சவுதி அரசின் விவசாயத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இப்போது நான்
இருபத்தைந்து
ஒட்டகங்களுக்கு புருசெல்லோசிஸ் -க்கான சிகிச்சை அளித்து வருகிறேன், ஒவ்வொரு ஒட்டகத்துக்கும் terramycin LA 75 ml மற்றும் streptomycin 50 ml ஒரு நாள் விட்டு ஒரு நாள் அளித்து வருகிறேன். ஊசி கொடுக்கும் எனக்கே மிக கஷ்டம் என்றால் ஊசி போட்டுக்கொள்ளும் ஒட்டகங்களின் நிலை சொல்லவே வேண்டியதில்லை.
என்னுடன் இரண்டு உதவியாளர்களையும் ஊசி கொடுக்க என்னுடன் அழைத்து செல்வேன், அதில் ஒருவர் பாகிஸ்தானி, முதலிலேயே அவர்கள் இருவருக்கும் கையுறை, மூக்குறை (mask) அணிய வேண்டும் என்று கூறினேன், மேலும் ஊசி கொடுத்தபின் ஊசியின் மேல் இருக்கும் கவர்-ஐ (needle cap) திரும்ப அணிவிக்க வேண்டாம் என்று கூறினேன், ஏனெனில் ஒரு சில சமயங்களில் ஊசியின் மேல் கவர் அணிவிக்க முயலும் பொது
ஊசி கையில் குத்த வாய்ப்புள்ளது. இவ்வளவு சொல்லிய பிறகும் என்னுடன் இருந்த பாகிஸ்தானி கையில் உறை அணியாமல் ஊசி கொடுத்து கொண்டு இருந்தார்., சில ஒட்டகங்களுக்கு கொடுக்கும்போது ரத்தம் வெளியேறும் அதன் மூலம் நமக்கும் கிருமி தோற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று எடுத்து கூறினேன், அவனோ "அல்லா கரீம்(கடவுளின் செயல்) டாக்டர் சாப்" என்று கூறினான், அதற்குமேல் நான் ஏதும் சொல்ல வில்லை. சிறிது நேரத்தில் "டாக்டர் சாப் ஊசி கையில் குத்தி விட்டது" என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான், அவன் உள்ளங்கையில் இருந்து ஏகப்பட்ட ரத்தம் "ஏதாவது செய்ய முடியுமா என்றான்" ஒன்றும் செய்ய இயலாது மருத்துவ மனை சென்று antibiotic மருந்துகள்தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். ரொம்பவும் தெனாவட்டாக நான் சொல்லிய எதையும் பின் பற்ற விரும்பாமல்
செய்ததால் வந்த வினை. ஒட்டகத்திற்கு ஊசி கொடுத்தபின் ஊசியின் கவரினால் மூட எத்தனிக்கும்போது கையில் குத்தி விட்டது அதுவும் ஆழமாக. இன்னும் சில நாட்களில் தெரியும் அவனுக்கு ப்ருசெல்லா positive -ஆ இல்லையா என்பது.
கரையான்
பாகிஸ்தானிக்கு,நேர்ந்த அதே கதி எனக்கும் சென்ற மாதம் ஒரு ஆட்டில் ஏற்பட்டது.
பதிலளிநீக்குநல்ல வேலை,அந்த ஆடு ப்ருசெல்லா நெகடிவ்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
குறிப்பு:எம் கரையானுக்கு தேவையில்லாத வேலை கொடுக்கும்,சவூதி அரசின் விவசாயத் துறை குறித்து ஓ.ஐ.ஈ. யில் புகார் கொடுக்கலாமா?
பாய்.
Karaiyan..Bhai..
நீக்குPls ensure enough protections and precautions before treating such type of cases
Chocks
Be careful Karayaan and bhai...
பதிலளிநீக்குYour occupation is hazardous!
Gujili