சனி, நவம்பர் 28, 2009

பொம்பளைங்க என்னத்ததான் அவ்வளவு நேரம் பேசுவாங்களோ தெரியாது, அவங்களுக்கு மட்டும் மணிக்கணக்குல உக்காந்து பேச அப்படி என்னதான் இருக்குனு தெரியல. பக்ரித் விடுமுறைல தமிழ் நண்பர்கள் சிலர் வந்தாங்க, ஆண்களா தனியாக உட்காந்து கதை அளந்து கொண்டிருந்தோம், கொஞ்சம் நேரம் தான் பேச முடிந்தது, அதற்கு பின் என்னமோ பேச ஒண்ணுமே இல்லாதது போல் போராட்டித்து விட்டது. ஆனால் பெண்கள் பேசினார்கள் பேசினார்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்தவுடன்(கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரம் கழித்து) இப்பதான் பேச ஆரம்பித்தோம் அதுக்குள் கிளம்ப சொல்றீங்களே என்று அலுத்து கொண்டு கிளம்பினார்கள். இது கூட பரவாயில்லை, என்னுடைய பக்கத்து வீட்டு சூடான் நாட்டுக்காரன் அவன் குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கொடுத்தான், நான் என் குடும்பத்துடன் சென்று விருந்தை சிறப்பிக்க சென்றேன், அங்கு என் மனைவி ஒரு சூடானி மற்றும் ஒரு எகிப்திய பெண்ணுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கதை அளந்து கொண்டிருந்தாள். இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா , விஷயம் என்ன வென்றால் என் மனைவிக்கு அரபி சுத்தமாக வராது, அந்த பெண்களுக்கு அரபி தவிர எந்த மொழியும் கொஞ்சமும் தெரியாது.

கரையான்.

3 கருத்துகள்:

  1. I have to say that it is pretty amazing to carry on a conversation without knowing the language. However I have to state there is the "woman to woman sisterhood" spiritual connection, which helps one to converse and still make themselves understandable. I can totally relate to this with many international students who could not speak english well but still we were able to figure out..
    Gujili

    பதிலளிநீக்கு