செவ்வாய், ஜனவரி 31, 2012

nanri

சொல்லி கொடுத்ததற்கு மிகவும் நன்றி குமரன்.
அடுத்த கெட்டோகேதேர் எப்போ?
மிகவும் ஆவலாக உள்ளோம். நீங்கள் எல்லாம் இந்தியா
வரும்போது இருந்தால் நன்றாக இருக்கும்
அன்புடன் பாமா . 
  


  

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
> வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
> சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
> என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
> காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
> சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
> கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
> பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
> சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
> அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
> பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
> கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
> குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
> மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
> கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
> அழுவதும்... அணைப்பதும்...
> கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
> இடைகிள்ளி... நகை சொல்லி...
> அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
> இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
> எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
> என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?
> கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
> 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
> 4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
> 2 வருடமொருமுறை கணவன் ...
> நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
> இது வரமா ..? சாபமா...?
> அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
> கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
> நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
> நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்
> திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
> விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
> தேவை அறிந்து... சேவை புரிந்து...
> உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
> தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
> வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
> இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
> இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
> பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
> தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
> எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
> இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
> விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
> பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
> நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
> அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
> விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
> பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
> பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
> வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
> ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
> உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
> விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்...
> கிழித்துவிடு!
> விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
> (இல்லையேல் விவாக ரத்து
Courtesy Facebook

திங்கள், ஜனவரி 30, 2012

இங்கிலாந்தில் நான் .....

பீர் அவர்களின் வீட்டுக்கு தொடர்வண்டியில் செல்லும்போது எடுத்த புகைப்படம்..நம் ஊர் தொடர்வண்டி நிலையங்களும் இப்படி சுத்தமாக காட்சி அளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கு என்ற ஏக்கத்தை ஏற்படுத்தியது...
இந்த பயிற்சி வகுப்பிலும் கூட எனக்கு கடைசி வரிசைதான் கிடைத்தது(நம் ராசிக்கு எப்போதும் கடைசி வரிசைதான் போல...மாப்பிள்ளை பெஞ்ச்....)எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண் டென்மார்க் நாட்டை சேர்ந்தவள்...எதையாவது தின்று கொண்டே இருந்தாள் அல்லது தூங்கி விழுந்து கொண்டிருந்தாள். அவளிடம் ஏன் இப்படி தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாய் என்றேன்... அவள் அதற்கு தனக்கு மூன்று குழந்தைகள், தன் பாய் பிரண்டிற்கு இரண்டு குழந்தைகள், இதுவல்லாமல் ஆறு குதிரைகள் மற்றும் அவளுடைய கிளினிக் என அனைத்தையும் கட்டி மேய்ப்பதால் ஓய்வெடுக்க நேரம் கிடைப்பதில்லை அதனால்தான் இங்கு தூங்கி வழிகிறேன் என்றாள்... தூங்கி வழிகிறாளே என்று அவளுக்கு சூயங் கம் கொடுத்தேன் அதை வாங்கி மென்று, சூயங் கம்மில் முட்டை ஊத்தி டப் டப் என்று வெடித்து கொண்டி இருந்தாள்(லெக்சர் நடக்கும்போது) அவள் பாட்டுக்கு சும்மா தூங்கிகிட்டு இருந்தவள எழுப்பி ஏண்டா சூயங் கம் கொடுத்தோம் என்று நொந்து கொண்டேன்... இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனோர் ஐரோப்பா அமெரிக்காவை சேர்ந்தவர்கள் அவர்களில் பலரும் பகல் முழுதும் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு இரவு முழுதும் நன்றாக குடித்து கும்மாளம் அடித்து விட்டு வகுப்பில் வந்து குறட்டை விட்டு  கொண்டிருந்தார்கள்...(வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்....)

கரையான்.

சனி, ஜனவரி 28, 2012

நான் சொல்லுதேன்!


டேய்...பேர் இல்லாத பிச்சை,
எழுதினாய் கவிதை மெச்ச,
உன்னை பாராட்ட நினைச்சு,
கட்டினேன் இடுப்பில் கச்சை!
பாய்.

வியாழன், ஜனவரி 26, 2012

....வெளங்காதவன்....

தரையன் கங்கச்சி....


பல்லு போனாலும் சொல்லு போனாலும் 
தேவைபடுது செல்லு 
தாங்க முடியல   உன் லொள்ளு 
அடிக்க முடியல உன் கூட மல்லு 
போட்டிருக்கலாம்   படத்தில் அழகான மல்லு 
கிக்கு தர்ற மார்ரி விதௌட் பல்லு
நீ போட்டதோ விதௌட் பல்லு 
பார்த்ததும் தேவை படுத்து ப்புள்ளு
வாங்கபோன   கூட்டத்துல தள்ளு முள்ளு













y  திஸ் கொலைவெறி ?
b 'coz  ஒப் diz  கிழவிட்ரி...   



விசாரித்ததில் தெரிந்த உண்மை 
கரையான்  தங்கச்சி... 
படம் நெட்ல  செம ஹிட்டு ஆகி
அடுத்த தனுஷ் படத்துல நாயகியாக 
 நடிக்க ஒப்பந்தமாகி விட்ட
சந்தோஷத்த கொண்டாட ரசிக கோடிகள்
 டாஸ்மாகில் குடித்து 
 குவித்த கோடிகள்
 பல கோடி 

 p .s 
..........முதல்லேயே கவித எழுதிருந்தா ஹீரோ வாய்ப்பாவது   கிடைச்சிருக்கும் .........ஹ்ம்ம்மம்ம்ம்ம்..... 
வெளங்காதவன்....

புதன், ஜனவரி 25, 2012

England visit


இங்கிலாந்தில் நியூ மார்க்கெட் -ல் உள்ள jockey club rooms மிகவும் புகழ் வாய்ந்த கலைக்கூடங்களில் ஒன்று குதிரை வர்த்தகம் சம்பந்தமான விலை உயர்ந்த பழமையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது , எனக்கு பின்னால் இருக்கும்  பெய்ண்டிங் "Eclipse" என அழைக்கப்படுகிறது, இதன் மதிப்பு பல மில்லியன் பவுண்டுகள் என்று கூறுகிறார்கள். இந்த கலைக்கூடத்தின்  சிறப்பம்சம் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் எப்படி இருந்ததோ அதே நிலையில் இன்றும் பராமரிக்கப்படுகின்றது. இந்த இடம் பிரமிப்பை ஏற்படுத்தியது என்றால் மிகை ஆகாது....

கரையான்.

செவ்வாய், ஜனவரி 24, 2012

பயிற்சியின் போது பாய்!




செந்திலுக்காக .......

நம்ம செந்திலு கோபத்தை தணிக்க அவருக்காக ஒரு அழகான  பெண்ணின் படத்தை பிரசுரித்தே ஆக வேண்டிய கட்டாயம். ஆகவேதான் இந்த புகைப்படம்....இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அவருக்கு கவிதை கொட்டோ கொட்டு என்று கொட்டப்போகிறது....நண்பர்களே நண்பிகளே தயாராக உஷாராக இருங்கள்.....சொக்கன் கூட கவிதை எழுதலாம்....(செந்தில் அளவுக்கு புலமை இருந்தால்....)


கரையான்.

திங்கள், ஜனவரி 23, 2012

பொங்கலோ பொங்கல்!!!

சேர்த்தது,
பாய்.

கலக்கல் 'கட்ஸ்'

பயிற்சியின் பொது ,கலக்கலாக கிளாஸ் எடுத்தான் ,நம் நண்பன் -T.M.A.செந்தில் குமார் .படிக்கும் போதே,'படிப்ப்ஸ்' கோஷ்டியை சேர்ந்தவன்.செம சப்ஜெக்ட்.
பீ.சி.ர். ன்,ப்ரின்சிப்ளை ,நல்ல புரியும்படி ,எனக்கு சொல்லி தந்தான்.
நன்றி!நன்றி~

அன்புடன்,
பாய்.

பரபரப்பான விற்பனையில்.............

அபூர்வ காலண்டர் 


பீர் குடும்பத்துடன்....

இங்கிலாந்து விஜயத்தின் மிக மகிழ்ச்சியான அனுபவம் என்றால் அது நண்பர் பீர் அவர்களின் வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் கழித்த அந்த தருணங்கள்தான்.பீர் மகள் அப்படியே என்னுடைய சிறிய மகள் அக்ஷயாவின் ஒவ்வொரு அசைவுகளையும் நினைவு படுத்திக்கொண்டே இருந்தாள். சல்மான் மற்றும் சாத் techies என்றுதான் சொல்ல வேண்டும், சாத் எனக்கு i-pad லேட்டஸ்ட் வர்ஷன் பற்றி வகுப்பு எடுத்து கொண்டு இருந்ததை ஒரு வெள்ளைக்கார பெண்மணி விநோதமாக பார்த்து புன்முறுவல் பூத்தாள். சிறியவர் சித்திக் இவர்கள் எல்லோரையும் விடவும் அறிவாளி. அவர் கம்ப்யூட்டர்-ல் நுணுக்கமான விஷயங்களை லாவகமாக கையாளும் விதம் வியக்க வைத்தது. என்ன ஒரே ஒரு கஷ்டம் என்றால் அவர்கள் பேசும் ஆங்கிலம் புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டம்தான் வெள்ளைக்காரர்கள் மாதிரியே அக்சென்ட் (ஜாகிர் எப்படித்தான் பத்துநாள் சமாளித்தானோ தெரியவில்லை). 
முந்திய நாள் இரவு சாப்பிட்ட பிட்சா வயிற்றை கலக்கி எடுத்திருந்தாலும் சிக்கன், மட்டன் மற்றும் இறால் என்று ஒரு வெட்டு வெட்டினேன் திருமதி பீர் அவர்களுக்கு நன்றி. 
என்னோடவகுப்பு தோழியரில் ஒருவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் இவருடைய  அம்மா கேரளா தந்தை ஜெர்மனி நாட்டவர். நம்ம கலருக்கு கொஞ்சம் பக்கம் என்பதால் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

கரையான்.

சனி, ஜனவரி 21, 2012

Dr.Porchezhiyan...


குஜிலி அவர்களுக்காக இந்த புகைப்படம்..........

டாக்டர் பொற்செழியன், கண்ணன் மற்றும் டாக்டர் குணசீலன்....

கரையான்.

வியாழன், ஜனவரி 19, 2012

எங்கள் தலைவர் கலைஞர் கவிஞர் வள்ளல் ராசா செந்தில் அவர்களுக்கு...

திருநெல்வேலி  தங்கமே.....வைரமே....வைடுரியமே...
கைக்காசை தண்ணியாக வாரி வழங்கும் வள்ளலே...
ஊர்மெச்சும் உன்கவிதை.....
ஆஸ்கர் நோபல் அனைத்தும் உன்காலடியில் 
உன் கவிதைக்கு அடிமை நாங்கள்....
கவிதை எழுதுவதை நீ நிறுத்தினால்
உண்ணுவதை நிறுத்திடுவோம்....
வரவேண்டும் நீ உன் கவிதையுடன்....
வராவிட்டால் தீக்குளிப்போம் அனைவரும்....

இப்படிக்கு.....

கரையான்.(சென்னை நட்சத்திரங்கள் சார்பாக)

idharku melum........

kumaran matrum bhai ..
appappo gujili
thavira yarum
 respond pannadha
 indha padhivai
 inimelum thodara venduma
yendru ninaika vendi
ulla padiyaal
konja naalaikku
oivil sellalam
yendru ninaikiren
...bye

புதன், ஜனவரி 18, 2012

கண்ணா....லட்டு திங்க ஆசையா.....


சமீபத்துல இங்கிலாந்துல என்னோட கூட  படிச்ச கிளாஸ்மேட்ஸ்

மேலும் எழுத நிறைய இருக்கு....எழுதுவேன்....

கரையான்.

வெள்ளி, ஜனவரி 13, 2012

vali

பிரயாசை பட்டு... 
கடன் வாங்கி புதிதாய் 
ஹோண்டா சிட்டி 
வாங்கியாயிற்று !
எல்லோரும்
புது வண்டி வாசனையோடு 
பிள்ளையாரை பார்த்து
பூஜை போட்டு
புதிதாய் பிறந்த
குழந்தை போல்
தினம் தினம் ஆராதித்து 
மகிழ்ந்ததை சொல்லி மாளாது 
......வந்தது முதல் நெடும் பயணம் 
வழுக்கிக் கொண்டு
நாற்கர சாலையில் ஓடியது 
மனம் குழந்தையானது! 
உலகில் எல்லோரும் 
எங்களையே பாரப்பதாய்
தோன்றியது பிரமிப்பாய்...! 
ஆனந்தத்திற்கு அளவே இல்லை 
முந்நூறு மைல் தூரம்...
போனதே தெரியவில்லை 
ஊர் சேர்ந்து வேண்டுமென்றே 
சுற்று வழியில்  
எல்லாத்த் தெருவும் 
வலம் வந்து வீடு சேர்ந்து 
எல்லோரும் பார்த்து பார்த்து 
பேசி, தொட்டு, தடவி, உக்கார்ந்து,
ஓட்டி, சிலாகித்து பேசி 
மனம் லயிதாயிற்று ...
...மாலையில் தூசி தட்டி 
பார்த்து பார்த்து  
மிருதுவான துணியால் 
சுற்றி வந்து துடைத்து பின் 
முன்னால் வந்து
குனிந்து துடைத்த போது
வடிந்தது கணத்தில்...
அத்தனை  சந்தோஷமும்
காற்றிழந்த பலூனைப் போல 
கனத்தது மனம்...
ரேடியட்டர் வலையில்
மாட்டி உயிர் விட்டு 
ஒட்டிக் காய்ந்து போன 
பட்டாம் பூச்சிகளைப்
பார்த்த பொழுது  

திங்கள், ஜனவரி 09, 2012

பிணைப்பிற்கு ஒரு பாண்டு

சென்ற போஸ்டிங்கில்,கூறிய படி ,சென்ற மாதம் தாயகம் சென்றிருந்த வேளையில்,அன்பு நண்பன் 'பாண்டு' அவனது துறையில் ,எனக்கு பீ.சீ.ஆர். ,மிக நேர்த்தியாக கற்றுத் தந்தான்.
 பீ.சீ.ஆர். இல் ,மட்டுமல்ல ,கால்நடை உயிர் தொழில் நுட்பவியல் துறையில்,அவன் ஒரு கை தேர்ந்த 'ஆசிரியர்'.
கிட்டத்தட்ட ,மூன்று நாட்கள் .கால்கடுக்க ,நான்கு மாடிகள் ஏறி-இறங்கி,கற்றுத் தந்தான்.
தினமும்,செல்லும் வழியில்,என்னை என் வீட்டில் விட்டுச்சென்றான்.
இறுதி நாள்,'இன்சுவை பிரியாணி'வேறு.


நட்பு எனும் பான்டிற்கு உதாரணம்-நம் பாண்டு.

நண்பா-வாழ்க வளமுடன்!


நன்றி மறவா,
பாய்.

"குணம் காத்த குமணன்"


சென்ற மாதம் தாயகம் செல்வதற்கு முன்,நண்பன் பாண்டுவிடம் "பாலிமரேஸ்  செயின் ரியாக்ஸ்ன்" ,கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றேன்.'நீ ஒரு லெட்டர் அனுப்பிவை;துறை தலைவரிடம் கேட்டு சொல்கிறேன் ' என்றான்.நான் யார் என்று கேட்டேன்.அவன்,'டாக்டர்.குமணன் சார்' என்றான்.

அதற்க்கு,நான் சந்தோசப்பட்டு,பாண்டுவிடம், "நீ அவரிடம் சென்று'நீங்கள் பீ.எச்.டி. படிக்கும் போது உங்களோடு கிரிக்கெட் விளையாடிய பாய் 'பாலிமரேஸ்  செயின் ரியாக்ஸ்ன்' ,கற்றுக்கொள்ள விரும்புகிறான் " என்று கூறு என்றேன்.

அவ்வாறு,மறுநாள்,அவரிடம் அவன் கூறியதும்,"அந்த பாயா!அவருக்கு,நீங்களே சொல்லிக் கொடுத்து விடுங்கள்' என்று எந்தவித மறுப்போ அல்லது லெட்டேரோ கேட்காமல் பதிலளித்துள்ளார்.
எது,என்னை மெய்சிலிர்க்க வைத்தது.உணர்ச்சி வசப்படச்செய்தது.

பிறகென்ன!
"அவரோ ,உலகின் தலைசிறந்த  கால்நடை உயிர் தொழில் நுட்பவியல் வல்லுனர்களில் ஒருவரல்லவா!"

ஐயா-வாழ்க வளமுடன்!

நன்றி மறவா,
பாய்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

ஆழ்ந்த அனுதாபங்கள்

நம்முடைய கல்லூரியில் நமக்கு சீனியரும் பார்மகாலஜி துறை பேராசிரியர்களில் ஒருவருமான டாக்டர் பொற்செழியன் (பொற்சி) அவர்கள் மாரடைப்பால் காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் சக கால்நடை மருத்துவ நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
சென்னை நட்சத்திரங்கள்...

அதிர்ச்சி வைத்தியங்கள் தரும் பைத்தியங்கள்

கரையானைப் போன்று அரிக்கும்,நம் கரையானின் வேண்டுகோளாகிய,என் தாயக தகவல்களை தரலாம் என்று இருக்கையில்,எனது துறை உயர்  பைத்தியங்கள் ,இன்று முதல் என்னை,75 கி.மீ.தொலைவிலுள்ள ,வேறு ஒரு மருத்துவமனைக்கு,மாற்றிவிட்டார்கள்.அவர்கள் கூறும் காரணம்,சில டாக்டர்கள் [குறிப்பாக எகிப்து மற்றும் சூடான் நாட்டவர்கள்]சரியில்லையாம். ஆதலால்,அவர்களை உங்கள் இடத்தில் ,போட்டு விட்டு,உங்களை அங்கு அனுப்புகிறோம்.ரொம்ப நொந்து போய் உள்ளேன்.போக ஒன்றரை மணி நேரம் , வர ஒன்றரை மணி நேரம்.நல்ல வேலை,சென்னை ஸ்டார்களை ஒன்று சேர்ப்பதற்காக என்று சொல்லாமல் விட்டார்கள்.ஆம்!நண்பர் ஜாகிர் இருக்கும் இடத்திற்க்கு மாற்றிவிட்டார்கள்.இந்த அரபு நாடுகளில்,நடக்கும்,பற்பல மனித உரிமை மீறல்களில் ,இது அவர்கள் பாணியில்,சாதாரணமானது.
தாயக தகவல்கள் விரைவில் .....


பிரியமுடன்,
பாய்.

வெள்ளி, ஜனவரி 06, 2012

Poongaatru thirumbuma....


அண்ணன்களின் பாடகன்

‘எல, முத்தக்கா கல்யாணத்துக்கு சின்ன சுப்பையாதான் மேளம் தெரியும்லா? சாயங்காலம் சில்வர் டோன்ஸ் கச்சேரி.'
பெரிய அக்காவின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது சிறுவனான என்னிடம் பெரியண்ணன் சொன்னான். அவளது திருமணம் திருநெல்வேலியிலுள்ள எங்கள் பூர்வீகப் பெரிய வீட்டில் விமரிசையாக நடந்தது. சின்னசுப்பையாவின் நாதஸ்வரத்தையும் விட சாயங்காலம் ரிஸப்ஷனில் (அப்போதெல்லாம் கல்யாணத்தன்றுதான் ரிஸப்ஷன்) நடக்கவிருக்கும் மெல்லிசைக் கச்சேரியில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனாலும் பெரியப்பாவுக்கு பயந்து நாதஸ்வரக் கச்சேரியின் போது முன்வரிசையில் சின்னப்பிள்ளைகள் அனைவரும் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துப் பார்த்து தாளம் போட்டுக் கொண்டிருந்தோம். சாயங்காலம் மெல்லிசைக் கச்சேரியின் போது பெரியப்பா அந்தப் பக்கமே வரவில்லை.
எங்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த மேடையில் வழக்கம் போல தியாகராஜ மாமா ஹார்மோனியத்தில் அமர்ந்திருந்தார். திருநெல்வேலி மெல்லிசைக் குழுக்களில் உள்ள அனைவருமே அநேகமாக பெரியண்ணனின் நண்பர்கள். பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்து வந்த அவன் ஒரு தபெலா பிளேயர். கணபதியே வருவாய், முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கு போன்ற சம்பிரதாயத் தொடக்கப் பாடல்கள் முடிந்து சினிமாப் பாடல்கள் முறை வந்த போது ‘மணிப்பூர் மாமியார்’ திரைப்படத்திலிருந்து ஒரு பாடலை ஆரம்பித்தார்கள். முதலில் பெண்குரலின் ஆலாபனையைத் தொடர்ந்து ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்று ஆண்குரல் பாடத் துவங்கியது. தன்மகள்வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்த காக்கும்பெருமாள்பிள்ளை தாத்தா அருகில் உட்கார்ந்திருந்த தன் தோழர் சுப்பிரமணிய பிள்ளை என்னும் எவர்சில்வர் தாத்தாவிடம் கேட்டார்.
‘வே, யார் கொரல் தெரியுதா?’
‘ஜெயராமன் கொரல் தெரியாதாக்கும். எத்தன ரெக்கார்டு கேட்டுருக்கென்.'
சற்றும் தாமதிக்காமல் சொன்னார் எவர்சில்வர் தாத்தா.
மலேஷியா வாசுதேவனின் குரலில் எனக்கு நினைவு தெரிந்த முதல் பாடலாக அந்தப் பாடல்தான் இன்றுவரை என் மனதில் உள்ளது. பின்னர் தேடித் தேடி இனம்பிரித்துப் பாடல்கள் கேட்க ஆரம்பிக்கும் போது ‘ஏ... முத்து முத்தா’ என்று பாடல் துவங்கும் போதே ‘அய், வாசுதேவன்’ என்று தெரிந்து போனது.
0000506343_350
வாசுதேவனின் பாடல்களை எனக்கு நிறைய அறிமுகப்படுத்தியவன் யாரென்று யோசித்துப் பார்த்தால் கணேசண்ணன்தான் நினைவுக்கு வருகிறான். கணேசண்ணன் அப்போது ஐ.டி படித்து முடித்துவிட்டு கண்ணில் படுகிற பெண்களையெல்லாம் காதலித்துக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் எந்த ஒரு புதிய பாடலையும் கணேசண்ணன் குரலில்தான் நாங்கள் முதலில் கேட்போம். ‘முடிவல்ல ஆரம்பம்’ திரைப்படப்பாடலான ‘தென்னங்கீற்றும் தென்றல்காற்றும்’ பாடலில் ‘வண்ணாத்திப் பாறைக்கு வரவேணும் நாளைக்கு’ என்னும் வரியை கணேசண்ணன் யாரையோ நினைத்தபடி ரசித்துப் பாடுவான். ‘கோழி கூவுது’ படத்தின் ‘பூவே இளைய பூவே’ பாடலின் ’காமாட்சி’ என்று துவங்கும் வசனத்திலிருந்தே ஆரம்பித்து விடுவான். அதுவும் ‘தம்பி ராமகிருஷ்ணா, கூச்சப்படாமல் மற்றவைகளையும் படித்துக் காட்டவும்’ என்று சுற்றி அமர்ந்திருக்கும் எங்களில் யாரையாவது பார்த்துச் சொல்லுவான். பின்னர் எனது இசை வகுப்புகளின் போது சங்கராபரண ராகப் பயிற்சிக்கு மேற்கண்ட பாடல் பேருதவியாக இருந்தது.
காதல்பாடல்கள் என்றில்லை. கணேசண்ணனின் இசைரசனை வித்தியாசமானது. தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் பாடலாக பரவலாக அறியப்பட்ட ‘அலை ஓசை’ படத்தின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற வாசுதேவனின் பாடலை கணேசண்ணன் உணர்ச்சிப் பெருக்கோடு பாடிக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்தப் பாடலின் முதல் இண்டெர்லூடில் ‘தந்தானே தந்தானே’ என்ற குழுவினர் குரலை திருநெல்வேலிப்பகுதி கோயில் கொடைகளில் மேளக்காரர்கள் உற்சாகமாக வாசிக்க, கும்பக்குடக் கலைஞர்கள் சுழன்று ஆடுவதை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். நாமும் கூட சேர்ந்து ஆடமாட்டாமோ என்று ஒவ்வொருமுறையும் தோன்றச் செய்யும் அட்டகாசத் துள்ளல் தாளமது.
கணேசண்ணனின் அப்போதைய மனநிலைக்கேற்ப பாடும் பாடல்களில் பெரும்பாலானவை மலேஷியா வாசுதேவனின் பாடல்களே. என்னையும், தம்பியையும் சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு அவ்வப்போது கணேசண்ணனுக்கே வழங்கப்படும். ரத்னா தியேட்டரில் ‘காளி’ படம் பார்த்துவிட்டு திருநெல்வேலி ஊரிலேயே குறுகலான தெருவான வடிவுமுடுக்குத் தெரு வழியாகத் திரும்பி வரும்போது எங்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு ‘அடி ஆடு பூங்கொடியே’ பாடலை ரஜினிகாந்த மாதிரியே நடந்து, வாசுதேவன் மாதிரியே பாடினான். ‘ஏல, ஒங்களுக்கு என்ன கோட்டியா, ரோட்ட அடச்சுக்கிட்டு போறதப் பாரு. சவத்து மூதியொ’ என்று ஒரு சைக்கிள்காரர் திட்டிவிட்டுச் சென்றதை அவன் பொருட்படுத்தவேயில்லை. அவமானப்பட்டு கையை உதற முயன்ற என்னையும், தம்பியையும் வீடு வரும்வரை அவன் விடவேயில்லை. காரணம், பாட்டு வீட்டுவாசலில்தான் முடிந்தது.
சிலநாட்களாக தன் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு சிறுமியை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வர ஆரம்பித்தான் கணேசண்ணன். நான்கு அல்லது ஐந்து வயதான அந்தச் சிறுமி எந்த நேரமும் கை, வாய் நிறைய சாக்லெட்டாகவே காட்சியளித்தாள். அந்தச் சிறுமியை உட்கார வைத்துக் கொண்டு கணேசண்ணன் சினிமாவில் வருகிற மாதிரியே அத்தனை தத்ரூபமாக ‘வா வா வசந்தமே, சுகந்தரும் சுகந்தமே’ என்று ‘புதுக்கவிதை’ படப்பாடலைப் பாடுவான். குழந்தை அவனை நிமிர்ந்தே பார்க்காமல் வாயிலுள்ள மிட்டாயை முழுங்கி விட்டு, கையிலுள்ளதை வாயில் திணிக்கும். அதற்கெல்லாம் கவலைப்படாத கணேசண்ணன் இன்னொரு முறை அந்தப் பாடலைப் பாடத் தொடங்குவான். அந்தச் சிறுமியின் சித்தியை கணேசண்ணன் தீவிரமாகக் காதலித்து வந்த விஷயம், உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்னால் அந்தப் பெண்ணின் வீட்டார் முன் கணேசண்ணன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கும் போதுதான் எங்களுக்குத் தெரிய வந்தது.
மேற்படி சம்பவத்துக்குப் பிறகு திருநெல்வேலியில் எங்கு மெல்லிசைக் கச்சேரி நடந்தாலும் கணேசண்ணன் துண்டுச் சீட்டில் எழுதி ஒரு குறிப்பிட்டப் பாடலைப் பாடச் சொல்லி விண்ணப்பிப்பான். பெருங்குரலெடுத்து வாசுதேவன் ‘பார்வதி என்னைப் பாரடி’ திரைப்படத்தில் பாடியிருக்கும் ‘வாலிபரே வாலிபரே’ என்ற பாடல்தான் அது.
திருநெல்வேலியிலுள்ள புகைப்படக்கலைஞர்களில் முக்கியமானவரான விருத்தாச்சலம் அண்ணன், பெயரில் மட்டுமல்லாமல் உண்மையாகவே புதுமைப்பித்தனின் உறவினர். பெரியண்ணனின் தோழனான அவர் காதலில் தோல்வியடைந்தவர்.
‘அப்படி ஒரு சம்பவம் அவன் வாள்க்கைல நடந்தது அவனுக்கு மட்டுந்தான்டே தெரியும்.’ விருத்தாச்சலம் அண்ணனின் நெருங்கிய நண்பரான அனந்தசங்கர் மாமா சொல்வார்.
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு மிகவும் பிடித்தவர் விருத்தாச்சலம் அண்ணன். அதனாலேயே அவர் தன் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் ஒரு கதாபாத்திரமாக விருத்தாச்சலம் அண்ணனைச் சித்தரித்திருப்பார். ‘நெஞ்சிலாடும் பூ ஒன்று’ படத்தின் ‘ஒரு மூடன் கதை சொன்னான்’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் விருத்தாச்சலம் அண்ணனை நினைக்காமல் என்னால் இருக்கமுடிந்ததில்லை. ‘பெண்ணை படைத்தானே பிரம்மனே. பாவம் ஆண்களே, பரிதாபம் நாங்களே’ மற்றும் ‘எந்த மடையனோ சொன்னான், சொர்க்கமாம். பெண்கள் உலகமே நரகமே’ போன்ற வரிகளை உணர்ச்சி பொங்கக் கண்ணீருடன் பாடுவார் விருத்தாச்சலம் அண்ணன்.
‘தம்பி, இந்தப் பாட்ட படிச்சது மலேசியான்னு நெனைக்காதெ. விருத்தாச்சலமாக்கும்... என்னடே முளிக்கெ? நெசமாவே நான்தான் பாடுனேன். எல்லா வரியும் நான் பாடுனதாக்கும்.' பெனட்ரில் இருமல் மருந்து வாசனையடிக்க, சிகரெட் புகைக்கு இடையே அழுதபடி இதைச் சொன்ன விருத்தாச்சலம் அண்ணன் இப்போது உயிருடன் இல்லை.
இது போன்று ‘சில்வர் டோன்ஸ் டி.ஆர். குமார், ‘ஆடலரசன்’ நெல்லை பிரபாகர், ‘சங்கீத சுதா’ உமாபதி போன்ற புகழ்பெற்ற திருநெல்வேலி மெல்லிசைக்குழு பாடகர்கள் வாயிலாகவே மலேஷியா வாசுதேவனின் பாடல்களை நினைவுகூர்கிறேன். எல்லா கச்சேரிகளிலும் ரஜினி ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடப்படும் பெரும்பாலான ரஜினி படப்பாடல்கள் வாசுதேவன் பாடியவையே. யோசித்துப் பார்த்தால் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை நோக்கிய பயணத்துக்கு உதவியாக அமைந்த முக்கியமான பாடல்களைப் பாட இளையராஜா, வாசுதேவனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். மெல்ல மெல்ல இது நிகழ்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
‘நான் போட்ட சவால்’ திரைப்படத்தின் ‘சுகம் சுகமே’ , ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் ‘ஆகாய கங்கை’ ‘பாயும் புலி’ திரைப்படத்தின் ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்’ போன்ற இருகுரல் பாடல்களும், ‘தர்மயுத்தம்’ திரைப்படத்தின் புகழ் பெற்ற ‘ஒரு தங்க ரதத்தில்’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தின் ‘பட்டுவண்ணச் சேலைக்காரி’ போன்ற தனிக்குரல் பாடல்களும் ரஜினிகாந்த்துக்காக வாசுதேவன் பாடிய பல பாடல்களின் உதாரணங்கள். இவற்றுள் ரஜினிகாந்தின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை உறுதி செய்யும் பாடலாக அவரது ரசிகர்கள் கொண்டாடிய பாடல், ஒரு சாமானியனின் குரலில் ஒலிக்கும் ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தின் ‘பொதுவாக என் மனசு தங்கம்.' கிளப்வகை தனிப்பாடல்களில் ரஜினிகாந்தின் மிக முக்கிய பாடலாக இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு பாடலையும் இளையராஜாவின் இசையில் வாசுதேவனே பாடியிருக்கிறார். இன்றைய ரீமிக்ஸ் கலாச்சாரத்தில் சிக்கிச் சீரழிக்கப்பட்டாலும் அந்தப் பாடல் தன் சுயத்தை இன்னும் இழக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அந்தப் பாடல் ‘அடுத்த வாரிசு’ திரைப்படத்தின் ‘ஆசை நூறுவகை’.
index_02
அடிப்படையில் வாசுதேவனின் குரல் டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன் போன்ற நம் முன்னோடி திரையிசைப்பாடகர்களைப் போல கனத்த குரல். இரண்டு ஸ்தாயிகளிலும் தங்கு தடையின்றி பயணிக்கக்கூடிய அந்தக் குரலில் அவர் நவீனமான பாடுமுறையை வெளிப்படுத்தினார். இதனாலேயே மரபான குரலும், நவீனமான விளையாட்டுத்தனமும், துள்ளலும் தேவைப்படும் பாடல்களுக்கு வாசுதேவனை விட்டால் வேறு ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரை உயர்த்தியது. ‘ஆசை நூறுவகை’ போலவே எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு க்ளப் வகைப் பாடல் ‘பாட்டெங்கே’ (பூவிழி வாசலிலே) என்ற பாடல். இப்பாடலின் சரணங்களை மட்டும்தான் வாசுதேவன் பாடியிருப்பார். ஜாஸ் ஃப்யூஷன் வகையறாவைச் சேர்ந்த இப்பாடலில் அவர் வெளிப்படுத்தியிருந்தது முழுக்க முழுக்க மேற்கத்திய ஸ்டைல் சார்ந்ததொரு பாடுமுறையை. வாசுதேவன் பாடும் சரணங்கள், கிட்டத்தட்ட 'ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ஸ்டைல் போல மேலுயராத கனத்தோடு இருந்தாலும், “ஏனென்றும் தெரியாது, ஏக்கங்கள் புரியாது”, “வா பூவே வா” போன்ற இடங்களில் அந்தக் குரலின் அழுத்தத்தோடு சேர்த்து அழகான துள்ளலையும் தந்திருப்பார். இப்பாடலின் உயிர்ப்புக்கு வாசுதேவனின் இத்தகைய பாடுமுறை மிக முக்கியமான காரணம். இதைப் போலவே ‘மாமாவுக்கு குடுமா குடுமா’ (புன்னகை மன்னன்) என்ற ராக்-அண்ட்-ரோல் ஸ்டைல் பாடலின் சரணமும் அசாத்தியமானது.
இந்த அநாயசமான குரல்வீச்சுதான் மேற்கத்திய ஸ்டைல், கர்நாடக ராகம் இரண்டையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்த முக்கியமான பாடல்களை வாசுதேவனைப் பாடவைக்கும் நம்பிக்கையை இளையராஜாவுக்குத் தந்திருக்கவேண்டும். கடல்மீன்கள் படத்தில் “என்றென்றும் ஆனந்தமே” பாடல் சரசாங்கி ராகத்தில் அமைந்த டிஸ்கோ பாடல். ரிதமும், கிடார் பகுதிகளும் அதற்கொரு தெளிவான மேற்கத்திய சட்டையை மாட்டிவிட்டிருக்கும். டிஸ்கோவுக்கான வழக்கமான எட்டு பீட் வடிவத்தை உபயோகிக்காமல், ஆறு பீட் ரிதத்திலேயே டிஸ்கோவின் எட்டு பீட் உணர்வைத் தந்திருப்பார் இளையராஜா. ‘வாலிபத்தின் ரசனை’ வரிகளில் அதைத் தெளிவாகக் கேட்கமுடியும். இப்படிப்பட்டதொரு முக்கியமான பாடலைப் பாடும்போது ராகபாவத்தை வெளிப்படுத்தும் மெலடி, மேற்கத்தியப் பாடுமுறை இரண்டையும் சிதைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. இப்படிப்பட்ட சவாலானதொரு பாட்டை வாசுதேவனிடம் கொடுத்தார் இளையராஜா. பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘பாபப்ப பாபப்பா’ பிரயோகங்கள், “இசை மழை பொழிந்தது குயிலே” என்ற இடத்தில் ‘குயிலே’யில் வாசுதேவன் வெளிப்படுத்தியிருக்கும் நெளிவு போன்றவற்றை வாசுதேவன் பாடிய விதத்தின் மூலம் இப்பாடலை வெகு சிறப்பான ஒன்றாக்கியது! இதே போன்ற இன்னொரு முக்கியமான ஃப்யூஷன் பாடலான, நெற்றிக்கண் படத்தில் ஜாஸ்-பாப் வடிவில் அமைந்த ‘ராஜா ராணி ஜாக்கி’ என்ற பாடலின் இடையிசையில் வாசுதேவன் மேற்கத்திய சாயல், ஸ்வரம் பாடுவது இரண்டையுமே வெகு அழகாகச் செய்திருப்பார். ‘அஜயா’ என்ற கன்னடப்படத்தில் ‘எல்லா கலைய பல்லே’ என்ற பாட்டில் கர்நாடக சங்கீதம், பாப், டிஸ்கோ என வெவ்வேறு இசைவகைகளைத் தனித்தனியாக ஒவ்வொரு சரணத்தில் பாடிக்காட்டவேண்டிய பாட்டைவாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா.
தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பெரும்புகழ் பெற்ற ‘ஹரிதாஸ்’ திரைப்படப்பாடலான ‘என்னுடல் தன்னில்’ என்னும் பாடலின் ஒரு பகுதியை ‘எனக்கு நானே நீதிபதி’ என்ற படத்தில் பயன்படுத்தினார் இளையராஜா. ‘அம்மையப்பா’ என்று தொடங்கும் அந்தப் பகுதி ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. வேடிக்கையான சிச்சுவேஷனுக்கு சாஸ்திரிய சங்கீதமாக அமைந்த ‘ஹரிதாஸ்’ படப்பாடலை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். காரணம் அந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர், ‘இசைமேதை’ என்றழைக்கப்பட்ட ஜி.ராமநாதன். பாடலைப் பாடியவர், ஒப்பற்ற குரலுக்குச் சொந்தக்காரரும், ‘ஏழிசை மன்னர்’ என்று அழைக்கப்பட்டவருமான எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதருக்கு இணையாக அந்த உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் பாட மலேஷியா வாசுதேவனையே தேர்ந்தெடுத்திருந்தார் இளையராஜா. இதற்குக் காரணம், இப்பாடலுக்கு அழுத்தமான, சுருதி சுத்தமாக ஸ்வரங்களைப் பேசக்கூடிய, மரபிசையை லாவகமாகப் பாடும் பாடகர் தேவை. அதே சமயம், முற்றிலும் மரபிசையாக்கிவிடாமல் பாட்டுக்குரிய விளையாட்டுத்தனமும் தேவை. அதற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனவர் வாசுதேவன். இளையராஜா தன் குரல் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வாசுதேவன் காப்பாற்றினார். இந்த காம்பினேஷனில் வரக்கூடிய, சாஸ்திரிய சங்கீத தொனியில், ராகங்களில் அமைந்த துள்ளலான பாடல்களைப் பெரும்பாலும் வாசுதேவனையே பாடவைத்தார் இளையராஜா. மணிரங்கு ராகத்தில் அமைந்த ‘சுகராகமே’ (கன்னிராசி), ஆரபி ராகத்தில் அமைந்த ‘ஆசைக்கிளியே’ (தம்பிக்கு எந்த ஊரு), சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த ‘மதனமோக ரூப சுந்தரி’ (இன்றுபோய் நாளை வா), சாரங்கா ராகத்தில் அமைந்த ‘காதலில் மாட்டாமல் உலவுகின்ற காளை அவன்’ (பார்வதி என்னைப் பாரடி), ஹரிகாம்போதி ராகத்தில் அமைந்த ‘காதலிச்சுப் பாரு கிளியே’ (தங்கத்தாமரைகள்), போன்றவை அவற்றுக்கு சிறப்பான உதாரணங்கள்.
ஒரு பக்கம் ரஜினிக்காகப் பாடிய துள்ளலான பாடல்கள், இன்னொரு பக்கம் ‘கோடைகாலக் காற்றே’ (பன்னீர் புஷ்பங்கள்), ‘குயிலுக்கொரு நிறமிருக்கு’ (சொல்லத் துடிக்குது மனசு), ‘ஒரு தங்க ரதத்தில்’ (தர்ம யுத்தம்), ‘ஏ ராசாத்தி’ (என் உயிர்த்தோழன்) போன்ற மெலடிப் பாடல்கள், ‘பாட்டெங்கே’, ‘ஆசை நூறு வகை’ போன்ற மேற்கத்திய ஸ்டைல் பாடல்கள், ’என்றென்றும் ஆனந்தமே’, ‘ராஜா ராணி ஜாக்கி’ போன்ற ஃப்யூஷன்கள், ‘கட்டிவச்சுக்கோ எந்தன் அன்பு மனச’ (என் ஜீவன் பாடுது), ‘ராத்திரியில் பாடும் பாட்டு’ (அரண்மனைக் கிளி), ‘கம்மாக்கரை ஓரம்’ (ராசாவே உன்னை நம்பி) போன்ற கிராமியப்பாடல்கள், எண்ணற்ற கேலிப்பாடல்கள் என வாசுதேவன் பாடாத பாடல்வகையே இல்லை. இதனாலேயே வாசுதேவன் வெறும் டப்பாங்குத்துப் பாடல்கள் மூலம் வீணடிக்கப்பட்டார் என்றோ, ‘அவர் வெறும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்தானே?’ என்றோ பேசுபவர்களைப் பார்த்து எனக்கு சிரிப்பாக இருக்கும்.
1
ராகங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் எனது இசையாசிரியர் கிருஷ்ணன் அவர்களிடம் இளையராஜாவின் பாடல்களின் மெட்டுக்களை நான் ஹார்மோனியத்தில் வாசித்துக் காண்பித்து கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திரைப்படங்கள் பார்க்கும் பழக்கமில்லாத எனது ஆசிரியர் ராகங்களை மட்டும் சொல்லி விட்டு விலகிக் கொள்வார். அந்தந்தப் பாடலின் விசேஷ குணங்களைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்வது எனது இசையாசிரியரின் கடைக்குட்டி மகனான பாலாஜியிடம்தான். பாலாஜியும், அவரது மூன்று சகோதரர்களும் வயலின் கலைஞர்கள். இன்றைக்கும் ‘திண்டுக்கல் அங்கிங்கு’ மெல்லிசைக் குழுவில் வயலின் வாசித்து வருபவர்கள். பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வங்கியில் பணியாற்றிக் கொண்டே கச்சேரிகளிலும் வாசித்து வருகிறார். சகோதரர்கள் அனைவருமே தடுக்கி விழுந்தால் ஏதாவது ராகத்தில்தான் விழுவார்கள். எங்காவது இடித்துக் கொண்டாலும் அது ஏதாவதொரு தாளமாக இருக்கும்.
பாலாஜி வயலினிலும், நான் ஹார்மோனியத்திலும் வாசுதேவனின் பல பாடல்களை வாசித்துப் பார்த்து வியந்திருக்கிறோம். அவற்றுள் ‘கரும்பு வில்’ திரைப்படத்தின் ‘மலர்களிலே ஆராதனை’யும், ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘கோயில்மணி ஓசைதன்னை’யும், ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தின் ‘ஆழக்கடலில் தேடிய முத்து’வும், ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ‘மாப்பிள்ளைக்கு மாமன் மனசு’ பாடலும் தவறாது இடம்பெறுபவை. இதில் ராகங்களின் அடிப்படையிலான பாடல்கள் அதிகம் இடம்பெற்றதை தற்செயலாக ஒருமுறை கவனித்தோம். சண்முகப்ரியாவின் அட்டகாசப் பாடலான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் ‘ஊருவிட்டு ஊரு வந்து’, கீரவாணியில் அமைந்த ‘தூறல் நின்னு போச்சு’ திரைப்படத்தின் ‘தங்கச் சங்கிலி’, ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் ‘மலர்களே நாதஸ்வரங்கள்’ என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
கல்யாணி ராகத்தில் எத்தனையோ திரையிசைப்பாடல்கள் உள்ளன. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலையோரம் மயிலே’ என்னும் இருகுரல் பாடல் கல்யாணி ராகப்பாடல்களில் வித்தியாசமான ஒன்று. சங்கீதமும், நடனமும் கற்ற ஒரு பெண்ணும், ஒரு சாமானியனும் பாடுவதாக அந்தப் பாடலை அமைத்திருப்பார் இளையராஜா. கல்யாணி ராகத்தின் பிடிமானங்களுடன் ஜதியும் சொல்லி சர்வலட்சணமாக ஒருபுறம் சித்ரா பாட, மறுபுறம் ஆன்மாவிலிருந்து அநாயாசமாகப் பாடும் ஆண்குரலுக்குச் சொந்தக்காரர் வாசுதேவன். அந்தப்பாடலை ரொம்பவும் வெகுளித்தனமாக ஆரம்பிப்பார்வாசுதேவன். அவரிடமிருந்து பாட்டை வாங்கி சித்ரா எங்கோ கொண்டு செல்ல, அவ்வளவுதான் வாசுதேவன் என கேட்போருக்குத் தோன்றும். எல்லாம் சரணம் வரைக்கும்தான். சரணத்தில் ‘மாநிறப்பூவே யோசனை ஏனோ, மாமனைத்தானே சேரணும் நீயே’ என்னும் வரியைக் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குப் பின் சித்ராவின் குரல், வாசுதேவனின் ஆத்மார்த்தமான பிடிக்குள் சிக்கி சரணடைந்திருப்பது கண்கூடாக நமக்கு தெரியும்.
இவைபோக வித்தியாசமான வாசுதேவனின் பாடல்களின் பக்கமும் நாங்கள் கவனம் செலுத்துவதுண்டு. ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ திரைப்படத்தில் பி.சுசீலாவுடன் இணைந்து வாசுதேவன் பாடிய ‘சாரங்கதாரா’ எனும் பாடல் முக்கியமானது. மற்றொன்று அதிகம் அறியப்படாத ‘வாசுகி’ திரைப்படத்தில் மால்குடி சுபாவுடன் வாசுதேவன் இணைந்து பாடிய ‘காதல் நிலவே’ என்னும் பாடல்.
ஒருமுறை இப்படி ஒவ்வொரு பாடலாக நானும், பாலாஜியும் வாசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பாலாஜியின் மூத்த சகோதரரான தியாகு அண்ணன் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். தயக்கத்தில் நாங்கள் கொஞ்சம் நெளிய, ‘ஏ, என்னையும் ஆட்டைல சேத்துக்கிடுங்கடே’ என்றார் தியாகு அண்ணன். வாசுதேவனின் பாடல்களை ஆரம்பகாலத்திலிருந்து நினைவுகூர்ந்துச் சொல்ல ஆரம்பித்தார்.
“சாமானியன் கொரல் பாத்துக்கோ வாசுதேவனுக்குள்ளது. பதினாறு வயதினிலே படத்துலேருந்துதான் அவனுக்கு சூடு புடிச்சுது. தாயளி அஞ்சு பாட்டுல மூணு அவங்குள்ளதுதானெ. அப்புறம் வண்டி நிக்கவே இல்ல. நாலுகால் பாச்சல்தான். ஒரு கோட்டிக்காரப்பய பாடுத மாதிரி மோசமா பாடச் சொன்னா ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாட்ட நல்லா பாடித் தொலச்சுட்டான் வாசுன்னு எளையராஜாவே தந்தி பேப்பர் வரலாற்றுச் சுவடுகள்ல சொல்லியிருந்தாரு, பாத்தியா. அதான் விடாம ரஜினிலே இருந்து ராமராஜன் வரைக்கும் பாட வச்சாரு. வேடிக்கைப் பாட்டும் பாடவச்சிருக்காரு. சீரியஸாவும் பாட்டு குடுத்திருக்காரு. பாலசுப்ரமணியத்துக்கு சமமா இல்லென்னா ஒருத்தன் பாடி நிக்க முடியுமா சொல்லு, பாப்போம்” என்றார்.
தியாகு அண்ணன் பேசப் பேசக் கேட்டுக் கொண்டேயிருக்கத் தோன்றியது. ஒரு கட்டத்துக்கு மேல் அமைதியாகிவிட்டார். மனதுக்குள் ஏதோ வாசுதேவனின் பாடல் ஓடியிருக்கவேண்டும்.
பிறகு பாலாஜியிடமிருந்து வயலினை வாங்கி ஹரிகாம்போதி வாசிக்க ஆரம்பித்தார். மெல்ல ஹரிகாம்போதி ஒரு மலேஷியா வாசுதேவன் பாடலானது. ‘தங்கத்தாமரைகள்’ திரைப்படத்தின் ‘காதலிச்சுப் பாரு கிளியே’ பாடல்தான் அது. அந்தப் பாட்டின் சரணத்தில் ‘காதல்வந்த காளையெல்லாம் கன்னியரைப் பார்த்தால் கண்சிமிட்ட நேரமின்றி ஆசைகளைச் சேர்ப்பார்’ என்ற வரியில் ‘ஆ... ஆ...சைகளைச் சேர்ப்பார்’ என்ற இடத்திலுள்ள பிடிமானத்தை வாசிக்கும்போது கண்ணால் அதை எங்களுக்குக் காண்பித்துக்கொண்டே ‘வாசுதேவன் இந்த எடத்த என்னமா பாடியிருப்பாங்கெ’ என்றார். அந்த இடம் கடந்தவுடன் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராய் வயலினை தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு எழுந்துகொண்டார்.
‘சே, சண்டாளப்பாவி. மனசாரல்லா பாடியிருப்பான்’.
தியாகு அண்ணன் தனக்குத் தானே சொல்வதுபோல்தான் இருந்தது

courtesy SUKA 

http://www.venuvanamsuka.blogspot.com/search?updated-max=2011-04-19T21:07:00-07:00&max-results=13

Rasiththathu MSK

புதன், ஜனவரி 04, 2012

galeejba...kku antonyms from nellai

நெல்லை வட்டாரத்தில் பேசும் தமிழ் தனித்தன்மை உடைத்து..... இனிமையானதும் கூட. அதிலிருந்து சில சொற்களை இங்கே உங்களுக்காக பதிவிடுகிறேன், அர்த்தம்   தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் தெரியாதவர்கள் யூகிக்ககலாம். விடைகள் பின்னர் தனியாக பதிவிடப்படும், முயற்சியுங்கள்.

சிரட்டை -
தார்சா -
பைதா -
சாரம் -
ஆவலாதி -
அவயம் -
தேரம் -
கோட்டி -
கருப்பட்டி -
சீனி அவரை -
சேனை -
ப்ளெசர் -
மணியாரி -
வாரியல் -
 தூறு -
விலக்கு -
சூந்து -
சொக்கபனை -
துப்பு -
துட்டி -
படப்பயம் -
சுளவு -
குத்துப்போணி -
சர்வசட்டி -
நேரியல் -
சிறு கிழங்கு -
உள்ளி -
மக்கா -
எழலை (ஏழு இலை) கிழங்கு -
இனுக்கு -
முடை -
மூடை -
தட்டடி -
மச்சு -
சரம் -
கானம் -
கூப்பதினி -
அங்ஙனம் -
அடுக்களை -
கொடி அடுப்பு -
நலங்கு -
பேத்தியா -
சொக்காரர் -
தட்டான் -
போயல-
முத்தம்-(not  a  kiss ) -

msk 



செவ்வாய், ஜனவரி 03, 2012

Smile Please

marakka mudiyatha jency


செண்பகத்தக்காவின் குரல்

கீழப்புதுத்தெருவிலுள்ள கண்ணப்பர் மடத்தையொட்டிய வளவில்தான் செண்பகத்தக்கா குடியிருந்தாள். ஒரே ஒரு அறை மட்டுமேயுள்ள வீட்டில், தையல் மெஷினை வைத்துக் கொண்டு, வயதான தன் தாயுடன் வசித்து வந்த செண்பத்தக்காவை, அவளது வீட்டுக் காம்பவுண்டைத் தாண்டி வெளியே எங்கேயுமே நான் பார்த்த ஞாபகம் இல்லை. அம்மா தைக்கக் கொடுத்த துணிகளை வாங்கப் போகும் போது மட்டுமே என்னால் செண்பகத்தக்காவைப் பார்க்க முடிந்திருக்கிறது. வெள்ளை நிறத்தில் முத்து முத்தாக ஒரு பாசிமாலை போட்டிருப்பாள் செண்பகத்தக்கா. கைகளில் ரப்பர் வளையல்கள். நெற்றியில் புள்ளியாக சாந்துப்பொட்டும், அதன் மேல் திருநீற்றுக்கீற்றும் இட்டிருப்பாள். எந்த சமயம் பார்க்கப் போனாலும் அப்போதுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாற்போல் பளிச்சென்றே இருக்கும் செண்பகத்தக்காவின் முகம். வறுமையில் செம்மையாக எப்போதும் சிரித்த முகம்தான். ‘வாடே, இரி’. ஸ்டூலை எடுத்துப் போடுவாள். தைத்த துணி தயாராக இருந்தாலும் உடனே கொடுக்க மாட்டாள். ‘என்ன அவசரம்? காப்பி கீப்பி குடிச்சுட்டு போ’. தையல் மெஷினுக்கு மேலே உள்ள ஒரு மர ஸ்டாண்டில் சணல் வைத்துக் கட்டப்பட்ட டிரான்ஸிஸ்டர் பாடிக் கொண்டிருக்கும். டிரான்ஸிஸ்டருடன் சேர்ந்து செண்பகத்தக்காவும் மெல்லிய குரலில் பாடுவாள். இப்படி பல ஒருகுரல் பாடல்களை செண்பகத்தக்காவின் குரலுடன் சேர்த்து இருகுரல் பாடல்களாகக் கேட்டிருக்கிறேன். அப்படி நான் கேட்ட ஒரு பாடலின் படமான ‘புதிய வார்ப்புகள்’ அப்போது திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.
‘என்ன, செம்பகம் இன்னைக்கு என்ன பாட்டு பாடிக்கிட்டிருந்தா?’ வீட்டுக்கு வந்தவுடன் எப்போதும் அம்மா கேட்பாள். ஒவ்வொருமுறை ஒவ்வொரு பாட்டைச் சொல்வேன். ஆனால் செண்பகத்தக்காவால் எனக்கு முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாடலாக நான் இன்றுவரை ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடலைத்தான் நினைக்கிறேன். அந்தச் சிறுவயதிலேயே ஏனோ செண்பகத்தக்காவின் வாழ்க்கையுடன் அந்தப் பாடலை சம்பந்தப்படுத்தியே கேட்டுப் பழகியிருக்கிறேன். அந்தப் பாடலைப் பாடிய ஜென்ஸி எப்படியிருப்பார் என்று எனக்கு அப்போது தெரியாது. அது தெரியவரும்வரை செண்பகத்தக்காதான் எனக்கு ஜென்ஸி. தெரிந்த பிறகும் கூடத்தான்.
jency_big
‘இதயம் போகுதே’ பாடல் தன்னை விட்டு வெளியூருக்குச் செல்லும் காதலனைப் பார்த்து ஏக்கத்துடன் பாடும் நாயகியின் பாடல். காதலன் தன்னை எப்படியும் வந்து கைப்பிடிப்பான் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லாமல் பாடப்படும் பாடலை ஜென்ஸி பாடியிருக்கும் விதம் அத்தனை தத்ரூபமானது. அதுவும் அந்த மெட்டின் துவக்கத்தில் ‘இதயம் போ . . . . . . . .குதே . . . .’ என்று ஜென்ஸி பாடும் விதத்தில் இதயம் மெல்ல மெல்ல விலகி தூரமாகப் போய்க் கொண்டிருப்பதை நாம் கண்கூடாக உணரலாம். மிக எளிமையான துவக்கத்துடன் அமைந்த இந்தப் பாடலின் சரணங்களில்ஒரு நொடியில் பாடுவதற்குக் கடினமான இடத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதையும் தனது வெகுளியான குரலால் ‘தோகை நெஞ்சினில் சோகம் பொங்குதம்மா’ஜென்ஸி பாடியிருக்கும் விதத்தைக் கேளுங்கள். இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் சரணங்களின் இடையில் வார்த்தைகளில்லாமல் ‘லாலல லலலால லலலாலலா’ என்றும் ஜென்ஸி பாடியிருக்கிறார். ஒரு பாடலுக்குள்ளேயே அவர் வேறோர் ஜென்ஸியாகத் தெரியும் இடமது.
தான் பாடி வந்த காலகட்டத்தில் ஜென்ஸி, பல இளம்பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த பாடகியாக இருந்த காரணத்தை இப்போது யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. எந்த நளினமும், மேதமையும் இல்லாத ஜென்ஸியின் குரலை தங்களின் குரலாக அப்போதைய பெரும்பாலான யுவதிகளும், தங்கள் சகோதரிகளின், காதலிகளின் குரலாக அப்போதைய இளைஞர்களும் நினைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்', 'இதயம் போகுதே', 'அடி பெண்ணே’ இப்படி எந்த ஒரு ஜென்சியின் பாடலைக் கேட்டாலும் அதில் ஜென்சியின் குரல் கேட்பதில்லை. அடுக்களையின் குழம்புக் கொதியினூடே கேட்கும் அக்காவின் குரலாக, குளியலறையிலிருந்து சந்திரிகா சோப்பின் நுரைத்த நறுமணத்துடன் வெளியே கசிந்து ஒழுகும் அத்தை மகளின் குரலாக, மதிய உணவுக்குப் பின் ஒட்டுமொத்த வீடும் உறங்கிக் கொண்டிருக்க, ஒருச்சாய்த்துப் படுத்தபடி, 'ராணி’ புத்தகத்தைப் புரட்டியவாறே, தனக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடும் மதினியின் குரலாகத்தான் நம்மால் கேட்க முடிகிறது. இல்லையென்றால் அத்தனை தெளிவான தமிழ் உச்சரிப்பில்லாத ஜென்ஸிக்கு இத்தனை வரவேற்பு அந்த சமயத்தில் கிடைத்திருக்காது.
‘அதென்னடே, அந்த மலையாளத்துப்பிள்ள ‘மைலே மைலே’ன்னு பாடுது?’ ராமையா பிள்ளை இந்த மாதிரி குற்றம் கண்டுபிடிப்பதில் அதிக ஆர்வம் உடையவர். ‘கடவுள் அமைத்த மேடை’ படத்தின் ‘மயிலே மயிலே’ பாடலை ‘மைலே மைலே’ என்றுதான் ஜென்ஸி பாடியிருக்கிறார். இல்லையென்று சொல்லமுடியாதுதான். ஆனால் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் சரணத்தில் ’நீ அணைக்க, நான் இருக்க, நாள் முழுக்க தேன் அளக்க’ என்னும் இடத்தை லகுவாகக் கடப்பதன் மூலம், ஜென்ஸி அக்குறையை மறக்கச் செய்கிறார். உடன்பாடியிருப்பவர் அப்போதே ஜாம்பவனாகிவிட்ட பாலசுப்ரமணியம் என்பதால் அவரது அநாயசபாடுமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள பாடல்களே ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும், எண்பதுகளில் எல்லா திசைகளிலும் ஜென்சியின் குரலே ஒலித்தது. (இப்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்? இரவானால் எல்லா பண்பலை வானொலிகளிலும் ஜென்ஸியின் ராஜ்ஜியம்தான்) தனிக்குரல் பாடலான ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘இதயம் போகுதே’ பாடல் ஜென்ஸிக்கு புகழ் சேர்த்தது போலவே, ’நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் இருகுரல் பாடல் ஒன்றும் ஜென்ஸிக்கு பெரும் புகழ் சேர்த்தது. ’ஆயிரம் மலர்களே மலருங்கள்’ பாடலை எஸ்.பி.சைலஜாவுடன் பாடிய ஜென்ஸியுடன் பாடலின் இறுதியில் வாசுதேவனும் இணைந்து கொள்வார். மூவரும் அவரவர் தனித்தன்மையுடன் பாடியிருப்பார்கள் என்றாலும் ஜென்ஸியின் குரல் தனியாகத் தெரிவதற்குக் காரணம், ஜென்ஸியிடம் இயல்பாகவே அமைந்த வெகுளித்தனமான முதிரா இளங்குரல்தான். அதனால்தான் அந்தப்பாடலை ஜென்ஸியின் குரலிலேயே துவக்கியிருந்தார் இளையராஜா. அத்தனை சிறப்பான மெட்டுடைய, நல்ல வரிகளுடைய பாடலை, தமிழே தெரியாத ஜென்ஸி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடியிருக்கிறார் என்பதற்கு சரணத்தின் முடிவில் வரும் ‘என் பாட்டும், உன் பாட்டும் ஒன்றல்லவோ’ என்ற வரியைக் கேட்டால் நமக்குப் புரியும்.
jency
நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்', 'இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இளையராஜாவைப் பற்றிச் சொல்லும்போது கூட ‘றாஜா ஸார்’ என்றே மரியாதையுடன் அழுத்திச் சொன்னார். ஆனால் ஜென்ஸியின் இந்த ‘ற’ குறையையும் மீறி அவரது குரல் நம்மை ரசிக்க வைத்தது. ‘நிறம் மாறாத பூக்கள்’ திரைப்படத்தின் ‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’பாடலின் துவக்கம் முதல் இறுதிவரை உணர்ச்சிபூர்வமாகப் பாடி அந்தப் பாடலின் ஆன்மாவை நம் மனதுக்குள் செலுத்திய ஜென்ஸியை என்ன சொல்லி பாராட்டுவது?
காதல் ஏக்கத்தில் பாடும் இளம்பெண்ணின் குரலுக்கு அந்தக் காலகட்டத்தில் இளையராஜா பெரும்பாலும் ஜென்ஸியின் குரலையே தேர்ந்தெடுத்தார். மிக எளிமையான மெட்டுதான் என்றில்லை. பாடுவதற்கு சிரமமான பாடல்களையும் துணிந்து ஜென்ஸிக்கேக் கொடுத்தார். அப்படி ஒரு சிரமமான மெட்டு, ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் ‘அடி பெண்ணே’ என்னும் பாடல். துவக்கமே உச்சஸ்தாயியில். பின்னர் சரணத்தின்பல இடங்களில் பல ஊர்களுக்குச் சென்று பின் பத்திரமாக வீடு திரும்ப வேண்டிய கட்டாயம். கொஞ்சம் அசந்தாலும் வண்டி தடம் புரண்டு விடக்கூடிய அபாயமுள்ள மெட்டது. பயமறியா இளங்கன்றாக ஜென்ஸி அந்தப் பாடலை மிகச் சரியாகவே பாடியிருப்பார்.
‘அடி பெண்ணே’ பாடலுக்கு நேரெதிர் திசையிலுள்ள மற்றுமொரு தனிக்குரல் பாடலை ஜென்ஸிக்குக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடலை, தான் பின்னால் அமைக்கப் போகும் ஓர் அற்புதமான மெட்டுக்கான முன்னோட்ட முயற்சியாக இளையராஜா செய்து பார்த்திருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு. ’அன்னக்கிளி’ இயக்குனர்களான தேவராஜ்-மோகனின் இயக்கத்தில் வெளியான ‘பூந்தளிர்’ திரைப்படத்தின் ’ஞான் ஞான் பாடணும்’ என்ற பாடலை கீரவாணி ராகத்தில் அமைத்த இளையராஜா, பிற்பாடு ‘ஜானி’ திரைப்படத்தின் ‘காற்றில் எந்தன் கீதம்’ பாடலை அமைப்பதற்கான யோசனையை, இந்த ‘பூந்தளிர்’ பாடலிலிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பாடலை தன் தாய்பாஷையில் பாடியிருப்பதால் பெரிய ‘ற’ சிக்கலில்லாமல் அருமையாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. தான் பாடிய மற்ற தமிழ்ப்பாடல்களைவிட ’ஞான் ஞான் பாடணும்’ பாடலில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரக் குரலில் அவர் பாடியிருப்பதை நம்மால் கவனிக்க முடியும். அதுவும் இந்தப் பாடலின் தாளத்தைப் பற்றியும், வயலின் மற்றும் புல்லாங்குழல் போன்ற இசைப்பகுதிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தால் தனியாக இன்னொரு கட்டுரைதான் எழுதவேண்டி வரும்.
ஜென்ஸியின் பாடல்களைச் சொல்லும் போது ஒவ்வொருவரும் அவரவர் ரசனைக்கேற்ப ஒவ்வொரு விருப்பப் பாடலைச் சொல்வார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக அந்தக்கால இளைஞர்கள் பலரின் ஓட்டுகளைப் பெற்று Unopposedஇல் ஜெயித்த பாடல் ஒன்று உண்டென்றால் அது ‘உல்லாசப் பறவைகள்’ திரைப்படத்தின் ‘தெய்வீக ராகம்’ பாடல்தான். ஜென்ஸியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘தெய்வீக றாகம்’. காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கேட்டாலும் இந்தப் பாடலை ‘ஓ’வென்று எங்கோ வெளியூரிலிருந்து ஜென்ஸி துவக்கிப் பாடுவதைத்தான் நம்மால் கேட்க முடியும். சரணத்தில் ‘செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு’ என்று ஜென்ஸி பாடும் போதெல்லாம் செந்தாழம்பூவின் வாசனையை நான் நுகர்ந்திருக்கிறேன். ‘பாராட்ட வா, நீராட்ட வா, நீ நீந்த வா என்னோடு, மோகம் தீருமே’ என்று ஜென்ஸி அழைக்கும் போது உடனே போய் தலைகுப்புற அந்த நீரில் குதித்து விடத் தோன்றியிருக்கிறது. நிற்க. முழுக்க முழுக்க இதன் இசையையும், ஜென்ஸியின் பாடுமுறையையும் வைத்தே இதை சொல்கிறேன். இந்தப் பாடலின் காட்சியில் அடக்க ஒடுக்கமாக ஆற்றங்கரையில் புடவையை அவிழ்த்து முகம் கழுவும் தீபாவுக்கும், எனது இந்த அபிலாஷைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.


பெரும்பாலும் உச்சஸ்தாயியில் பாடும் பல பாடல்களை ஜென்ஸி பாடியிருக்கிறார் என்றாலும் ‘அன்பே சங்கீதா’ திரைப்படப்பாடலான ‘கீதா சங்கீதா’ என்னும் பாடல் குறிப்பிடத்தக்கதொரு ஜென்ஸியின் பாடல். Under rated பாடகரான ஜெயச்சந்திரனுடன் இணைந்து ஜென்ஸி பாடியிருக்கும் இந்தப் பாடலை ‘லாலாலலலா’ என்று மழலையாக ஜென்ஸி துவக்குவார். அதைத் தொடர்ந்து ‘கீ . . .தா . . .’ என்று உச்சஸ்தாயியில் ஜெயச்சந்திரன் பாடலைத் துவக்கிப் பாடுவார். பல்லவி முடிந்து சரணம் முடியும் போதுதான் ‘கண்ணா’ என்று ஜென்ஸி வந்து இணைவார். கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், பிசிறில்லாமல் ஜென்ஸி துவக்கும் விதத்தையும், ஜெயச்சந்திரனுக்கு சற்றும் சளைக்காமல் அடுத்த சரணத்தில் ‘பலஜென்மம் பிறந்தாலும் உன்வாசல் தேடும் உறவல்லவோ’ என்று ஜென்ஸி பாடியிருக்கும் முறையையும் கேட்டுப் பாருங்கள்.
வேடிக்கைப் பாடல்களையும் ஜென்ஸி பாடாமலில்லை. ‘மெட்டி’ திரைப்படத்தின் ‘கல்யாணம் என்னை முடிக்க’ என்னும் பாடலை அனுபவித்துப் பாடியிருப்பார். படுவேகமாக அதன் சரணத்தை முடித்து பல்லவியுடன் போய் இணையும் இடமொன்று இருக்கிறது. ‘ரயில் வரும் வழியினில் தோரணம் ஆடணும், இதுவும் எனது இனியமனது விரும்புவது’ என்று துரிதகதியில் பாடிய ஜென்ஸியேதான், இதே போல படுவேகமாகத் துவங்கக்கூடிய ஒரு பாடலையும் பாடினார். கரஹரப்ரியா ராகத்தில் மெட்டமைக்கப்பட்ட ‘பூ மலர்ந்திட’ என்று துவங்கும் ‘டிக் டிக் டிக்’ படப்பாடல்தான் அது. இதுபோன்ற ராகங்களின் அடிப்படையில் மெட்டமைக்கப்பட்ட பாடல்களில் ஜென்ஸியின் குரலில் வெளிவந்த முக்கியமானதொரு பாடல், ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தின் ‘தம்தன நம்தன’ என்னும் பாடல். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை ஜென்ஸி, மற்றொரு பாடகியான வசந்தாவுடன் இணைந்து பாடியிருந்தார். மோகன ராகத்தில் அமைந்த, பெரும்புகழ் பெற்ற, ‘மீன்கொடித் தேரில்’ என்னும் ‘கரும்புவில்’ படப்பாடலை ஆண்குரலில் யேசுதாஸும், பெண்குரலில் ஜென்ஸியும் பாடியிருந்தார்கள்.
’பகலில் ஓர் இரவு’ திரைப்படத்தின் ‘தோட்டம் கொண்ட ராசாவே’ மற்றும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் ‘வாடி என் கப்பக்கிழங்கே’ போன்ற நையாண்டிப் பாடல்களை இளையராஜாவுடன் இணைந்து பாடிய ஜென்ஸி, கடைசியாக தமிழில் பாடிய பாடலும் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படப்பாடல்தான். அதற்கு முன்பே இளையராஜாவுடன் இணைந்து ‘ஈரவிழிக்காவியங்கள்’ திரைப்படத்தின் ‘என் கானம்’ என்னும் பாடலைப் பாடியிருக்கிறார். கிடாரிஸ்டுகளின் விருப்பப்பாடல் அது. ஆனால் இளையராஜா பாடிய டூயட்களில் இன்றளவும் சிறப்பான ஒன்றாக ’அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் அவர் ஜென்ஸியுடன் இணைந்து பாடிய ’காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாடல்தான் கருதப்படுகிறது. அந்தப்பாடலின் சரணத்தில் ‘தாங்குமோ என் தேகமே, மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே’ என்ற வரிகளை ஜென்ஸி பாடுகிறார். அதை கேட்கும் போது நமக்கு விரசமாகத் தோன்றாததற்குக் காரணம், அதன் இசை மட்டும் காரணமல்ல. அந்த வயதுக்கேயுரிய ஜென்ஸியின் வெகுளியான,விகற்பமில்லாத குரலும்தான். மலாய் பாஷையில் துவங்கும் ‘ப்ரியா’ படப்பாடலான ‘என்னுயிர் நீதானே’பாடலை ஜென்ஸியின் குரலில் கேட்கும் போது யாரோ ஒரு சிங்கப்பூர் பெண்தான் பாடியிருப்பதாகவே நமக்கு தோன்றும் அளவுக்கு ஜென்ஸியின் குரல் அந்த மலாய் நடிகைக்குப் பொருத்தமாக இருந்தது.
கிடார் வாசிப்பவர்கள் கொண்டாடும் மற்றொரு பாடலையும் ஜென்ஸி பாடியிருக்கிறார். கிராமியப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலை கிடாரின் துணையுடன் அட்டகாசமாக மெட்டமைத்திருப்பார் இளையராஜா. அவ்வளவாக அறியப்படாத அந்தப் பாடல் ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. ‘ஆத்தோரம் காத்தாட’என்று துவங்கும் அந்தப் பாடலை நீந்திக்கொண்டே பாடியிருக்கிறாரோ என்று நாம் சந்தேகிக்கும் வண்ணம் பாடியிருப்பார் ஜென்ஸி. அவர் பாடி அதிகம் அறியப்படாத இன்னொரு பாடல், ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆடச் சொன்னாரே’ என்ற க்ளப் வகைப் பாடல். அந்தப் பாடல் ஜென்ஸிக்காவது ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
ஆனால் இத்தனை பாடல்களையும் தாண்டி, இன்றும் ஜென்ஸிக்கு ஓர் அடையாளமாக விளங்கும் பாடலென்றால் ‘ஜானி’ படத்தில் இடம்பெற்ற ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’ என்ற பாடல்தான். இன்றும் கூட ஜென்ஸியைக் குறித்து அதிகம் அறியாதவர்களிடம், ‘என் வானிலே’ பாட்டைப் பாடியவர் என்று சொன்னால், ‘அந்தப் புள்ளையாடே’ என்று முகம் மலர்ந்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது. இப்பாடலின் திரைவடிவில் பியானோவை இசைத்துக் கொண்டே ஸ்ரீதேவி பாடுவார். பாடலின் சரணம் முடியும் இடமான, “வார்த்தைகள் தேவையா?” என்பதைத் தொடர்ந்து வரும் ஆலாபனை மிகவும் சிரமமான ஒன்று. இந்தப் பாடல் பலருக்கு விருப்பமான ஒன்றாக இருந்தாலும், பொது மேடைகளில் இதைத் தெரிவு செய்து பாடுவதற்குத் தயங்குவதற்கான காரணம் தலை குப்புறக் கவிழ்த்துவிடும் அந்த ஆலாபனைதான். எந்தப் பிசிறும் இல்லாமல், சிரமமான இடம் போலவே தெரியாதபடி வெகு அநாயசமாக அதைக் கடந்து சென்றிருப்பார் ஜென்ஸி. இத்திரைப்படம் வெளியானபோது பாடல்களுக்காவும், பாடல்களை சிறப்பாகக் காட்சிப்படுத்தியததற்காகவும்இத்திரைப்படத்தைத் தமிழகமே கொண்டாடியது. செண்பகத்தக்காவுக்கும் இப்பாடல் மிகவும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ஒலிபரப்பாகும் பாடலுடனே இணைந்து பாடும் செண்பத்தக்கா, ‘என் வானிலே’ பாடலை மட்டும் அது முடிந்த பிறகும் பாடிக்கொண்டிருப்பார். ‘நீரோடை போலவே என் பெண்மை’ என்ற வரியை மெல்லிய குரலில் பாடும் போது செண்பத்தக்காவின் கண்கள் கலங்கி நிரம்பி நிற்பதைப் பார்த்திருக்கிறேன்.
இப்போது செண்பகத்தக்காவின் வீடு இருந்த இடத்தில் உயரமாக ஒரு புதிய கட்டிடம் நிமிர்ந்து நிற்கிறது. செண்பகத்தக்கா எங்கு, எப்படி இருக்கிறாள் என்ற தகவலில்லை. ஆனால் செண்பகத்தக்காவை ஞாபகப்படுத்துகிற ஜென்ஸி கேரளாவில் இசையாசிரியையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு நாள் போய்ப் பார்க்க வேண்டும்.