வியாழன், ஜனவரி 08, 2009

நம்ம nutrition right விஸ்வநாதன யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, அவர் வகுப்புல அட்டெண்டன்ஸ் எடுப்பது முதல் பாடத்தை முடிப்பது வரை அனைத்தும் ரசிக்க கூடியதாக இருக்கும். ஒரு முறை அவர் அட்டன்டன்ஸ் எடுத்துக்கொண்டு இருந்தபோது எலி கத்துவது போல் சத்தம் வந்தது, எங்கிருந்து வருகிறது என்பதை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை, பின்னர் அவர் வழக்கமான பாணியில் பாடம் எடுக்க தொடங்கினார்,"lipids right are concentrated right source of right energy that can right readily be right utilized right by the animal........." என நமக்கு புரியாத பாணியில் நடத்திக்கொண்டிருந்தார், திரும்பவும் அந்த சத்தம் ஒலித்தது, அவரால் lecture ல் கவனம் செலுத்த முடியவில்லை, அந்த சத்தம் மின் விசிறியிலிருந்து வருவதை ஒரு வழியாக கண்டு பிடித்தார், பின்னர் அந்த விசிறியையே முகவாயில் கை வைத்துக்கொண்டு முறைக்க ஆரம்பித்தார், ஒற்றைக்காலில் நின்று,தலையை சொரிந்து,மீசையை தடவி,இரண்டு கையையும் மேஜையில் ஊன்றி என பல வழிகளிலும் பத்து நிமிடங்களாக யோசித்துக்கொண்டே இருந்தார், பின்னர் ஒரு வழியாக "off the switch" என்று சத்தமாக கூறினார்(மின் விசிறியை கண்டு பிடித்தவன் கூட இவ்வளவு சந்தோசம் அடைந்திருக்க மாட்டான் அவர் குரலில் சந்தோசம் ஒலித்தது). அந்த மின் விசிறியை நிறுத்த சொல்லுவதற்கு ஆங்கிலத்தில் எப்படி சொல்லுவது என்பதைத்தான் அவ்வளவு நேரம் யோசித்தார்.

2 கருத்துகள்: