ஞாயிறு, மே 27, 2012

Congratulations Gujili

Nam manbumigu Thozhi Gujili avargalukku excellence in teaching virudhu kidaithu irrukkiradhu. Melum neriya parisugal kidaikka chennai stars yil irundhu vazhthukkal.

செவ்வாய், மே 22, 2012

Spring 2012 - flowers and robin chicks

Hungry Robin chicks
A robin builds her nest in our lilac tree every year. I took a picture of her chicks only a few weeks old.
Irises from our yard, it is one of my favorite flowers
Iris - closeup

என் மகனால் எனக்கு மெடல்

 

BHAI

Professional Hazards

சவுதி அரசின் விவசாயத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இப்போது நான் 
இருபத்தைந்து 
ஒட்டகங்களுக்கு புருசெல்லோசிஸ் -க்கான சிகிச்சை அளித்து வருகிறேன், ஒவ்வொரு ஒட்டகத்துக்கும் terramycin LA 75 ml மற்றும் streptomycin 50 ml ஒரு நாள் விட்டு ஒரு நாள் அளித்து வருகிறேன். ஊசி கொடுக்கும் எனக்கே மிக கஷ்டம் என்றால்  ஊசி போட்டுக்கொள்ளும் ஒட்டகங்களின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.
என்னுடன் இரண்டு உதவியாளர்களையும் ஊசி கொடுக்க என்னுடன் அழைத்து செல்வேன், அதில் ஒருவர் பாகிஸ்தானி, முதலிலேயே அவர்கள் இருவருக்கும் கையுறை, மூக்குறை (mask) அணிய  வேண்டும் என்று கூறினேன், மேலும் ஊசி கொடுத்தபின் ஊசியின் மேல் இருக்கும் கவர்-ஐ (needle cap) திரும்ப அணிவிக்க வேண்டாம் என்று கூறினேன், ஏனெனில் ஒரு சில சமயங்களில் ஊசியின் மேல் கவர் அணிவிக்க முயலும் பொது 
ஊசி கையில் குத்த வாய்ப்புள்ளது. இவ்வளவு சொல்லிய பிறகும் என்னுடன் இருந்த பாகிஸ்தானி கையில் உறை அணியாமல் ஊசி கொடுத்து கொண்டு இருந்தார்., சில ஒட்டகங்களுக்கு கொடுக்கும்போது ரத்தம் வெளியேறும் அதன் மூலம் நமக்கும் கிருமி தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று எடுத்து கூறினேன், அவனோ "அல்லா கரீம்(கடவுளின் செயல்) டாக்டர் சாப்" என்று கூறினான், அதற்குமேல் நான் ஏதும் சொல்ல வில்லை. சிறிது  நேரத்தில் "டாக்டர் சாப் ஊசி கையில் குத்தி விட்டது" என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான், அவன் உள்ளங்கையில் இருந்து ஏகப்பட்ட ரத்தம் "ஏதாவது செய்ய முடியுமா என்றான்" ஒன்றும் செய்ய இயலாது மருத்துவ மனை சென்று antibiotic மருந்துகள்தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். ரொம்பவும் தெனாவட்டாக நான் சொல்லிய எதையும் பின் பற்ற விரும்பாமல் 
செய்ததால் வந்த வினை. ஒட்டகத்திற்கு ஊசி கொடுத்தபின் ஊசியின் கவரினால் மூட எத்தனிக்கும்போது கையில் குத்தி விட்டது அதுவும் ஆழமாக. இன்னும் சில நாட்களில் தெரியும் அவனுக்கு ப்ருசெல்லா positive -ஆ இல்லையா என்பது. 

கரையான் 

Neal's Being A Bad Kid




http://www.reverbnation.com/nealg

நீல் அவர்களின் புதிய இசை தொகுப்பு(Being A Bad Kid) மிக அருமை.   நீல்  Bad Kid இல்லை . Great Kid என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள்.

கரையான்.

ஞாயிறு, மே 20, 2012

Ameer khan show in Vijay TV

சமீபத்தில் ஹிந்தி சானலில் ஆரம்பிக்கப்பட்ட நல்ல நிகழ்ச்சி.வழக்கமான டாக் ஷோவிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.தமிழில் விஜய் டிவி யில் வருகிறது




Chocks

snake bite

சமீபத்தில் பாம்புக்கடிக்கான சிகிச்சை  முறைகள் பற்றி நெட்டில் மேய்ந்து கொண்டிருந்த பொது கண்ணில் பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்....

An international expert on snakebite, the late Dr. Alistair Reid of the LiverpoolSchool of Tropical Medicine found out that only 10 to 15% of venomous bites endin death. The possibility of survival, even without treatment, is incredibly good in80-90% of cases. One of the reasons for this is that many snakebites are by non-venomous snakes. Secondly, a large percentage of venomous snakebites are dry bitesi.e., the snake does not always inject venom. Sometimes, it might inject only a tinyquantity of venom. The snake can inject the quantity of venom it wants. This is anentirely voluntary process. Hence, one can never know how much venom was injectedexcept by observing the progression of the symptoms. In other words the recoveryin snakebite without even treatment is great. Every traditional healer uses this factto his / her advantage and propagates his / her own method to treat snakebite viz.,herbal details, “snakestone” or mantra or plain soda water and most villagers would be happy to go to him.
 
The traditional methods such as application of tourniquet, cutting (incision) andsuction, washing the wound, snake stone or other methods have adverse effects andhence, they have to be discarded. The mneumonic used to recall some of the traditionalmethods followed is “WHISTTLE” and these are described below.
Washing the Wound:
Victims and bystanders have a tendency to wash the wound to remove any venomon the surface.
This should not be done as the action of washing increases the flow  of venom into system by stimulating the lymphatic system.
Household remedies:
Various forms of household remedies are applied to the site of bite which may enhance absorption of venom.
 
Incision) Cutting and Suction:
Cutting the site of bite and suctioning incoagulable blood increases the risk of  bleeding to death as well as increases the risk of infection. Venom is not cleared or removed from the snakebite site by this method.
Snake stone:
Snake stone is applied to the site of bite saying that it will absorb the venom andfalls once the venom is absorbed. This contributes to delay in seeking appropriatehealth care.
Tourniquets:
Tight tourniquets made of rope, string and cloth, have been followed traditionallyto stop venom
flow into the body following snakebite. The problems noticed withtourniquets are :-Risk of ischemia and loss of the limb
Risk of necrosis
Risk of massive neurotoxic blockade
Risk of embolism if used in viper bites.
Release of tourniquet may lead to hypotension.
Gives patient a sense of false security, which encourages them to delay their 
 journey to hospital
Thermal methods:
Cauterytreatment
is followed in some areas. It is injurious and not benecial
Cryotherapy
involving the application of ice to the bite was proposed in the1950’s. It was subsequently shown that this method had no benefit and merely increased the necrotic effect of the venom.
Local application of anti snake venom:
Local application of anti snake venom has not shown any benecial effects
Electrical Therapy:
Electric shock therapy for snakebite received a signicant amount of presscoverage in the 1980’s. The theory behind it stated that applying an electric current to
the wound denatures the venom. Much of the support for this method came from lettersto journals and not scientic papers. It has been demonstrated that the electric shock has no benecial effect and hence, it has been abandoned as a method of first aid.
 
சினிமாவுல காட்டுற மாதிரி கதாநாயகி தாவணிய கிழிச்சி பாம்பு கடிபட்ட கதா நாயகனுக்கு கட்டு போட்டா அவரோட காலோ கையோ(உயிரோடு சேர்ந்து) போகறது நிச்சயம்..  கதா நாயகன் பாம்பு கடி பட்ட நாயகியோட காயத்துலருந்து விஷத்த உறிஞ்சி எடுத்தா ரெண்டு பேருக்கும் சங்குதான் ...இப்படி பல விஷயங்கள் கிடைக்குது இந்த சைட்-ல  
மேலும் சுவாரஸ்யமான தகவல் களுக்கு கீழ் கண்ட தளத்தில் படிக்கவும்.

http://www.scribd.com/doc/22703884/HANDBOOK-ON-TREATMENT-GUIDELINES-FOR-SNAKE-BITE-AND-SCORPION-STING-2008-TNHSP-PUBLICATION

கரையான்.
 
 

சனி, மே 19, 2012

வாழ்த்துக்கள்






தானத்தில் சிறந்த ரத்த தானம் செய்யும் பாமா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருந்து மென்மேலும் பல நற் தொண்டுகள் புரிய  வாழ்த்துகிறோம்...

சென்னை நட்சத்திரங்கள்

வெள்ளி, மே 18, 2012

பெரு வாழ்வு

பெரு மழை நாட்களில்
மலையாள ஓடு வேய்ந்த
கூரை விரிசலில்
ஒழுகும் நீர் .....
அவ்வபோது உரிமையுடன்
வீட்டிற்குள் வந்து
உறவாடிச் செல்லும் அணில்கள்....
நிரந்தரமாய் கூடு கட்டி வசித்த
சிட்டு குருவிகள்....
இரவுப் பொழுதுகளில்
சுவற்றில் மோதாமல்
லாகவமாய்த் திரும்பும்
வௌவால்கள் ....
வீட்டிற்குள் கசியும்
கோடை வெப்பம்
ஆடிக் காற்று
டிசம்பர் குளிர் ...
குடி தண்ணீருக்கு
பிள்ளையார் கோயில் கிணறு .
குளிப்பதற்கு பம்ப்பு செட்டு
அம்மன் கோவில்
தண்ணீர் சிலிர்ப்பில் குளத்து கரை
வைக்கோற் போர்கள்
வாய்க்கால் மேடு
பள்ளி நேரம் முடிந்த பின்
புழுதிக் குளியலில்
புரண்ட தருணங்கள்
எப்போதேனும்
நகராட்சி பொருட்காட்சியில்
பஞ்சு மிட்டாய்
மைசூர் அப்பளம் .....
இலங்கை வானொலி
நேயர் விருப்பங்கள் .
கோவில் கொடைகளில்
அலறும் கிராமபோன்...
வருடத்திற்கு சில
திரைபடங்கள்
என வாழ்வின்
ஆரம்ப அத்தியாயங்கள்
நகர்ந்த போது
இருந்தது உயிர்ப்பும் துடிப்பும்,

பெரு நகரங்களின்
காங்க்ரிட் காடுகளில்
குளிர் சாதன விடுதிகளில்
தொலைக்காட்சியின்
இருபத்திநான்கு மணி நேரக்
கேளிக்கைகளில்
எப்போது வேண்டுமானாலும்
இலவசமாய்ப் பதிவிறக்கம் செய்து
கேட்க முடிகிற சங்கீதங்களில்
யு டியுபில் பேஸ் புக்கில்
தெருவெல்லாம் மலிந்து போன
வாகன இரைச்சல்களில்
புட்டித் தண்ணீரில்
கோக்கில் பெப்சியில்
ஷாபிங் மால் ஆரவாரங்களில்
ஷாம்பெயின் கொண்டாட்டங்களில்
உறக்கம் தவிர்த்த உல்லாசங்களில்
கைக்குள் அடங்கிய
டிஜிட்டல் உலகத்தில்
அறுபதில் அடைந்ததை
இருபதில் எட்டி .
உழைக்கும் வாழ்க்கை
ஓடிக் கொண்டே.....
...
உயிர் மட்டும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது..
சொக்ஸ்

வியாழன், மே 17, 2012

Only in India-Final

1. சொக்கனூர்



 2.சத்யபாமா நகர்



3.நாயூர்

SNAKE BITE

                                        (கடித்த பாம்பு)
                                        (கடிபட்ட ஒட்டகம் - ஊசி போட்ட  இடத்தில் ரத்தம் நிற்காமல் வெளியேறிக்கொண்டே இருந்தது)Viperine venom is typically hemotoxic, necrotizing, and anticoagulant.
(இடது முன்னங்கால்-கடி பட்ட  வீங்கி உள்ளது)
 
sand viper (கட்டு விரியன்) பாம்பு கடி பட்ட ஒட்டகம், இந்த ஒட்டகம் திங்கள் அன்று இரவு மேலே படத்தில் உள்ள பாம்பினால் 
கடிக்கப்பட்டது. செவ்வாய் பகலில் ஒட்டக பணியாளர்கள் என்னை அழைத்தார்கள். இந்த ஒட்டகத்தின் அருகிலேயே கடித்த பாம்பு குற்றுயிரும் குலை உயிருமாக 
இருந்ததாக கூறினார்கள். அனேகமாக இந்த ஒட்டகம் அந்த பாம்பின் மேல் படுத்திருக்கும் அல்லது 
காலால் மிதித்து இருக்கும் என  தெரிகிறது. காலையில் ஒட்டகத்தின் காலில் வீக்கம் இருப்பதை பார்த்த
 பணியாளர்கள் அருகில்  சென்று பார்த்தபோது அது படுத்து இருந்த இடத்தில் இந்த காயமுற்ற பாம்பையும் பார்த்து  அதை கொன்று இருக்கிறார்கள். அந்த ஒட்டகத்திற்கு Dexamathasone மற்றும் pain killer கொடுத்தேன். அந்த ஊசி கொடுத்த இடத்திலிருந்து  ரத்தம் அடுத்த நாள் கூட நிற்க வில்லை. புதனன்று மாலையில் இறந்து விட்டது.

கரையான்.

செவ்வாய், மே 15, 2012

Only in India-4

 1.வைரவப்பட்டி



2.திட்டுவிளை   



 3.டீ.பீ.கண்ணனூர்




4.சுரேஷ்நகர்  

வெள்ளி, மே 11, 2012

Only in India-3


 குஜிலியூர்


 ஹரிநாத்பதி


 குமரேசபாளையம்



 பம்பரப்பேட்டை


 
                                                 அந்துவக்குடி





வியாழன், மே 10, 2012

Happy Birthday Gujili

A very Happy Birthday to Gujili. May you always continue to light this world with your wonderful smile and laughter. May joy, Happiness and good health fill your life forever.
Chennai stars.....

புதன், மே 09, 2012

Only in India-2

1.சாத்தான்குளம் 

 2.மனிகோனார்பட்


3. பாமாபுரி 

 4.கனகராஜ்பட்டி 

5.கணேசபாண்டிபுரம்

ஞாயிறு, மே 06, 2012

Only in India-1

1.கரையான்சாவடி

2.நாசிக்

3.புதுச்சேரி   

4.மன்னுதி

 5.திருவனந்தபுரம்  

அன்புடன்,
பாய்.

தொழில்முறை ஆபத்துகள்
சமீப காலமாக எங்கள் பண்ணையில் புருசெல்லோசிஸ் அல்லது மால்டா பீவர் பிரச்னை மிக பெரிய அளவில் விஸ்வருபம் எடுத்துள்ளது. எங்கள் முதலாளியின் குடும்பத்தில் ஏழு பேர் ஒட்டக பால் குடித்ததால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், மேலும் ஒட்டகப்பண்ணை யில்  பணி புரியும் பணியாளர்களில் பத்து பேர், எங்கள் குதிரை பிரிவில் பணிபுரிபவர்களில் நான்கு பேர்(இவர்கள் ஒட்டகப்பால் குடித்தவர்கள்), ஆடுகள் பிரிவில் பணிபுரிபவர்களில் இரண்டு பேர் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நான் ஆறு மாதங்கள் முன்னாள் ஒட்டகப்பால் குடிப்பதை நிறுத்தி விட்டேன், என்றாலும் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதுஒட்டகப்பால் குடித்தது மட்டும் அல்லாமல், கடந்த மூன்று மாதங்களில் ஐந்து dystocia ஒட்டகங்களில் சிகிச்சை அளித்துள்ளேன், இந்த ஐந்து dystocia களுமே குட்டி இறந்து வெளியே வர முடியாததால் பிரச்னை ஆனவை, ஒரு ஒட்டகம் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டு கொண்டிருந்தது, (இரண்டு நாட்கள் காத்திருந்து அதன் பின்னரே எனக்கு சொன்னார்கள்) குட்டி மற்றும் ப்லாசெண்டா உள்ளேயே அழுகி அதை வெளியில் எடுப்பதற்குள் எனக்கு மயக்கமே வந்து விட்டது(அவ்வளவு துர்நாற்றம்). இப்படி கிட்டத்தட்ட புருசெல்லா அறிகுறிகளுடன் வந்த ஒட்டகங்களை சிகிச்சை செய்ததால் அனேகமாக எனக்குதான் முதலில் வந்திருக்கும் என முடிவே செய்து விட்டேன். இதில் சில நாட்களாக இரண்டு கால் மூட்டுக்களிலும் வலி வேறு, எனக்கு மால்டா பிவெர்தான் என முடிவே செய்து விட்டேன். அடுத்து என்ன சிகிச்சை, இங்கேயே எடுத்து கொள்வதா, ஊரில் சென்று சிகிச்சை எடுத்து கொள்வதா என பல வகையான  எண்ண ஓட்டங்கள், நமக்கு அதெல்லாம் வராது என்ற ஒரு அசட்டு துணிச்சல் என்பதை விட பிரச்னையை முகம் கொடுத்து சந்திக்க பயம் என்றுதான் சொல்ல வேண்டும், ஒரு வழியாக மனதை திட படுத்திகொண்டு மருத்துவ மனை சென்றேன், மருத்துவரிடன் எடுத்து கூறி புருசெல்லோசிஸ்-க்கான பரிசோதனை செய்ய வேண்டி கொண்டேன், அவரும் பரிசோதனை கூடத்திற்கு எழுதி கொடுத்தார், ரத்த பரிசோதனை செய்ய இருபது நிமிடங்கள் ஆகும் என்று கூறினார் அங்கிருந்த பெண், அந்த இருபது நிமிடங்கள் (விவரிக்க முடியாத கணங்கள்...) முடிந்து அவர் என்னிடம் முடிவை கொடுத்து நெகடிவ் என்று கூறியவுடன் அவரை தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தை அடக்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தேன், சந்தோஷத்தில் பறந்து வந்தது போன்ற ஒரு பீலிங்.....நாங்கெல்லாம் யாரு கொசுவுக்கே மலேரியா குடுக்குற ஆட்கள் எங்களுக்கெல்லாம் நோயாவது வர்றதாவது...என்று இப்ப சொல்லிக்கிட்டு திரியறேன்...போன வாரம் பூரா நடுங்கிகிட்டு திரிஞ்சது எனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்.....

கரையான்.

(யாருப்பா பிளாக் செட்டிங்கை  மாற்றியது, பிளாக் உல் நுழைய வழி கண்டு பிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.)

புதன், மே 02, 2012

செவ்வாய், மே 01, 2012

செல் போன்

சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்றானான அலை
 பேசி நம்மிடையே உண்டாக்கியுள்ள மன நோய்களும் அதனால்
 உண்டான பிரச்னைகளும் பலப்பல. சமீபத்தில் ஆவடியில் இருவர் செல் போன் பேசிக்கொண்டே தொடர்வண்டி 
பாதையை (railway track) கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக செய்திகளில் 
வந்தது. அவர்களுக்கு அப்படி என்ன அவசரம் அலைபேசியில்
 பேசிக்கொண்டே ரயில் வருவது கூட தெரியாமல் செல்ல. எமனிடமிருந்து அழைப்பு வந்திருக்குமோ என்னவோ. நம் நண்பர்  பாபு அவரை சந்திக்க என்னை அழைத்திருந்தார், நம் கல்லூரி காண்டீனில் சந்தித்தோம்,  அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது, அதில் ஐம்பத்து ஐந்து நிமிடம் அவர் அலை பேசியில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு
 இருந்தார், ஒரு ஐந்து நிமிடம் அளவுதான் என்னிடம் பேசினார். கடைசியாக நான் அவரிடம் நான் வேண்டுமென்றால் உன்னை அலை பேசியில் அழைக்கவா எதிரெதிரே நாம் இருவரும் உட்கார்ந்து கொண்டு அலை பேசியில் இருவரும் ் பேசி கொண்டு  இருக்கலாமா என்றேன். 
இன்னொரு நண்பர் என்னை சந்திக்க அழைத்தார், நான் அவரிடம் ஒரு 
கண்டிஷன் போட்டேன் 
அதாவது அவர்  அலை பேசியை எங்கள் சந்திப்பு முடியுவரை ஆப் செய்து வைக்க வேண்டும் என்று ஆனால் அவர் சைலென்ட் -ல் வைப்பதாக கூறினார், நானும் ஒப்புக்கொண்டேன், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய போனை
 நிமிடத்திற்கு ஒருமுறை எட்டி எட்டி பார்த்து கொண்டே இருந்தார்,எதாவது அழைப்பு வருகிறதா என்று , ஐயா நீங்க ஜெனரல் mode -லேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டேன், 
அவர் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் செய்து கொண்டு இருந்தார்.
சென்னையில் பல முறை நான் வண்டி ஓட்டும்போது பார்த்திருக்கிறேன், 
நடைபாதையில் செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும்
 அலைபேசியில் FM station- ல் பாட்டு கேட்டு கொண்டே செல்வதால் நாம் என்னதான் ஒலிப்பான் அடித்தாலும் கண்டு 
கொள்ளாமல் செல்வார்கள்.  இப்போது மனவியலார்கள் ஒரு நாளில் குறைந்தது ஒரு  மணி நேரமாவது அலைபேசியை நிறுத்தி  வைக்குமாறு  அறிவுறுத்துகிறார்கள். நான் தூங்கும்போது அலை பேசி அடித்தால் நான் அடித்து பிடித்து கொண்டு எழுந்திருப்பதாக என் மனைவி கூறுகிறாள், இதுவும் மன வியாதிதான். 
எனக்கு வரும்  அழைப்புகள் எங்கள் பன்னையிளிருந்தும் நண்பர்களிடமிருந்தும் மட்டுமே 
அப்படி இருந்தும் என் நிலை இப்படி என்றால்
 சொக்கன் நிலைமை சொல்லவே வேண்டாம்,
நான் இதற்கு முன்னர் ஒரு மருத்துவ மனையில் வேலை செய்யும்போது இரவு 
பகல் என்று எப்போதும் என் போன் அழைத்து கொண்டே இருக்கும் நானும் 
சளைக்காமல் அழைப்புகளுக்கு பதில் சொல்வேன். அந்த வேலையை விட்டு 
அடுத்த வேலைக்காக காத்திருக்கும் பொது  சில வேளைகளில் அலை பேசி
 கையில் இல்லாத  நேரங்களிலும் கூட அழைப்பு சத்தம்  காதில் கேட்கும்.

கரையான்.