என்னுடைய அந்த காதல் இன்னும் பசுமரத்தாணி போல் இதயத்தில் ஒட்டிக்கொண்டுள்ளது, அனேகமாக கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும்போது என நினைக்கிறேன், ஒரு விழாவில் அவளை பார்த்தேன், சில வினாடிகள் அல்லது மைக்ரோ வினாடிகள் என்றுகூட சொல்லலாம், அப்படியே இதயத்தில் பச்சை குதிதியதுபோல் அந்த முகம் ஒட்டிக்கொண்டது, பேசவோ, நன்றாக பார்க்கவோ போதிய தருணம் இல்லையென்றாலும், என்னுள்ளே புகுந்து ஏதேதோ செய்ய தொடக்கி விட்டாள் அந்த கண்ணிமைக்கும் நேரத்திற்குள்...அதன் பின அவளை எங்குமே பார்க்க முடியவில்லை, அவளை பார்த்த கணம் முதல் பார்க்கும் பெண் எல்லாம் சகோதரியாகவே தெரிகிறாள். என்ன மாற்றம் என்னுள், அதுவரை காட்டாறாக கட்டற்று துள்ளித்திரிந்த நானா இப்படி, வருடங்கள் உருண்டன ஆனால் அந்த முகம் மட்டும் மறக்கவில்லை, கல்லூரி படிப்பு முடிந்து வேலை, எந்த வேளையிலும் அவள் முகம் மட்டுமே என்னுள், வீட்டில் திருமண பேச்சு எழும்போது மனதிற்குள் வலி, அவள் முகத்தை எப்படி அழிப்பது என் இதயத்திலிருந்து, அந்த முகம் பச்சை குத்தப்பட்டுள்ளதல்லவா, வேறு வழியில்லை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும், சரி பெண் பாருங்கள், நான் பெண்ணை பார்க்க மாட்டேன் நீங்களே முடிவு செய்யுங்கள் என பாதி மனதுடன் ஒப்புக்கொண்டேன், பெண்ணின் புகைப்படம் பார் என நீட்டினார்கள், பார்க்காமலே பிடிக்க வில்லை என்றேன், அதெல்லாம் முடியாது இவள்தான் உன் மனைவி என நான் முடிவு செய்துவிட்டேன் என்றார் தாய், சரி என்றேன். நீ பார்க்க வில்லையென்றால் பரவாயில்லை, அந்த பெண் உன்னை பார்க்கவேண்டுமல்லவா அதனால் நாம் சென்று பெண்ணை பார்க்கவேண்டும் என்றார், சரி என்றேன், இப்போதும் பெண்ணை பார்க்கவில்லை, இருந்தாலும் சரி என்றேன், அவளுக்கும் உன்னை பிடித்து விட்டது, இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் என்றார்கள், மனதே இல்லாமல் ஒப்புக்கொண்டேன்,இதயத்தில் இருப்பவளை எந்த ரப்பர் கொண்டு அழிப்பது, முடியாத காரியம். திருமணநாள் வந்தது, வேண்டா வெறுப்பாக மணவறையில் அவளருகில் நான், தாலி கட்டும் நேரம் , இனிமேலும் தப்பிக்க வழியில்லை, சரி வாழ்நாள் முழுதும் சேர்ந்து வாழப்போகிறவளின் முகத்தை இப்போதாவது பார்ப்போம், அதிர்ந்தேன் அவள் அவளேதான் என்னுடைய மைக்ரோ வினாடி தேவதை, என்னருகில், இவளைத்தானே இத்தனை நாள் மருகி மருகி காதலித்தேன், அவளே என்னருகில், என் வாழ்கை துணையாய், இந்த காதல் இன்றும் என்றென்றும் குறையாமல், அக்ஷய பாத்திரமாய்.....இந்த காதல் தொடரும் என்றென்றும் .......
கரையான்.
nambittoomla...!?
பதிலளிநீக்குmsk
Ithanaal sagalamanavargalukkum sollik kolvathu yennavenraal namakkelaam cut out karaiyan,kavignar kariyaan yenrellam arimugam aana Kumaran tharpothu Kathasiriyar Karaiyan yenrum ariyappattu Sakithya Academy viruthukkaaga parinthuraikkap pattullaar
பதிலளிநீக்குChocks
I love this story for story it is. The optimism is wonderful,this is what you wish for everybody to find the love of their lives in their married partner.This will make a good short story you should publish it karaiyan,
பதிலளிநீக்குGFK
Yes as Chocks says we will have to add the title of kathaalasiryar. This is worthy of a movie, I hope Shakila would comment on this story.
பதிலளிநீக்குGujili
COK,wukkuppadhilaaga,KSK[Kapsa Sollum Karaiyan] yendru peyar maatri widuwen.Jaakkiradhai.
பதிலளிநீக்குBHAI.