சனி, நவம்பர் 28, 2009

பொம்பளைங்க என்னத்ததான் அவ்வளவு நேரம் பேசுவாங்களோ தெரியாது, அவங்களுக்கு மட்டும் மணிக்கணக்குல உக்காந்து பேச அப்படி என்னதான் இருக்குனு தெரியல. பக்ரித் விடுமுறைல தமிழ் நண்பர்கள் சிலர் வந்தாங்க, ஆண்களா தனியாக உட்காந்து கதை அளந்து கொண்டிருந்தோம், கொஞ்சம் நேரம் தான் பேச முடிந்தது, அதற்கு பின் என்னமோ பேச ஒண்ணுமே இல்லாதது போல் போராட்டித்து விட்டது. ஆனால் பெண்கள் பேசினார்கள் பேசினார்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்தவுடன்(கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரம் கழித்து) இப்பதான் பேச ஆரம்பித்தோம் அதுக்குள் கிளம்ப சொல்றீங்களே என்று அலுத்து கொண்டு கிளம்பினார்கள். இது கூட பரவாயில்லை, என்னுடைய பக்கத்து வீட்டு சூடான் நாட்டுக்காரன் அவன் குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கொடுத்தான், நான் என் குடும்பத்துடன் சென்று விருந்தை சிறப்பிக்க சென்றேன், அங்கு என் மனைவி ஒரு சூடானி மற்றும் ஒரு எகிப்திய பெண்ணுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கதை அளந்து கொண்டிருந்தாள். இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா , விஷயம் என்ன வென்றால் என் மனைவிக்கு அரபி சுத்தமாக வராது, அந்த பெண்களுக்கு அரபி தவிர எந்த மொழியும் கொஞ்சமும் தெரியாது.

கரையான்.







TO ALL " ID MUBARAK"

கரையான்.

திங்கள், நவம்பர் 23, 2009

தமிழுக்கு அமுது என்ற பேர்

அந்ததமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம். வாழ்க ,வளமுடன் வாழ்க தமிழ்!
Doctor -- Vaidyanathan Dentist -- Pallavan Lawyer -- Kesavan North Indian Lawyer -- Panjabakesan Financier -- Dhanasekaran Cardiologist -- Irudhayaraj Pediatrist -- Kuzhandaisamy Psychiatrist -- Mano Sex Therapist -- Kamadevan Marriage Counselor -- Kalyanasundaram Ophthalmologist --Kannayiram ENT Specialist -- Neelakandan Diabetologist -- Sakkarapani Nutritionist -- Arogyasamy Hypnotist -- Sokkalingam Mentalist -- Budhisikamani Exorcist -- Maatruboodham Magician -- Mayandi Builder -- Sengalvarayan Painter -- Chitraguptan Meteorologist -- Kaarmegam Agriculturist -- Pachaiyappan Horticulturist -- Pushpavanam Landscaper -- Bhuminathan Barber -- Kondaiappan Beggar -- Pichai Bartender -- Madhusudhan Alcoholic -- Kallapiraan Exhibitionist -- Ambalavaanan Fiction writer -- Naavalan Makeup Man -- Singaram Milk Man -- Paul Raj Dairy Farmer -- Pasupathi Dog Groomer -- Naayagan Snake Charmer -- Nagamurthi Mountain Climber -- Yezhumalai Javelin Thrower -- Velayudam Polevaulter -- Thaandavarayan Weight Lifter -- Balaraman Sumo Wrestler -- Gundu Rao Karate Expert -- Kailaasam Kick Boxer -- Ethiraj Batsman -- Dhandiappan Bowler -- Balaji Spin Bowler -- Thirupathi Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy Attentive Driver -- பார்த்தசாரதி

அன்புடன்,
பாய்.

ஞாயிறு, நவம்பர் 22, 2009

வான்கோழி வாரம் விடுமுறை..

இந்த வாரம் எங்கள் ஊரில் நன்றி விடுமுறை. எல்லோரும் வான்கோழி செய்து சாப்பிடுவார்கள். என்னக்கு வான்கோழி கரி கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் அத்துடன் நச்ச உருளைகிழங்கும், கிரான்பெரி சாஸ் நல்ல ருசியாக இருக்கும். இந்த ஒரு நாள் எல்லா மக்கள்ழும் தங்கள் இன ஜன பந்துக்களோடு சேர்ந்து சாப்பிட்டு டிவி இல் கேம்ஸ் பார்த்து கொண்டாடுவார்கள். நாங்கள் வருஷந்தோறும் எங்கள் நாதுனார் மற்றும் சகல இனதொரோடு கூட சேர்ந்து சாபிடோவோம்; ஆனால் இந்த ஆண்டு எங்கள் அத்தைக்கு வயசு ஆகிவிட்டதால் ஹோடேலில் சாபிடபோகிறோம். பின்னர் வீட்டுக்கு வந்து எல்லோரும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிட அதை வீட்டிற்கு செல்கிறோம். நான் ஓஹியோ வில் இருக்கும் போது ஒரும் முறை நமது தேசி வாத்தியார் வீட்டிற்கு இந்த தன்க்ச்கிவிங் சாப்பாடு சாப்பிட சென்றேன். அவர் மனைவி (அயிர்) சைவம் ஆகிலும் அவர்கள் அசைவ உன்னவு சாப்பிடுவதை பொருத்தி கொழ்வார். அன்றைக்கு வான்கோழியும், சகல் வித பண்டங்களும் சாப்பிட்ட பிறகு அவர் மனைவியின் சொந்தக்காரர் பக்கத்து ஊரில் இருந்து வருவதாக தொலைபேசியில் செய்தி வந்தது. அவர்களும் ஐயர் சைவ ஆசாமிகள். ஆகையால் வாத்தியாரின் மனைவி அய்யய்யோ உடனே எல்லா மாமிசமான சாபட்டுகளையும் தூக்கி போடவேண்டும் என்று எங்களை அவசரிபடிதானர்கள். வீட்டில் மெழுகுவர்த்தி கொழுத்தி வான்கோழி நாற்றம் எப்படியாவது போய்விடும் என்று நம்பிக்கையோடு சமையல் அறை முழுவதையும் சுத்தம் செய்தார்கள். வாத்தியார் பயந்து நீ மீதியிருக்கும் வான்கோழியை தயவு செய்து எடுத்துகொண்டு போ என்று என்னிடம் சொன்னார். நானும் அதை வீட்டிற்கு எடுதொகொண்டு சென்றேன். வாங்கோழியில் ஒரு மசாலை கிடையாது; சப்பென்று இருந்ததால் நான் அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு அரிது எப்படியாவது அதை மாற்றி சாபிடலாம் என்று நினைத்தேன். ஆனால் என்ன செய்தாலும் நாற்றம் வீடு முழுதும் பக்கத்து தெரு வரைக்கும் சென்று விட்டது. அந்த நாளில் இருந்து வான்கோழியை கண்டால் பேஜார்!
எல்லோருக்கும் எங்கள் தன்க்ச்கிவிங் வாழ்த்துக்கள்...
குஜிலி.

ஞாயிறு, நவம்பர் 15, 2009

நமது வாத்தியார்கள்

முதல் ட்ட்ரிமேச்டேர் :
ஆங்கிலம் - சிவமோகன்
வேதியியல் -சுப்ரமணியம்
தாவரவியல் -ராஜலக்ஷ்மி
புள்ளியியல் -ராதாகிருஷ்ணன்
உயிர்வேதியியல் -முஸ்தாக் அஹ்மத்
இயற்பியல் -சீனிவாசன்
எல்.பீ.எம்.- விஸ்வநாதன்
உங்களது கருத்துக்களை எழுதவும்.
பாய்.

வயதாகினாலும் பழைய கேலி கிண்டல்கள் குறையாமல் நண்பர்களுடன் பேசுவது ஒரு தனி சுகம்தான் . என்ன இப்போது உள்ள ஒரே வித்தியாசம் எல்லை மீறாமல் கேலி கிண்டல்கள் இருக்க வேண்டும் , ஏனென்றால் மனைவிகள் குழந்தைகள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது .கணேச பாண்டியனை நான் இந்த பிக்னிக் இக்கிற்கு அழைத்தவுடன் அவன் எனக்கு போட்ட முதல் கண்டிஷன் அவனுடைய உருவத்தை பற்றி நான் ஏதும் கமென்ட் அடிக்க கூடாது என்பதுதான். அவனை என்னுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள அழைத்த போது அவனுடைய வயிற்றை இறுக்கி தொப்பை தெரியாமல் இருக்க மிகவும் கஷ்டபட்டான்.
கரையான்.

சனி, நவம்பர் 14, 2009










சென்னை விஜயத்தின் போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சந்திப்புகள் நம் மக்களுக்காக







செவ்வாய், நவம்பர் 10, 2009

நண்பர்கள் சந்திப்பில் சில பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர்ந்துக்கப்பட்டது. பலது இங்கே எழுத முடியாது, வெளிப்படுத்த முடிந்த சிலவற்றை எழுதுகிறேன்...
நம்ம பாண்டு மனோகரன் டைரி சயின்ஸ் வகுப்பில் செய்த காமெடியை பாய் போட்டு உடைத்தார். Dairy Microbiology நமக்கு டாக்டர் நரசிம்மன் எடுத்தார். அந்த சுப்ஜெக்ட் இன் இறுதி தேர்வில் எல்லோருக்கும் கேள்வித்தாள்கள் கொடுத்தார், பாண்டுக்கு மட்டும் கேள்வித்தாள் மாறி கொடுக்கப்பட்டு விட்டது, அதாவது அடுத்த trimester க்கான Dairy Technology question paper தவறுதலாக கொடுக்கப்பட்டு விட்டது. கேள்வித்தாள் பார்த்த பாண்டும் அதில் இருந்த பால் கோவா செய்வது எப்படி, சீஸ் செய்வது எப்படி என பல் கேள்விகளுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் ஏதோ எழுதி வைத்தான். முழுதாக மூணு மணி நேரம் எழுதி தள்ளி விட்டுதான் பரீட்சை ஹால் விட்டு வெளியில் வந்தான். மற்ற நண்பர்களுடன் பேசும்போதுதான் தவறை உணர்ந்தான், நரசிம்மனிடம் சென்று அது பற்றி கூறினான், நரசிம்மனும் தவறை உணர்ந்து அவனுக்கு மறு பரீட்சை வைத்தார்.
எப்படிடா ஒன்றும் படிக்காமல் அவ்வளவு நேரம் எழுதினாய் என்று பான்டிடம் கேட்டால் "கோவா செய்யறது, தயிர் செய்யறது எல்லாம் நாம வீட்ல பாக்காததா? அத்தான் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதினேன் அதுக்குதான் இவ்வளவு டைம் ஆயிடிச்சி" என்று சொல்லி அசத்தினான்.
கரையான்.




















சில காட்சிகள்






திங்கள், நவம்பர் 09, 2009

ரொம்ப நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. அவரவர் தம் தம் வேலைகளில் கொஞ்சம் பிசியாகி விட்டதால் எழுத முடிய வில்லை. இன்று முதல் தொடங்குவோம்.

விடுமுறையில் சென்னை சென்றிருந்த பொது ஒரு குட்டி get-to-gether நம்ம மக்கள் அப்படியேதான் இருக்காங்க, உருவம் மட்டும்தான் மாறியுள்ளது உள்ளம் அப்படியேதான் இருக்கு. Beverly Bar ல சாயந்திரம் ஏழு மணிக்கு சந்திக்கலாம்டான்னு சொன்னால், பாண்டு மனோகரன் சாயந்திரம் ஆறு மணிக்கே பாருக்கு வெளியில நின்னுக்கிட்டு எப்பட எல்லாம் வருவீங்க என்று போன் மேல போனா போட்டு தள்ளுரான், ரமேஷ் முக்கியமான கல்யாணத்துக்கு போகனும்டா, வந்து தலைய மட்டும் காட்டிட்டு போயிடுவேன் இருக்க சொல்லி கம்பெல் பண்ணக்கூடாது என்று பந்தா விட்டவன் நைட்டு பன்னெண்டு மணிக்கு பாரு முடியதுக்கு அப்புறம்தான் சீட்டை விட்டு எழுந்தான் . நம்ம பாண்டியன் நான் டயத்துல இருக்கேன் பாத்துக்க கொஞ்சமாதான் drinks எடுத்துக்குவேன், ரொம்பல்லாம் குடிக்க முடியாது என்று பந்தா விட்டவன் நாலு பாட்டில் பீர் உள்ளே போன பின்னாலும் அவ்வளவுதானா என்பது போல் அலுத்துக்கொண்டான், பாண்டியா இதுதான் உன்னுடைய dieting ஆ எப்பா சாமி தாங்காதுடா என்று அலற வைத்து விட்டான்.(டயட் ல இல்லையென்றால் எத்தன பாட்டில் உள்ள போய் இருக்குமோ), TP அடுத்த ரவுண்டுக்கு ரிபீட் சொல்ல சொல்ல எனக்கு கொஞ்சம் பயம்தான், அவனுக்கு உள்ள போன வேகத்துல திரும்ப எல்லாம் வெளியில வந்திடுமே என்ற கவலை எனக்கு நான்தானே அவன் பக்கத்திலே உட்காந்திருக்கேன். உழவர் பயிற்சி முகாம் இருக்கு மச்சி நான் வர்றது கொஞ்சம் கஷ்டம்டா என்று பந்தா விட்ட குமாரவேலு மதியம் மூணு மணிக்கெல்லாம் போன் செய்து "உனக்காக உழவர் பயிற்சிய அப்பறம் பாத்துக்கலாம்னு ஒத்தி போட்டுட்டேண்டா வருஷத்துக்கு ஒருமுறை வர்றே இது கூட செய்யலன்ன எப்படி"

ஐயா சாமி என்னால நம்ம நாட்டோட விவசாய முன்னேற்றம் பாதிக்க வேண்டாம் நீ வேணும்னா வேலைய பாரு " என்றேன் நான்.

பாய் "டேய் நான் நெல்லைய புடிக்கணும் ஏழு மணிக்கெல்லாம் எக்மோருக்கு கெளம்பிடுவேன் என்ன சீக்கிரம் வுட்டுடுங்கடா என்று பந்தா விட்டு வந்து மாம்பழ ஜூஸ் குடிச்சு கெளம்பிட்டாரு நெல்லை சீமைய புடிக்க. டேய் வீட்டுக்கு போகணும் ரெண்டு ரவுண்டுதான் அதுக்கு மேல முடியாது என்று கூறிவிட்டு என்னடா நாலு ரௌண்டுதானா என்று கூறி பார விட்டு எழுந்திரிக்க மனம் இல்லாமல் வந்தான் பாண்டு. சேவியர் தொழிலதிபர் கெட் அப்புல வந்து கொஞ்சமா பெப்சி மட்டும் குடிச்சிட்டு கோழி விக்கிற தொழில ரகசியத்த எல்லாம் போட்டு உடைச்சான், பழைய கதையெல்லாம் பேசி சிரிச்சு பார கலக்கிட்டு அவுங்க அவுங்க வீட்டுக்கு நல்ல புள்ளையா அஜந்தா பாக்கு போட்டு நாத்தத்தை மறக்கரதா நினச்சு போனால் பொண்டாட்டி சிரிக்கிறா "இன்னைக்கி தண்ணியா "

எப்படி கண்டிபுடிச்ச நான்தான் நாத்தம் வராம இருக்க பாக்கெல்லாம் போட்டிருக்கேனே."தண்ணி அடிக்கிற அன்னைக்கிதானே பாக்கு போடுவே அது கூடவா எனக்கு தெரியாது."

கரையான்.