நெல் அறுவடை செய்து அதில் உள்ள பதர்களை நீக்குவதற்காக தூற்றுவார்கள், அப்போது மேலும் ஒரு நஷ்டம் ஏற்படும், எப்படிஎன்றால், விவசாயகூலிகள் மிக வேகமாக தூற்றினால், நெல்லும் பதருடன் சேர்ந்து ஒதுங்கி விடும். இந்த தூற்றிய பதரை, விவசாய கூலிகள் தங்கள் வேலை முடிந்தவுடன் மீண்டும் ஒரு முறை தூற்றி அதில் வரும் நெல்லை அவர்கள் எடுத்து கொள்வார்கள். இதை நாம் திரும்ப கேட்க முடியாது. அறுப்பு முடிந்து அந்த நெல்லை நேரடியாக விற்க முடியாது, ஈரப்பதம் அதிகம் என்று கூறி இடைத்தரகர்கள் அல்லது வியாபாரிகள் விலையை மிகவும் குறைத்து விடுவார்கள், ஆகவே இந்த நெல்லை மீண்டும் காய வைக்க வேண்டும், இந்த காய வைத்து திரும்ப மூட்டை கட்டுவதை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பதென்பது மிக கடினம். ஒரு முறை நான் கிட்ட தட்ட எழுபது மூட்டை நெல்லை கூட ஒரு ஆளை மட்டும் வைத்துக்கொண்டு காய வைத்து திரும்ப மூட்டை கட்டி வைத்தேன்(இதில் எனக்கான கூலியை சேர்த்தால் நஷ்டம்தான் ). தயாராக உள்ள நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு கூலி பின்னர் அதை அரசாங்க நெல் விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்று இறக்க கூலி, அங்கு உள்ள அரசு அலுவலர்களுக்கு அதை ஈரப்பதம் பார்த்து எடை போட லஞ்சம்(இந்தலஞ்சம் கொடுக்க வில்லை என்றால், அவர் நெல்லில் ஈரப்பதம் அதிகம் என்று கூறி, காய வைத்து எடுத்து வாங்கள் என்று கூறி விடுவார், அங்குள்ள கூலி ஆட்களுக்கு தனியாக காசு கொடுக்க வில்லை என்றால், எடை போடும் முன்னர் ஒரு fan வைத்து அந்த நெல்லை ஊத்தி பதர் எடுக்கும்போது, fan இன் வேகத்தை அதிக்கப்படுத்தி விடுவார்கள், பதருடன் சேர்ந்து நெல்லும் சென்று விடும்.)
இதையே தனியாரிடம் விற்றால், விலையையும் குறைத்து விடுவார்கள், பணமும் உடனே கிடைக்காது. லஞ்சம் கொடுக்ககூடாது, என நெஞ்சு நிமிர்த்தி சொல்ல எனக்கும் ஆசைதான், வளைந்து கொடுக்க வில்லை என்றால் கையில் உள்ளதை இழந்து நிற்க வேண்டும் அல்லது பிழைக்க தெரியாதவன்/பைத்தியக்காரன் என்ற பட்டத்தை சுமக்க வேண்டும்.....
முதலாளியாக இருந்தாலும், பலரிடமும் கூனிக்குறுகி, அவமரியாதைகள் பட்டு,தான் உற்பத்தி செய்த பொருளுக்கு தன்னாலேயே விலை நிர்ணயம் செய்ய முடியாத ஒரு தொழில்தான் விவசாயம்...நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவனில்லை .......சமீபத்தில் ஒரு கட்டுரை படித்தேன், ஒரு குறிப்பிட்ட பயிரை உற்பத்தி செய்து கொடுத்த விவசாயிக்கு கிடைத்த விலை 3 ரூபாய், அதே பொருள் அதே நாளில் சந்தையில் 17 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
கரையான்.
Karayan has detailed the manouvre of Rice Businees.I was doing the same during the late 80s' and early 90s'.The only exception is we sell it to the local purchaser.Now,we have sold 80% of our paddy field because of these hardships.From the remaining,we eat and give employment for 3 families.
பதிலளிநீக்குBHAI.
i just have to admire all of you for giving this a try.i would put it down to life lesson learnt and move on.
பதிலளிநீக்குGFK
Karayaan - you have a lot of patience and for that - kaal vizhundu kumbidugiren. Now how much longer are you going to be doing farming?
பதிலளிநீக்குDear Gujili,
பதிலளிநீக்குi am younger than you, dont say like that. I hope to do it as long as i can hold the land, the new trend in tamilnadu is that if someone political influence can buy any land for any price, so i can do it till it catches someone's eye. Now i leased it to a friend, once i go back i shall get into the farming again.
Karaiyan.
Karayaan - are you really younger than me?? Yeah right!! Buying land is not a bad idea but with our greenhouse effect in this world and extensive droughts that are predicted for the next few decades, perhaps real estate is a better option. OK - curiosity is getting the better of me here, how does Shakila feel about all of this?? SHE MUST BE PATIENT TOO!!
பதிலளிநீக்குi know you are the youngest of our batch, i was joking. i have not lost my interest in farming, yes shakila is my strength, she is very patient and she trusts me, we never had a fight or difference so far and will not. I want to do farming in a big way with machineries, like they do in US ranches. Hope to do in future. I came out of it because i did not want to risk the future of my children. Rarely i accept her advise, the most important was going back to saudi.
பதிலளிநீக்குkaraiyan.
karaayan: a little correction on the age: actually pottu chithra is the youngest I think by a month. I am so glad that you found the best samsaram a kkd can have with Shakila. Perhaps some day you may get to fulfill your dream. You know what they say - you should never come between a person and their dreams!
பதிலளிநீக்குGujili