வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஊமைத்தூரிகை


அடிப் 
பேதைப்  பெண்ணிவள்
நாடிப் போனவன்
கூடிப் போனபின் 
ஓடிப்போனவன் 

இவள் 
கருத்தறியா காலத்தே 
கல்வியற்ற கலவியிலே 
கருவறையில் கருத்தரித்த 
கருப்பனின் காரிகை 


தூரிகை
காயுமுன் கண்ணீரில் 
கலைந்திட்ட முற்றுப்
பெறா ஓவியம் இவள் 
பெற்றதோ ஒரு காவியம் 


இந்த 
தம்பிக் கை தானே 
உனக்கு தும்பிக்கை
வரும் இனிமேல் 
உனக்கு நம்பிக்கை

நீ பத்து
மாதம் சுமந்தாய்
பார்த்துப் பார்த்து 
பத்து ஜென்மம் சுமப்பான் இவன் 
உன்னை பாதுகாத்து

3 கருத்துகள்:

  1. அப்பப்பா!தூல் கிளப்புரிங்க!
    பாய்.

    பதிலளிநீக்கு
  2. கருத்தறியா காலத்தே
    கல்வியற்ற கலவியிலே
    கருவறையில் கருத்தரித்த
    are the notable lines.
    The structure of the lyric is good
    Keep it up
    Chocks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தில் நிறைய படிக்கிறாய் என்று நினைக்கிறேன்....
      பிரமிக்க வைக்கும் வரிகள். கண்டிப்பாக நிறைய நேரம் எடுத்திருப்பாய். நம்ம பிளாகுக்கு சூப்பர் கவிஞர் கிடைத்து விட்டார்,சொக்கனுக்கு போட்டியாக. சபாஷ் சரியான போட்டி.
      karaiyan.

      நீக்கு