வெள்ளி, டிசம்பர் 24, 2010

Elephants

கடவுளாய் கண்டோம் உன்னை
கை கூப்பி வணங்கி நின்றோம்
காசுகள் தந்து உந்தன்
ஆசிகள் கிடைக்கப் பெற்றோம்
திருவிழா நாட்கள் தன்னில்
சிறப்புகள் பற்பல செய்தோம்
ஆண்டுக்கு ஒரு முறையேனும்
அரசாங்க தயவில் உனக்கு
முதுமலை காட்டுப் பக்கம்
முகாமொன்று நடத்தி வந்தோம்
அங்குசம் கொண்டு உன்னை
அடிமையாய் நடத்தி வந்தோம் 
தும்பிக்கை கொண்டு உன்னால் 
பெருமரம் வீழ்த்த முடியும்
தூண் போன்ற கால்கள் கொண்டு 
தூள் தூளாய் சிதைக்க முடியும்
ஆனாலும் அடிமை போல
பாகன் சொல் கேட்பதேனோ
சென்சோற்றுக் கடனா
இல்லை
அன்பினால் அருளும் பணிவா
யானைகள் கடவுள் போல
நம்பினார் கெடுவதில்லை

சொக்ஸ்

3 கருத்துகள்: