விவசாயிகளின் தொல்லை தண்ணீர் விடுவது, நாற்று விடுவது, களை எடுப்பது என்று இத்துடன் முடிவதில்லை. விவசாயக்கூலிகள், அவர்களின் demands சில சமயங்களில் நம்மை வெறுப்பின் உச்சிக்கே செல்ல வைக்கும். காலை எட்டு மணிக்கு வேலைக்கு வரும்போது அவர்களுக்கு டிபன் வாங்கி வந்து கொடுக்க வேண்டும், பின்னர் பதினோரு மணிக்கு டீ மற்றும் பன் அல்லது வடை ஏதாவது ஒன்று வாங்கி வந்து கொடுக்க வேண்டும், இதை எல்லாம் நாம் தான் செய்ய வேண்டும்,அதற்காக வேலை ஆள் ஐ அனுப்பினால் அந்த ஒரு ஆளின் ஒன்று அல்லது இரண்டு மணி நேர வேலை கெட்டு விடும், மூன்று மணிக்கு மறுபடியும் டீ மற்றும் பொட்டலம்(மிக்சர்) வாங்கி வந்து கொடுக்க வேண்டும். இதில் கெளரவம் பார்த்தால் நஷ்டம் நமக்குதான்.(இதையெல்லாம் நான் செய்வதை பார்த்த என் மாமனாருக்கு ரத்தக்கண்ணீர் வந்ததுதான் மிச்சம்), மாலையிலேயே அவர்களுக்கான கூலி கொடுக்கப்படவேண்டும்.இதை எல்லாம் செய்தாலும் கூலி ஆட்கள் நமக்கு தேவை பட்ட நேரத்தில் வருவார்கள் என்பது நிச்சயம் இல்லை. சில சமயங்களில் நாற்றுக்களை நடப்படும் இடங்களுக்கு நானே எடுத்து சென்று போட்ட அனுபவம் உண்டு. உழுது நாற்றும் நட்டாகி விட்டது, களை எடுக்க அடுத்து வேலை ஆட்களை அழைத்து வர வேண்டும், இதற்கு பின் உரம் அடிக்க, பூச்சி மருந்து அடிக்க என பார்த்து பார்த்து செய்தாலும், நெற்பயிர், பூக்கும் நேரத்தில் அதிக பனிப்பொழிவு இருந்தால் பூக்கள்கருகி விடும், பதர் அதிகரித்து விடும். பூ நெல்லாகி அறுவடைக்கு தயாராகும் போதுதான், உச்ச கட்ட டார்ச்சர் விவசாயிக்கு, நெல் மணி மணியாக காய்ந்து தயாராக பயிர் லேசாக சாய்ந்து இருக்கும் நேரத்தில் மழை வந்தால், நெல் அனைத்தும் ஈரத்தில் முளைக்க ஆரம்பித்து விடும், தயாரான நெல்லை அறுவடை செய்ய கூலி ஆட்களிடம் செல்லும்போது அவர்கள் தங்களின் demands ஐ வைப்பார்கள், அது கிட்ட தட்ட சினிமாவில் வில்லன் பிளாக் மெயில் செய்வதுபோல்தான், ஒரு ஏக்கருக்கு இத்தனை மூட்டை அறுவடை கூலியாக கொடுக்க வேண்டும்(ஒரு மூட்டையில் ஆறு மரக்காய் நெல் கொள்ளும் என்றால் ஒரு மரக்காய் கூலியாக கொடுக்க வேண்டும்), ஒரு வேலை மகசூல் அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு கூலியும் அதிகமாக கொடுக்க வேண்டும், மகசூல் குறைந்தாலும் அவர்களுக்கான குறைந்த பட்ச கூலி கொடுத்தாக வேண்டும். ஒரு முறை என் வயலில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரத்தில் விவசாய தொழிலாளர்கள் வேறு வேலைகளை பார்க்க சென்று விட்டனர், கிட்டத்தட்ட் ஒரு வாரம் அவர்களின் பின் சென்று அழைத்தும் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டே இருந்தார்கள்(கொடுமை என்ன வென்றால் நான் வேறு கூலி களை அழைக்க முடியாது, யார் முதலில் இருந்து என்னிடம் வேலை செய்தார்களோ அவர்களைத்தான் நான் அறுவடைக்கும் அழைக்க வேண்டும் அவர்களுக்குள் அது ஒரு கட்டுப்பாடு) மழை இப்ப வருமோ அப்ப வருமோ என்று டென்ஷன், பொறுத்தது போதும் என்று நான் கதிர் அறுக்கும் மஷின் (harvester machine) ஐ வர வைத்து அறுக்க முடிவு செய்தேன், மஷினும் வந்து விட்டது, இதை பார்த்த கூலி தொழிலாளர்கள் முப்பது பேர் செங்கொடி எடுத்துக்கொண்டு என் வயலில் இறங்கி தர்ணா செய்ய துவங்கி விட்டார்கள், மஷினை மறித்து விட மாட்டோம் என தகராறு செய்தார்கள், ஒரு லெவெலுக்கு பின் யாராக இருந்தாலும் பயம் போய் ஒரு வெறி வருமே அந்த நிலையில் நான் இருந்தேன், அவர்களிடம், " இங்க பாருங்க நான் பல முறை உங்களிடம் வந்து அழைத்தேன், இந்த பயிர் என்னுடையது, என் பணம், எப்போது அறுவடை செய்வது என்பதை நான்தான் முடிவு செய்வேன், மழை எப்போது வேண்டுமானால் வரலாம், எல்லாம் வீணாகி விடும் " என கூறிப்பார்த்தேன், ஆனால் அவர்கள் விடுவதாயில்லை, நானும் அவர்களிடம் முடிவாக கூறினேன், இப்போது வரை நான் செய்திருக்கும் செலவும் என்னை பொறுத்தவரை பெரிய அளவு கிடையாது, மொத்த பயிரையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன், ஆனால் இதை நான் பெரிய பிரச்சனையாக ஆக்காமல் விட மாட்டேன், நீங்கள் இங்கே இறங்கி அறுவடை செய்ய நான் விட மாட்டேன், என மிகவும் ஆக்ரோஷமாக கூறினேன், கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அவர்களும் என்னை பல வகைகளிலும் மிரட்டி பார்த்தனர், நானும் விட்டு கொடுப்பதாக இல்லை, கடைசியில் அவர்கள் பாதியை மட்டும் மஷின் வைத்து வெட்ட அனுமதிப்பதேன்ரும், மீதியை அடுத்த நாள் அவர்களே வந்து அறுத்து கொடுப்பதென்றும் கூறி பிரச்சினைக்கு முற்று புள்ளி வைத்தார்கள்.
இன்னும் விவசாயிகளின் டார்ச்சர்களை தொடருவோம்...
கரையான்.
Karayaan avargale,
பதிலளிநீக்குStrangely enough I can relate to most of the things that happened to you because I used to go with my mom to aruppu sometimes. The workers knew how much we were reliant on them and they tried to take advantage. In our case since we traveled 400 miles from chennai to nellai and they knew that we were at their mercy. My parents got fedup and sold the property even though it had been in my mom's family for nearly 150 years much to my father's chagrin! Do you have any one in the family to take care of this or do you have to go every time it is arrupu kaalam? I am glad you stoodup and did not give in, wow! Perhaps you can find a caretaker but once again I am not sure how profitable that would be.
Dear Gujili,
பதிலளிநீக்குSince the last two years i leased it to a friend there, last year there was heavy rain just before aruppu, he incurred heavy loss, so i waived the lease amount of Rs.20,000 for that year.
Karaiyan.
These sort problems does not exist in our area.
பதிலளிநீக்குBHAI.