நண்பர் ஷாஜூ அவர்களின் மரணம் நம் நண்பர்களிடையே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது மறுக்க முடியாத உண்மை. கடந்த முறை பாண்டியில் நம் நண்பர்கள் கெட் டு கேதேரில் அவரை சந்தித்த வேளையில் அவர் உடல் மற்றும் அவர் பழக்க வழக்கங்களை பார்த்து "என்ன அண்ணே உடம்ப கொஞ்சம் பாத்துக்கலாமே நமக்கு வயசு ஆவுதில்ல "என்றேன "டேய் அதெல்லாம் நமெக்கெல்லாம் ஒன்னும் ஆவாதுடா " என்று கூறினார் . அத்துடன் நான் மற்ற விஷயங்களை பேசி எங்கள் உரையாடலை முடித்து கொண்டேன்.
நம் நண்பர்கள் சிலர் தங்கள் உடலை பற்றி சிறிதும் கவலைப்படாமல் எந்த விதமான உடற்பயிற்சிகளும் இல்லாமல் கட்டுப்பாடற்ற உணவு பழக்கங்களை கொண்டிருப்பதை பார்க்கும்போது சில ஆலோசனைகளை சொன்னால் உடனடியாக வந்து விழும் பதில் என்ன வென்றால் "ரெகுலரா உடற்பயிற்சி செய்யறவன் ஹார்ட் அட்டாக் வந்து சாவதே இல்லையா,நம்ம கல்லூரியில டாக்டர் பொற்செழியன் விளையாடிகிட்டே இருக்கும்போது சாக வில்லையா?" மற்றொரு பதில் "எனக்கு வேலை சுமை அதிகம் உடற்பயிற்சி என்று பேசுவதற்கு கூட நேரம் இல்லை". நண்பர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் கடுமையான வேலை சுமைகளால் ஏற்படும் வியாதிகளின் விளைவாக படுத்து விட்டாலோ வேலை செய்ய முடியாமல் போனாலோ நாம் வேலை செய்யும் நிறுவனம் வேறு ஒருவரை தேடிக்கொள்ளும் நம் குடும்பங்களால் அந்த இழப்பை என்றும் சரி செய்ய இயலாது .
இழந்த மகன்
இழந்த நண்பன்
இழந்த காதலன்
இழந்த கணவன்
இழந்த தந்தை
ஈடு செய்ய முடியாதவை
இழந்த பணியாளர்..ஈமக்கடன் முடியும் முன்னரே ஆயிரம் பேர் காத்திருப்பார்..
நாளை தொடர்வேன்.....
கரையான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக