வியாழன், ஏப்ரல் 30, 2009

வனக்கம் நண்பர்களே : நான் இந்த போஸ்ட் பெங்கலூரிளிரிந்து அனுப்பிகிறேன் !
ஏன்? திடீரென்று ஏன் அப்பாவிக்கு உடம்பு சரி இல்லாமல் போயிற்று. இப்போது கடவுள் கிருபையால் சரியாகி போயிற்று . இப்போது நான் மீண்டும் அமெரிக்கா வில் இருந்து தொடருவேன்.
Take Care,
GFK

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

குஜிலி அவர்களின் போஸ்டிங் ஐ படித்தவுடன் மக்களின் மன நிலை எல்லா இடத்திலும் ஒண்ணுதான் என்று தோணுது, அது அமெரிக்காவா இருந்தாலும் ஆப்பிரிக்காவா இருந்தாலும் ஒண்ணுதான். சமீபத்தில் படித்தது நினைவுக்கு வருது, செல் போனும் பொண்டாட்டியும் ஒன்னு என்றார் நண்பர், ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்றார் மற்றொருவர்,"கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தால் better ஆ புடிச்சி இருக்கலாமேன்னு தோண வைக்கறதால ரெண்டுமே ஒண்ணுதான்" என்றார். அதுபோல தான் மக்களுக்கு எப்பவுமே திருப்தி வராது. குஜிலி வெயிலை காதலிக்கறதா சொல்றாங்க இங்க அடிக்குற வெய்யிலில் கொண்டு வந்து ஒரு பத்து நிமிஷம் நிக்க்க வைக்கணும், ஆப்பிரிக்கா காரண நெருப்புல குளிப்பாட்டி நிக்க வச்ச மாதிரி ஆயிடுவாங்க. மண்டை பிளக்க ஆரம்பித்து விட்டது, கூடவே கண்ணு மூக்குல அப்புற மண்ணு வேற. குஜிலி சொன்னா மாதிரி இப்ப எல்லோருமே ரொம்ப வேலைப்பளுவுல இருக்கின்றோம், இந்த வேலைப்பளுவுல உண்டாகுற மன உளைச்சலை குறைக்க பிளாக் ரொம்ப உதவியாக இருக்கு. அதனால வேலை அதிகமாக இருக்குன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம், எழுதுங்க,படிங்க டென்சனை குறையுங்க.
கரையான்.

பிஸி ஏப்ரல்...

ஸ்ப்ரிங் செமஸ்டர் முடிவதற்கு இரண்டு வாரம் தான் உள்ளது. அதற்கு பிறகு YENGALLUKU கோடை காலம்!! ஆனால் இந்த இரண்டு வாரமும் வேலை இன்னும் வேகமான PACE இல் போகிறது... ஆகையால் BLOG எழுதவோ வாசிக்க நேரம் இல்லை. கடந்தநான்கு நாட்களாக எங்கள் ஊரில் நல்ல வெயில்.. இந்த தொன்னுரூ டிகிரி வெயில் காக AARU மாசம் காத்திருந்தேன். சென்னையில் வெயில் என்றால் பேஜார் ஆனால் இங்கு வெயில் என்றல் எனக்கு மிக்க சந்தோசம்!
இந்த ஊரு ஜனங்கள் வெயிலை கண்டதும் சூரிய நமஸ்காரம் செய்யாத குறை தான். வெயிலில் படுத்து தங்கள் தோலை "tan" செய்து கொள்வார்கள். சிலர் சூப்பர் வெள்ளையாக இருப்பதால் அவர்களின் தோல் நிறம் சிவப்பாகி "sun burnt" ஆகி விடும்.. தோல் வதக்கின தக்காளி மாதிரி இறக்கும். என் வகுப்பில் இருக்கும் சில மாணவர்களுக்கு என் நிறம் போல் "tan' ஆகா வேண்டும் என்று ஆசை. நமது நாட்டில் கருப்பாக இருந்தால் கேலி செய்வர் - நான் பெரும்பாலும் அந்த கேலியை ஜோக் ஆகா எடுத்து கொண்டு கண்டு கொள்வதில்லை. இங்கோ எனது கருப்பு நிறத்தை கண்டு MANAVARGALUKU பொறாமை. ஒரு முறை எனது வகுப்பில் இருக்கும் மான்னவி தன் நிறத்தை ஏன் நிறம் போல அகவேண்டும் என்று நினைத்து வெயிலில் காய்ந்து விட்டு வந்தால். அதன் நிமித்தம் தோல் சிவப்பாகி தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. டாக்டர் இடம் சென்று மருந்து வாங்கவேண்டிய அளவுக்கு சென்று விட்டது. இறைவன் நமக்கு எது கொடுத்திருந்தாலும் நமக்கு திருப்தி இல்லை - எப்போதும் இக்கரைக்கு அக்கறை பச்சையாகவே தோன்றும் pola .
Gujili

புதன், ஏப்ரல் 22, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் to GFK

சென்னை ஸ்டார்ஸ் சார்பில் GFK அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
Gujili
வெளி நாட்டுல வந்து பாஷ தெரியாம கஷ்டம் பட்டாலும் கொஞ்சம் காமெடியாகவும் இருக்குது, இங்க வந்த புதிதில எங்க வீட்டை சுத்தி இருக்கிற புள் பூண்டு களை சுத்தம் செய்ய என்னோட கண்கண்ட தெய்வம் ரெண்டு நேபாளி பணியாளர்களை அழைத்து வந்து விட்டு விட்டு என்னிடம் அவர்களுக்கு ஏதாவது குடிக்க கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். எனக்கோ தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது, அதனால எங்க வீட்டிலேயே இந்தியில் பாண்டியத்யம் பெற்ற (பிராத்மிக் ) காயத்திரிய அழைத்து அவர்களிடம் cool drinks குடிக்கிறார்களா என இந்தியில் கேள் என கூறினேன். காயத்திரியும் அவர்களிடம் எதோ கேட்க அவர்கள் "தோடா பஸ்" என கூறினார்கள், நான் காயதிரியிடம் அவர்கள் என்ன கூறினார்கள் என கேட்க, காயத்திரி "அம்மா அவர்களுக்கு தொண்டை வலியாம் வேண்டாம் என கூறிவிட்டார்கள், தோடா என்றால் தொண்டை," என்று எனக்கு விளக்கம் அளித்தாள். நானும் விட்டு விட்டேன். சிறிது நேரம் கழித்து வீடு வந்த என் கணவர், என்ன ஏதாவது குடிக்க குடுத்தியா இல்லையா என கேட்டார், நான் அவரிடம் நடந்ததை கூறியவுடன், விழுந்து விழுந்து சிரித்தார், தோடா என்றால் கொஞ்சம், பஸ் என்றால் போதும், கொஞ்சம் போதும் என்று அவர்கள் கூறி உள்ளார்கள் என விளக்கினார்.
இப்ப பக்கத்து வீட்டுல இருக்கிற சூடானி,எமேணி மற்றும் எகிப்து பெண்களுடன் வாரத்தில் ஒரு நாள் பார்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறி விட்டேன், கொஞ்சம் அரபி, கொஞ்சம் ஆங்கிலம்,கொஞ்சம் தமிழ் என கலக்கி சமாளித்துக்கொண்டு இருக்கிறேன்.
திருமதி.கரையான்.

ஞாயிறு, ஏப்ரல் 19, 2009

பாயின் உள்ளத்திலிருந்து-II

Dear Friends,

If one day if u feel like crying ,Call me.
I don’t promise to make u laugh,But i can cry with u.
If one day if u want to run away, call me.
I don’t promise to ask u to stop,But i can run with u.
If one day if u don’t want to listen to anyone,Call me.
I promise to be there for u,but also promise to remain quiet.
But one day if u call me,And there is no anwser,

Come fast to see me,Perhaps i need you.

அன்புடன்,

பாய்.

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

பணி சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் சோர்வின் காரணமாக சில நாட்களாக என்னால் பிளாகில் எழுத முடியவில்லை அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு உற்ச்சாகமாக தொடர்கிறேன்......
ஒரு முறை இந்த நாட்டுகார குதிரை முதலாளி ஒருவர் என்னிடம் வந்து அவருடைய குதிரைக்கு castration செய்ய வேண்டும் என கூறினார், நானும் அதற்கென்ன செய்து விடுவோம், உங்கள் பணியாளிடம் சொல்லிவிடுங்கள் நாளை காலை வந்து செய்து விடுகிறேன் என கூறினேன், அவர் அதற்கு அடுத்ததாக போட்ட கண்டிசந்தான் கொஞ்சம் வினோதமாக இருந்தது. அந்த குதிரைக்கு வலது புற testicle ஐ விட்டு விட்டு இடது புற testicle மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று கூறினார், நான் அவரிடம் அதனால் ஒரு பயனும் இல்லை என்று கூறினேன், அவரோ என்னிடம் பிடிவாதமாக அவர் சொன்னதை செய்ய வேண்டும் என்பதை கூறினார், நானும் அவரிடம் ஒரு testicle அல்லது இரண்டு testicle எடுத்தாலும் பீஸ் ஒன்றுதான் என்பதை கூறி அவர் சொன்ன மாதிரியே செய்தேன். சில நாட்கள் கழித்து திரும்ப வந்து இரண்டாவதை யும் எடுக்க வேண்டினார், மீண்டும் ஒருமுறை முழு கட்டணத்தையும் வாங்கி கொண்டு வலது புற testicle ஐயும் எடுத்தேன். அதற்கான காரணத்தை எத்தனை முறை கேட்டும் அவர் கூற வே இல்லை. அது என்னவாக இருக்கும் தோழர்/தோழியர் தெரிந்தால் comment டலாம். இந்தியாவாக இருந்தால் வாஸ்து படி அவர் ஈசான மூளை, சனி மூளை , etc etc என ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது இருக்க கூடாது என நம் நண்பர் பாண்டியன் விளக்கம் அளிப்பார், ஆனால் சவுதியில் அப்படியெல்லாம் கிடையாதே......

கரையான்.

திங்கள், ஏப்ரல் 13, 2009

Isla Mujeres-an Island off of Cancun
Main Road in Cancun
Neal with the Dancers in our resort
ManiKonaar and Neal attempting to Snorkel!!!
ManiKonaar and Neal in the balcony of our resort
Cancun Photos

அன்புமிக்கு நண்பர்களே நண்பிகளே :
எல்லோருக்கும் GFK யின் குடும்பத்தில் இருந்து அன்பார்ந்த தமிழ் மற்றும் Baisakhi வாழ்த்துக்கள். உங்கள் புத்தாண்டு இன்பமய மாக, இறைவனின் ஆசிர்வாதங்கள் நிறைந்த , நல் ஆரோக்யமும் சுபிக்ஷமும் நிறைததாகவும் இருக்கட்டும். இது தான் எங்களுடிய பிரார்த்தனை.
GFK குடும்பம்
இந்த படம் Chichen Itza வில் எடுதது. This is one of the seven wonders of the world and is 2 hours away from Cancun, Mexico. It was built by the Mayans.

வெள்ளி, ஏப்ரல் 10, 2009



லங்குடு மாமா மேலும் பல்லாண்டு வாழ்ந்து பல வகையிலும் சமூகத்திருக்கு சேவை செய்ய வாழ்த்த உடல் பருமன் போதாததால் வணங்குகிறேன் .


கரையான்.

வியாழன், ஏப்ரல் 09, 2009

சென்னை ஸ்டார்ஸ் யின் சாரபில்
லங்குடு மாமா விக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
வாழ்க வளமுடன் . நல்ல ஆரோக்யம் , நீண்ட ஆயு , எல்லா சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும்!
GFK

திங்கள், ஏப்ரல் 06, 2009

ஏப்ரல் fools day!!

நேற்று இரவு சாப்பாடு தயார் செய்யும் போது ரசம், சாதம் மட்டும் செய்தேன். கூட்டு எதுவும் செய்ய நேரம் இல்லை. ஆதலால் கொழுப்பு இல்லாத காய்கறி crisps கூடாக வைத்து ரசம் சாதத்தை சாப்பிட்டேன். அந்த காய்கறி crisps உருளைகிழங்கு சிப்ஸ் போல இருக்கும் என்று வாங்கினேன், ஆனால் அதில் ருசியே இல்லை, THERMOCOAL/STYROFOAM மாதிரி TASTE . அந்த கறுமமான சிப்ஸ் சாப்பிடும் பொது II ND YR ஏப்ரல் FOOLS day ஞாயபகம் வந்தது. லங்குடு மாமா ஒரு முறை ஏப்ரல் FOOLS day அன்றைக்கு எல்லோருக்கும் சிப்ஸ் பக்கெட் வாங்கி கொடுத்தார். வாங்கினவர்கள் எல்லோரும் உருளைகிழங்கு சிப்ஸ் என்று நினைத்து, நான்கு அல்லது ஆறு சிப்ஸ் எடுத்து வாய்க்குள் போட்டனர். அந்த சிப்ஸ் யாவும் மஞ்சள் நிற THERMOCOAL ஆல் செயப்பட்டது. லங்குடு மாமா அந்த சிப்ஸ் அப்படி தான் வாங்கினாரா அல்லது THERMOCOAL எடுத்து பொறுமையாக கீரினாரா என்று தெரியாது. ஆனால் நம் மக்கள் - seniors, juniors யாவரும் சிப்சை வாயில் போட்டதும் துப்ப ஆரம்பித்தனர். அவர்கள் முழியும், முக பாவனைகளும் மிக்க வேடிக்கையாக இருந்தது. MVC canteenil இருந்து எல்லாருடைய முகத்தை பார்த்து நன்றாய் சிரித்தோம்!
Gujili