செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

உளறல்கள் தொடர்ச்சி ...

    GFK அவர்களின் ஆலோசனை கண்டிப்பாக நம் நண்பர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.  Baby aspirin dose பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்.
    உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கான முக்கியமான காரணம் சோம்பேறித்தனம்தான், அது மட்டும் அல்லாமல் நம்மீதான சுய பச்சாதாபம்(self pity???) என்று கூட சொல்லலாம், நான் ஓய்வொழிச்சல் இல்லாமல் கஷ்டப்பட்டு பணி புரிகிறேன் உடற்பயிற்சி செய்ய எனக்கேது நேரம் என்று நம்மைப்பற்றி நாமே பரிதாபப்பட்டு உடலை கெடுத்து கொள்கிறோம். மேலும் நாம் கொஞ்சம் அசந்தாலும் நமக்கு கீழே இருப்பவர் மேலே வந்து விடுவாரே என்ற கவலையும் ஒரு புறம் வந்து விடுமுறை நாளில் கூட ஓய்வெடுக்காமல் பணி புரிய வைத்து எரிகிற  தீயில் எண்ணெய்  விடுவது போல் ஆகி விடுகிறது.  வேலை வேலை என்று உழல்வதால் நம் அருகில் இருக்கும் நண்பர்கள் கூட அன்னியப்பட்டு போய் இருப்பதை சமீபத்தில் கண்டேன், நம் வகுப்பு தோழர்கள் நாமக்கல்லில் குறைந்தது பத்து பேராவது இருக்கிறார்கள், அவர்களுக்குள் தொடர்பே இல்லாமல் இருப்பது கொடுமை, நம் தோழி ஒருவர் நம் வகுப்பு தோழர் ஒருவரை தொலைபேசியில் அழைத்துள்ளார், தோழர் மிக பார்மலாக "சொல்லுங்க மேடம்" என்று பேசியுள்ளார். நம் நண்பர்களுக்குல்லேயே  எவ்வளவு அன்னியப்பட்டு போய்  இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்தான்.
   நான் ஒவ்வொரு முறையும் சென்னை விஜயம் செய்யும்போதும் நம் நண்பர்கள் குமாரவேல், மனோகரன், பாண்டியன்,நான்,பாய்  எங்கள் குடும்பத்தினருடன் ஏதாவது ஓரிடத்தில் சந்தித்து கொள்வது உண்டு. இதைப்போல சந்தித்து கொள்வது எனக்கு மன புத்துணர்ச்சி அளிப்பதாக உணர்கிறேன். குழந்தைகளுடன் குழந்தைகளாக பேசி சிரித்து விளையாடும் போது ஏற்படும் சுகம் அனுபவித்து பார்த்தவருக்கே தெரியும் அதன் அருமை.
   சொல்வது சுலபம், உனக்கென்ன உன் வேலை அப்படி, உடற்பயிற்சி செய்வதற்கு வசதிகள் இருக்கிறது என்று கூறலாம், நான் உடற்பயிற்சி செய்ய என்  இடத்திலிருந்து கிட்ட தட்ட முப்பது கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும்,அதாவது ஒரு நாளுக்கு அறுபது கிலோ மீட்டர் , மகிழ்ச்சியாக செய்வதால் என்னால் செய்ய முடிகிறது. நீச்சல் எனக்கு மிக பிடிக்கும் ஒரு விளையாட்டு அதற்காகவே நான் எவ்வளவு தூரம் வேண்டாலும் பயணம் செய்ய தயார் என என் மனதை தயார் படுத்தி கொண்டுள்ளேன். நம் நண்பர்களில் சிலர் தங்கியிருக்கும் apartment களிலேயே உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் என வசதிகள் இருந்தாலும் அதை பயன் படுத்த நேரம் இல்லை என்று காரணம் கூறுகிறார்கள்.

என் உளறல்கள் தொடரும்....

கரையான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக