சனி, டிசம்பர் 08, 2012

மன உளைச்சல்கள்


கஷ்டப்பட்டு எழுதுன பதிவுக்கு கமென்ட் வரவில்லை என்றாலும் மன உளைச்சல்தான்....

கரையான் 

2 கருத்துகள்:

  1. கரையான் ..உனது மன உளைச்சல்கள பற்றிய பதிவுகள் அருமை.எப்போதுமே நன்றாக எழுதுபவர்களுக்கு சும்மா கமென்ட் அடிப்பது போததல்லவா ..எனவே கமெண்ட் சொல்லாவிட்டாலும் உனது பதிவுகளின் seriousness எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான் .

    மன உளைச்சல் இன்றைய வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது.அது பணி இடத்தில் மட்டுமல்லாமல் வாழ்வின் எல்லாப் பிராயங்களிலும் பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.குழந்தையை crecheல் தள்ளிவிட்டுப் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிற கட்டாயத்தில் ஒரு வயதைத் தாண்டாத குழந்தைக்கு stress தொடங்கி விடுகிறது .பள்ளிப் பருவத்தில் ஏகத்துக்கும் சிலபஸ் ..ப்ராஜெக்ட் வொர்க் ..கட்டாயமாகப் படுகிற எக்ஸ்ட்ரா curricular activities ...எல்லோர் முன்னிலும் ஆசிரியரால் திட்டப்படுகிற மாணவர்கள் பத்தாவது வகுப்புப் பாடத் திட்டத்தை ஒன்பதாவது படிக்கிற போதே முடித்து விடத் துடிக்கிற தனியார் பள்ளிகள்..தினமும் அவர்கள் எதிர்கொள்ளும் class testகள் குழந்தைகளை எப்போதுமே சந்தேக உணர்வோடு கண்காணிக்கிற பெற்றோர்கள் ..சோசியல் நெட் வொர்க்குகள் தருகிற மறைமுக மன அழுத்தங்கள் ..சமுக ஏற்றத் தாழ்வுகள் என எப்போதுமே மன அழுத்த வாழ்வு முறைக்கு இன்றைய பிள்ளைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நமது பள்ளிப் பருவத்திலிருந்து ரொம்பவே மாறிவிட்டது .

    இன்னும் அடுத்த கட்டத்தில் வேலை.. திருமணம் ...குழந்தைகளின் படிப்பு..சமுக நிர் பந்தங்களுக்க்காக maintain செய்ய வேண்டிய சொந்த வீடு.. கார் .ஆபரணங்கள் ..உடைகள் ..பிரம்மாண்டமான விழாக்கள் ..ஒரு பக்கம். எதிர் பாராமல் வந்து ஆளைக் குப்புறத் தள்ளும் நோய்கள் ..மருத்துவச் செலவுகள் என இன்னொரு பக்கம் ..பணியிடத்தில் எப்போதுமே நிலவுகிற பாதுகாப்பற்ற தன்மை ஓவராய் வேலை வாங்குகிற அல்லது result எதிர்பார்க்கிற மேலதிகாரிகளின் நிர்பந்தங்கள் ..என்று stress வாழ்வின் பெரும் பகுதியில் அங்கமாகி விட்டது

    இதற்கிடையில் ஈகோ காரணமாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளுகிற stress..எத்ர்காலம் குறித்த பயத்தில் நிகழ காலம் தொலைத்து நம்பிக்கையின்மையின் காரணமாக ஏற்படுகிற மன அழுத்தங்கள் ..என தெனாலி திரைப் படத்தில் கமல் எல்லாம் பய மயம் என்ற மாதிரி இன்று பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் stress மயம் என்றாகி விட்டது ..இதற்கிடையில் வாழ்வில் நம்பிக்கை வைத்து தைரியத்தோடு பிரச்சினைகளை எதிர் கொள்ளுகிற தன்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கொடுப்பது முக்கியம் .நன்றாகப் படிக்கிற பிள்ளைகளை விட மன தைரியத்தோடும் நிதானத்தோடும் பிரச்சினைகளை.. செயல்பாடுகளை... சக மனிதர்களை ..நேர்முக மறைமுக எதிரிகளைக் கையாளும் சாணக்கியத் தந்திரங்களை கற்றுத் தர வேண்டியது அவசியம் ..நல்லவனாக இருப்பதோடு வல்லவனாவகவும் இருப்பது இன்றையத் தேவை
    Chocks

    பதிலளிநீக்கு
  2. chocks
    உன்னுடைய இந்த கருத்து பதிவு முக்கிய பதிவாக இருக்க வேண்டியது , ஆகவே முக்கிய பதிவாக பதிகிறேன்....

    கரையான்.

    பதிலளிநீக்கு