திங்கள், செப்டம்பர் 27, 2010




தண்ணி அடித்து விட்டு நண்பர்கள் அடித்த கூத்தை மட்டுமே பேசி இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம். பல நல்ல விஷயங்களும் நடந்தது. நம் வகுப்பு தோழியரும், நண்பர்களின் மனைவியரும் மிக விரைவில் நட்பாகி கூடி உட்கார்ந்து கதை அடித்தது கண் கொள்ளா காட்சி.


நர்மதா என் மனைவியிடம் "எல்லா கழிசடைகளும் நாங்கள் நடனம் ஆடும்போது கூரை மேல் ஏறி வேடிக்கை பாப்பானுங்க என்று கூறி விட்டு, என் மனைவி தவறாக நினைத்துகொள்வாலோ என நினைத்து குமரன் அப்படி எல்லாம் கிடையாது அவன் இருக்கு இடமே தெரியாது" என சமாளித்ததை இன்னமும் என் மனைவி கூறி சிரிக்கிறாள். லிடியா,உமா மகேஸ்வரி,நர்மதா திருமதி குமாரவேல், திருமதி குமரன் , திருமதி பாய் என மிக பெரிய பட்டாளம் வட்ட மேசை போட்டு கதை அளந்தது கண் கொள்ளா காட்சி.

மோகன்குமாரின் குழந்தையை காண வில்லை என திடீர் பரபரப்பு ஏற்படுத்தி எல்லோரையும் கலங்க வைத்து விட்டார் அவனின் மனைவி. எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வரும்போது குழந்தை பஸ் இலேயே தூங்கி விட யாரும் கவனிக்காமல் பேருந்தை அனுப்பி விட்டார்கள், பின்னர் பேருந்து ஓட்டுனரிடம் கூறி அழைத்து வந்தோம். குழந்தையை காண வில்லைஎன்றவுடன் நீச்சல் குளத்தில் நம் நண்பர்கள் தேடிக்கொண்டிருக்க மோகன்குமார் பின்னர் அவன் மகள் நீச்சலில் சாம்பியன் என கூறியதை கேட்டு அசடு வழிந்தார்கள்.


கரையான்.

2 கருத்துகள்:

  1. Yes.During that nervous moment of absence of Mohankumar's daughter,Our guys simply acted in a flash by going here and there,to every nook and corner of that farm house,thereby showing explicit love and affection for each other.Great!
    BHAI.

    பதிலளிநீக்கு
  2. Wow that sounds like a scary and nerve-racking time. I am glad they found her..
    Gujili

    பதிலளிநீக்கு