செவ்வாய், நவம்பர் 10, 2009

நண்பர்கள் சந்திப்பில் சில பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர்ந்துக்கப்பட்டது. பலது இங்கே எழுத முடியாது, வெளிப்படுத்த முடிந்த சிலவற்றை எழுதுகிறேன்...
நம்ம பாண்டு மனோகரன் டைரி சயின்ஸ் வகுப்பில் செய்த காமெடியை பாய் போட்டு உடைத்தார். Dairy Microbiology நமக்கு டாக்டர் நரசிம்மன் எடுத்தார். அந்த சுப்ஜெக்ட் இன் இறுதி தேர்வில் எல்லோருக்கும் கேள்வித்தாள்கள் கொடுத்தார், பாண்டுக்கு மட்டும் கேள்வித்தாள் மாறி கொடுக்கப்பட்டு விட்டது, அதாவது அடுத்த trimester க்கான Dairy Technology question paper தவறுதலாக கொடுக்கப்பட்டு விட்டது. கேள்வித்தாள் பார்த்த பாண்டும் அதில் இருந்த பால் கோவா செய்வது எப்படி, சீஸ் செய்வது எப்படி என பல் கேள்விகளுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் ஏதோ எழுதி வைத்தான். முழுதாக மூணு மணி நேரம் எழுதி தள்ளி விட்டுதான் பரீட்சை ஹால் விட்டு வெளியில் வந்தான். மற்ற நண்பர்களுடன் பேசும்போதுதான் தவறை உணர்ந்தான், நரசிம்மனிடம் சென்று அது பற்றி கூறினான், நரசிம்மனும் தவறை உணர்ந்து அவனுக்கு மறு பரீட்சை வைத்தார்.
எப்படிடா ஒன்றும் படிக்காமல் அவ்வளவு நேரம் எழுதினாய் என்று பான்டிடம் கேட்டால் "கோவா செய்யறது, தயிர் செய்யறது எல்லாம் நாம வீட்ல பாக்காததா? அத்தான் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதினேன் அதுக்குதான் இவ்வளவு டைம் ஆயிடிச்சி" என்று சொல்லி அசத்தினான்.
கரையான்.

2 கருத்துகள்: