நாள், "பொறுப்பா என்ன மட்டும் தூக்கி வந்து படுக்க வைச்சீங்களே, என் செருப்பையும் கண்டு பிடிச்சு எடுத்து வர வேண்டியதுதானேடா" என எங்களிடம் கோப பட்டது சிரிப்பைதான் வர வைத்தது.... பதினான்காம் தேதி இரவு மின்சாரம் தடைபட ஒவ்வொருவருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்த நண்பர் வைரவசாமியை பாராட்டியே ஆக வேண்டும்...(கோவிந்தன் மட்டும் அவருடைய பொறுமையை இழக்க வைத்து விட்டான்)...ஹை வோல்டஜே காரணமாக அறையிலிருந்த மின்சார பல்பு வெடித்து பேச்சிலர் ஆக வந்திருந்த நண்பர்களுக்கு பல இடங்களிலும் சிறு காயங்களை உண்டாக்கியது, கஷ்டமாக இருந்தாலும் அதையும் நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தோம்...

ஓவர் மப்பில் ஷாஜூ தேவகுமார் என்னிடம் வந்து இது என்ன உன்னோட பொண்ணா என்று என் மனைவியை காட்டி கேட்டவுடன், என் மனைவி அடைந்த மகிழ்ச்சி, சத்தியமாக ஒருகோடி ரூபாய்க்கு வைர நகை வாங்கி கொடுத்தால் கூட வராது...

ஆறுமுக ராசு மப்பில் என் காரில் ஏறிக்கொண்டு, அங்கிட்டு திரும்பு, இங்கிட்டு திரும்பு என வழி காட்ட, அதையே பின் பற்றி இன்று வரை என் மகள் காயத்ரி அங்கிட்டு உட்காராதே, இங்கிட்டு உட்காராதே என என்னை கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறாள்..

அடுத்த கெட் டு கெதர் இல் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். தண்ணி அடிப்பது மற்றும் நண்பர்கள் தனியாக வருவது, குடும்பத்துடன் வருவபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை கடுமையாக அமல் படுத்தப்படவேண்டும். மேலும் எழுதுவேன்.

கரையான்.

வெள்ளி, செப்டம்பர் 10, 2010



வணக்கம். நம் நண்பர்களின் சந்திப்பு ஆகஸ்ட் 14 மற்றும் 15 தேதிகளில் மிக சிறப்பாக நடந்தது. வழக்கமான உற்சாகத்துடன், பாண்டிச்சேரி தந்த கூடுதல் உற்சாகம் நண்பர்களின் வயது மாறினாலும் இதயம் அப்படியேதான் உள்ளது என்பதை எடுத்துக்காட்டியது. மேலும் பல செய்திகள் வரும் நாட்களில் வர இருக்கிறது.... தவறாமல் படியுங்கள்...

கரையான்.