குஜிலி சொன்னது மாதிரி காலம் மிக வேகமாக பறந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக எல்லா தந்தைகளைப்போன்று தான் கல்லூரி சேர்க்கும்போது எனக்கும் என்ன ஒரே ஒரு வித்தியாசம் பொருளாதார நெருக்கடி இல்லை. காயத்ரி முதலிலேயே தொழில் நுட்ப படிப்புகளுக்கு போக மாட்டேன் என்று கூறி விட்டதால் MBBS , BE சேர்க்க வேண்டுமென்ற நெருக்கடி எனக்கில்லை. எட்டாவது படிக்கும்போதே B.Com ., தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து விட்டதால் பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்றுதான் சொல்வேன். குழந்தைகளை தேவை இல்லாத அழுத்தத்திற்கு உட்படுத்த விரும்ப வில்லை ஆகவே அவர்கள் முடிவிற்கு விட்டு விட்டேன்.
குஜிளியின் கேள்விக்கு வருகிறேன் காயத்ரி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியை விரும்புகிறாளா என்பது, இந்த கல்லூரியில் சேரும் முன்னர் schram academy என்ற பள்ளியில் படித்தாள் , அது பொருளாதார நிலையில் மேல் தட்டு வர்க்கத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளி, அந்த பள்ளியில் சேர்க்க எனக்கு மனம் இல்லை என்றாலும் என் சகோதரரின் வற்புறுத்தல் காரணமாக அங்கே சேர்க்க வேண்டியதாகி விட்டது. காயத்ரி உடன் படித்த அனைவரும் வசதி படைத்தவர்கள், அவள் வகுப்பு தோழர்/தோழியருக்கு பிறந்தநாள் என்றால் அவர்கள் கொண்டாடுவதே KFC , தலைப்பாகட்டி பிரியாணி , நில்கிரிஸ் , mcrennet கேக் என்றுதான், மிக சாதாரணமாக என் மனைவியிடம் " அம்மா ஒரு ஆயிரம் ரூபாய் கொடு friends க்கு பார்ட்டி கொடுக்கணும்" என மாதம் ஒரு முறையாவது என் மனைவியின் ரத்த அழுத்தத்தை ஏகிற வைப்பாள். அல்லது பார்ட்டி என்றால் skywalk என்ற ஒரு multiplex mall -இல்தான் வைத்து கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் வீட்டில் என் மனைவிக்கும் மகளுக்கும் பெரும் போராட்டம்தான். நான் விடுமுறையில் வீட்டில் இருந்தால் நான்தான் காரிலோ பைக்கிலோ பள்ளியில் விட வேண்டும், இப்படி இருந்த காயத்ரி இப்போது அப்படியே தலை கீழ்....
சென்ற முறை விடுமுறையில் இருந்தபோது காரிலே கல்லூரியில் விட்டு வருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என்று கூறினாள் எனக்கு ஆச்சரியம் ஏன் என்று கேட்டேன், "என்னுடன் படிப்பவர்களில் 95 சதவீதம் பேர் நடுத்தர குடும்பங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியவர்கள் அதிகம், கல்லூரி வருவதற்கே கஷ்டபடுவர்கள் இருக்கிறார்கள், நான் வசதியானவளாக இருந்தால் என்னுடனும் பழகுவதற்கே யோசிப்பார்கள்(சிலர் அதை அவளிடமே சொல்லியும் இருக்கிறார்கள்)என்றாள் . உடன் படிக்கும் தோழிகள் மூன்று பேருக்கு ஒரே நாளில் பிறந்த நாள், அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து எல்லோரும் பணம் சேர்த்து ,கேக் வாங்கி வரும் பொறுப்பை காயத்ரியிடம் கொடுத்திருக்கிறார்கள், நாங்கள் இருவரும் கேக் வாங்க Mc'Rennet அழைத்து சென்றேன், நான் 1200 ரூபாய் கேக் -ஐ செலக்ட் செய்தேன், அவளோ 500 ரூபாய்க்குள் தான் வாங்குவேன் என்று கூறினாள் , வகுப்பில் 50 பேராவது இருப்பீர்கள் அது பத்தாது என்றேன், ஒவ்வொருவரும் பத்து இருபதுன்னுதான்பா போட முடியும் ஒரு சிலரால் அதுவும் கொடுக்க முடியாது., அந்த budget உள்தான் வாங்க முடியும் என்றாள். சில நாட்களில் காண்டீனில் என்ன காயத்ரி சாப்பிட்டாய் என்று நான் கேட்பதுண்டு, "இருபது ரூபாய்க்கு முறுக்கு வாங்கி friends எட்டுபேர் ஷேர் பண்ணி சாப்பிட்டோம்பா" என்பாள் . எப்படி இருந்த காயத்ரி இப்படி ஆயிட்டே. என்று எல்லோரும் நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
So Gujili,whether Gayathri likes it or not I like Anna Adarsh College.......
கரையான்.

It is so refreshing to hear how responsible Gayathri has become. You must be so proud of her Karayaan...I wish more young people were that way. I see a fair amount of responsible college students here since 50% of them pay for their own education. But the sense of entitlement is still there in some of them as if the world owes them. Kudos to you and Shakila for raising such a great daughter!
பதிலளிநீக்குGujili
The experience and the mental maturity made this change, only now she sees the real world, till school she had been seeing the economically luckier ones that is the reason for this change. There is a time when we think the parents are the most stupid, as we get older we start realising how beautiful and clever they are. It is not just my daughter alone, every child is like that....
பதிலளிநீக்குKaraiyan.