சனி, டிசம்பர் 22, 2012

A cat allergy problem

Hello My Dear Veterinary colleagues,
One of my students sent me this problem about her cat. Please let me know if you have any suggestions.
Here it is...

My cat has a food allergy to an unknown allergen. He has been like this for over a year now and he scratches his head/face and pulls out his hair on his lower back, around his butt, and front and back legs. I took him to the vet where he said it is symptomatic of a food allergy. Unless I get him tested, which I simply cannot afford, it is trial and error. He was eating Wellness brand Chicken cat food, then I switched him to Wellness Core Brand Chicken which is gluten and grain free and still no improvement. My vet said it was possibly chicken so I switched to gluten and grain free Turkey and Duck and still nothing. I started looking into the starch components of these foods and saw that potato was the main carbohydrate source so I just got him a Green Pea and Duck formula Limited Ingredient Diet. I also changed his litter in case he was allergic to some scent in it but that did not help either. I am at my wits end with this because I feel like nothing helps and he suffers. I have been taking him to the vet every 3 weeks for depro medrol shots to help relieve the itching/hair pulling but I also do not want him to be on those long term. Do you, have any ideas I can try or maybe you have read something that is a common root to this problem in felines?

From Gujili

பாயின் தயவு-புதிய வரவு


சனி, டிசம்பர் 15, 2012

Deepa's dad passed away this morning quite unexpectedly. He had diabetes and was on dialysis but no one expected him to pass away, so it is shock. Please pass this message on to the MVC folks since I know many folks knew of him and were helped by him in some way or the other.

He was huge inspiration for me, it is so sad!!

Angela.

தீபா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

சென்னை நட்சத்திரங்கள் 

ஞாயிறு, டிசம்பர் 09, 2012

மன உளைச்சல்களின் தொடச்சி..


http://www.youtube.com/watch?v=leptTnFS0pA
மன உளைச்சல்களிலிருந்து விடுபட பல்வேறு வழிகளை கடை பிடித்தாலும் குழந்தைகள்தான் சிறந்த மருந்து...மேலே உள்ள லிங்க் மூலமாக வீடியோ வை பார்த்தால் எல்லா கவலைகளும் மறந்து சிரிப்பது நிச்சயம்.

கரையான்.

சனி, டிசம்பர் 08, 2012

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு

         இப்ப தொலைக்காட்சி, வலையகம் மற்றும் செய்தித்தாள்  என எதை திறந்தாலும் கண்ணில் படுவது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு (foreign direct investment in retail sector) பற்றிய செய்திகள்தான். எத்தனைதான் கழுதை கத்து கத்தினாலும் கண்டிப்பாக வரப்போகும் ஒன்றுதான், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மதிய அரசு ஒருபோதும் பின்  வாங்கப்போவதில்லை, ஆள்வோர்  யாராக இருந்தாலும் அது  காங்கிரஸ், பீ ஜே பீ  அல்லது இடது சாரியாக இருந்தாலும் கண்டிப்பாக வந்தே தீரும், இப்போது வன்மையாக வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களை  எதிர்க்கும் கம்யுனிஸ்டுகள் கூட அவர்கள் கடை திறந்ததும் நன்கொடைக்கு அவர்களிடம் உண்டி குலுக்கப்போவது  உண்மை. ஏற்கனவே வங்கி காப்பீடு என அனைத்து துறைகளிலும் அந்நிய நிறுவனங்களை அனுமதித்தாகி விட்டது. சில்லறை வணிகத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு, சில்லறை வணிகத்தில் ஈடு பட்டுள்ள சாமானியர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக்கப்பட்டதே  முக்கிய காரணம் என்கிறார்கள்.  ஆதரிப்போர் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய  விலை கிடைக்க இந்த மாதிரியான நிறுவனங்களின் வரவு வழி வகுக்கும் என வாதிடுகிறார்கள்.  என்னைப்பொருத்த வரை விவசாயிகள் பயனடைவார்கள் என்பது தவறான வாதம் என்றே கருதுகிறேன். ஏனென்றால் வால்மார்ட் போன்ற பெரு  நிறுவனங்களின் தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விளைபொருட்கள் உற்பத்தி செய்வது என்பது சாதாரண விவசாயிகளுக்கு குதிரைக்கொம்பு. உதாரணமாக கத்திரிக்காய்-ஐ  எடுத்துகொண்டால், சொத்தை கத்திரிக்காய் எல்லோரும் அறிந்த ஒன்று, கிராமத்தில் கத்திரிக்காய் வாங்கும்போது காய்களில்  குறைந்தது 25 சதவீதமாவது பூச்சி உள்ளதாக இருக்கும். கத்திரியில் பூச்சிகள் கட்டுபடுத்துவது என்பது கடினமானது, அப்படி பூச்சி பட்டுள்ள காய்களை பெரு  நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடு என்னும் பெயரில் ஒதுக்கி விடும், ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் வாங்கும்போது அவ்வாறு தரம் பிரிப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அவர்களிடம் வாங்கும் தக்காளியில் தரக்கட்டுப்பாடு என்று கூறி பாதிக்கும்  மேல் கழித்து விடுவதாகவும் அவை வீணாகுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினார்கள்.
     இவ்வாறு பூச்சிகள் இல்லாமல் காய்கறிகளை உற்பத்தி செய்ய உழவன் அதிகப்படியான பூச்சிகொல்லிகளை உபயோகிக்க முற்படுவான், அதன் மூலம் உற்பத்தி விலை ஏறுவதுடன் நுகர்வோருக்கு பூச்சிகொல்லிகள் நிறைந்த காய்கள்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எங்கள் பண்ணைக்கு அருகில் ஒரு விவசாய பண்ணை உள்ளது அதில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் நம் ஊர்காரர்கள், அவர்களிடம் ஏன் பாண்டா, carrefour போன்ற நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்று கேட்டேன், அவர்கள் சொன்னது தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் கழித்து கட்டி நமக்கு ஒன்றும் மிஞ்சாமல் செய்து விடுவார்கள் என்பதுதான். பெரு நிறுவனங்கள் நம்மூர் contract farming கோழி நிறுவனங்கள் போல் முடிந்தவரை உழவனிடம் கொள்ளை அடிக்கத்தான் பார்க்கும்.
   சுருங்க சொன்னால் வேட்டி தலப்பா கட்டி வந்த இடைத்தரகர்கள் கோட் சூட் போட்டு  வந்து உழவனின் கோவணத்தையும் உருவி செல்ல போகிறார்கள்.

கரையான் 

மன உளைச்சல்கள்

மன உளைச்சல் இன்றைய வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது.அது பணி இடத்தில் மட்டுமல்லாமல் வாழ்வின் எல்லாப் பிராயங்களிலும் பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.குழந்தையை crecheல் தள்ளிவிட்டுப் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிற கட்டாயத்தில் ஒரு வயதைத் தாண்டாத குழந்தைக்கு stress தொடங்கி விடுகிறது .பள்ளிப் பருவத்தில் ஏகத்துக்கும் சிலபஸ் ..ப்ராஜெக்ட் வொர்க் ..கட்டாயமாகப் படுகிற எக்ஸ்ட்ரா curricular activities ...எல்லோர் முன்னிலும் ஆசிரியரால் திட்டப்படுகிற மாணவர்கள் பத்தாவது வகுப்புப் பாடத் திட்டத்தை ஒன்பதாவது படிக்கிற போதே முடித்து விடத் துடிக்கிற தனியார் பள்ளிகள்..தினமும் அவர்கள் எதிர்கொள்ளும் class testகள் குழந்தைகளை எப்போதுமே சந்தேக உணர்வோடு கண்காணிக்கிற பெற்றோர்கள் ..சோசியல் நெட் வொர்க்குகள் தருகிற மறைமுக மன அழுத்தங்கள் ..சமுக ஏற்றத் தாழ்வுகள் என எப்போதுமே மன அழுத்த வாழ்வு முறைக்கு இன்றைய பிள்ளைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நமது பள்ளிப் பருவத்திலிருந்து ரொம்பவே மாறிவிட்டது .

இன்னும் அடுத்த கட்டத்தில் வேலை.. திருமணம் ...குழந்தைகளின் படிப்பு..சமுக நிர் பந்தங்களுக்க்காக maintain செய்ய வேண்டிய சொந்த வீடு.. கார் .ஆபரணங்கள் ..உடைகள் ..பிரம்மாண்டமான விழாக்கள் ..ஒரு பக்கம். எதிர் பாராமல் வந்து ஆளைக் குப்புறத் தள்ளும் நோய்கள் ..மருத்துவச் செலவுகள் என இன்னொரு பக்கம் ..பணியிடத்தில் எப்போதுமே நிலவுகிற பாதுகாப்பற்ற தன்மை ஓவராய் வேலை வாங்குகிற அல்லது result எதிர்பார்க்கிற மேலதிகாரிகளின் நிர்பந்தங்கள் ..என்று stress வாழ்வின் பெரும் பகுதியில் அங்கமாகி விட்டது 

இதற்கிடையில் ஈகோ காரணமாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளுகிற stress..எத்ர்காலம் குறித்த பயத்தில் நிகழ காலம் தொலைத்து நம்பிக்கையின்மையின் காரணமாக ஏற்படுகிற மன அழுத்தங்கள் ..என தெனாலி திரைப் படத்தில் கமல் எல்லாம் பய மயம் என்ற மாதிரி இன்று பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் stress மயம் என்றாகி விட்டது ..இதற்கிடையில் வாழ்வில் நம்பிக்கை வைத்து தைரியத்தோடு பிரச்சினைகளை எதிர் கொள்ளுகிற தன்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கொடுப்பது முக்கியம் .நன்றாகப் படிக்கிற பிள்ளைகளை விட மன தைரியத்தோடும் நிதானத்தோடும் பிரச்சினைகளை.. செயல்பாடுகளை... சக மனிதர்களை ..நேர்முக மறைமுக எதிரிகளைக் கையாளும் சாணக்கியத் தந்திரங்களை கற்றுத் தர வேண்டியது அவசியம் ..நல்லவனாக இருப்பதோடு வல்லவனாவகவும் இருப்பது இன்றையத் தேவை 
Chocks.


மன உளைச்சல்கள்


கஷ்டப்பட்டு எழுதுன பதிவுக்கு கமென்ட் வரவில்லை என்றாலும் மன உளைச்சல்தான்....

கரையான் 

வியாழன், டிசம்பர் 06, 2012

மன உளைச்சல்கள்....

     அதிக சம்பாத்தியம் அதிக உயரம் ஆனந்தம் சேர்பதில்லை, மாறாக மேலும் பொறுப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் சேர்த்து உளைச்சல்களைதான் சேர்க்கிறது.  இன்றைய உலக வாழ்வில் அதிக சம்பாத்தியமும் பணியில் உயர்வடைய வேண்டிய கட்டாயங்களும் எல்லோருக்கும் இருக்கும் நிர்ப்பந்தம். எல்லாவற்றையும் உதறி விட்டு இருப்பதே போதும் என வாழ்ந்து விட முடியாது. நம்மை சுற்றி இருப்பவர்கள்(குடும்பத்தினர் ) அதற்கு தயாராக இருப்பார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  மன உளைச்சல்களிலிருந்து வெளி வருவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின் பற்றுகிறார்கள். என்னுடைய வழியை நான் சொல்கிறேன்.  வேலை இருக்கிறதோ இல்லையோ காலை ஐந்து மணிக்கு பணிக்கு தயாராகி விடுகின்றேன். பணியிடத்தில் சென்றடைந்ததும் முந்தைய தினத்தில் காயமுற்ற அல்லது இன்றைய தினம் பார்க்க வேண்டிய குதிரைகளின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்கிறேன். பின்னர்  சவாரிக்கு தயாராக இருக்கும் குதிரையில் உட்கார்ந்து அரை மணி நேரம் பயிற்சி முடிந்த பின்னர் புதிதாக பயிற்சி தொடங்கப்பட்ட குட்டி குதிரைகளின் வேலைகளை மேற்பார்வை இட இரண்டு மணி நேரம். அதன் பின்னர் பிரச்னைக்குரிய குதிரைகளுக்கு சிகிச்சை. காலை பணிகள் முடிந்த பின்னர் உடற்பயிற்சி கூடம்    சென்று ஒரு மணி நேரம் தீவிர உடற்பயிற்சி . வீடு வந்து மதிய உணவு தயார் செய்து உண்டு முடிக்கும்போது மதிய பணி  நேரம் துவங்கும், திரும்ப பண்ணையில் பணி  துவங்கினால் மாலை ஆறு மணி வரை வேலை. காலை எழுந்தது முதல் உடல் அயரும் வரை தொடர்ந்து வேலை செய்து விட்டு  செல்லும்போது மற்ற எதுவும் நினைவுக்கு வருவதில்லை.
   உனக்கு வசதி இருக்கிறது குதிரை ஏற்றம் செய்கிறாய், வசதி இல்லாதவர் என்ன செய்வது என கேட்கலாம், குதிரை ஓட்ட வழி இல்லாத நேரத்தில் நீண்ட தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன். மனம் போன போக்கில் நடந்த அனுபவம் நிறைய உண்டு.  மன  அமைதி பெற  குதிரை ஓட்ட நினைத்து குதிரை ஒட்டி கொண்டிருந்தேன், சில நாட்களில் அந்த குதிரைக்கு என்ன மன உளைச்சலோ தெரிய வில்லை நான் உட்கார்ந்தால் நகர மறுத்தது இடது புறம் செல்ல சொன்னால்  வலது புறம் திரும்பும்  வலது புறம் திருப்பினால் இடதுபுறம் செல்லும்(என் மனைவியிடம் பேசி இருக்கும் போல ) கொஞ்சம் கொஞ்சமாக தாஜா செய்து இப்போது ஓரளவுக்கு நான் சொல்வதை கேட்க ஆரம்பித்து உள்ளது(நம் ராசி குதிரை மனைவி எல்லாம் ஒரே மாதிரி)

