செவ்வாய், ஜனவரி 13, 2009

துரைப்பலம் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடிய பெயர் அல்ல. நம்முடைய சீனியர் ஆக இருந்து, நம்முடைய வகுப்புதோழராகி,பின்னர் நமக்கு ஜுனியராகி,அதற்கும் பின் மிக ஜுனியரானவர். ஒரு முறை நயூராநிடமும் என்னிடமும் வந்து "மக்கா சிசிலியா மேடம் வார்டுல எனக்கு செமினார் எடுக்க சொல்லி assignment கொடுத்து இருக்காங்க, நான் என்னோட lecture முடிச்சவுடன் நான் உங்களுக்கு சொல்ற கேள்விகள என்கிட்டே சந்தேகம் கேக்குற மாதிரி கேக்கணும் நானும் நல்லா உங்களோட சந்தேகத்தை தீர்த்து வக்கிறமாதிரி அதுக்கு சரியா பதில் சொல்லிடுவேன்" என்று கூறினார். (seminar என்ன பொருத்தம் பாருங்க semi சங்க உறுப்பினர்களான எங்களுக்கு), நாங்களும் அவருடைய இந்த யோசனைக்கு ஒப்புக்கொண்டோம். வார்டில் அவர் தன்னுடைய உரையை முடித்தவுடன் சந்தேகங்கள் கேட்க வேண்டிய நேரம், நயூராந்தான் முதலில் கேட்கவேண்டும் என்பது ஏற்பாடு, ஆனால் நான் அவசரப்பட்டு முந்திக்கொண்டு விட்டேன், உடனே துரைப்பலம், என்ன மக்கா கண்ணன்தானே முதலில் கேக்கணும், நீ கேக்குறே என என்னிடம் அவசரப்பட்டு கேட்டு விட எங்களுடைய திட்டம் அனைவருக்கு தெரிந்து சிரித்து விட்டார்கள்.

3 கருத்துகள்:

  1. You are right, who can forget about doraipalam and his antics!! Wasn't he quite full on the thanni, with sivappu kangall whenever he came to class?

    பதிலளிநீக்கு
  2. When we were in fourth year,our classes used to be in Meat science block and doraipalam used to insist on sitting next to me everyday. I used to get pretty nervous but would never show it!!
    GFK

    பதிலளிநீக்கு
  3. Naan ,Thuraipplatthidam thirunelveli paasaiyil owwaru result warumpothum "enna makka,enna gradule eduthirukelae?" enru ketpaen.Pathil 'palam' enru solluwaan.
    Bhai.

    பதிலளிநீக்கு