ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

FROM FACE BOOK






பாத்ததும் நம்ம பிலாகுல பதிவு பண்ண தோணியதால்
பதிவு செய்கிறேன்.

கரையான்.

MY NEW CAR


புது கார்  வந்தா எல்லாம் சந்தோஷமா சுத்துவாங்கன்னு பேரு ஆனா அந்த காரால் எரிச்சல் அடையும் சம்பவங்கள் ஏற்பட்டால் கஷ்டம்தான்.  என்னோட முதலாளி நான் சிறிய காரில்  ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்க செல்லும்போது மணல் பாங்கான இடங்களில் சிக்கி கொண்டு நிற்பதை பார்த்து four wheel drive தான் சரிப்பட்டு வரும் என்று கூறி இந்த TOYOTA PRADO LAND CRUISER -ஐ கொடுத்தார். இது வந்த நாள் முதல் சுற்றி இருப்பவர் வயித்தெரிச்சல்  போதாது என்று சில நகைச்சுவையான சம்பவங்களும் நடந்து கொண்டு இருக்கின்றது. ஆயிரம் கிலோ மீட்டர் ஒட்டி விட்டதால் சர்வீஸ் செய்ய சர்வீஸ் ஸ்டேஷன் சென்றேன். அங்கு எனக்கு முன்னாள் ஒரு சவுதி காரர் காத்திருந்தார், அவர் கார் அருகில் என் காரை நிறுத்தினேன், அவருடையது 2010 மாடல், என்னிடம் என்னுடைய கார் பற்றி பேச்சு கொடுத்தார் , ஸ்மூத் ஆக  உள்ளதா, ஓட்டும்போது வசதியாக உள்ளதா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தவர் என்னைபற்றி கேட்க ஆரம்பித்தார், எத்தனை வருடமாக வேலை செய்கிறாய், திருமணம் ஆகி விட்டதா, எத்தனை மனைவி, எத்தனை குழந்தை என கேட்டு கொண்டே வந்தவர், எவ்வளவு சம்பளம் என்று கேட்டார், என்னுடைய சம்பளத்தை சொன்னேன், கடுப்பாகி விட்டார், "என்ன பொய் சொல்கிறாயா , என்னை என்ன முட்டாள் என்று நினைத்து விட்டாயா? HOUSE DRIVER -க்கு இவ்வளவு சம்பளம் யார் கொடுப்பார்கள்" என்றார், அவர் இது வரை என்னை ஓட்டுனர் என்று நினைத்து கொண்டிருந்திருக்கிறார், பின்னர் அவரிடம் என் பணி பற்றியும் என் முதலாளி பற்றியும் விளக்கினேன், இருந்தாலும் அவருக்கு மனம் ஆறவே இல்லை, அத்துடன் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்த நாட்டு காரன்தான்  வெறுப்பேதுரான் என்றால் நம்ம ஆட்களும் அப்படிதான், இன்று ஒரு sports shop சென்றேன் shorts ஒன்று எடுக்க வேண்டி இருந்தது. செலக்ட் செய்தவுடன்  ஹைதராபாத் -ஐ சேர்ந்த சேல்ஸ்மானிடம் எவ்வளவு என்று கேட்டேன், அவர் எங்கே உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று கேட்டார், நான் செல்லும் உடற்பயிற்சி கூடத்தின் பெயரை சொன்னேன், உடனே அது ரொம்ப செலவாகுமே என்றார், ஆமாம் என்றேன்  , உடனே அவர் எப்படி நீங்கள் house driver -ஆக வேலை செய்து கொண்டு இவ்வளவு செலவு செய்ய முடிகிறது என்றார், நான் டிரைவராக வேலை செய்கிறேன் என்று எப்படி  முடிவு செய்தீர்கள் என்று கேட்டேன், "நீங்க ஒட்டி வந்த வண்டியை வைத்துதான் " என்றார். அவருக்கும் விளக்கி விட்டு வந்தேன். ஆக சவுதியில எந்த வேலை செய்தாலும் இந்தியனாக இருந்தால் ஒரு பழைய டொயோடா கிரேசிடாவோ, புதிதாக இருந்தால் hyundai accent மாதிரியான கார்தான் ஓட்ட வேண்டும் போல.
( நல்ல வேலையாக என் மனைவி என்னுடன் வர வில்லை. வந்திருந்தால் "இங்க பாரு HOUSE டிரைவர்  ,  SERVANT MAID- ஐ கூப்பிட்டு கொண்டு ஊர் சுத்துறான்" என்று கூறி இருப்பார்கள்)

கரையான்.

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

ஏன் நம்மால் முடியாது..



 http://www.youtube.com/watch?v=AkeQ553vuw0

இந்த  பதிவு மனதை கவர்ந்ததால் இங்கு பதிந்திருக்கிறேன். நாமும் ஏன் இதை செய்ய முடியாது.

கரையான் 

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

Thathavin Parisu

My father was a multiple gold medallist in his PhD. I think he got five medals. This time he gave his gold medal to Neal as a gift. I think that was the most wonderful thing for Neal to have and hopefully he will follow in his grandfather's footsteps.
GFK

உளறல்கள்

குழந்தைகளின் முதல் ஹீரோ அப்பா முதல் காதல் அம்மா.  சினிமாவுடைய தாக்கமோ அல்லது இன்டர்நெட், டிவி சானேல்களின் தாக்கமோ தெரிய வில்லை பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தந்தைக்கு சிக்ஸ் பாக் உடல் கட்டும் எல்லா விளையாட்டுகளும் விளையாட தெரிந்து இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் வேலை நெருக்கடிகளினாலும் நேரமின்மையினாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. இருபத்திநான்கு மணி நேரமும் ஓடி உழைத்து குழந்தைகளுக்காக பணம் சொத்து சேர்க்க தயாராக இருக்கும்  நம்மால் தினமும் ஒரு மணி நேரம் அவர்களுடன் விளையாட செலவிட முடிவதில்லை என்பது வினோதமே.  கிரிக்கெட் கோச்சிங், கராட்டே கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், என பணத்தை வாரி இறைத்து சேர்த்து விட தயார் ஆனால் ஒரு அரை மணி நேரம் அவர்களுடன் ஆடிப்பாட நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருக்கிறோம். கொடுமை என்ன வென்றால் நம்மால் மேலும் ஓடி சம்பாதிக்க முடியாத முதுமை வந்து குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட நினைக்கும்போது அவர்கள் வளர்ந்து தங்கள் வாழ்க்கையில் பிசியாகி விடுவார்கள். அவர்களால் நம்முடன் நேரம் செலவிட முடியாது. கால சக்கரத்தின் கொடுமையான முகம் இது.

கரையான்.

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

GFK's Ramblings-My love letter to MVC

When I read Karaiyan's ularalgal, I had an urge to start my own rambling. I guess it is part of the vayasu kolaaru. When life is going on at its own speed and things are happening to you and your body and your family, you want to go back to a safe and happy place in your memory lane and reside there till you feel recharged and rejuvenated. Part of all this effort is the blogs, reunions, posting pictures and generally staying in touch with the friends of your youth.
My little box of memories is always set  in MVC during our college days. I feel every stone, every building, chair, desks, teachers, ancillary staff including the gate man conspired to make it the most wonderful part of our life. Don't get me wrong,  we have had many other momentous events in our life like marriage, giving birth to a child, building a home etc but none of these can compare to this little part of our life which is so precious to me even now.

The different emotions I experienced here from extreme happiness on a good grade or a good comment from a peer or the terror of not knowing the answer to a question in an important test. Then making up some rubbish answer as you pray to every God so that you don't get caught. The mischief making as a group, thinking we know better than our professors as they look on us with pity and envy, since they have had their share of fun in their youth.

My close friends who were my pillars and foundation on which I existed, who supported my cockiness and even arrogance that youth endows on us. There was pure love between us which has been tested over time and always come out shining than ever. These are the gifts that life bestowed on us without our asking or expectation. But I do pray that my son experiences something like what all of us did in Madras Veterinary College. The buildings may have changed, the people might have left but my sincerest hope is that the nurturing atmosphere still exists where a student feels they can conquer the world thanks to the experiences we gained in this beautiful institution.

GFK

வாழ்த்துக்கள்

அது... சென்னையிலிருக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாம் பட்டமளிப்பு விழா. தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, மாணவர்கள், பெற்றோர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று, அடைமழை பெய்த மாதிரி விடாமல் கை தட்டியது... ஜெ.சி. ஜெபா ரோஸ் ஜெனிஃபருக்கு! 27 தங்க மெடல்கள், சான்றிதழ்கள் என தூக்க முடியாமல் அவர் தூக்கியது... ஆச்சர்ய அழகு!
இந்த ஆண்டு பிரமாண்ட வெற்றியுடன் கால்நடை மருத்துவம் முடித்துள்ள ஜெனிஃபருக்கு வாழ்த்துக்கள் சொன்னோம்!
''மத்தவங்க விருப்பத்துக்காக படிப்பைத் தேர்ந்தெடுக்காம, என் மனசுக்குப் பிடிச்சதை தேர்ந்தெடுத்துப் படிச்சதாலதான் எனக்கு இன்னிக்கு இந்த சந்தோஷம் சாத்தியமாகி இருக்கு!''
- விரியும் புன்னகையுடன் ஆரம்பித்தார் ஜெனிஃபர்.
''சின்ன வயசுல இருந்தே நாய், பூனை, முயல், கிளினு பெட் அனிமல்ஸ் மேல பிரியம் அதிகம். என் சித்தப்பா சாமுவேல்ராஜ், வெட்ரினரி டாக்டர். எந்நேரமும் ஏதாவது ஒரு பிராணியோட பொழுதைக் கழிக்கிற அவரை வேடிக்கை பார்க்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். விலங்குகள் உலகத்தோட சுவாரஸ்ய விஷயங்கள அவர் சொல்லிட்டே இருப்பார். 'சந்தோஷம், துக்கம், ஆதங்கம், கோபம்னு நம்மளோட மனநிலையை மனிதர்களைவிட, நாம வளர்க்கிற வாயில்லா ஜீவன்கள் நல்லா புரிஞ்சுக்கும்’னு சொல்வார். அதுபோலவே, நான் ஏதாவது சோகமா இருந்தா... அவர் வீட்டு அல்சேஷன் டாக், என் காலை காலைச் சுற்றி வந்து வாடிப்போன என் முகம் பார்த்து தவிக்கிறதை பார்க்கிறப்போ, ஆச்சர்யமா இருக்கும்.
இன்னொரு பக்கம், தெருவுல திரியற நாயில் இருந்து, கோவில் யானை வரை, 'அதுங்க என்ன டாக்டர் ஃபீஸா கொடுக்கப் போகுதுங்க?’னு நினைக்காம, கைக்குழந்தைக்குப் பார்க்கற மாதிரி ட்ரீட்மென்ட் கொடுக்குற சித்தப்பாவோட அர்ப்பணிப்பும் என்னை ஈர்த்தது. ஆனா, 'இப்படித்தான் நாமும் ஆகணும்’னு முடிவெடுக்குற முதிர்ச்சி அப்போ எனக்கு இல்ல'' என்றவருக்கு, அந்த முடிவை கைகளில் தந்திருக்கிறது ஒரு புத்தகம்.
''ப்ளஸ் டூ படிச்சப்போ... ஸ்கூல் லைப்ரரியில ஜேம்ஸ் ஹரிடாட் எழுதின 'ஆல் திங்ஸ் பிரைட் அண்டு பியூட்டிஃபுல்’ங்கற புத்தகத்தைப் படிச்சேன். விலங்குகளோட வாழ்க்கை முறைகளை அழகா செதுக்கி எழுதியிருந்த அந்தப் புத்தகத்தோட கடைசிப் பக்கத்தைப் படிச்சு முடிச்சப்போ... 'நாம படிக்கப் போறது வெட்ரினரி மருத்துவத் துறை'னு முடிவெடுத்தேன். ப்ளஸ் டூ-ல 1,090 மார்க் வாங்கினேன். அப்பாவும், அம்மாவும் 'அந்த கோர்ஸ் படிச்சா... உடனே வேலை கிடைக்கும்’, 'இந்த கோர்ஸ் படிச்சா... நல்ல சம்பளம்’னு இழுக்காம, என் தேடலுக்கும் விருப்பத்துக்கும் பலமா இருந்தாங்க'' என்றபோது, ஜெனிஃபரின் குரலில் பெருமிதம்.
''கோயம்புத்தூர் பொண்ணு நான். சென்னையில் வந்து காலேஜ்ல சேர்ந்தப்போ, ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. ஆனா... நண்பர்களும், பேராசிரியர்களும் என் உலகத்தை இன்னும் ஆக்கப்பூர்வமா, அர்த்தமுள்ளதா ஆக்கினாங்க. கோல்ட் மெடல் வாங்கணும்னு எல்லாம் எந்த இலக்கும் நிர்ணயிச்சு படிக்கல. என் மனசுக்கு திருப்தியா படிச்சேன். கல்லூரி நேரம் போக, மீதி நேரமெல்லாம் லைப்ரரியே கதியா கிடப்பேன். சிலபஸ் பாடங்களைத் தவிர, நிறைய ஆய்வுப் புத்தகங்களைத் தேடிப் படிப்பேன். அதெல்லாம் மதிப்பெண்களுக்காக இல்ல. இந்த ஃபீல்டுல எனக்கு இருக்கிற ஆர்வத்தினால. கூடு கட்டறதுக்காக குருவி சிறுகச் சிறுக நார் சேர்க்கறது மாதிரிதான் நானும் என் விலங்கியல் அறிவை வளர்த்துக்கிட்டேன். அதுக்கான அங்கீகாரம்தான் இந்த பதக்கங்கள்'' என்பவரின் அடுத்த இலக்கு, அடுத்த உயரம்...
''உத்தரபிரதேசம், பைரேலியில் உள்ள 'இந்தியன் வெட்ரினரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ல (M.V.Sc)படிக்கப் போறேன். கேன்சருக்கான மருந்தை விலங்கில் இருந்து கண்டுபிடிக்கணும்கிறதுதான் லட்சியம். இன்னிக்கு போலவே,  இன்னும் ஒரு நாள் என் அப்பாவும், அம்மாவும் எனக்காக பெருமைப்படுவாங்க! '23 வயசு ஆச்சு... கல்யாணம் பண்ணிக்கோ’, 'வெளி மாநிலத்துக்கு போய் படிக்க வேண்டாம்’னு எந்த தடையும் இல்லாமப் பார்த்துக்குற அவங்களுக்கு நான் தர்ற ரிட்டர்ன் அதுதான்!'' என்றவர், தன் பெற்றோரின் முகம் பார்க்கிறார்.
''ஜெனிஃபர் வாங்கின சர்டிஃபிகேட்டை எல்லாம் சேர்த்துத் தூக்க முடியாம நிக்கிறோம். இந்தச் சுமை எங்களுக்கு எவ்வளவு பெரிய சுகம் என்பதை வார்த்தைகள்ல சொல்லத் தெரியல!'' என்று ஜெனிஃபரின் அம்மா ஜாஸ்மின் களிப்பில் திணற, மகளை பெருமிதம் பொங்க தோள்களில் தட்டுகிறார் அப்பா ஜேசுதாஸ் !
[ Top ]  கரையான்....

கவிஞர் சொக்கன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்







சொக்கா உன்னோட நூறாவது பிறந்த நாள இதே மாதிரி கொண்டாடனும்....

சென்னை நட்சத்திரங்கள்....

உளறல்கள் தொடர்ச்சி ...

    GFK அவர்களின் ஆலோசனை கண்டிப்பாக நம் நண்பர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.  Baby aspirin dose பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
    உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் சோம்பேறித்தனம்தான், அது மட்டும் அல்லாமல் நம்மீதான சுய பச்சாதாபம்(self pity???) என்று கூட சொல்லலாம், நான் ஓய்வொழிச்சல் இல்லாமல் கஷ்டப்பட்டு பணி புரிகிறேன் உடற்பயிற்சி செய்ய எனக்கேது நேரம் என்று நம்மைப்பற்றி நாமே பரிதாபப்பட்டு உடலை கெடுத்து கொள்கிறோம். மேலும் நாம் கொஞ்சம் அசந்தாலும் நமக்கு கீழே இருப்பவர் மேலே வந்து விடுவாரே என்ற கவலையும் ஒரு புறம் வந்து விடுமுறை நாளில் கூட ஓய்வெடுக்காமல் பணி புரிய வைத்து எரிகிற  தீயில் எண்ணெய்  விடுவது போல் ஆகி விடுகிறது.  வேலை வேலை என்று உழல்வதால் நம் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட அன்னியப்பட்டு போய் இருப்பதை சமீபத்தில் கண்டேன், நம் வகுப்பு தோழர்கள் நாமக்கல்லில் குறைந்தது பத்து பேராவது இருக்கிறார்கள், அவர்களுக்குள் தொடர்பே இல்லாமல் இருப்பது கொடுமை, நம் தோழி ஒருவர் நம் வகுப்பு தோழர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துள்ளார், தோழர் மிக பார்மலாக "சொல்லுங்க மேடம்" என்று பேசியுள்ளார். நம் நண்பர்களுக்குல்லேயே  எவ்வளவு அன்னியப்பட்டு போய்  இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்தான்.
   நான் ஒவ்வொரு முறையும் சென்னை விஜயம் செய்யும்போதும் நம் நண்பர்கள் குமாரவேல், மனோகரன், பாண்டியன்,நான்,பாய்  எங்கள் குடும்பத்தினருடன் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்து கொள்வது உண்டு. இதைப்போல சந்தித்து கொள்வது எனக்கு மன புத்துணர்ச்சி அளிப்பதாக உணர்கிறேன். குழந்தைகளுடன் குழந்தைகளாக பேசி சிரித்து விளையாடும் போது ஏற்படும் சுகம் அனுபவித்து பார்த்தவருக்கே தெரியும் அதன் அருமை.
   சொல்வது சுலபம், உனக்கென்ன உன் வேலை அப்படி, உடற்பயிற்சி செய்வதற்கு வசதிகள் இருக்கிறது என்று கூறலாம், நான் உடற்பயிற்சி செய்ய என்  இடத்திலிருந்து கிட்ட தட்ட முப்பது கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்,அதாவது ஒரு நாளுக்கு அறுபது கிலோ மீட்டர் , மகிழ்ச்சியாக செய்வதால் என்னால் செய்ய முடிகிறது. நீச்சல் எனக்கு மிக பிடிக்கும் ஒரு விளையாட்டு அதற்காகவே நான் எவ்வளவு தூரம் வேண்டாலும் பயணம் செய்ய தயார் என என் மனதை தயார் படுத்தி கொண்டுள்ளேன். நம் நண்பர்களில் சிலர் தங்கியிருக்கும் apartment களிலேயே உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் என வசதிகள் இருந்தாலும் அதை பயன் படுத்த நேரம் இல்லை என்று காரணம் கூறுகிறார்கள்.

என் உளறல்கள் தொடரும்....

கரையான்.

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

Cardiac Checkup

After reading the shocking news about Shaju I wanted to share a few things with our friends. First of all genetically Indians have very narrow coronary vessels which makes us more prone to cardiac disease and heart attacks. This being said we can do a few extra things as precautions in addition to good diet and exercise as Karaiyan had mentioned. One please start a daily regimen of baby Aspirin. Take it religiously everyday and it will thin your blood and reduce the incidence of atherosclerotic disease. Secondly as a precaution you can do a noninvasive checkup with one of two tests, Calcium scoring or CT angiogram. My husband prefers the second one the CT angiogram and has had it himself. His arteries were clear and they gave us peace of mind. He plans to repeat it once in five years. These are just some ideas for our friends and I want to see all of you live long with your families.
Take care,
GFK
P.S:
Baby Aspirin dosage is 81mg and should be enteric coated and taken once a day. I hope this helps.

வாழ்த்துக்கள்

தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பட்டமளிப்பு விழா, ஆகஸ்ட் 3 அன்று சென்னையில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ரோசய்யா, கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரபாகரன், தேசிய பால் வள ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மற்றும் துணைவேந்தர் அனில்குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இதில் பங்கேற்றனர். பல்கலைக்கழகத் தேர்வுகளில் 27 தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாணவி ஜெபரோஸ் ஜெனிபர், அனைவரின் பாராட்டுதல்களையும் சேர்த்தே அள்ளினார்!
Click To Enlarge

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

உளறல்களின் தொடர்ச்சி .....

நண்பர் பீர் அவர்களுக்கு என்னுடைய இந்த பதிவுகள் சிலருக்கு உளறல்களாக தெரியலாம் அதனால்தான் இந்த தலைப்பு ....
நான் படித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்....

மண்ஆசை, பெண்ஆசை, பொன்ஆசை இவை தான் மனிதனை அடிமைப்படுத்தி ஆட்டுவித்து அழிக்கும் என்பார்கள். ஆனால், இந்த மூன்று ஆசைகளை விடவும் மிகக்கொடியது மதுவின் மீதான ஆசை என்கிறார்கள் மருத்துவர்கள். மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருப்பான். ஆனால், மதுவுக்கு அடிமையாகி, அதில் இருந்து மீளமுடியாமல் இறந்து போவான். வீட்டில் சொக்கவைக்கும் சொரூப சுந்தரியாக மனைவி காத்துக்கிடப்பாள். ஆனால், இவனோ டாஸ்மாக் பாரின் கழிவறையில் வாந்தி எடுத்து மட்டையாகிக் கிடப்பான்.
இனிய இசை, அற்புதமான - அறுசுவையான உணவு, பரவசப்படுத்தும் பாலுறவு... இவை எல்லாவற்றையும் தாண்டி மனிதன் மதுவுக்கு அடிமை ஆவது ஏன்? ஆஸ்தி இழந்து, அந்தஸ்து இழந்து, அவமானங்களைச் சந்தித்து, அப்போதும் மீள முடியாமல் கடைசியில் மதுவுக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிவது ஏன்? 'குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்று பாரிலும் பாட்டிலிலும் படித்த பிறகும்கூட அசராமல் மதுவைக் குடிப்பது ஏன்? இன்றளவும் மருத்துவ உலகம் விவாதித்துவரும், கேள்விகளில் ஒன்று இது. இந்தக் கேள்விக்கான தேடலில்  கிடைத்த விடைகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான் 'எண்டார்பின்ஸ் தியரி’ (Endorphins theory).
மது அடிமைத்தனத்தில் இரு வகையினர் உண்டு. ஒன்று... 'சைக்கலாஜிக்கல் டிபென்டென்ஸ்’ (Psychological dependence).அலுவலக பார்ட்டி என்றோலோ, வெளியூர் போகும்போதே ஆசைக்கு மதுவைத் தொட்டுக் கொள்வார்கள் இவர்கள். மறுநாள் வழக்கம்போல் வேலையில் செட்டில் ஆகிவிடுவார்கள். அன்றைய தினம் மீண்டும் மதுவைப் பற்றி யோசனை இவர்களுக்கு வராது. மது குடிக்காத போதிலும் மனரீதியான, உடல்ரீதியான பாதிப்பு எதுவும் இவர்களுக்கு இருக்காது. ஆனாலும், இவர்களும் மது அடிமைகளே என்கிறது மருத்துவம்!
இன்னொன்று, 'பிசிக்கல் டிபென்டென்ஸ்’(Physical dependence). இவர்கள் அடிமைகள் மட்டும் அல்ல. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்களும்கூட.  மனமும் உடலும் ஒருசேர மிகக்கடுமையாக அடிமை ஆக்கப்பட்டு இருக்கும். நீண்ட காலம் தொடர்ந்து மது குடித்துவிட்டு, ஒரு நாள் மதுவைக் குடிக்காமல் நிறுத்தினாலும் இவர்களால் இயல்பாகவே இருக்க முடியாது. அந்த சமயத்தில் இவர்களை நெருங்குவதே சிரமம். நாய் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது அந்தத் தட்டைப் பிடுங்கினால், அது காட்டும் ஆக்ரோஷத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி எரிந்து விழுவார்கள். அத்தனை நாட்களாக அவர் அருந்திய மதுவின் அளவைப் பொறுத்து, ஒரு கட்டிங்கோ, குவார்ட்டரோ போட்டால்தான் இவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பி, 'ம்ம்... அப்புறம் என்ன... சொல்லுப்பா’ என்று லேசாக இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.
ஆக்ஸிஜனைப் போல் ஆல்கஹாலும் இவர்களுக்கு அத்தியாவசியம் ஆகிவிடும். தினமும் காலை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே வாசலில் காத்திருக்கும் குடிநோயாளிகள் இவர்களே. உண்மையில் பாவம் இவர்கள்... இவர்களிடம் கேட்டால், 'குடிச்சாத்தானே நடுக்கம் நிக்கும். அப்பத்தானே வேலையைப் பார்க்க முடியும்?’ என்பார்கள். உண்மைதான், இவர்களால் குடிக்காமல் வேலைக்குப் போக முடியாது. சம்பாதிக்கவும் முடியாது. எப்படி இவர்கள் மதுவுக்கு அடிமை ஆனார்கள்? அந்த அடிமைத்தனத்தின் ஆணி வேர் எது? அதைச் சொல்வதுதான் 'எண்டார்பின்ஸ் தியரி’.
நாம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது மூளையில் சுரக்கும் ஒரு சுரப்பி 'எண்டார்பின்’. அதாவது, 'நல்லா இருந்தது’ என்பதைத் தாண்டி, 'சான்ஸே இல்லை’ என்று பரவசப்படும்போது அது சுரக்கும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தருணத்தில்... நன்றிப் பெருக்கில் நெக்குருகி வார்த்தைகள் வராமல் நண்பனை அணைக்கையில்... மனதுக்கு மிகவும் பிடித்த இணையுடன் உச்சக்கட்ட செக்ஸில் திளைக்கையில்... இப்படி அற்புதமான தருணங்களில் அமுதசுரபியாக சுரக்கும் 'எண்டார்பின்’. இது மாதிரியான தருணங்களில் உடல் காற்றில் பறப்பது போல் உணர்ந்து, அந்தச் சுகமான செய்தியை மூளைக்கு அனுப்ப, அதை மூளை தனது அழிக்க முடியாத ஹார்டு டிஸ்க்கில் நிரந்தரமாகப் பதிந்து வைக்கும். மேற்கண்ட பரவச வகையறாக்களில் ஒன்றுதான் மது அருந்துவதும். மது அருந்துபவர்களில் சுமார் 40 சதவிகிதம் பேருக்கு மது அருந்தும்போது மூளையில் இது பதிவுசெய்யப்பட்டு விடும். சுமார் 40 சதவிகிதத்தினருக்கு மட்டும் ஏன் என்று கேள்வி எழலாம். அது அவர்களின் மரபு வழிக் காரணமாகவும் இருக்கலாம். உடல் மற்றும் மனோநிலை காரணமாகவும் இருக்கலாம்!  
உடலும் மூளையும் அந்த சுகபோக உணர்வுக்குப் பழகிவிட்ட பட்சத்தில் குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த சுகபோகத்தைத் தேடி மூளை அலையும். 'மணி ஏழாச்சு... சரக்கு எங்கடா... ம்ம்ம் கிளம்பு, கிளம்பு’ என்று மூளை, உடலுக்குக் கட்டளையிட்டு ஏழரையைக் கூட்டும். காலையில் எழுந்தது முதல் மாலை 5 மணி வரை குடிக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருப்பவர்களும்கூட அந்தக் குறிப்பிட்ட நேரம் வந்ததும் வைராக்கியம் இழந்து... தன்னைத்தானே நொந்து... ஏன்? ஒரு சிலர் குடிக்கும்போது குற்ற உணர்வுடன் மண்ணை வாரித் தூற்றாதக் குறையாக மதுவைத் திட்டிக்கொண்டே கண்ணீருடன் குடிப்பதையும் பார்த்து இருப்பீர்கள்.  உடலுக்கு எண்டார்பின் தேவையாக இருக்கிறது. மூளையும் அதற்கு அடிமையாகி விட்டது.
மூளை இப்படிக் கட்டளையிடும்போது குடிநோயாளிக்கு நல்லது கெட்டது தெரியாது. குடித்துவிட்டுப் போனால் வீட்டில் செருப்பு அடி விழுமே என்ற கவலையும் எழாது. 'எது நடந்தாலும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்; முதலில் நாலு பெக்கைப் போடு. ரிலாக்ஸ் ஆகு...’ என்றுதான் மூளை கட்டளையிடும். ஒரு கட்டத்தில் 'டென்ஷனா இருக்கா? குடி. சந்தோஷமா இருக்கா? குடி. உடம்பு வலிக்குதா? குடி. மதியம் என்ன வீட்டில் கறிச்சோறா? குடி. பொண்டாட்டியுடன் இருக்கப்போகிறாயா? குடி’ என்று வாழ்க்கையின் ஒவ்வோர் அன்றாட நிகழ்விலும் மதுவைத் தவிர்க்க முடியாத ஒன்றாகச் செய்துவிடும் மூளை.
க்ரெய்க் எழுதியதுபோல எஜமான் அழைக்கும் போது அந்தக்குரல் ஓசையில் இருந்து அடிமை ஒளிந்து கொள்ளவே முடியாது. அவன் உன்னை வாங்கி விட்டான்; அப்படித்தான் மூளை மது நோயாளியை வாங்கி, அடிமை ஆக்கிவிட்டது.
குரங்குப் புத்தி என்பார்களே... தப்பு என்று தெரிந்தாலும் சிலர் அதையே திரும்பத் திரும்பச் செய்வார்கள். எண்டார்பின் உற்பத்திக்காக மதுவைத் திரும்ப திரும்ப குடிக்கச் செய்கிறது மூளை. அதனால்தான், 'எண்டார்பின்ஸ் தியரி’ என்று சொன்னேன். இப்படி 'எண்டார்பின்’னுக்கே மலைத்துப்போனால் எப்படி? இன்னும் 'டோப்பமின்’ எல்லாம் இருக்கிறதே... என்ன செய்ய துஷ்டனைக் கண்டால் தூர விலகாமல் தொட்டுவிட்டால்... இப்படித்தான் எல்லாக் கஷ்டங்களையும் எதிர்கொள்ள நேரிடும்!
சொக்கனின் பதிவை படித்தவுடன்  இனம் புரியாதஒரு ஒரு வலி மனதில் ஏற்பட்டதை மறுக்க முடியாது. அந்த பெண் பிரச்னை இல்லாமல் வீடு சென்று  செர்ந்திருப்பாலோ இல்லையோ  என்ற எண்ணம் நீண்ட நேரத்திற்கு மனதில் உறுத்தி கொண்டே இருந்தது

தொடரும் என் உளறல்கள் ....

கரையான்.

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

உளறல்கள் ....

சமீபத்தில் படித்த மது மயக்கம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்

சிலர் சரக்கு அடிக்கும்போது தயிர்வடை சாப்பிடுவார்கள். போதை நின்று நிதானமாக ஏறுமாம். சிலருக்கோ தண்ணீர் கலக்காத மதுவுடன் சின்ன வெங்காயம் வேண்டும். ''மாப்ளே.. ச்சும்மா, தேள் கடிச்சது மாதிரி 'சுருக்’னு போதை ஏறும் தெரியும்ல'' என்பார்கள். இதற்கு தேளே கடித்து இருக்கலாம். பெரிய வெங்காயம் கடித்துக்கொண்டால், போதை ஏறவே ஏறாதாம். இது எல்லாமே தப்பு. மதுவை எப்படிக் குடித்தாலும் போதை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து கூடவோ, குறையவோ ஏறித்தான் தீரும்.

ஒரு குவார்ட்டர் குடித்து விட்டு, சரவண பவனில் சூடாக ஒரு காபி குடித்தால் போதை இறங்கிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, குடித்த பிறகு தெருத்தெருவாகக் கொய்யா மரத்தைத் தேடி அலைந்து, கொழுந்து இலைகளாகப் பறித்து ஆடு, மாடுபோல அசை போடும் காமெடியும் நடக்கும். வாடை வராதாம்!
மது குடிப்பது தொடர்பாக 'குடிமகன்’களிடம் இப்படி எத்தனை எத்தனை தவறான நம்பிக்கைகள். மதுவைக் குடித்து விட்டால் குறிப்பிட்ட நேரத்துக்குப் போதையைப் போக்கவோ, வாடையை மறைக்கவோ முடியாது என்பதுதான் மருத்துவ உண்மை. ஆல்கஹால் நெடி, குடித்தவரின் மூச்சுக்காற்று வழியாக வெளியேறுகிறது. அதனால்தான், போலீஸார் வாயை ஊதச்சொல்லி ஸ்பீடா மீட்டர் போன்ற கருவியை நீட்டுகிறார்கள். மதுவின் நெடி பட்டால், அந்தக் கருவியில் இருக்கும் முள்​ளுக்கே போதை ஏறியதைப்போல மயங்கிக் கீழே சறுக்கும். ஒரு லார்ஜ் மதுவின் போதையையோ அல்லது வாடையையோ போக்க ஒருவரின் உடல் உறுப்புகளுக்கு ஒரு மணி நேரம் தேவை. இதை மாற்றவோ, மறைக்கவோ முடியவே முடியாது.
ஹாட் வகையறாக்களைக் குடித்தால்தான் உடலுக்குக் கெடுதல். பீர், ஒயின் சமாச்சாரங்கள் உடலுக்கு நல்லது அல்லது கெடுதல் இல்லை - இப்படியும் பலர் நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ஆல்கஹால் ஓர் அழிவு சக்தி என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அது ரத்தத்தில்  ஊடுருவும் அளவான 'பி.ஏ.சி’-யை பொறுத்து, உடலுக்கு அது கெடுதல் செய்தே தீரும். ஒரு பீர் பாட்டிலில் இருக்கும் திரவத்தின் அளவுக்கு அதில் இருக்கும் சுமார் எட்டே முக்கால் சதவிகிதம் ஆல்கஹாலின் அளவு சரியானதே. ஹாட்டில் தண்ணீரோ, சோடாவோ கலந்து குடிக்கிறார்கள். பீரை அப்படியே குடிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி மதுவில் எது நல்லது என்று ஆராய்ச்சி செய்வது எல்லாம் சாக்கடையில் சங்கீதத்தைத் தேடுவது போலத்தான். டாக்டர்கள் சொல்வார்கள், 'எ டிரிங்க் இஸ் எ டிரிங்க் இஸ் எ டிரிங்க்’ என்று. குடி என்பது குடியேதான்!
  மது குடித்தால் நன்றாகத் தூக்கம் வரும் - எவ்வளவு பெரிய மோசடி வார்த்தை தெரியுமா இது! எப்போதாவது... மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மது அருந்தும் நபர்களிடம் கேட்டுப் பாருங்கள். மது அருந்திய அன்று தனக்கு சரியான தூக்கம் இல்லை என்பார்கள். மது அருந்தினால் தூக்கம் வராது. மயக்கம்தான் வரும். அதுவும், 'நல்ல’ தூக்கத்துக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. எப்படி?
பொதுவாக, அனைவருக்குமே தூங்கி எழும்போது உடலில் நீர் வற்றிப்போய் இருக்கும். இதை டிஹைடிரேஷன் (Dehydration) என்பார்கள். அதனால்தான் தூக்கத்தில் எழுந்து தண்ணீர் குடிக்கிறோம். அப்படிக் குடித்தும் போதாமல் காலையில் எழுந்ததும் மடக் மடக்கு என்று ஒரு சொம்பு தண்ணீரைக் குடிக்கிறோம். மது குடிக்காத நபருக்கே இப்படி என்றால், ஒருவர் மது குடித்துவிட்டுப் படுத்தால்? உடலில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்டி இழுத்து, வற்றச் செய்யும் தன்மை ஆல்கஹாலுக்கு உண்டு. உடல் வறண்டு, குடல் வறண்டு... நாடி, நரம்பு, நாக்கு எல்லாம் வறண்டு தாகத்தில் தவிப்பார்கள்.
போதை மயக்கத்தில் ஆழ்ந்து இருக்கும்போது எழுந்து தண்ணீர் குடிக்கவும் தோன்றாது. மது குடித்த அந்த ஆத்மாவை விடுங்கள். அது மயங்கிக்கிடக்கிறது. ஆனால், அந்த ஆத்மாவின் உடல் சுமார் எட்டு மணி நேரம் படும்பாடு, பெரும் அவஸ்தை. அதுவும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் மூக்கு வழியாக மூச்சுவிட மாட்டார்கள். அஷ்டக்கோணாலாக வாயைத் திறந்து கொர்... புர்... என்று திணறித்திணறித்தான் மூச்சு விடுவார்கள். இதனால், வழக்கத்தைவிட அதிகமாக டிஹைடிரேஷன் ஏற்படும். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து மதுப் பழக்கம் இருப்பவர்களுக்கு மயக்கத்தில் நிறையக் கெட்ட கனவுகள் வரும். குறிப்பாக, கனவுகளில் கொடூரச் சம்பவங்கள் நடக்கும். இப்போது சொல்லுங்கள். குடித்துவிட்டுப் படுத்தால் நல்ல... ஆழ்ந்த... நிம்மதியான தூக்கம் வருமா என்று!
நான்கு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து குடிக்கிறார்கள். அதில் வழக்கம்போல் ஒருவன் மட்டை ஆகிவிட்டான். மற்ற மூவரும் என்ன செய்வார்கள்? அவன் அப்படியே படுக்கட்டும்... விடு. தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று படுக்கவைத்து விட்டு கிளம்பி விடுவார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம்... இதுதான் மிகப் பெரிய தவறு. ஒருவர் மட்டை ஆகிவிட்டால், அவர் போதையில் இருந்து மீண்டு எழும் வரை அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மிகைப்படுத்தவில்லை... பயமுறுத்தவில்லை...

மிகவும் அருமையான தொடர் ....

கரையான் 



புதன், ஆகஸ்ட் 08, 2012

நண்பர் ஷாஜூ  அவர்களின் மரணம் நம் நண்பர்களிடையே மிகப்பெரிய அதிர்வை  ஏற்படுத்தி உள்ளது மறுக்க முடியாத உண்மை.  கடந்த முறை பாண்டியில் நம் நண்பர்கள் கெட் டு கேதேரில் அவரை சந்தித்த வேளையில் அவர் உடல் மற்றும் அவர் பழக்க வழக்கங்களை பார்த்து "என்ன அண்ணே உடம்ப கொஞ்சம் பாத்துக்கலாமே நமக்கு வயசு ஆவுதில்ல "என்றேன "டேய் அதெல்லாம் நமெக்கெல்லாம் ஒன்னும் ஆவாதுடா " என்று கூறினார் . அத்துடன் நான் மற்ற விஷயங்களை பேசி எங்கள் உரையாடலை முடித்து கொண்டேன்.
நம் நண்பர்கள் சிலர் தங்கள் உடலை பற்றி சிறிதும் கவலைப்படாமல்  எந்த விதமான உடற்பயிற்சிகளும் இல்லாமல் கட்டுப்பாடற்ற உணவு பழக்கங்களை கொண்டிருப்பதை பார்க்கும்போது சில ஆலோசனைகளை சொன்னால் உடனடியாக வந்து விழும் பதில் என்ன வென்றால் "ரெகுலரா உடற்பயிற்சி செய்யறவன் ஹார்ட் அட்டாக்  வந்து சாவதே இல்லையா,நம்ம கல்லூரியில டாக்டர் பொற்செழியன் விளையாடிகிட்டே இருக்கும்போது சாக வில்லையா?"  மற்றொரு பதில் "எனக்கு  வேலை சுமை அதிகம் உடற்பயிற்சி என்று பேசுவதற்கு கூட நேரம் இல்லை". நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் கடுமையான வேலை சுமைகளால் ஏற்படும் வியாதிகளின் விளைவாக படுத்து விட்டாலோ வேலை செய்ய முடியாமல் போனாலோ நாம்  வேலை செய்யும் நிறுவனம் வேறு ஒருவரை தேடிக்கொள்ளும் நம்  குடும்பங்களால் அந்த இழப்பை என்றும் சரி செய்ய இயலாது .
இழந்த மகன்
இழந்த நண்பன்
இழந்த காதலன்
இழந்த கணவன்
இழந்த தந்தை
ஈடு செய்ய முடியாதவை
இழந்த பணியாளர்..ஈமக்கடன் முடியும் முன்னரே ஆயிரம் பேர் காத்திருப்பார்..

நாளை தொடர்வேன்.....

கரையான்  

சனி, ஆகஸ்ட் 04, 2012

ஆழ்ந்த அனுதாபங்கள்

நம் நண்பர் ஷாஜூ தேவ குமார் அவர்கள்  மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தோம் . சந்தேக மரணம் என்பதால்  பிரேத பரிசோதனைக்கு பின்னர் அடக்கம்  செய்யப்படும் என அறிந்தோம். மேலும் இது குறித்த  விவரம் தெரிந்தவர்கள் நம் பிளாக்கில் பகிர்ந்து கொள்ளவும் ....

கரையான்