சில நேரங்களில் இடம் பொருள் ஏவல் அறியாமல் வார்த்தைகளை விடுவது சிலருக்கு அடிக்கடி நிகழ்வது...கடந்த வாரம் எங்கள் முதலாளி பண்ணையில் தங்கி இருந்த சமயம் எங்களை இரவு உணவு அவருடன் அருந்த அழைத்திருந்தார், நான் மற்றும் பண்ணையில் பணி புரியும் சில மேலாளர்கள், பொறியாளர்கள் சென்றோம், பொறியாளர் ஒருவர் பாகிஸ்தானி, கொஞ்சம் வயதானவர் அதனால் அவர் பேசுவதை பெரும்பாலனவர்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.மேலும் அவர் எல்லோரிடமும் அதிகம் உரிமை எடுத்து கொண்டு கொஞ்சம் அதிக்கப்படியாக பேசுவார். எங்கள் முதலாளியுடன் நிறைய சவுதி நண்பர்களும் இரவு உணவில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள், வந்திருந்தவர்களில் நிறைய பேர் வசதிபடைத்தவர்கள் மற்றும் அரசு பணியில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள்...எங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் உணவு அருந்த உட்கார்ந்தபோது கலகலப்பாக பேசிக்கொண்டே உணவருந்தினோம், அப்போது எங்கள் பாகிஸ்தானி நண்பர் ஜாலியாக பேசுவதாக எண்ணி " சவுதியில இப்ப பிறக்குற குழந்தைகளெல்லாம் போலிகள்" என்றார். ஒரு கணம் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அனைவரும்(என் முதலாளி உட்பட)கொஞ்சம் அதிர்ந்து விட்டார்கள், எல்லோரும் அந்த பாகிஸ்தானி யையே திரும்பி பார்த்தார்கள், பெரும்பாலனவர்கள் முகம் கொஞ்சம் மாறி விட்டது என்றே சொல்ல வேண்டும். எங்கள் முதலாளி கொஞ்சம் சுதாரித்து கொண்டு " சயீத் நீ எதை வைத்து இப்படி சொல்கிறாய்" என்றார்,
"அறுபது எழுபது வயதானவர்கள் எல்லாம் ஊக்க மருந்துகளை(aphrodisiacs) உபயோகித்து குழந்தை பெற்று கொள்கிறார்கள் அதைத்தான் கூறினேன்" என்றார், அதன் பின்னர்தான் கொஞ்சம் சகஜ நிலை திரும்பியது.
சற்று கற்பனை செய்து பாருங்கள் இதே நம்மூரில் இப்படி ஒரு விஷயத்தை சர்வ சாதாரணமாக கூறி விட்டு எந்த வித சேதாரமும் இல்லாமல் தப்பிக்க முடியுமா.
சில நேரங்களில் நான் கூட இப்படி உளறியது உண்டு(ஆனால் இந்த அளவுக்கு damaging ஆக கிடையாது)
ஒரு முறை என் முதலாளி மகனுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம் அதிகம் குழந்தைகள் பெற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கூறி கொண்டிருந்தேன், அவன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை , திடீரென்று பொறி தட்டியது முதலாளிக்கே நாற்பது குழந்தைகளுக்கும் மேல், அவர் மகனிடம் இதைப்பற்றி விவாதிப்பது சரியல்ல என்று நிறுத்தி கொண்டேன்.....
கரையான்

இந்த "பாக்கிகள்" ,எப்போதும் இப்படித் தான்.
பதிலளிநீக்குபாய்.
coming...coming...
பதிலளிநீக்கு