ஞாயிறு, அக்டோபர் 27, 2013

"EXECUTIVE MASTER HEALTH CHECK-UP"

மருத்துவ துறை அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி (பல ஆண்டு பெரும் இழுதடிப்பிக்கு பின் ) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் (1998 -ல் நடந்த சம்பவம்) வழங்கப்பட்டுள்ளது சாதாரண மக்கள் நீதி மன்றத்தை அணுக ஊக்கப்படுத்துவதாக இல்லை.
நான் சவுதியில் அனுபவித்ததை ஏற்கனவே சொல்லி /எழுதி இருக்கிறேன், சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தையும் எழுதுகிறேன்.
சவுதி திரும்பும் முன்னராக ஒரு complete health check-up செய்து கொள்ளலாம் என்று ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன்.  மொத்தமாக நான்காயிரத்து ஐந்த்நூறு கட்டினால் எல்லா பரிசோதனைகளும்(பிரேத பரிசோதனை தவிர) செய்து பிரச்னைகள் இருந்தால் அந்த துறை நிபுணர்களின் அறிவுரையும் வழங்கப்படும் என்று கூறினார்கள் அதற்கு "EXECUTIVE MASTER HEALTH CHECK-UP" என்று அழகாக  பெயரும் வைத்துள்ளார்கள்.  ரொக்கமாக இல்லாமல் டெபிட் கார்டு உபயோகித்தால் ஒன்னரை சதவீதம் சர்வீஸ் டாக்ஸ் என்றார்கள், அங்கே இருந்த இரண்டு ATM கருவிகளும் வேலை செய்ய வில்லை, ஆகவே வேறு வழியில்லை கார்ட் உபயோகித்துதான் ஆக வேண்டும். பணம் கட்டிய பின்னர் ஒவ்வொரு டெஸ்ட் ஆக  செய்தார்கள், ECG நார்மலாக இல்லை, எனவே tread mill அல்லது Echo Cardiograph செய்ய வேண்டும் என்றார்கள், tread mill ecg நான் பணம் கட்டிய திட்டத்திலேயே அடக்கம் என்பதால் புதிதாக பணம் கட்ட வேண்டியதில்லை என்று நினைத்தேன், ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர், tread mill க்கு பதிலாக  echo செய்து கொண்டால் நல்லது மிக நுணுக்கமாக தெரிந்து விடும் என்றார், echo வுக்கு மேலும் 1700 ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள், அதை கட்டி echo எடுத்ததில் normal  என்று கூறி விட்டார்கள், இருந்தாலும் specialist இடம் ஒரு ஒபினியன் வாங்கி  விடுங்கள் என்றார்கள், அதற்கு தனியாக 300 ரூபாய் கட்டி அவரை போய் பார்க்க சொன்னார்கள்,அவர் என்னுடைய ecg யையும் echo இரண்டையும் பார்த்து விட்டு, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது எதற்கும் ஒரு treadmill ecg செய்து விடுங்களேன் என்றார், நொந்து விட்டேன்...திரும்பவும் treadmill செய்ய 1500 கொடுத்து treadmill ecg செய்து முடித்தபோது அந்த துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பணி நேரம் முடித்து சென்று விட்டார்கள். அங்கிருந்த மாணவி ஒருவர் எல்லாம் நன்றாகவே இருக்கிறது ஒன்றும் பிரச்னை இல்லை என்றார், எதற்கும் சந்தேகத்திற்கு கொஞ்சம் அனுபவசாலியாக தெரிந்த ஒரு ஆபீஸ் அசிஸ்டன்ட் போல இருந்தவரிடமும் என்னுடைய report ஐ காட்டினார்(வெள்ளை சட்டை வெள்ளை பான்ட் அணிந்து பெரிதாக குங்கும போட்டு வைத்திருந்தார்...கண்டிப்பாக டாக்டர் கிடையாது, அனுபவ வைத்தியர் போல தெரிந்தார்.) அவரும் ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி என்னை அனுப்பினார்(எல்லோரும் பணி முடிந்து வீடு செல்லும் அவசரத்தில் இருந்தனர்)...இப்படித்தான் பெரும்பாலான diagnosis செய்யப்படுகிறதோ என்று நினைத்து கொண்டேன் .....

கரையான்.

1 கருத்து:

  1. எனது மாமனாருக்கு கோவையில் ஒரு கண் மருத்துவமனையில் பரிசோதித்ததில் AMD யினால் கண் பார்வைக் குறைபாடு என்றும் அதற்குக் Avastin inj ரெட்டினாவில் போடவேண்டும் என்பதாகக் கூறினார்கள் .மதம் ஒரு முறை 3 inj போட்டால் கண் குறைபாடு சரியாகிவிடும் என்று கடந்த வருடம் கூறினார்கள் .ஒரு inj விலை 8500/-பின் ஒவ்வொரு முறையும் OCT மற்றும் ஸ்கேன் சார்ஜ் 3000/-எல்லாம் ஓகே .ஆனால் 3 மாதங்களும் அதே டெஸ்ட் அதே inj எடுத்த பின்னரும் ஒரு டாக்டர் முன்னேற்றம் லேசாக இருக்கிறது என்பார் .ஆனால் எனது மாமனாருக்கு கண்டிஷன் அதே போல் தான் இருப்பதாக கூறினார் ,இடையில் வேறு காரணங்களால் hospital செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது அவர்கள் அதயே காரணம் காட்டினார்கள் .த்ரிஉம்பவும் 3-4 inj போடவில்லை என்றால் கண் பார்வை முற்றிலும் போய்விடும் என்று சொல்லும்போது தவிர்க்க முடியவில்லை .ஆனால் எல்லா முறையும் அதே பரிசோதனைகளைச் செய்யச் சொல்ல்வது தான் கொஞ்சம் இடிக்கிறது .தற்போது மொத்தம் 7 inj போட்டுவிட்டு முன்னேற்றம் இலையே என்று விசாரித்தால் நீங்கள் inj போட்டதால் தான் அடுத்த கண்ணிற்கு பரவாமல் இருக்கிறது என்று லாஜிக் கூறுகிறார்கள். வெரி ஒரு மருத்துவமனையை அணுகிய போதும் இதே treatment தான் suggest பண்ணுகிறார்கள் .இது கொஞ்சம் விவரம் புரிந்த நமக்கே தலை சுற்றுகிறது .ஒவ்வொருமுறையும் நிறைய நோயாளிகள் இதே inj காக காத்திருக்கும்போது ஒன்றும் புரியாமல் புலம்புவது வேதனையாய் இருக்கும்

    பதிலளிநீக்கு