சனி, அக்டோபர் 30, 2010

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் குமுதத்தில் படித்த தன்னம்ம்பிக்கை கவிதை ஒன்று மனதில் அறைந்தாற்போல் பதிந்தது கவிஞர் இளையகம்பனின் வசமாக்கு கிழக்கை என்ற தலைப்பில் வந்தது, நண்பர்கள் மற்றும் பிள்ளைகளுக்காக ....மு.செ.கு.

கலங்காதே மகனே
கண்ணீரு எதுக்கு - உன்
காலடிக்கு கீழதான்
பூமிப்பந்து கிடக்கு!

வருந்தாதே மகனே
வானம் துணை இருக்கு - அந்த
சந்திர சூரியன் உன்
சட்டைப்பையில் இருக்கு!

கடுகளவு விதையில் தான்
ஆலமரம் இருக்கு - நீ
முதுகொடிஞ்சி மூலையில்
முடங்குவது எதுக்கு !

அவமானப் பாறைகளில்
அழகுச்சிலை செதுக்கு - அட
முயற்சிதான் மகனே
மூலதனம் உனக்கு!

துணிச்சலை மனதில்வை
துயரங்கள் சிதறும் - நீ
அடிக்குமேல் அடிச்சா
ஆகாசமும் நகரும்!

கண்ணீரை ஒதுக்கி
கவலைகளை நீக்கு - விழும்
இடிகளை அடுக்கி
படிககளை ஆக்கு !

காயங்களை எல்லாம்
கவசங்களை மாற்று - நீ
வடிக்கின்ற விழிநீரை
வைரமாகிக் காட்டு !

தன்மானம் நீ குடிச்ச
தாய்ப்பாலில் உண்டு - உன்
வேர்வைக்குப் பலனாய்
வெகுமானம் உண்டு !

வறுமையைக் கண்டு நீ
வருந்தி அழக் கூடாது - அட
நெருப்பை ஒருபோதும்
கரையான்கள் அழிக்காது !

புல்கூட முளைக்கையில்
பூமியை pilakkuthadaa - சிறு
மண்புழுவும் உயிர்வாழ
மண்ணை துளைக்குதடா !

எறும்புக்கும் இலட்சியங்கள்
ஏராளம் இருக்குதடா - நீ
தொடர்ந்து போராடு
சுவாசிக்கும் வரையிலடா !

தோல்விகளை கண்டு
துவளாதே மகனே - ஓர்
எதிர்காலம் இருக்கு
எழுந்து வா மகனே !

உறுதியை வேதமாக்கு
உழைப்பை கீதமாக்க்கு - நீ
கூட்டுப்புழுவாய் கிடக்காதே
குறிக்கோளை கூர்மையாக்க்கு !

துன்பங்களைக் கடந்துவா
thoelil மாலை சிரிக்கும் - உன்னை
ஆயிரம் சிகரங்கள்
அண்ணாந்து பார்க்கும்!

போராட்டம் இல்லாமல்
ஏதடா வாழ்க்கை - உன்
வானளவு நம்பிக்கையால்
வசமாக்கு கிழக்கை !







7 கருத்துகள்:

  1. sorry evvalavo muyarchithum sila aangila vaarthigalai edit seyya mudiya villai
    got fed up..msk

    பதிலளிநீக்கு
  2. also tried my best to edit and correct the spelling mistakes and failed...
    hope to attend a coaching class to use this tamil font and its editting and proofing

    பதிலளிநீக்கு
  3. I love this poems.Reminds me of some bharathiyar poem.I love bharathiyaar and kannadasan poetry.i can listen to them for hours.this poem is very inspiring.Thanks to MSK to putting in all the effort to share it with us
    GFK

    பதிலளிநீக்கு
  4. Dear MSK,
    It’s really impressive that there we are sparing some time to read and refresh our minds and hearts with inspiring words from good creative writers. Whenever we lost hope and confidence reading these lines will rejuvenate us.
    I am appreciating your effort and time spent for typing this without any PIZHAIGAL in Tamil.
    Pls keep posting such good things.
    Chocks

    பதிலளிநீக்கு
  5. dear pals
    thx 4 all ur praises which shld go to the creator himself
    pl read kavasangalaai instead of kavasangalai in the 7th para
    thx ---msk

    பதிலளிநீக்கு