ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

MY NEW CAR


புது கார்  வந்தா எல்லாம் சந்தோஷமா சுத்துவாங்கன்னு பேரு ஆனா அந்த காரால் எரிச்சல் அடையும் சம்பவங்கள் ஏற்பட்டால் கஷ்டம்தான்.  என்னோட முதலாளி நான் சிறிய காரில்  ஒட்டகங்களுக்கு சிகிச்சை அளிக்க செல்லும்போது மணல் பாங்கான இடங்களில் சிக்கி கொண்டு நிற்பதை பார்த்து four wheel drive தான் சரிப்பட்டு வரும் என்று கூறி இந்த TOYOTA PRADO LAND CRUISER -ஐ கொடுத்தார். இது வந்த நாள் முதல் சுற்றி இருப்பவர் வயித்தெரிச்சல்  போதாது என்று சில நகைச்சுவையான சம்பவங்களும் நடந்து கொண்டு இருக்கின்றது. ஆயிரம் கிலோ மீட்டர் ஒட்டி விட்டதால் சர்வீஸ் செய்ய சர்வீஸ் ஸ்டேஷன் சென்றேன். அங்கு எனக்கு முன்னாள் ஒரு சவுதி காரர் காத்திருந்தார், அவர் கார் அருகில் என் காரை நிறுத்தினேன், அவருடையது 2010 மாடல், என்னிடம் என்னுடைய கார் பற்றி பேச்சு கொடுத்தார் , ஸ்மூத் ஆக  உள்ளதா, ஓட்டும்போது வசதியாக உள்ளதா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தவர் என்னைபற்றி கேட்க ஆரம்பித்தார், எத்தனை வருடமாக வேலை செய்கிறாய், திருமணம் ஆகி விட்டதா, எத்தனை மனைவி, எத்தனை குழந்தை என கேட்டு கொண்டே வந்தவர், எவ்வளவு சம்பளம் என்று கேட்டார், என்னுடைய சம்பளத்தை சொன்னேன், கடுப்பாகி விட்டார், "என்ன பொய் சொல்கிறாயா , என்னை என்ன முட்டாள் என்று நினைத்து விட்டாயா? HOUSE DRIVER -க்கு இவ்வளவு சம்பளம் யார் கொடுப்பார்கள்" என்றார், அவர் இது வரை என்னை ஓட்டுனர் என்று நினைத்து கொண்டிருந்திருக்கிறார், பின்னர் அவரிடம் என் பணி பற்றியும் என் முதலாளி பற்றியும் விளக்கினேன், இருந்தாலும் அவருக்கு மனம் ஆறவே இல்லை, அத்துடன் என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இந்த நாட்டு காரன்தான்  வெறுப்பேதுரான் என்றால் நம்ம ஆட்களும் அப்படிதான், இன்று ஒரு sports shop சென்றேன் shorts ஒன்று எடுக்க வேண்டி இருந்தது. செலக்ட் செய்தவுடன்  ஹைதராபாத் -ஐ சேர்ந்த சேல்ஸ்மானிடம் எவ்வளவு என்று கேட்டேன், அவர் எங்கே உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று கேட்டார், நான் செல்லும் உடற்பயிற்சி கூடத்தின் பெயரை சொன்னேன், உடனே அது ரொம்ப செலவாகுமே என்றார், ஆமாம் என்றேன்  , உடனே அவர் எப்படி நீங்கள் house driver -ஆக வேலை செய்து கொண்டு இவ்வளவு செலவு செய்ய முடிகிறது என்றார், நான் டிரைவராக வேலை செய்கிறேன் என்று எப்படி  முடிவு செய்தீர்கள் என்று கேட்டேன், "நீங்க ஒட்டி வந்த வண்டியை வைத்துதான் " என்றார். அவருக்கும் விளக்கி விட்டு வந்தேன். ஆக சவுதியில எந்த வேலை செய்தாலும் இந்தியனாக இருந்தால் ஒரு பழைய டொயோடா கிரேசிடாவோ, புதிதாக இருந்தால் hyundai accent மாதிரியான கார்தான் ஓட்ட வேண்டும் போல.
( நல்ல வேலையாக என் மனைவி என்னுடன் வர வில்லை. வந்திருந்தால் "இங்க பாரு HOUSE டிரைவர்  ,  SERVANT MAID- ஐ கூப்பிட்டு கொண்டு ஊர் சுத்துறான்" என்று கூறி இருப்பார்கள்)

கரையான்.

2 கருத்துகள்:

  1. Congrats Karayaan!I can't believe that people ask for your salary and you tell them too? I suppose there isn't much privacy? I guess there is no diginity of labor and the idea of respect for whatever your occupation may be.
    I suppose this exists everywhere but here they do respect your occupation whatever it may be and folks don't look down on you. We have had several people work on our house - carpenter, mason, plumber etc and we have great regard for what they do.
    Gujili

    பதிலளிநீக்கு