திங்கள், டிசம்பர் 13, 2010

Kavithai for Karaiyan

இலக்கை நோக்கிய ஓட்டத்தில்
எவரோ ஒருவர் முதலாக..
இன்னும் சில பேர்
இரண்டாய் மூன்றாய்..
வெற்றிக் களிப்பில்
இருமாந்திருப்பர்.
ஓடிய தடத்தை திரும்பவும் நோக்க 
தோற்றவர் எல்லாம் துவண்ட முகத்தொடு.
ஓடிய பாதையில் தடுக்கி விழுந்தோர்
இருப்பார் மனத்தில் வேதனை பொங்க.
ஒருவர் மட்டும் ஜெயித்துக் களிப்புற
ஓட்டப் பந்தயம் போல் அல்ல வாழ்க்கை
நீயும் ஜெயிக்கனும் நானும் ஜெயிக்கனும்
உலகம் முழுதும் தோழமை ஜெயிக்கனும்
அன்பில் நனையும் நண்பர்கள் இருந்தால் 
தோல்விகள் கூட தோற்றுப் போகும் 
இது கரையான் அளித்த குறும்படக்  காட்சியில்  
காணக் கிடைத்த வாழ்க்கைப் பாடம் .
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

சொக்ஸ்

6 கருத்துகள்:

  1. chockaa, this kavithai is not for karaiyan, for the world, humanity and for all of us....thiraiyil paarththathai vaarthaikalaal urupaduthi vittai, GFK, Senthil and chockanukku nanrikal....
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Chocks,

    Shall we start our Medai nadagam's Again.

    பதிலளிநீக்கு
  3. Das..
    Yerkanave namma professionla nadichuk kittuthaan irukkom.Oscar award thaan kidaikkala.
    But..unnoda idea rombap pidichchirukku.
    Santharppam kidaichcha thool kilappiralaam
    Chocks

    பதிலளிநீக்கு