இங்கு தமிழகத்தின் நாகர் கோவிலை சேர்ந்த ஒரு தச்சர் எனக்கு அறிமுகமானவர், அவர் கைதேர்ந்த ஒரு தச்சர் மேலும் கடின உழைப்பாளி, என்னுடைய இல்லத்தில் சிறு சிறு மர வேலைகள் இருக்கும்போது அழைத்து வருவேன், என் குழந்தைகள் மற்றும் மனைவியிடம் நன்றாக பேசுவார், முப்பத்தைந்து வயது இருக்கும், கொஞ்சம் இள வயதிலேயே காதல் திருமணம் புரிந்து கொண்டதாக கூறினார், அவருடைய மனைவி கிருஸ்துவ நாடார் என்றும் இரண்டு வீட்டாரின் பலத்த் எதிர்ப்புகளுக்கிடையே திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் அவருடைய வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை,மனைவியின் பெற்றோர் எப்போதாவது வந்து பார்ப்பார்கள் என்று கூறுவார். திருமணத்திற்கு பின் சவுதி வந்து விட்டதாகவும், இரண்டு பெண் குழந்தைகள், பெரியவள் பன்னிரண்டு வயது என்றும் கூறினார், காதல் மனைவியை விட்டு நீண்ட காலம் பிரிந்திருப்பது கஷ்டமாக இல்லையா என்று நான் கேட்டால், என்ன செய்வது சார், வீடு கட்ட ஆரம்பித்துவிட்டேன், பதினைந்து லட்சம் ரூபாய் கடனாகி விட்டது, இப்போதுதான் கடன் முடிந்துள்ளது, ஒன்று இரண்டு ஆண்டுகளில் ஊரிலேயே சென்று செட்டில் ஆகி விடலாம் என்று இருக்கிறேன் என்று கூறினார்,(எனக்கு அவருடைய மன தைரியம் பிடித்திருந்தது, கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகள் அவர் தாய் தந்தையரை எதிர்த்துக்கொண்டு, தனியாக போராடுவது என்னால் முடியாத ஒன்று), கிட்ட தட்ட ஆறு மாதங்கள் அவரை நான் பார்க்க வில்லை, திடீரென்று அவரே தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார், "என்ன சார் மறந்துட்டீங்களா, பேசுறது கூட இல்லையே"என்றார், உண்மையாகவே வேலைப்பளுவில் நான் அவரை மறந்து விட்டேன்,"எப்படி இருக்கீங்க, வீட்டுக்கு வந்துட்டு போங்க" என அழைத்தேன், பார்க்கும்போதே அவரிடத்தில் மாற்றம் தெரிந்தது, இளைத்து, பொலிவிழந்து காணப்பட்டார்."என்னங்க ஆளே ரொம்ப டல் ஆயிட்டீங்க, உடம்பு சரியில்லையா" என வினவினேன்."இல்ல சார் மனசு சரியில்ல, அதுதான் உங்கள பாக்கலாம்னு வந்தேன், என்னமோ தெரியல சார் உங்க சின்ன பொண்ண பாத்தா என் பிள்ளைய பாக்குற மாதிரி ஒரு திருப்தி" என்றார். "நடுவுல எமேர்ஜென்சியா பத்து நாள் ஊருக்கு பொய் வந்தேன் சார், என்னோட மனைவி அதே ஊருல வேறு ஒரு ஆளோட தொடர்பாகி போய்டுச்சி, கல்யாணம் பண்ணிக்கிட்டு அவனோட போய்ட்டா, நான் போலீஸ் கிட்ட எல்லாம் கம்பிளைன்ட் பண்ணி பார்த்தேன், ஒன்னும் செய்ய முடியல, அவள் கால்ல கூட விழுந்து கெஞ்சி பாத்துட்டேன் சார், வர முடியாதுன்னு போய்ட்டா" மானம் மரியாதை, மன நிம்மதி, இத்தன நாள் நான் கஷ்டப்பட்டு சேத்த சொத்து,அதுதான் என்னோட வீடு, எல்லாம் போயிட்டு சார்" நான் அவள் பேருல வாங்குன நிலத்துல தான் இந்த வீட்டை கட்டினேன் இப்ப எல்லாம் போய்டுச்சி சார் என்னோட குழந்தைகளும் அவளுடன் போய்ட்டாங்க " மானம் கெட்டு ஊருல யார் முகத்துலயும் முழிக்க முடியல அதுதான் திரும்ப இங்கேயே வந்துட்டேன்" என்றார். அவருக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என தெரியாமல் கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைத்தேன்.
கரையான்.
Whenever I meet a bachelor ,here in Qatar,I used to advice him to have a constant watch on his family.For ,I know,this sort of "Odipporadhu", is happening then and there.I know a real story wherein a wife of a very well -to- do man ,ran away with their house driver.
பதிலளிநீக்குMoreover,I used to ask them why you came here and ask them to return as soon as possible.
BHAI.
Yikes - I have a few from dowry issues here in the US where the parents send their daughters unknowingly and then realize that the boy is with some one else or is very abusive. Unfortunately the reverse has also happened where the girls have done the same.
பதிலளிநீக்குI agree with Gujili.My only request to friends and family is do not get your children married in USA unless you know the boy personally.Th number of people cheated and beaten and abused is shocking and i keep sending this message to all.
பதிலளிநீக்குGFK
I disagree with Bhai, it can happen even when the husband or wife is present. We see a lot of these stories happening daily. Dowry issues with NRIs happen mostly due to the overzealous parents. I know a friend of mine, the lady complained about the husband of dowry toruture, and even his parents in india were arrested eventhough they were not present in USA at the time of reported torture. Womentake advantage of the law, there is a website exclusively dedicated for these sort of cases.
பதிலளிநீக்குkaraiyan.
www.498a.org
பதிலளிநீக்குkaraiyan.
Karai-Irudhey nadakkiradhaalatthan,appadi solgiren.Aal illamal irukkum podhu,chance rombawe adhigam.
பதிலளிநீக்குBHAI.
Money is the part of the life.Here I feel you cannot judge everything from the view of the husband.One person can be judjed only by the way he is acting when he is alone while no body knows what he is doing.Due to immaturity ,when the situation is also favourable misleadings are happening.When she realizes it will be too late.But everybody have the liberty to lead their life according to their wish.I pity on both of them.
பதிலளிநீக்குChocks
I suppose each of us could add our own share of experience and stories and it really reflects as Chocks said as to what perspective one is looking at. To each person's eyes perhaps what they are doing may seem right to them, but that doesn't mean it is. There is something called justice and I know most people reap what they sow sometime or the other in this life even though it may not appear that way right away.
பதிலளிநீக்கு