குழந்தைகளின் முதல் ஹீரோ அப்பா முதல் காதல் அம்மா. சினிமாவுடைய தாக்கமோ அல்லது இன்டர்நெட், டிவி சானேல்களின் தாக்கமோ தெரிய வில்லை பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தந்தைக்கு சிக்ஸ் பாக் உடல் கட்டும் எல்லா விளையாட்டுகளும் விளையாட தெரிந்து இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் வேலை நெருக்கடிகளினாலும் நேரமின்மையினாலும் நம்மில் பெரும்பாலானவர்கள் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில்லை என்பது கொஞ்சம் கசப்பான உண்மை. இருபத்திநான்கு மணி நேரமும் ஓடி உழைத்து குழந்தைகளுக்காக பணம் சொத்து சேர்க்க தயாராக இருக்கும் நம்மால் தினமும் ஒரு மணி நேரம் அவர்களுடன் விளையாட செலவிட முடிவதில்லை என்பது வினோதமே. கிரிக்கெட் கோச்சிங், கராட்டே கிளாஸ், டான்ஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ், என பணத்தை வாரி இறைத்து சேர்த்து விட தயார் ஆனால் ஒரு அரை மணி நேரம் அவர்களுடன் ஆடிப்பாட நேரம் இல்லாமல் ஓடி கொண்டு இருக்கிறோம். கொடுமை என்ன வென்றால் நம்மால் மேலும் ஓடி சம்பாதிக்க முடியாத முதுமை வந்து குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட நினைக்கும்போது அவர்கள் வளர்ந்து தங்கள் வாழ்க்கையில் பிசியாகி விடுவார்கள். அவர்களால் நம்முடன் நேரம் செலவிட முடியாது. கால சக்கரத்தின் கொடுமையான முகம் இது.
கரையான்.
கரையான்.
Even though our kids don't think we are cool I see that hey think their grandparents are cool. So we still have hope and one day our grandchildren will look up to us!
பதிலளிநீக்குGFK
Kids will perceive how awesome parents are once they have their own kids! That is when true appreciation comes. Just be patient folks you will see it someday.
பதிலளிநீக்குGujili