செவ்வாய், அக்டோபர் 30, 2012

Hurricane Sandy

புயல் சாண்டி   நேற்று சாயங்காலம் இங்கு  வந்து கிழக்கு ஓர மாவட்டங்களை  கலக்கிவிட்டது . எங்கள் ஊரில் சேதம் அவ்வளவு இல்லை என்றாலும் பக்கத்து மாவட்டங்களில் அலைகள் 30 அடிக்கு மேல் ஏறி சாலைகளெல்லாம் தண்ணீர் வந்து சில ஊர்களில் வீடு கூரைகள் மட்டும் ஏறி விட்டது.. சென்னை இல் வாழும் போது பல புயல்களின் அனுபவங்கள் என்  எண்ணத்திற்கு ஞயாபகம் வந்தது. நாங்கள் எண்ணூரில் பல வருடங்கள் இருந்ததால் கடலோரத்தில் அலைகள் கடூரமாக வரும் காட்சிகள் ஏன் நினைவிற்கு வந்தது. குறிபாக மணல் சாக்குகளை  வீடு கூரைகளில் போடுவார்கள்.  என்  தஹப்பன் மற்றும் பக்கத்துக்கு வீடு மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒருவர்றுகு ஒருவர் உதவி செய்வார்கள்.
இந்த ஊரில் அதிகமான பாதுகாப்பு முறைகளை மக்கள் கடைபிடிபதால் சேதம் அவ்வள்ளவு  கிடையாது.  எங்களுக்கு  12 மணிநேரம் மின்சாரம்  கிடையாது. இன்னும் குளூர் அதிகம் இல்லாதலால் தப்பித்தோம். தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட் 3 அடி snow. எங்களுக்கு மழை யோடு புயல் நின்று விட்டது.  பல்கலைகழகமும் இரண்டு நாள்  விடுமுறை , ஆகையால் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறோம் . எல்லாம் நன்மைக்கே கே இறைவனே என்று நன்றி சொல்ல வேண்டியது தான்.
குஜிலி 

வெள்ளி, அக்டோபர் 26, 2012

வாழ்த்துக்கள்

சென்னை நட்சத்திரங்கள் அனைவருக்கும் பக்ரித் நல் வாழ்த்துக்கள்....

கரையான்.

புதன், அக்டோபர் 17, 2012

from facebook

There was a farmer who had a horse and a goat….. 
One day, the horse became ill.
 So he called the veterinarian, who said:

"Well, your horse has a virus. He must take this medicine for three days.
I'll come back on the 3rd day and if he's not better, we're going to have to put him down.

Nearby, the goat listened closely to their conversation.

The next day, they gave the horse the medicine and left.

The goat approached the horse and said: “Be strong, my friend.
Get up or else they're going to put you to sleep!”

On the second day, they again gave the horse the medicine and left.

The goat came back and said: "Come on buddy, get up or else you're going to die!
Come on, I'll help you get up. Let's go! One, two, three..."

On the third day, they came to give the horse the medicine and the vet said:
"Unfortunately, we're going to have to put him down tomorrow. Otherwise,
the virus might spread and infect the other horses".

After they left, the goat approached the horse and said: "Listen pal, it's now or never!
Get up, come on! Have courage! Come on! Get up! Get up! That's it, slowly! Great!
Come on, one, two, three... Good, good. Now faster, come on...... Fantastic! Run, run more!
Yes! Yay! Yes! You did it, you're a champion...!!!"

All of a sudden, the owner came back, saw the horse running in the field and began shouting:
It's a miracle! My horse is cured. We must have a grand party. Let's kill the goat!!!!

The Lesson:
Nobody truly knows which employee actually deserves the merit of success, or who's actually contributing the necessary support to make things happen.

Remember:
LEARNING TO LIVE WITHOUT RECOGNITION IS A
SKILL!!!!

If anyone ever tells you that your work is unprofessional, remember:

AMATEURS BUILT THE ARK [which saved all the species]

and

PROFESSIONALS BUILT THE TITANIC [all died tragically]





facebook -இல் இருந்து....





கரையான்.

செவ்வாய், அக்டோபர் 16, 2012

Chennai விஜயத்தின்போது ,


சமிபத்தில் கரையான் மற்றும் பாய் அவர்களின் சென்னை  விஜயத்தின்பொது நமது சென்னை ஸ்டார்ஸ்  நிருபரின் கேமரா கைவண்ணம் .....













இதில் யார் பாய், யார் கரையான்  என்பது, left to anybody's guess......

ASAD

படித்ததில் பிடித்தது....



ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு... 

மதிய உணவு வேளை

ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏ.எம்.வி உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.

சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.

பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!

உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.

நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.

எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.

ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.

தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்

பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.

இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...

"எப்படியோ வர்ர ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது''


கரையான்.



திங்கள், அக்டோபர் 15, 2012

படித்ததில் பிடித்தது.....




கடலூர்:ஆசையாக வளர்த்த பெண் நாய், அதிகளவில் குட்டிகளை ஈன்று, தெருச்சண்டையை கொண்டு வந்ததால், கால்நடை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றிய விவரம்:கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் நாகராஜன்; டைலர். இவர் மனைவி ரமணி. இவர் தன் வீட்டில், பெண் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். இந்த நாய் இதுவரை, இரு ஆண்டுகளில், ஐந்து முறை நடந்த பிரசவத்தில், 24 குட்டிகளை ஈன்றது.இதனால் அப்பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிந்தன. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், நாகராஜன் வீட்டினரிடம் தினமும் தகராறில் ஈடுபட்டனர்.

விரக்தியடைந்த நாகராஜன், தன் வீட்டில் உள்ள நாயை எங்கேயாவது கொண்டு விட ஏற்பாடு செய்தார். இதற்கு, அவரது மனைவி ரமணி ஒப்புக் கொள்ளாததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.ஆசையாக வளர்த்த நாயை பிரியவும் மனமில்லாமல், தெருவில் வசிப்போருக்கு பதில் சொல்லவும் முடியாமல் தவித்த கணவன், மனைவி கலந்து பேசி, நாய்க்கு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு மருத்துவமனையில், நாயை சேர்த்து, டாக்டரிடம் நடந்த விவரங்களைக் கூறி, குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதுவரை, ஆண் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்ட மருத்துவமனையில், நாகராஜன் - ரமணி தம்பதியரின் வேண்டுகோளுக்கிணங்க, முதல் முறையாக பெண் நாய்க்கு, கால்நடை <உதவி டாக்டர், ஸ்டாலின் வேதமாணிக்கம், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ராமு ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து, 45 நிமிடம் கருத்தடை ஆபரேஷன் செய்தனர். அடுத்த ஒரு மணிநேரத்தில் நாயை, "டிஸ்சார்ஜ்' செய்து, தம்பதி இருவரும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

கரையான் .

வியாழன், அக்டோபர் 11, 2012

Hello Chennai Stars,


பம்பில தண்ணி வராட்டி என்ன ?...

நம்ம bloggers கொஞ்சம் சொர்ந்துபோனத்தால் , அவர்களை உசுபெத்த இந்த........!!!

Just for fun.. Enjoy a great week end!!!!

ASAD
 

வியாழன், அக்டோபர் 04, 2012

பேராசை பெரு நஷ்டம்

 ஈமு கோழி, நாட்டு கோழி, கொப்பரை என்று தினுசு தினுசா ஆசை காட்டி மக்களை ஏமாத்திகிட்டே  தான் இருக்கானுங்க மக்களும் ஏமாந்து கிட்டேதான் இருக்காங்க...ஆன் லைன் டிரேடிங் -இல் முதலீடு செய்து உங்களின் பணத்திற்கு 8.5% வட்டி தருகிறோம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 8500 ரூபாய் கிடைக்கும் என்று அவன் கூறினால் முதலீடு செய்ய எப்படி புற்றீசல் போல மக்கள் புறப்படுகிறார்கள், பேராசைதான். இப்படி எல்லாம் உண்மையாக கிடைக்கும் என்றால் எங்களைப்போன்றவர்கள் ஏன் வெளி நாட்டில் சாணி அள்ளிக்கொண்டு இருக்கப்போகிறோம். ஐந்து லட்சத்தை முதலீடு செய்து விட்டு மாதம் மாதம் வட்டியை வாங்கி கொண்டு நிம்மதியாக உண்டு உறங்கி எழுந்திருக்க மாட்டோமா. ஒரு கோடி ரெண்டு கோடி என்பது போய்  இப்போதெல்லாம் ஐநூறு கோடி ஆயிரம் கோடிகள் தாண்டி இருபதாயிரம் முப்பதாயிரம் கோடிகளில் பித்தலாட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது இதற்கெல்லாம் காரணம் பேராசை. இதில் படித்தவர் பாமரர் என்றெல்லாம் பேதம் இல்லை. படித்தவர்களிடம் ஆங்கிலத்தில் புரியாத விஷயங்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள், படிக்காதவரிடம் விளங்காத கணக்குகளை சொல்லி குழப்பி படிய வைக்கிறார்கள் இந்த ஏமாற்று காரர்கள்.
பேராசை கண்ணை மறைக்கும்  என்பார்கள், உண்மைதான் ஈமு  கோழி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் பொழுதே கால்நடை மருத்துவ பல்கலை கழகம் துணை வேந்தர் பல பேட்டிகளில் இது சாத்தியமில்லாதது என்பதை பல இதழ்களில் விளக்கமாக கூறினார், ஆனால் அவர்கள் செய்த விளம்பரங்களும்,  அதுவும் நம்ம ஊருல சினிமாக்காரன் சொல்லி விட்டால் அதுதான் வேதம்  என்றென்னும் முட்டாள்களே அதிகம், விளைவு இப்போது முதலுக்கே மோசம். மக்களின் பலவீனத்தை சரியாக பயன் படுத்த தெரிந்தவர்கள் இந்த பித்தலாட்ட காரர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னரே தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக் ஆசை காட்டி பலரை ஏமாற்றிய சம்பவம் சென்னை நகரில் நடந்தது, அதில் ஏமாந்தவர்கள் பெரும்பாலானோர் மெத்த படித்தவர்கள், அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர்களுடைய பணம் இது வரை கிடைக்கவில்லை, வழக்குகள் இன்னும் இழுத்துக்கொண்டே தான் உள்ளது. அதன் பிறகு தேக்கு மர வளர்ப்பு திட்டம், போரெக்ஸ் டிரடிங், இப்படி பல கவர்ச்சி திட்டங்கள் , கவர்ச்சியான நடிகர் நடிகைகளை வைத்து விளம்பர படுத்தி ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள் மக்களும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மக்களின் பேராசையே இவர்களின் மூலதனம்.

கரையான்.

புதன், அக்டோபர் 03, 2012

நுணலும்தன் வாயால் கெடும்

சில நேரங்களில் இடம் பொருள் ஏவல் அறியாமல் வார்த்தைகளை விடுவது சிலருக்கு அடிக்கடி நிகழ்வது...கடந்த வாரம் எங்கள் முதலாளி பண்ணையில் தங்கி இருந்த சமயம் எங்களை இரவு உணவு அவருடன் அருந்த அழைத்திருந்தார், நான் மற்றும் பண்ணையில் பணி  புரியும் சில மேலாளர்கள், பொறியாளர்கள் சென்றோம்,  பொறியாளர் ஒருவர் பாகிஸ்தானி, கொஞ்சம் வயதானவர் அதனால் அவர் பேசுவதை பெரும்பாலனவர்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.மேலும் அவர் எல்லோரிடமும் அதிகம் உரிமை எடுத்து கொண்டு கொஞ்சம் அதிக்கப்படியாக பேசுவார். எங்கள் முதலாளியுடன் நிறைய சவுதி நண்பர்களும் இரவு உணவில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள், வந்திருந்தவர்களில் நிறைய பேர் வசதிபடைத்தவர்கள் மற்றும் அரசு பணியில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள்...எங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் உணவு அருந்த உட்கார்ந்தபோது கலகலப்பாக பேசிக்கொண்டே உணவருந்தினோம், அப்போது எங்கள் பாகிஸ்தானி நண்பர் ஜாலியாக பேசுவதாக எண்ணி " சவுதியில இப்ப பிறக்குற குழந்தைகளெல்லாம் போலிகள்" என்றார். ஒரு கணம் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அனைவரும்(என் முதலாளி உட்பட)கொஞ்சம் அதிர்ந்து விட்டார்கள், எல்லோரும் அந்த பாகிஸ்தானி யையே திரும்பி பார்த்தார்கள், பெரும்பாலனவர்கள் முகம் கொஞ்சம் மாறி விட்டது என்றே சொல்ல வேண்டும். எங்கள் முதலாளி கொஞ்சம் சுதாரித்து கொண்டு " சயீத் நீ எதை வைத்து இப்படி சொல்கிறாய்" என்றார்,
"அறுபது எழுபது வயதானவர்கள் எல்லாம் ஊக்க மருந்துகளை(aphrodisiacs) உபயோகித்து குழந்தை பெற்று கொள்கிறார்கள் அதைத்தான் கூறினேன்" என்றார், அதன் பின்னர்தான் கொஞ்சம் சகஜ நிலை திரும்பியது.
சற்று கற்பனை செய்து பாருங்கள்  இதே நம்மூரில் இப்படி ஒரு விஷயத்தை சர்வ சாதாரணமாக கூறி விட்டு எந்த வித சேதாரமும் இல்லாமல் தப்பிக்க முடியுமா. 
சில நேரங்களில் நான் கூட இப்படி உளறியது உண்டு(ஆனால் இந்த அளவுக்கு damaging ஆக கிடையாது)
ஒரு முறை என் முதலாளி மகனுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம் அதிகம் குழந்தைகள் பெற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கூறி கொண்டிருந்தேன், அவன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை , திடீரென்று பொறி தட்டியது முதலாளிக்கே நாற்பது குழந்தைகளுக்கும் மேல், அவர் மகனிடம் இதைப்பற்றி விவாதிப்பது சரியல்ல என்று நிறுத்தி கொண்டேன்.....

கரையான்