வியாழன், ஜனவரி 15, 2009

நான் கல்லூரிக்கு தினமும் வந்து செல்லும் பேருந்தில் சில சமயங்களில் நம்முடிய batchmate பிரேமலதாவும் அரும்பாக்கத்திலிருந்து பயணம் செய்வார், பார்த்தால் புன்னகை செய்து கொள்ளும் அளவுக்கு எங்களுக்குள் நட்பு உண்டு. அப்போது எனக்கு ஆமிர் கான் போல six pack உடம்பு இல்லை என்றாலும் ஒரு police constable போல இருப்பேன்,(S.P or D.S.P போல இருப்பேன்னு சொல்ல ஆசைதான் அனால் பாய் உடனே கண்டனக்கடிதம் அனுப்பிவிடுவான் )ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரே பேருந்தில் பயணம் செய்யும்போது அவர் என்னருகில் வந்து சில வார்த்தைகள் பேசினார், மேலும் என்னிடம்" குமரன் அங்கே பின்னால் நிற்கும் சிவப்பு சட்டைக்காரன் தினமும் என்னையே follow செய்கிறான், எனக்கு பயமாக இருக்குது" என்றார். என் மனதுக்குள்"இதென்னடா வம்பு, வயித்துல புளிய கரைக்குற மாதிரி பிரச்சனையா இருக்கே" என எண்ண ஓட்டங்கள் ஓடினாலும் கொஞ்சம் மனதை தைரியப்படுத்திக்கொண்டு யார் அவன் என்று கேட்டேன், அவன் யாருன்னே தெரியாது ஆனால் தினமும் என்னை follow செய்கிறான் என்று கூறினார். நான் அவனைபார்க்கும் போது வேறுபக்கம் திரும்பிக்கொண்டான், அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய Ripon building நிறுத்தம் நெருங்கியதால் , நான் பிரேமலதாவுக்கு முன்னாள் கொஞ்சம் விரைவாக சென்றேன், நான் வருவதைப்பார்த்து (என்னுடைய சதுர வட்டை hair cut ஐ பார்த்து என்னை போலீஸ் என நினைத்திருக்கலாம்) ஓடும் பஸ்சிலிருந்து சிக்னலில் குதித்து ஓடி மறைந்து விட்டான். எனக்கு அப்போதுதான் உயிரே வந்தது, இருந்தாலும் ஒரு சின்ன சந்தேகம் போய் வேறு ஆட்களை கூட்டி வருவானோ என்று ஆனாலும் என்னுடைய பயத்தை காட்டிக்கொள்ளாமல் ரிப்பன் கட்டிட நிறுத்தத்தில் இறங்கினேன், பிரேமா லதா ரொம்ப மகிழ்ச்சி அடைந்து "ரொம்ப நன்றி குமரன் இனிமே அவன் வர மாட்டான்னு நினைக்கிறேன்" நான் மனதிற்குள் "நானும் சில நாட்களுக்கு இந்த ரூட்டில் நிச்சயமாக வரமாட்டேன்" என நினைத்துக்கொண்டு விடை பெற்றேன்.

1 கருத்து: