சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்றானான அலை
பேசி நம்மிடையே உண்டாக்கியுள்ள மன நோய்களும் அதனால்
உண்டான பிரச்னைகளும் பலப்பல. சமீபத்தில் ஆவடியில் இருவர் செல் போன் பேசிக்கொண்டே தொடர்வண்டி
பாதையை (railway track) கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்ததாக செய்திகளில்
வந்தது. அவர்களுக்கு அப்படி என்ன அவசரம் அலைபேசியில்
பேசிக்கொண்டே ரயில் வருவது கூட தெரியாமல் செல்ல. எமனிடமிருந்து அழைப்பு வந்திருக்குமோ என்னவோ. நம் நண்பர் பாபு அவரை சந்திக்க என்னை அழைத்திருந்தார், நம் கல்லூரி காண்டீனில் சந்தித்தோம், அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது, அதில் ஐம்பத்து ஐந்து நிமிடம் அவர் அலை பேசியில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தார், ஒரு ஐந்து நிமிடம் அளவுதான் என்னிடம் பேசினார். கடைசியாக நான் அவரிடம் நான் வேண்டுமென்றால் உன்னை அலை பேசியில் அழைக்கவா எதிரெதிரே நாம் இருவரும் உட்கார்ந்து கொண்டு அலை பேசியில் இருவரும் ் பேசி கொண்டு இருக்கலாமா என்றேன்.
இன்னொரு நண்பர் என்னை சந்திக்க அழைத்தார், நான் அவரிடம் ஒரு
கண்டிஷன் போட்டேன்
அதாவது அவர் அலை பேசியை எங்கள் சந்திப்பு முடியுவரை ஆப் செய்து வைக்க வேண்டும் என்று ஆனால் அவர் சைலென்ட் -ல் வைப்பதாக கூறினார், நானும் ஒப்புக்கொண்டேன், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அவருடைய போனை
நிமிடத்திற்கு ஒருமுறை எட்டி எட்டி பார்த்து கொண்டே இருந்தார்,எதாவது அழைப்பு வருகிறதா என்று , ஐயா நீங்க ஜெனரல் mode -லேயே வைத்துக்கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டேன்,
அவர் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் செய்து கொண்டு இருந்தார்.
சென்னையில் பல முறை நான் வண்டி ஓட்டும்போது பார்த்திருக்கிறேன்,
நடைபாதையில் செல்வோர், இரு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும்
அலைபேசியில் FM station- ல் பாட்டு கேட்டு கொண்டே செல்வதால் நாம் என்னதான் ஒலிப்பான் அடித்தாலும் கண்டு
கொள்ளாமல் செல்வார்கள். இப்போது மனவியலார்கள் ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரமாவது அலைபேசியை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். நான் தூங்கும்போது அலை பேசி அடித்தால் நான் அடித்து பிடித்து கொண்டு எழுந்திருப்பதாக என் மனைவி கூறுகிறாள், இதுவும் மன வியாதிதான்.
எனக்கு வரும் அழைப்புகள் எங்கள் பன்னையிளிருந்தும் நண்பர்களிடமிருந்தும் மட்டுமே
அப்படி இருந்தும் என் நிலை இப்படி என்றால்
சொக்கன் நிலைமை சொல்லவே வேண்டாம்,
நான் இதற்கு முன்னர் ஒரு மருத்துவ மனையில் வேலை செய்யும்போது இரவு
பகல் என்று எப்போதும் என் போன் அழைத்து கொண்டே இருக்கும் நானும்
சளைக்காமல் அழைப்புகளுக்கு பதில் சொல்வேன். அந்த வேலையை விட்டு
அடுத்த வேலைக்காக காத்திருக்கும் பொது சில வேளைகளில் அலை பேசி
கையில் இல்லாத நேரங்களிலும் கூட அழைப்பு சத்தம் காதில் கேட்கும்.
கரையான்.
அலை பேசியின் வரவு ஆரம்பத்தில் வசதியாக சுகமாகவே இருந்தது.
பதிலளிநீக்குநிலைபேசியின் அழைப்புக் கட்டணத்தை விட அலைபேசியில் அதிகம்.இன்கமிங் அழைப்புகளுக்கும் கட்டணம் என்ற வரையில் எல்லோருமே அத்தியாவசத்திர்க்கு மட்டும் அலை பேசியை உபயோகப்படுத்தி வந்தோம். இன்றைய நிலை ..? எனது பெண் படிக்கும் பள்ளிக் கூடத்தில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் நிறைய பெற்றோர் தங்களின் பிள்ளைகள் நிறைய நேரம் அலை பேசியில் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருப்பதாக குறை கூறிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் இந்த விஷயத்தில் மாணவர்களுக்குப் போதனை செய்வதாகக் கூறியது ..நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியது .எங்களது கிராமத்தில் டிரன்க் கால் பதிவு செய்து exchange ஊழியர்களின் தயவில், கரகரப்பான ஒலியில் திருநெல்வேலியில் இருக்கிற பெரியப்பாவிடமும் ,அம்பாசமுத்திரம் மாமாவிடமும் பேசிய போது கிடைத்த பரவசம் இப்போது முகம் பார்த்துக்கொண்டே 3G அழைப்பில் அமெரிக்காவில் இருக்கும் உறவுகளிடம் பேசும் போது வருவதில்லை. எல்லாமே எளிதாகக் கிடைக்கும் போது என்ன கிடைத்து விடப் போகிறது ..?
இது ஒரு பக்கம் என்றால் கரையான் சொல்லுவது போல அலை பேசி சிணுங்கும் போது அட்ரீனலின் சுரக்க ஆரம்பித்து ஒரு பதற்றம் வருவது தவிர்க்க முடியாதபடி ஆகிவிட்டது .அழைப்பது மேலதிகாரியா, கஸ்டமரா ,sub ordinate ஆ (இதற்க்கு சரியான தமிழ் சொல் என்ன?),மனைவியா ,பிள்ளைகளா, உறவினர்களா, நண்பர்களா இல்லை வங்கி லோன் ,கடன் அட்டை வியாபாரிகளா,விளம்பரமா என்று அலை பேசியை எடுத்துப் பார்த்து தெரிந்து கொள்ளுவதர்க்குள் மண்டை காய்ந்து விடுகிறது. இதில் கூப்பிட்டவர் மேலதிகாரியாக கஸ்டமராக இருக்கிற பட்சத்தில் ரொம்ப நேரம் திருப்பி அழைக்காமல் இருக்க முடியாது. நாம் திருப்பி அழைக்கிற சமயத்தில் அவர்கள் அழைப்பை ஏற்க வில்லை என்றால் இன்னும் குடைச்சல் தான் .இதில் இடையில் நல்ல அழைப்பு இசை ஒலிகளை எனது அலை பேசியில் வைத்திருந்து அந்தப் பாடல் இசை எங்கு எப்போது கேட்டாலும் அலை பேசியை எடுத்து பார்க்கும் பரபரப்பில் பாடலின் மீது இருந்த ஈர்ப்பு போய் எரிச்சல் வர ஆரம்பித்து விட்டது .அதனால் எனது அலைபேசியில் இப்போது ட்ரிங் ட்ரிங் அழைப்பு ஒலிதான்.
இன்னும் இதைப் பற்றிப் பேச நிறைய பாக்கங்கள் தேவை என்பதால் எனது புலம்பல்களை தற்காலிகமாக நிறுத்தி கொள்ளுகிறேன் .
சொக்ஸ்
I would have to agree with Karayaan's cell phone pulambalgal; I think that when a person is having a conversation with another one, it is extremely rude to be on the cell phone; To me it indicates that the one on the cell phone does not have respect for the other. I can't stand that! As Chocks says in classes it is annoying when students are constantly yapping on it. I have a strict policy against cell phone usage of any sort, be it texting, tweeting or facebooking. If I find a student using their cell phone I automatically deduct 10 points from their next exam. We actually have laws in PA about texting and driving or talking on the phone and driving. One can get a hefty ticket for that offense. Unfortunately people don't spend quality time with others and get killed in the process of yapping and not paying attention as you have nicely described. I rarely use my phone, only when it is absolutely necessary. I always look at it this way if the phone rings and I can't talk, and if the call is important, the person can leave a message and I can always return their call at my convenience. Because of cell phones employers expect their employees to be on call 24/7 which is unacceptable. Gone are the days when you came home ate a good meal with the family spent time and made time for each other; instead we are constantly bombarded by noise and music and TV and all sorts of nonsense. I can't stand it!
பதிலளிநீக்குGujili
subordinate = கீழ்நிலை ஊழியர்
பதிலளிநீக்குBHAI.
கீழ்நிலை ஊழியர் seems to be little awkward.There must be some decent word in Tamil like இளநிலை உதவியாளர் for Junior asst.
பதிலளிநீக்குChocks
subordinate என்பதை உடன் பணி புரிவோர் என்றே சொல்லலாமே, சொக்கன் போன்ற சிறந்த மேலாளர்கள் தங்கள் கீழே பணி புரிவோரை தனக்கு சமமாகவே கருதுவார்கள் ஆகவே உடன் பணிபுரிவோர் என்பதே சரியான சொல்லாக இருக்கும். அது என்ன பார், அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதவும்...
நீக்குகரையான்.
பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு அலைபேசி வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன வென்று தெரிய வில்லை. ஒரு மருத்துவர் அல்லது அது போன்ற துறை(அவசரப்பணிகள்)களில் பணி புரிவோர் அலை பேசி வைத்திருப்பதில் நியாயம் உண்டு, மாணவமணிகளுக்கு அப்படி என்ன தலை போகும் காரியங்கள் இருக்கிறது.
பதிலளிநீக்குkaraiyan.
நான் எழுதியது தான் சரி.
பதிலளிநீக்குஅரசுப் பணியில்,பக்கம் பக்கமாக கடிதங்கள் எழுதியுள்ளேன்.
www.tamildict.com
பாய்.