அதிக சம்பாத்தியம் அதிக உயரம் ஆனந்தம் சேர்பதில்லை, மாறாக மேலும் பொறுப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் சேர்த்து உளைச்சல்களைதான் சேர்க்கிறது. இன்றைய உலக வாழ்வில் அதிக சம்பாத்தியமும் பணியில் உயர்வடைய வேண்டிய கட்டாயங்களும் எல்லோருக்கும் இருக்கும் நிர்ப்பந்தம். எல்லாவற்றையும் உதறி விட்டு இருப்பதே போதும் என வாழ்ந்து விட முடியாது. நம்மை சுற்றி இருப்பவர்கள்(குடும்பத்தினர் ) அதற்கு தயாராக இருப்பார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். மன உளைச்சல்களிலிருந்து வெளி வருவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின் பற்றுகிறார்கள். என்னுடைய வழியை நான் சொல்கிறேன். வேலை இருக்கிறதோ இல்லையோ காலை ஐந்து மணிக்கு பணிக்கு தயாராகி விடுகின்றேன். பணியிடத்தில் சென்றடைந்ததும் முந்தைய தினத்தில் காயமுற்ற அல்லது இன்றைய தினம் பார்க்க வேண்டிய குதிரைகளின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்கிறேன். பின்னர் சவாரிக்கு தயாராக இருக்கும் குதிரையில் உட்கார்ந்து அரை மணி நேரம் பயிற்சி முடிந்த பின்னர் புதிதாக பயிற்சி தொடங்கப்பட்ட குட்டி குதிரைகளின் வேலைகளை மேற்பார்வை இட இரண்டு மணி நேரம். அதன் பின்னர் பிரச்னைக்குரிய குதிரைகளுக்கு சிகிச்சை. காலை பணிகள் முடிந்த பின்னர் உடற்பயிற்சி கூடம் சென்று ஒரு மணி நேரம் தீவிர உடற்பயிற்சி . வீடு வந்து மதிய உணவு தயார் செய்து உண்டு முடிக்கும்போது மதிய பணி நேரம் துவங்கும், திரும்ப பண்ணையில் பணி துவங்கினால் மாலை ஆறு மணி வரை வேலை. காலை எழுந்தது முதல் உடல் அயரும் வரை தொடர்ந்து வேலை செய்து விட்டு செல்லும்போது மற்ற எதுவும் நினைவுக்கு வருவதில்லை.
உனக்கு வசதி இருக்கிறது குதிரை ஏற்றம் செய்கிறாய், வசதி இல்லாதவர் என்ன செய்வது என கேட்கலாம், குதிரை ஓட்ட வழி இல்லாத நேரத்தில் நீண்ட தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன். மனம் போன போக்கில் நடந்த அனுபவம் நிறைய உண்டு. மன அமைதி பெற குதிரை ஓட்ட நினைத்து குதிரை ஒட்டி கொண்டிருந்தேன், சில நாட்களில் அந்த குதிரைக்கு என்ன மன உளைச்சலோ தெரிய வில்லை நான் உட்கார்ந்தால் நகர மறுத்தது இடது புறம் செல்ல சொன்னால் வலது புறம் திரும்பும் வலது புறம் திருப்பினால் இடதுபுறம் செல்லும்(என் மனைவியிடம் பேசி இருக்கும் போல ) கொஞ்சம் கொஞ்சமாக தாஜா செய்து இப்போது ஓரளவுக்கு நான் சொல்வதை கேட்க ஆரம்பித்து உள்ளது(நம் ராசி குதிரை மனைவி எல்லாம் ஒரே மாதிரி)
கரையான்.....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக