ஞாயிறு, நவம்பர் 14, 2010

401 வது பதிவு

நானூறாவது பதிவாக என்னுடையது இருக்க வேண்டுமென்று எண்ணி இருந்தேன், சொக்கன் முந்திக்கொண்டான். வாழ்த்துக்கள் சொக்கா....
நேற்று விஜய் டிவி யில் லஞ்சம் கொடுப்போர் லஞ்சம் கொடாதோர் என இரு பிரிவுகள் விவாதம் புரிந்தனர், அதில் ஒருவர் தன்னுடைய நிலத்திற்கு பதிமூன்று ஆண்டுகளாக பட்டா கொடுக்காமல் இழுத்தடிக்கப்படுவதாக கூறினார்(லஞ்சம் கொடுக்காத காரணத்தினால்). பொறுமை இன்மையால்தான் மக்கள் லஞ்சம் கொடுத்து சாதித்துக்கொள்வதாக வாதம் புரிந்தனர் சிலர், பொறுமையாக இருப்பத்து என்பது அவர் அவருடைய வேலைகளை பொறுத்தது, உதாரணமாக நான் சென்னையில் பணி புரியும்போது குதிரைகளை float - ல் எடுத்து சென்று ரேஸ் கோர்ஸில் சேர்க்க வேண்டும், அந்த வண்டியில் நாங்களும் பயணிக்க வேண்டும், ஒரு முறை கல்கத்தா விலிருந்து சென்னைக்கு ஆறு குதிரைகளை எடுத்து வந்து கொண்டு இருந்தேன், பீகார் ஒரிசா எல்லையில் RTO CHECK POST -ல் எங்கள் வண்டியை நிறுத்தி வைத்து விட்டார்கள், எல்லா டாக்குமென்ட் களும் சரியாக இருந்தாலும், என்ன காரணம் என்று சொல்லாமல் நிறுத்தி விட்டார்கள், ஏற்கனவே ஒரு நாள் முழுக்க பயணம் செய்து வந்த குதிரைகள், அந்த இடத்தில் float வெயிலில் நிற்க வைக்கப்பட்டது humidity வேறு அதிகமாக இருந்தது, heat stroke வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஒவ்வொரு குதிரைக்கும் ஐநுரு ரூபாய் வீதம் மூன்றாயிரம் கொடுத்தால் விடுவதாக அங்கு இருந்த அரசு அதிகாரி கூறினார், எனக்கு குதிரைகள்தான் முக்கியம் என்பதால் வேறு வழியில்லை கொடுத்தேன், அந்த அதிகாரி அடுத்த செக் போஸ்டுக்கும் தொலைபேசியில் கூறி ஒரிசா ஆந்திரா எல்லையிலும் காசு பிடுங்கி விட்டார்கள். இதே போல் சென்னையில் ஒரு முறை என்னுடைய ஜூனியர் டாக்டர் செல்லும்போது ட்ராபிக் போலீஸ் float - ஐ நிறுத்தி விட்டார்கள், அவரும் எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் விடுவதாக இல்லை, நேரடியாக முதலாளிக்கே போன் செய்து விட்டார் அவர் "என்ன டாக்டர் உங்களிடம் ஒரு நூறு ரூபாய் கூட இல்லையா,அவனுங்க கிட்ட கொடுத்து வண்டிய எடுத்து sella வேண்டியதுதானே என் குதிரை வெயிலில் நின்று சாக வேண்டுமா"என்று கடுப்பாக கேட்டார். லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்பது சொல்வதற்கு வேண்டுமானால் சுலபம் கடைபிடிப்பது ரொம்ப கஷ்டம்...
கரையான்.

2 கருத்துகள்: