வியாழன், அக்டோபர் 03, 2013

AFTER A LONG TIME...

நம் வலைப்பதிவில் பதிந்து பல நாட்கள் ஆகி விட்டது.  முக நூலில் தோழர்/தோழியரின் பதிவுகளை பார்த்து வந்தாலும் சில பல காரணங்களால்(சோம்பேறி தனமும் ஒரு காரணம் ) பதிவுகள் செய்ய இயலாமல் ஆகி விட்டது. திரும்பவும் நம் பிளாகிற்கு வருவதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ( IDC முடிந்து கல்லூரி திரும்புவது போன்ற ஒரு குதுகலம்)....

முருங்கை .....என்னடா இவன் சம்பந்தமே இல்லாமல் முருங்கை பற்றி எழுதுகிறானே என நினைக்க வேண்டாம்....
கடந்த வாரத்தில் என் முதலாளி (ஷேக்) என்னை அழைத்து ஒரு புத்தகத்தை கொடுத்தார், அது முழுவதுமாக அரபியில் எழுதி இருந்தது, அவரிடம் இது என்ன என்று கேட்டேன், அவர் முருங்கீ பற்றி தெரியுமா என்றார், அப்போதுதான் அந்த புத்தகத்தின் அட்டையில் முருங்கை கீரை படம் இருந்த தை பார்த்தேன். அவரிடம் இதன் பெயர் முருங்கை என்றேன். அவர் அந்த புத்தகம் (கிட்டத்தட்ட எழுபது பக்கங்கள் ) முருங்கையின் உபயோகம், அதில் உள்ள சத்துக்கள் என விரிவாக எழுதி உள்ளது. அதில் கால்சியம், புரதம்,இரும்பு இவை எல்லாம் பால் மற்றும் இறைச்சி யை விட பல மடங்கு அதிகம் இருக்கிறது தெரியுமா என்றார், எனக்கு அது பற்றி தெரியாது என்றேன்,  ஆனால் இது ஒரு சாதரணமான உணவு தென் இந்தியாவில் பெரும்பாலான  மக்கள் இதனை சாப்பிடுவார்கள் என்றேன். அவர் அதன் பெருமைகளை விவரித்தார் , கடைசியாக அதன் அப்ரோடிசியாக் குணம் பற்றியும் எடுத்து கூறினார்(அதைதான் ஏற்கனவே பாக்கிய ராஜ் முந்தானை முடிச்சு படத்தில் கூறி விட்டாரே), கடைசியாக அவர் இந்த மரங்களை இந்தியாவிலிருந்து உடனே கொண்டு வர ஏற்பாடு செய்ய கூறினார், குறைந்தது நூறு மரங்களாவது வேண்டும் என்றும்  கூறினார். நான் அவரிடம் இந்த மரங்கள் என்னிடமே உள்ளது என்றேன், எங்கே என்றார் என் வீடு மற்றும் குதிரைகள் உள்ள பகுதியில் என்றேன், என்னுடைய பன்னையிலா என்றார் ஆம், நான் இந்தியாவிலிருந்து வரும்போது கொண்டு வந்து வளர்த்து வருகிறேன் என்றேன். அவர் என்னுடைய வீட்டில் குறைந்தது இருபது மரங்கள் வைக்க ஏற்பாடு செய்யுங்கள் , மேலும் பண்ணையில் நூறு மரங்களாவது வேண்டும் என்றார். பிறகுதான் கூறினார், முருங்கை இலைகள் பவுடராக்க பட்டு மாத்திரைகலாக விற்கப்படுகிறது என்றும், முருங்கை இலைகள் தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக் கூறினார்.
இப்போது தினமும் நான் வளர்த்து வரும் முருங்கை மரத்தின் இலைகளை  சூப் செய்து குடித்து வருகிறார்.

நம் நாட்டு பழங்கால வைத்தியங்கள் நாம் ஒதுக்கி தள்ளினாலும் எங்கோ ஒரு மூலையில் அதன் மகத்துவத்தை உணரத்தான் செய்கிறார்கள்.....

கரையான்.

3 கருத்துகள்:

  1. Karayaan - there is a new business for you!! Selling drumstick trees..
    Gujili

    பதிலளிநீக்கு
  2. இன்னும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு முருங்கை மகத்துவம் தெரியவில்லையோ..இல்லேன்னா எப்பவோ பவுடர் பண்ணி அதுக்குக் காப்புரிமை வாங்கி நமக்கே வயக்ரா மாதிரின்னு சொல்லி பிசினஸ் பண்ணி இருப்பாங்களே

    பதிலளிநீக்கு