திங்கள், அக்டோபர் 15, 2012

படித்ததில் பிடித்தது.....




கடலூர்:ஆசையாக வளர்த்த பெண் நாய், அதிகளவில் குட்டிகளை ஈன்று, தெருச்சண்டையை கொண்டு வந்ததால், கால்நடை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றிய விவரம்:கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் நாகராஜன்; டைலர். இவர் மனைவி ரமணி. இவர் தன் வீட்டில், பெண் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். இந்த நாய் இதுவரை, இரு ஆண்டுகளில், ஐந்து முறை நடந்த பிரசவத்தில், 24 குட்டிகளை ஈன்றது.இதனால் அப்பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிந்தன. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், நாகராஜன் வீட்டினரிடம் தினமும் தகராறில் ஈடுபட்டனர்.

விரக்தியடைந்த நாகராஜன், தன் வீட்டில் உள்ள நாயை எங்கேயாவது கொண்டு விட ஏற்பாடு செய்தார். இதற்கு, அவரது மனைவி ரமணி ஒப்புக் கொள்ளாததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.ஆசையாக வளர்த்த நாயை பிரியவும் மனமில்லாமல், தெருவில் வசிப்போருக்கு பதில் சொல்லவும் முடியாமல் தவித்த கணவன், மனைவி கலந்து பேசி, நாய்க்கு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு மருத்துவமனையில், நாயை சேர்த்து, டாக்டரிடம் நடந்த விவரங்களைக் கூறி, குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதுவரை, ஆண் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்ட மருத்துவமனையில், நாகராஜன் - ரமணி தம்பதியரின் வேண்டுகோளுக்கிணங்க, முதல் முறையாக பெண் நாய்க்கு, கால்நடை <உதவி டாக்டர், ஸ்டாலின் வேதமாணிக்கம், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ராமு ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து, 45 நிமிடம் கருத்தடை ஆபரேஷன் செய்தனர். அடுத்த ஒரு மணிநேரத்தில் நாயை, "டிஸ்சார்ஜ்' செய்து, தம்பதி இருவரும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

கரையான் .

1 கருத்து:

  1. என்ன...கரையான்,
    காக்கா கொத்தி ஆபெரேசன் நாபகமிருக்கிறதா?

    பாய்

    பதிலளிநீக்கு