கரையான்.....

புதன், டிசம்பர் 05, 2012

mental stress

http://www.youtube.com/watch?v=VBbDn34X-Lo

சமீபத்தில் விஜய் டிவி  நீயா நானா நிகழ்ச்சியில் தலைப்பு  மன உளைச்சல் பற்றியது. மிகவும் அருமையாக இருந்தது. திருமணம் தள்ளிப்போவதால் ஏற்படும் மன உளைச்சல் பற்றி ஒரு பெண் விவரித்தார்.  அதில்  வீட்டில் மூன்று பெண்கள் என்பதால் தாய் தந்தைக்கு  பின் சீர் செய்ய ஆண் வாரிசுகள் இல்லை என்பதும் ஒரு காரணம் என்பதை கேட்டபோது நாம் இன்னும் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது. பெண்ணை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலை வாங்கி கொடுத்து நகை சீர் வரதட்சணை எல்லாம்  செய்து திருமணம் செய்து கொடுத்த பின்னரும் அவள் சாகும் வரை சீர் செய்ய வேண்டும் என நினைப்பது என்ன வகையான மனப்பாங்கு. இதைப்போன்ற கையாலாகாதவர்களை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை விட கல்யாணமாகாமலே இருந்துவிடலாம். எதனால்  மன உளைச்சல் என்று பலரும் விவரித்த போது நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றியது , சிறு விஷயங்கள் கூட  பெரிதாக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண் தன்னுடைய செல் பேசிக்கு வரும் wrong அழைப்புகளால் மன உளைச்சல் அடைவதாக கூறினார் இதற்கு மிக சுலபமான வழி செல் பேசி வைத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது அல்லது எண்ணை மாற்றி விடுவது. ஆனால் அந்த பெண் அதை செய்யாமல் இன்னும் மன உளைச்சளிலேயே இருப்பது விநோதமாக இருந்தது. வேலை இல்லாமல் இருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் பற்றி ஒருவர் கூறினார், மிகவும் வருத்தமாக இருந்தது, நான் கூட எட்டு மாதங்கள்  வேலை இல்லாமல் இருந்த அனுபவம் உண்டு, கையிலே காசில்லை  என்றாலும்  மனதில் தைரியம் இருந்தது மேலும் ஆதரவாக குடும்பம் இருந்தது, அதனால்  உளைச்சலில் இருந்து வெளி வர முடிந்தது.
தொடருவேன் .....

கரையான் 

Things we take for granted....

Hello Friends-
Its been ages since I blogged. I wanted to write today about the things we take for granted in our life.
We seem to assume that somehow we are given the God given previlege to have all the things we have in this life. I have this little exercise I do whenever I feel negative.I make a mental list of all the things I should be grateful for starting with intact limbs and functioning body, not being born in a war torn nation, not being born in a region which oppresses women, having not faced want or poverty, having a loving family,husband and child, the list goes on by the end of it you are so overwhelmed by the mercy of God that you feel like a whiner for complaining about things.
So to rephrase Kennedy's quotation, ask not what the world can do for you, ask what you can do for the world.
Love to everyone
GFK

திங்கள், டிசம்பர் 03, 2012

தாயகம்2012 --- 10

                                                 தமிழக மல்யுத்த வீரர்கள்