புதன், டிசம்பர் 05, 2012

mental stress

http://www.youtube.com/watch?v=VBbDn34X-Lo

சமீபத்தில் விஜய் டிவி  நீயா நானா நிகழ்ச்சியில் தலைப்பு  மன உளைச்சல் பற்றியது. மிகவும் அருமையாக இருந்தது. திருமணம் தள்ளிப்போவதால் ஏற்படும் மன உளைச்சல் பற்றி ஒரு பெண் விவரித்தார்.  அதில்  வீட்டில் மூன்று பெண்கள் என்பதால் தாய் தந்தைக்கு  பின் சீர் செய்ய ஆண் வாரிசுகள் இல்லை என்பதும் ஒரு காரணம் என்பதை கேட்டபோது நாம் இன்னும் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது. பெண்ணை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலை வாங்கி கொடுத்து நகை சீர் வரதட்சணை எல்லாம்  செய்து திருமணம் செய்து கொடுத்த பின்னரும் அவள் சாகும் வரை சீர் செய்ய வேண்டும் என நினைப்பது என்ன வகையான மனப்பாங்கு. இதைப்போன்ற கையாலாகாதவர்களை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை விட கல்யாணமாகாமலே இருந்துவிடலாம். எதனால்  மன உளைச்சல் என்று பலரும் விவரித்த போது நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றியது , சிறு விஷயங்கள் கூட  பெரிதாக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண் தன்னுடைய செல் பேசிக்கு வரும் wrong அழைப்புகளால் மன உளைச்சல் அடைவதாக கூறினார் இதற்கு மிக சுலபமான வழி செல் பேசி வைத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது அல்லது எண்ணை மாற்றி விடுவது. ஆனால் அந்த பெண் அதை செய்யாமல் இன்னும் மன உளைச்சளிலேயே இருப்பது விநோதமாக இருந்தது. வேலை இல்லாமல் இருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் பற்றி ஒருவர் கூறினார், மிகவும் வருத்தமாக இருந்தது, நான் கூட எட்டு மாதங்கள்  வேலை இல்லாமல் இருந்த அனுபவம் உண்டு, கையிலே காசில்லை  என்றாலும்  மனதில் தைரியம் இருந்தது மேலும் ஆதரவாக குடும்பம் இருந்தது, அதனால்  உளைச்சலில் இருந்து வெளி வர முடிந்தது.
தொடருவேன் .....

கரையான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக