ஞாயிறு, மே 06, 2012


தொழில்முறை ஆபத்துகள்
சமீப காலமாக எங்கள் பண்ணையில் புருசெல்லோசிஸ் அல்லது மால்டா பீவர் பிரச்னை மிக பெரிய அளவில் விஸ்வருபம் எடுத்துள்ளது. எங்கள் முதலாளியின் குடும்பத்தில் ஏழு பேர் ஒட்டக பால் குடித்ததால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள், மேலும் ஒட்டகப்பண்ணை யில்  பணி புரியும் பணியாளர்களில் பத்து பேர், எங்கள் குதிரை பிரிவில் பணிபுரிபவர்களில் நான்கு பேர்(இவர்கள் ஒட்டகப்பால் குடித்தவர்கள்), ஆடுகள் பிரிவில் பணிபுரிபவர்களில் இரண்டு பேர் என பலரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நான் ஆறு மாதங்கள் முன்னாள் ஒட்டகப்பால் குடிப்பதை நிறுத்தி விட்டேன், என்றாலும் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டதுஒட்டகப்பால் குடித்தது மட்டும் அல்லாமல், கடந்த மூன்று மாதங்களில் ஐந்து dystocia ஒட்டகங்களில் சிகிச்சை அளித்துள்ளேன், இந்த ஐந்து dystocia களுமே குட்டி இறந்து வெளியே வர முடியாததால் பிரச்னை ஆனவை, ஒரு ஒட்டகம் கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக கஷ்டப்பட்டு கொண்டிருந்தது, (இரண்டு நாட்கள் காத்திருந்து அதன் பின்னரே எனக்கு சொன்னார்கள்) குட்டி மற்றும் ப்லாசெண்டா உள்ளேயே அழுகி அதை வெளியில் எடுப்பதற்குள் எனக்கு மயக்கமே வந்து விட்டது(அவ்வளவு துர்நாற்றம்). இப்படி கிட்டத்தட்ட புருசெல்லா அறிகுறிகளுடன் வந்த ஒட்டகங்களை சிகிச்சை செய்ததால் அனேகமாக எனக்குதான் முதலில் வந்திருக்கும் என முடிவே செய்து விட்டேன். இதில் சில நாட்களாக இரண்டு கால் மூட்டுக்களிலும் வலி வேறு, எனக்கு மால்டா பிவெர்தான் என முடிவே செய்து விட்டேன். அடுத்து என்ன சிகிச்சை, இங்கேயே எடுத்து கொள்வதா, ஊரில் சென்று சிகிச்சை எடுத்து கொள்வதா என பல வகையான  எண்ண ஓட்டங்கள், நமக்கு அதெல்லாம் வராது என்ற ஒரு அசட்டு துணிச்சல் என்பதை விட பிரச்னையை முகம் கொடுத்து சந்திக்க பயம் என்றுதான் சொல்ல வேண்டும், ஒரு வழியாக மனதை திட படுத்திகொண்டு மருத்துவ மனை சென்றேன், மருத்துவரிடன் எடுத்து கூறி புருசெல்லோசிஸ்-க்கான பரிசோதனை செய்ய வேண்டி கொண்டேன், அவரும் பரிசோதனை கூடத்திற்கு எழுதி கொடுத்தார், ரத்த பரிசோதனை செய்ய இருபது நிமிடங்கள் ஆகும் என்று கூறினார் அங்கிருந்த பெண், அந்த இருபது நிமிடங்கள் (விவரிக்க முடியாத கணங்கள்...) முடிந்து அவர் என்னிடம் முடிவை கொடுத்து நெகடிவ் என்று கூறியவுடன் அவரை தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்ற வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தை அடக்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தேன், சந்தோஷத்தில் பறந்து வந்தது போன்ற ஒரு பீலிங்.....நாங்கெல்லாம் யாரு கொசுவுக்கே மலேரியா குடுக்குற ஆட்கள் எங்களுக்கெல்லாம் நோயாவது வர்றதாவது...என்று இப்ப சொல்லிக்கிட்டு திரியறேன்...போன வாரம் பூரா நடுங்கிகிட்டு திரிஞ்சது எனக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம்.....

கரையான்.

(யாருப்பா பிளாக் செட்டிங்கை  மாற்றியது, பிளாக் உல் நுழைய வழி கண்டு பிடிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.)

5 கருத்துகள்:

  1. படிக்கப் படிக்க ,எனக்கே வயிற்றை கலக்கியது.
    நெகடிவ் என்ற வார்த்தையை கண்டவுடன் தான் நிம்மதி.
    வாழ்க ஆரோக்கியத்துடன்,
    பாய்.

    பதிலளிநீக்கு
  2. மருத்துவமனையில் சாம்பிள் கொடுத்து முடிவுகளுக்கு காத்திருப்பது நமக்கு மட்டுமன்றி நெருங்கிய உறவுகளுக்கும் மரண வேதனை தான் .

    அதுவும் யாராவது மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும்போது உடன் தங்க நேர்ந்தால் காணக் கிடைக்கிற காட்சிகள், பக்கத்துக்கு படுக்கையில் இருக்கிற நோயாளிகள் படுகிற வேதனைகள், காத்திருக்கிற சொந்தங்கள் படுகிற துயரங்கள் ,பெரும்பாலும் நோயாளியிடம் நின்று நிதானமாய் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் nursing sisters க்கு மட்டும் புரியாத மொழியில் instruction கொடுக்கும் தலைமை மருத்துவர்கள் ,தவிர்க்க முடியாத உயிர் இழப்புகளில் பெருங்குரலெடுத்து அழுகின்ற மனைவி குழந்தைகள் எல்லாமே படிப்பினைகள்.

    காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்பதன் சரியான அர்த்தம் தெரிய வேண்டுமென்றால் அரசு மருத்துவமனை வார்டுகளுக்கு ஒரு விசிட் போய் வந்தால் தெரிந்துவிடும்.

    கரையான் இனி ரொம்பவும் ஜாக்கிரதையாக தகுந்த பாதுகாப்புடன் ஒட்டகங்களை treat செய்யவேண்டும்.

    ஆரோக்கிய வாழ்விற்கு வாழ்த்துக்கள்
    Chocks

    பதிலளிநீக்கு
  3. Karayaan - This is quite freaky!! Perhaps you should get vaccinated against brucellosis though at this point you may have antibodies against it because of your frequent exposure. I am so sorry to hear these occupational hazards that you are subjected to endure. Find a job else where and get the heck out of there!
    Gujili

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Gujili,
      There are no vaccines, even for camels we must use the sheep vaccine(without knowing the effectiveness) and that may be useful only if given in young animals(within 3 months of age). The most difficult problem is no one is taking it seriously. The laboratory also is unable to give a confirmatory result, i sent the same sample to three different labs, everyone gave different results. I cant blame the lab but how to convince the owner that a particular animal is positive. So i decided that i shall tell them that i quit or stop working in camels. Right now we are treating 25 camels which were positive in at least one of the labs with 75ml terramycin LA and 50ml Streptomycin on alternate days for a month, this treatment schedule has been given by the Ministry of Agriculture Saudi Arabia.
      Karaiyan.

      நீக்கு
  4. I am aware of the lack of vaccination but I think trials are in progress based on my reading. Hopefully you can find a better job out there or back home.
    Gujili

    பதிலளிநீக்கு