திங்கள், நவம்பர் 01, 2010

சவுதியில் சில சோக கதைகள்

சவுதியில் வந்த புதிதில் மிக கஷ்டமாக இருக்கும், இங்குள்ள தனிமை, புது மனிதர்கள், பழக்கமில்லா சூழல் என எல்லாமே கஷ்டம்தான், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மனிதர்களின் கஷ்டங்களை பார்த்து நாம் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கிறோம் என மனதை தேற்றிக்கொண்டதுண்டு, அப்படி சில மனிதர்களின் கஷ்டங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...
எனக்கு இங்கு குதிரை வேலையில் இருக்கும் கூலி தொழிலாளர்கள்தான் முக்கிய பொழுதுபோக்கு, மாலை வேளைகளில் பணி முடித்து அவர்களுடன் உட்கார்ந்து அளவளாவுவது ஒரு பிடித்தமான பொழுதுபோக்கு, அப்படி பட்ட ஒரு நண்பர்தான் ஜாபர் என்பவர், அதிராமபட்டினம் அவர் ஊர். ஒரு மாலை வேளையில் அவர் வேலை செய்யும் பண்ணைக்கு சென்றேன், அப்போது அவருடன் ஐம்பது வயது நபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார், அவர் தன்னுடைய உறவினர் என எனக்கு அறிமுகப்படுத்தினார், சொந்த ஊரில் பிரியாணி கடை வைத்து இருந்ததாகவும், அதில் தினமும் 150 ரூபாய் வருமானம் வந்ததாக கூறினார், மேலும் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்கள் திருமணத்தை முடிப்பதற்கு அந்த வருமானம் போதாது என்பதால், சவுதி வந்திருப்பதாக கூறினார். ஒரு வாரம் கழிந்து ஜாபரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, உடனே வாருங்கள் என கூறினார், நானும் அவர் அறைக்கு சென்றேன், "சார் போன வாரம் இங்க வந்தாரே என் சொந்த காரர் அவர் இறந்துட்டார் சார் என்றார். நல்லாத்தானே இருந்தார் எப்படி இறந்தார் என அவரிடம் கேட்டேன், அவருடை முதலாளி அவரை பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க அனுப்பினான் சார், ஊரிலிருந்து ரொம்ப தூரம், மூணு நாளைக்கு ஒரு முறை அவருக்கு சாப்பிட ரொட்டியும், குடிக்க தண்ணீரும் கொண்டு பொய் குடுத்துட்டு அவன் வந்துடுவான், கடைசியாக போனபோது பார்த்தால், கொள்ளைகாரர்கள் அந்த ஆளை கொன்னு போட்டுட்டு அங்க இருந்த ஆடு, சில ஒட்டகங்களை களவாடிகிட்டு போய்ட்டாங்க சார், செத்து ரெண்டு மூணு நாளு ஆகி இருக்கும்போல, உடம்பு அழுகி போய்டிச்சு என்றார். மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது, "அவருடைய பெண் குழந்தைகள்தான் என் மனக்கண் முன் தோன்றினார்கள்" சில மாதங்கள் கழிந்து அந்த விஷயம் பற்றி அவரிடம் திரும்ப கேட்டேன். "சார் கொலை காரங்களை போலீஸ் காரங்களால கண்டு புடிக்க முடியல, அவருடைய முதலாளிய புடிச்சி போலீஸ் ஜெயிலில் போட்டுட்டாங்க, அப்புறம் செத்தவருடைய மனைவி குழந்தைகள் மன்னிப்பு கடிதம் குடுத்தா அவனை விட்டுடுவாங்கன்னு சொன்னதால, அவன் மூணு லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறினான், அவங்களும் கடிதம் இந்திய தூதரகம் மூலமா கொடுத்துட்டாங்க ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணனும்தானே சார் அவர் சவுதி வந்தார், இந்த பணத்த வச்சி கல்யாணம் பண்ணிடலாமில்ல" இந்த வார்த்தைகள் என்னால் மறக்க முடியாத வார்த்தைகளாக மனதில் படிந்து விட்டன.
கரையான்.

6 கருத்துகள்:

  1. Wow - this story is gut wrenching! The sacrifices that we make for our families..

    பதிலளிநீக்கு
  2. very pathetic!!!
    thank god for keeping all of us thusfar under his care-msk

    பதிலளிநீக்கு
  3. It’s really pity to read these incidents. One end Ambanis are living in 27 storey building and in another end people don’t have even a shade to sleep. What a contrast..? If there is an existence of God why these things are happening. I really don’t understand
    Chocks

    பதிலளிநீக்கு
  4. This is such a sad story,we see the sacrifices people make to stay in these far away lands.I know of certain stories and incidents here and i feel sometimes we sacrifice too much to live in these countries.
    GFK

    பதிலளிநீக்கு
  5. Chocks - I would really like to address your comment on the inequality in life. You are right in that the world is not fair. However Veetukku veedu vaasapadi. It may appear that the ambanis are living in 27 storey bldgs with their wealth, pomp and splendor but they may not have the peace of mind that the man who sleeps on the platform does or the happiness that he has with his family. To the outside eye it appears things are allright so there is unfairness in some way or the other.
    I will continue this later..
    Gujili

    பதிலளிநீக்கு
  6. Gujili..
    I too agri your view in this.
    But it's really pity if a person is suffering without meeting the basic amneties. When we are hungry we know the value of food.I feel guilty whenever I eat more than what I require just to satisfy tounge.
    This is bit complex topic to get proper justification.Because man is rewarded for his knowledge,hard work,smartness etc..etc..in one angle and if a person is suffering without doing anything there is no meaning of feeling.
    But in this incident a poor responsible person is penalised by fate. I still feel how much their family felt when they were offerd money which was trully earned by the blood of their family head.They don't have even other options to deny the money.Where are we going towards...?Really complex situation

    Chocks

    பதிலளிநீக்கு