வியாழன், ஜனவரி 01, 2009

internship time ல பொள்ளாச்சியில் கருப்ஸ் மற்றும் குமரேசனுக்கு "மாப்பிள்ளை market value" ரொம்ப நல்லாவே இருந்தது, ரெண்டு பேரும் கவுண்டர்கள் என்பதால். எனக்கு அப்படி எதுவும் இருந்ததில்லை(மற்ற நேரத்திலும் கூடத்தான்) , வெளியில் கேஸ் பார்க்க செல்லும்போது கவுண்டர் வீடு என்றால் கவனிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் அவர்கள் இருவருக்கும். அப்படி ஒரு இடத்தில் கருப்ஸ் கேஸ் பாக்க சென்ற இடத்தில், கருப்ப்ஸ் பற்றி அவர்கள் விசாரிக்க, ரொம்ப நெருங்கி வந்து விட்டார்கள். முதல் நாள் டிபன் காப்பி என்றிருந்த கவனிப்பு மூன்றாம் நாள் மத்திய உணவு வரை வளந்துவிட்டது. கருப்ப்ஸ் இன் நடை உடை பாவனை மற்றும் ஸ்டைல் அவர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. கருப்ப்ஸ் எங்கள் இருவரிடமும் ரொம்பவே பந்தா விட ஆரம்பித்து விட்டான்," என்னமா கவனிக்குராங்கடா, சப்பாத்தி வேணுமா,குருமா வேணுமா, கோழி ஆடெல்லாம் சாப்புடுவீங்களா ன்னு பயங்கர கவனிப்புதான் போ"என என்னுடைய வயித்தெரிச்சலை ரொம்பவே அதிகரித்தான். எனக்கு மனதின் ஓரத்தில் ஒரு சிறிய காட்சி ஓடிக்கொண்டே இருந்தது"மஞ்சள் தண்ணி தெளித்து மாலையிட்டு பலிக்கு தயார் படுத்தப்படும் ஆட்டு கிடா" ஒன்று மனக்கண்ணில் அடிக்கடி வந்து சென்றது. மூன்று நாள் முடிந்தது, நான்காவது நாள் கருப்ப்ஸ் follow-up treatment க்கு செல்ல வில்லை,என்னைப்போக சொன்னான், நான் "என்ன கருப்ப்ஸ் அவுங்க வீட்டுல இருந்த கோழி,கிடா எல்லாம் காலி ஆயிடுச்சா என்ன போக சொல்றே" என்று சந்தேகமாக விசாரித்தேன். "நல்ல வேலைடா பாழும் கிணத்துல தள்ளப்பார்தானுங்க, தப்பிச்சுட்டேன்" என sambanthame இல்லாமல் எதோ கூறினான். நான் அவனுடன் சென்ற attender இடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன்," சார் அந்த வீட்டுப்பொண்ணு சார விட எல்லாமே கொஞ்சம் குறைவுதான், அவர விட அழகுல, தோல் வெளுப்புல, உயரத்துல etc etc என அடுக்கிக்கொண்டே சென்றான், வயசுலயும் உருவத்துலயும் மட்டும்தான் அவரைவிட ரொம்ப அதிகம்,நேத்துதான் சாருக்கு அந்த பொண்ண காட்டுனாங்க ", எனக்கு ஒரு சின்ன ஆவல் நாமும் அந்த பெண் எப்படித்தான் இருக்கிறாள் என பார்த்து விடுவது என்று(ஓடுற பாம்ப மிதிக்கிற வயசு இல்லையா). பார்த்தேன் "stunningly beautiful" என்பதற்கு அர்த்தம் அன்றுதான் எனக்கு தெரிந்தது.

3 கருத்துகள்: