என்னுடைய கோழிப்பண்ணை என்ன ஆனது என்று நண்பர் மோகன்தாஸ் கேட்டார், அதைப்பற்றி பார்ப்போம், நாம் ஹோசூர் மாட்டுப்பண்ணையில் பயிற்ச்சியில் இருந்த போது ஒரு விளம்பரப்பலகை வைக்கப்படிருக்கும் "கோழி வளர்த்தால் குபேரனாகலாம்" என்று, என் அனுபவத்தில் கோழி வளர்த்தால் குப்பைக்குத்தான் போகலாம். இந்த காண்டிராக்ட் பார்மிங் என்ற முறை இருக்கிறதே, விவசாயியை மொட்டை அடித்து ஹாட்சரீஸ் காரர்கள் லாபத்தை எந்த அளவுக்கு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி விடுவார்கள், ஒரு கிலோ எடையுடைய கோழி வளர்த்தால் இரண்டு ரூபாய் கொடுப்பதாக சொல்லுவார்கள், ஆனால் FCR, Mortality,etc etc etc என கண்ட புரியாத கணக்குகளையும் சொல்லி நம்மை குழப்பி கோமணத்தை மட்டும் விட்டு மற்றதை உருவி சென்று விடுவார்கள். மார்டாளிட்டி அதிகம் ஆக கூடாது என்பார்கள், ஒரு ஐம்பது கோழி செத்தால் உடனே வந்து தகுந்த அறிவுரை கொடுக்க மாட்டார்கள், ஐநூறு கோழி செத்தால் அவர்களின் சூபர்வைசர் வருவார், ஐயாயிரம் கோழி செத்தால்தான் டாக்டர் வருவார். அப்புறம் நாம் எப்படி லாபம் சம்பாதிப்பது. ஒரு கோழிக்கு மூன்று ரூபாய் கிடைத்தால் அதுவே பெரிய விஷயம்தான், அதிலும் இரண்டு ரூபாய் ஆள்கூலி மற்றும் கரென்ட் செலவுக்கு சென்று விடும்.மீதியை வைத்து கணக்குபார்த்தால், போட்ட முதலுக்கு ஒரு சதவீத வட்டி கூட தேறாது, அதற்கு ஏதாவது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணத்தை போட்டு விட்டு வட்டியை வாங்கி குபேரனாக வாழலாம். நான் பண்ணை கட்ட கொட்டகை போட ஆரம்பித்த வுடனே தீயனைப்புதுறையிலிருந்து வீரர்கள் வந்து நின்று விட்டார்கள், தீயை அணைக்க அல்ல, இவ்வளவு பெரிய கொட்டகை போடுகிறீர்கள் அதனால் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று, என்னுடைய நிலத்திற்கும் சாலைக்கும் இடையே ஒரு வாய்க்கால் ஓடுகிறது அதை கடக்க ஒரு பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை பொறியாளரிடம் சென்று அனுமதி பெற்றேன், "எப்போது வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளலாம்" என நான் ஒப்புக்கொண்டே பின்னர் அவர் வாய் மொழியாக அனுமதி தந்தார். பாலம் கட்டும்பணி பாதியிலிருக்கும்போது வந்தார் நெடுஞ்சாலை கண்காணிப்பாளர் பணியை உடனே நிறுத்தவேண்டும் என கட்டளையுடன், நான்தான் ஏற்கனவே அவருடைய பெரிய அதிகாரியிடம் அனுமதி பெற்று விட்டேனே என கூற, அதெல்லாம் எனக்கு தெரியாது இங்கு நான்தான் பொறுப்பு கட்டியது வரை இடித்து தள்ளுங்கள் என்றார், அவருக்கு 1500 ரூபாயை கொடுத்த வுடன் சாலையையே மறித்து பாலம் கட்டினாலும் எனக்கு கவலையில்லை என்பது போல் அவர் சென்றார். மூன்று பாட்ச் கோழி வளர்த்த பிறகு இயற்கையே என்ன நினைத்தோ அல்லது அதற்கு செய்யவேண்டிய பார்மாளிடிகளை(லஞ்சம்) செய்யாமல் விட்டதாலோ என்னவோ புயல் அடித்து பத்தாயிரம் சதுர அடி கொட்டகைகளை சாய்த்து விட்டது. எவ்வளவு நஷ்டம் என கேட்கலாம், என்னைபொருத்தவரை இது லாபம் தான், ஏனென்றால் நான் கோழியை வளர்த்துக்கொண்டும் விவசாயம் செய்து கொண்டும் அங்கேயே இருந்திருந்தால் மாதம் பத்தாயிரம் சம்பாதித்து இருப்பேன், இது எதுவுமில்லாமல் போனதால் அதை விட பத்து மடங்குக்கும் மேல் சம்பாதிக்கிறேன்...
கரையான்.
Well Karayaan, I am glad you didn't CONTINUE in this busineess. During your experience with Unikay hatcheries did you ever talk to farmers who had such experiences. I am in awe of your patience and persistence. Nice to see that you made the right decision now..
பதிலளிநீக்குGujili
Dear Karaiya:
பதிலளிநீக்குAgain I am in awe of all the things you tried.It shows you were ready to try and do something which we only talked about.Even if it was a negative experience,no experience is a waste and it only gives you a valuable life lessons. Again hats off to you.
GFK
Dear Gujili,
பதிலளிநீக்குTimes during Unikay was different, now most of the farmers go for contract farming, where chicks, feed, medicines and techinical support are supplied by the hatcheries and the farmers are expected to raise the birds and the hatcheries sell it at 7 weeks of age. It is less risky to farmers. During Unikay days, the farmer spends all and takes all the profit or loss. Now you can see most of the farmers of Unikay times are nowhere now, all disappeared. Dr.James Gnanaolivu is working in Bangladesh as a consultant( i heard this story four years back, i dont know what he is doing now).
karaiyan.
1.Emaarugirawan irukkumwarai,Emaatrubawan iruppaan.
பதிலளிநீக்கு2.Kallooriyile dhaan 'FCR','Mortality' theriyaama,Kumararajawidam maattinaai.Kolippannaiyiluma?
3.Moral-'Pattariwe,sirandha ariwu.
BHAI.