புதன், நவம்பர் 10, 2010

வேலையில் ஒருநாள்...

ஐந்து நட்சத்திர ஓட்டலின் உடலை மெருதுவாக வருடும் ஏசி யில் டெலிபோன் சிணுங்கி அழைத்தது, முன்னிரவு அடித்த ஸ்காட்சின் போதை கொஞ்சம் மிச்சம் இருந்தது, தொலைபேசியை எடுத்தேன், அழைத்தது அழகான பெண் குரல், காலை வணக்கம் ஐயா உங்களை காலை ஏழரைக்கு எழுப்ப சொல்லி இருந்தீர்கள், இப்போது மணி ஏழு முப்பது. பொண்டாட்டி கூட இப்படி கொஞ்சி எழுப்பியதில்லை......ச்சே காலம்காத்தால என் புத்தி ஏன் இப்படி போகுது... எழுந்து தலைக்கு டை அடித்து, மீசைக்கு கலர் பூசி, குளித்து, மேக்-அப் செய்து டை கட்டி சூட் போட்டு(சீவி சிங்காரித்து என்று சொன்னால் ரொம்ப சாதாரணமாக தெரியும்), கிளம்ப ஒன்பது முப்பது, பின்னர் பிரட் சாண்ட்விட்ச் வித் காபி குடித்து, கிளம்பி தயாராகவும், என்னுடைய டீம்(ஆறு பேர் konda குழு) என்னைப்போலவே தயாராகி வந்து நின்றது, முன்னாள் இரவில் சேல்ஸ் மீடிங்கில் அவர்கள் தண்ணி அடிப்பதைப்பார்த்து கொஞ்சம் மனதுக்குள் கலவரமாகவே இருந்தது, இவனுங்க காலைல எந்திரிப்பானுங்களா என்ற சந்தேகம் கொஞ்சம் இருந்தது, என்னதான் குளிச்சி பவுடர் பூசி வந்திருந்தாலும் அவங்க கண்ணு காட்டுது, இன்னும் தெளியலையே என்று. "என்னப்பா எல்லாம் தயாரா டார்கெட்-லாம் மனசுல இருக்கா எத்தன கஸ்டமர் கள பாக்க போறோம், என்னென்ன ப்ரோடக்த்ஸ் பத்தி பேச போறோம் தயாரா இருக்கீங்களா, ஒவ்வொரு பார்மரும் எவ்வளவு கோழி வச்சிருக்கார், எவ்வளவு மருந்து வாங்குவார், எவ்வளவு அவருகிட்ட தள்ள முடியும் எல்லாம் எழுதி வச்சி இருக்கீங்கல்ல....போகலாம்.....டொயோடா இன்னோவா கார் நல்ல வசதியாக இருந்தது, முதல் பண்ணையில் நிழைந்ததுமே பண்ணையாளர் ஓடி வந்தார்" ஐயா நீங்கதான் காப்பாத்தணும் ஐயா, தயவு செய்து உங்க மருந்த எடுத்துக்கிட்டு இன்னொரு முறை வந்துடாதீங்கையா, உங்க மருந்த குடுத்தப்புறம் ஒரு சதவீதமா இருந்த மார்டளிட்டி அம்பது சதவீதமாயிடிச்சி ஐயா நீங்கதான் எங்கள காப்பாத்தணும், போயடுங்கையா" என்று கூறி விட்டு அரிவாளை தூக்கினார்...அலறி அடித்து மொத்த டீமும் ஓட்டம் பிடிக்க தயாரானோம் .."என்னாங்க எந்திரிங்க என்ன அதிசயம் இன்னக்கி இவ்வளவு நேரம் தூங்கறீங்க, நடு ராத்திரில எந்திரிச்சு உக்காந்து டைம் பாப்பீங்க விடிஞ்சிடிச்சான்னு இன்னைக்கி என்னாச்சி" உலுக்கி எழுப்பினால் என் மனைவி .
ச்சே கனவு, இரவில் சொக்கன் கிட்ட பேசிட்டு அவனை நினைத்துக்கொண்டே படுத்தேன், அவன் வேலைகளை நான் செய்வதைப்போன்றே கனவு வந்து விட்டது.....ஆனாலும் கனவுல வந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் குரல் இன்னும் தேனாக ஒலிக்குது....சொக்கா அடுத்த முறை அந்த ரிசப்ஷனிஸ்ட்-ஐ நான் விசாரிச்சதா சொல்லு(ஜொல்லு)....
கரையான்.

8 கருத்துகள்:

  1. Karaiyaan avargale..

    Bhai targetted my office atmosphere.Ippo neenga namma adi madiyileye kai vaikka aarambichiteengale. Ragasiyamellaam veliye sollakoodathu.But it's our duty to convince customers even the things are going wrong due to our problem.That's life here.
    I like the way you have written as if you experienced in this field.
    Irunthaalum konjam echcharikkaiya irunthukkonga.At any time you may get story of farm life from BHAI..
    Bhai pls help

    Chocks

    பதிலளிநீக்கு
  2. chokkaa,
    i shall bring one on farm life, naan ethaiyum maraippathillai, soon i shall write. muthalil chockan ennadaavenraal"nee vivek maathiri comedianukku kathai ezhutha pokalaam enraan, ippa senthil bookkula ezhutha solraan" ippadiye usuppethithi vittu ranakalamaakkiduveenga polirukku...kuthira,ottakam,kozhinnu paathu pozhappu oduthu, pizza burger illainnaalum etho kuzh kanjinnu vayiru neraiyuthu, endaappa ungalukku porukkalayaa...
    karaiyan.

    பதிலளிநீக்கு
  3. Enne Chokku,
    enne help waaludhu.Naane receptionist ennai kooppidawillai endru wayirtru yerichalil irukkiren,wanthuttaan ,help kettu.
    BHAI.

    பதிலளிநீக்கு
  4. iniya sagothari thirumathy bhai avargalukku anbu sagotharan senthil udaya vanakkangal
    nangell ellam siru vayathil bhai enral artham theriyamal boy enru ninaithirinthom.
    appothellam evlo periya manushana poi boy endru koopidugirargale avarum kandu kollavillaye endru aachariyappatta kaalam undu.
    pinnar than bhai endral evlo periya vaarthai - annaiyaa annagaru annan avargale bhaiya dhevudu pondra vaarthaigale thorkum mariyadhai konda vaarthai endru arinthu santhoshapattom.
    perumaikku sollavillai en veetil en manaivi thaaliyil velankanni arokyiya matha padam potta pendent undu, pasanga udambil naagoor dhargavil mandhirikkapatta kaiyurudan koodiya ratchai allathu thaayathu undu, aanal velipaarvaikku naangal indhukkal.
    ul manadhil ellame onnu than
    manasatchipadi naervazhiyil nadappavan koilukku poga vendiyathe illai enbathu ennudiya vaatham, aanal athai pinpatrugiromma illaya enbathu veru.
    sari athai vidungal, vishayathukku varuvom....
    namathu bhai avargal aetho receptionist pathi.....
    aaama aaama athe than, paarunga epdy karpooram mathyri pathikiteenga...
    nalla paiyan............!
    aetho pothatha kaalam .....aani poi aavani poi aipasi vandhal(nandri kalavani saranya) avarukku kiragam sariyapoidumnu namma josiyakarar solrar..
    irunthalum naama vitralama....
    thcho thcho thcho,,,!
    konjam gavanama pathokkonga...!
    enna bhai innaikku bittu pothuma....!
    ( etho nammal mudinjathu.!)
    aproma karayan matrum rishimooladhari chocks avargalin perilum romba mariyathai iruppathal ippo pogattum paavam
    adutha postingil rendu sagotharigalidamum konjam alvalava vendiyullathu...!

    (dear friends evrythin is written for humor and plz take evrythin in the lighter vein)
    ennada jaga vaangitteennnu pakreengala.
    hmmmmm.!
    veeetukku veedu ..................
    plz fill up the blanks.

    show ur humor ..
    apdinnu sonnavar yaro avaruku
    vanakkamngal

    பதிலளிநீக்கு
  5. yo ayaaruppa indhaa receptionist?? Namakku sollunga - yenga purshar ketkirraar??
    Ha ha
    Gujili

    பதிலளிநீக்கு
  6. ore oru ooorile ore oru receptionist avangalukagaga evvalavu kalagam paarunga..!

    பதிலளிநீக்கு
  7. Bloogil ithu maathri konjam extra motivationukku oru vellaikaara receptionist yerpaadu seithaal innum niraya vaadikkaiyalargal varuvathu nichchayam.Help required from Peer,Kujili or GFK.
    Otherwise our PR MSK avargal will add a French receptionist from Pondy.
    Yaar munthugiraargalo avargalukku special giftum bloggil avar pugazhl paadi oru Kavithaiyum thara manapoorvamaaga sammathikkiren.

    Chocks

    பதிலளிநீக்கு