செவ்வாய், ஏப்ரல் 28, 2009

குஜிலி அவர்களின் போஸ்டிங் ஐ படித்தவுடன் மக்களின் மன நிலை எல்லா இடத்திலும் ஒண்ணுதான் என்று தோணுது, அது அமெரிக்காவா இருந்தாலும் ஆப்பிரிக்காவா இருந்தாலும் ஒண்ணுதான். சமீபத்தில் படித்தது நினைவுக்கு வருது, செல் போனும் பொண்டாட்டியும் ஒன்னு என்றார் நண்பர், ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்றார் மற்றொருவர்,"கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தால் better ஆ புடிச்சி இருக்கலாமேன்னு தோண வைக்கறதால ரெண்டுமே ஒண்ணுதான்" என்றார். அதுபோல தான் மக்களுக்கு எப்பவுமே திருப்தி வராது. குஜிலி வெயிலை காதலிக்கறதா சொல்றாங்க இங்க அடிக்குற வெய்யிலில் கொண்டு வந்து ஒரு பத்து நிமிஷம் நிக்க்க வைக்கணும், ஆப்பிரிக்கா காரண நெருப்புல குளிப்பாட்டி நிக்க வச்ச மாதிரி ஆயிடுவாங்க. மண்டை பிளக்க ஆரம்பித்து விட்டது, கூடவே கண்ணு மூக்குல அப்புற மண்ணு வேற. குஜிலி சொன்னா மாதிரி இப்ப எல்லோருமே ரொம்ப வேலைப்பளுவுல இருக்கின்றோம், இந்த வேலைப்பளுவுல உண்டாகுற மன உளைச்சலை குறைக்க பிளாக் ரொம்ப உதவியாக இருக்கு. அதனால வேலை அதிகமாக இருக்குன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம், எழுதுங்க,படிங்க டென்சனை குறையுங்க.
கரையான்.

1 கருத்து: