வெள்ளி, அக்டோபர் 04, 2013

HOME

திருநெல்வேலி விருந்தோம்பல்  கோவையில் ......

விடுமுறையில் தாயகம் சென்ற வேளையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக பாலக்காடு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் ஏறுவதற்கு கொஞ்சம் முன்னர்தான் கோவையில்  நண்பர் சொக்கனை அழைத்தேன், மாமனாரை மருத்துவ மனை அழைத்து செல்ல முன் பதிவு செய்திருப்பதாகவும் அந்த நேரத்தில் வர இயலாது என்றும் கூறினார், பரவாயில்லை நான் சென்று விடுகிறேன் என்று கூறி என் தொலைபேசியை அனைத்து விட்டேன். கோவையில் சென்றடைந்ததும் தொலைபேசியை ஆன் செய்தவுடன் சொக்கனிடமிருந்து அலைபேசி செய்தி " விமான நிலையம் வெளியில் காத்திருக்கிறேன் " என்று. நீ வருவதால் அப்பாஇண்ட்மெண்ட் ஐ மாலைக்கு மாற்றி விட்டேன், என்று கூறி என்னை அழைத்து சென்று மதிய உணவருந்தி ரயில் நிலையம் வரை வந்து வழி அனுப்பி சென்றார்.
(இந்த பெரியவர் நான் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தபோது என்னை வந்து விரைவில் குணமடைய வாழ்த்தி சென்றார். முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும் நவீன் தொழில் நுட்பத்தை சிறப்பாக உபயோகிக்கிறார்கள்)
பதினைந்து நாள் சிகிச்சை முடிந்து திரும்பும் போதும் சொக்கன் கோவை ரயில் நிலையம் வந்து சந்தித்தான்(நெல்லை விருந்தோம்பலின் உச்சகட்டம்...நன்றி சொக்கா... ), பின்னர் ஈரோடில் நண்பர் எஸ்.கே.பி., பகவதி, தங்கவேலு அனைவரும் மிக சிறப்பாக கவனித்தார்கள்.

மேலும் எழுதுவேன்....

கரையான்.

4 கருத்துகள்:

  1. Karayaan,
    Glad to hear that you had a safe trip with your health restored and the loving support of friends.
    I saw the blog but didn't have time to comment but I had a hearty laugh after seeing the picture. Nayooran looks like an Indian santa claus!! I was also wondering how the picture related to the topic that you were talking about. But after reading the latest blog, it makes sense. Thanks again for always reviving the blog.
    Gujili

    பதிலளிநீக்கு
  2. It is a great feeling to be with friends. The feeling cant be explained in words, should be experienced. The ego,inhibitions,etc all disppear when we are with friends and it is an energy booster.
    Karaiyan.

    பதிலளிநீக்கு
  3. ராஜபாளையம் சித்தர் அற்புதமாக இருக்கிறார்..அவர் எதற்காக சித்தர் அவதாரம் எடுத்திருக்கிறார் ..கரையான் விளக்கம் தேவை..
    chocks

    பதிலளிநீக்கு
  4. ராஜபாளைய சித்தர் கிட்ட ஏண்டா தாடி வளக்கிறேன்னு கேட்டா "நானா வளக்குறேன் அதுவா வளருது என்று பெரியார் மாதிரி பதில் சொல்றார்,

    பதிலளிநீக்கு