இந்த get to gether ஐ மிக குறுகிய காலத்தில் திட்டமிட்டு, சிறப்பாக நடத்தியதற்காக நண்பர் செந்தில் மற்றும் வைரவசாமி யை மனதார பாராட்டுகிறேன். நண்பர்களின் வயது கூடினாலும் அவர்களின் மூளையும் இதயமும் வயதாகாமல் இருப்பதற்கு உதாரணமாக நாயூரானும் ஆறுமுக ராஜும் நடந்துகொண்டது சில சமயங்களில் சங்கடமாக இருந்தாலும், நட்புக்காக பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. ஓவராக தண்ணி அடித்து மட்டை ஆகி விட்டு, செருப்பை எங்கோ தொலைத்த நண்பர் ஆறுமுக ராசு அடுத்த நாள், "பொறுப்பா என்ன மட்டும் தூக்கி வந்து படுக்க வைச்சீங்களே, என் செருப்பையும் கண்டு பிடிச்சு எடுத்து வர வேண்டியதுதானேடா" என எங்களிடம் கோப பட்டது சிரிப்பைதான் வர வைத்தது.... பதினான்காம் தேதி இரவு மின்சாரம் தடைபட ஒவ்வொருவருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்த நண்பர் வைரவசாமியை பாராட்டியே ஆக வேண்டும்...(கோவிந்தன் மட்டும் அவருடைய பொறுமையை இழக்க வைத்து விட்டான்)...ஹை வோல்டஜே காரணமாக அறையிலிருந்த மின்சார பல்பு வெடித்து பேச்சிலர் ஆக வந்திருந்த நண்பர்களுக்கு பல இடங்களிலும் சிறு காயங்களை உண்டாக்கியது, கஷ்டமாக இருந்தாலும் அதையும் நகைச்சுவையாக பேசி மகிழ்ந்தோம்...
ஓவர் மப்பில் ஷாஜூ தேவகுமார் என்னிடம் வந்து இது என்ன உன்னோட பொண்ணா என்று என் மனைவியை காட்டி கேட்டவுடன், என் மனைவி அடைந்த மகிழ்ச்சி, சத்தியமாக ஒருகோடி ரூபாய்க்கு வைர நகை வாங்கி கொடுத்தால் கூட வராது...
ஆறுமுக ராசு மப்பில் என் காரில் ஏறிக்கொண்டு, அங்கிட்டு திரும்பு, இங்கிட்டு திரும்பு என வழி காட்ட, அதையே பின் பற்றி இன்று வரை என் மகள் காயத்ரி அங்கிட்டு உட்காராதே, இங்கிட்டு உட்காராதே என என்னை கிண்டல் அடித்துக்கொண்டு இருக்கிறாள்..
அடுத்த கெட் டு கெதர் இல் இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். தண்ணி அடிப்பது மற்றும் நண்பர்கள் தனியாக வருவது, குடும்பத்துடன் வருவபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதை கடுமையாக அமல் படுத்தப்படவேண்டும். மேலும் எழுதுவேன்.
கரையான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக