புதன், ஏப்ரல் 22, 2009

வெளி நாட்டுல வந்து பாஷ தெரியாம கஷ்டம் பட்டாலும் கொஞ்சம் காமெடியாகவும் இருக்குது, இங்க வந்த புதிதில எங்க வீட்டை சுத்தி இருக்கிற புள் பூண்டு களை சுத்தம் செய்ய என்னோட கண்கண்ட தெய்வம் ரெண்டு நேபாளி பணியாளர்களை அழைத்து வந்து விட்டு விட்டு என்னிடம் அவர்களுக்கு ஏதாவது குடிக்க கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். எனக்கோ தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது, அதனால எங்க வீட்டிலேயே இந்தியில் பாண்டியத்யம் பெற்ற (பிராத்மிக் ) காயத்திரிய அழைத்து அவர்களிடம் cool drinks குடிக்கிறார்களா என இந்தியில் கேள் என கூறினேன். காயத்திரியும் அவர்களிடம் எதோ கேட்க அவர்கள் "தோடா பஸ்" என கூறினார்கள், நான் காயதிரியிடம் அவர்கள் என்ன கூறினார்கள் என கேட்க, காயத்திரி "அம்மா அவர்களுக்கு தொண்டை வலியாம் வேண்டாம் என கூறிவிட்டார்கள், தோடா என்றால் தொண்டை," என்று எனக்கு விளக்கம் அளித்தாள். நானும் விட்டு விட்டேன். சிறிது நேரம் கழித்து வீடு வந்த என் கணவர், என்ன ஏதாவது குடிக்க குடுத்தியா இல்லையா என கேட்டார், நான் அவரிடம் நடந்ததை கூறியவுடன், விழுந்து விழுந்து சிரித்தார், தோடா என்றால் கொஞ்சம், பஸ் என்றால் போதும், கொஞ்சம் போதும் என்று அவர்கள் கூறி உள்ளார்கள் என விளக்கினார்.
இப்ப பக்கத்து வீட்டுல இருக்கிற சூடானி,எமேணி மற்றும் எகிப்து பெண்களுடன் வாரத்தில் ஒரு நாள் பார்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறி விட்டேன், கொஞ்சம் அரபி, கொஞ்சம் ஆங்கிலம்,கொஞ்சம் தமிழ் என கலக்கி சமாளித்துக்கொண்டு இருக்கிறேன்.
திருமதி.கரையான்.

2 கருத்துகள்: